Pages

Friday, March 26, 2010

பிணந்தின்னிகள்..!!!
இன்று உலகெங்கும் தீவிரவாத அச்சுறுத்தல் ஆட்கொண்டிருப்பதர்க்கு காரணத்தை நாம் ஆராய்ந்தால் அதில் ஒரு உண்மையை -

உலக நாட்டாமை என்று தன்னை எண்ணிக்கொண்டிருக்கிற அமெரிக்க ஆட்சியாளர்கள்தான் காரணம் என்பதை மிகத்தெளிவாக உணரலாம்..!

தனது ஆயுத வியாபாரத்திற்காக ஒவ்வொரு அண்டை நாட்டிற்கும் பிரச்சினையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் இந்த ரவுடிக்கூட்டம்தான், இந்திய பாக்கிஸ்தான், இரான் இராக், பாலஸ்தீன் இஸ்ராயில், மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இன்றுவரை தீராத பிரச்சினைக்கெல்லாம் அடிப்படைக்காரணம்..

இன்னும் இதன் மூலம் ஆதாயம் அடைந்து கொண்டிருக்கும் அமெரிக்கா, இந்த பிரச்சினைகள் தீராத வண்ணம், பேச்சு வார்த்தைகளை இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றன..இந்தியாவுக்குள் பாகிஸ்தான்காரன் நுழைந்தால் அவனை தாக்க வேண்டியது இந்தியாவின் பொறுப்பு.. பிறகு ஏன் அவன் அமெரிக்காவின் கட்டளையை எதிர்பார்க்கிறான்? பாகிஸ்தானைப் பற்றி இந்தியா ஏன் அமெரிக்கனிடம் புகார் பண்ணவேண்டும்..இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெறும் என்று அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை என்று இங்குள்ள அமெரிக்கா அடிமைகளாக வேலை பார்க்கும் பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகிறான்..ஏன் இந்தியாவில் உளவுத்துறை இல்லையா? அவர்கள் எல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? இப்படி ஒரு செய்தியை வெளியிட ஒரு இந்தியன் நிச்சயம் வெட்கப்படவேண்டும்...இது நமது உளவுத்துறையை அவமானப்படுத்துவது போல இருக்கிறதல்லவா?


இன்னும் ஆப்கானிஸ்தான், இராக், போன்ற நாடுகளில் நடக்கும் வன்முறைகள்- அது அந்நாட்டவரின் உரிமைப்போர்..காரணம் அங்கே அமெரிக்கா ரவுடி அத்துமீறி நுழைந்து, அவனுடைய அடிமைகளை ஆட்சியாளர்களாக வைத்து இருக்கிறான்..அந்த போராளிகளை இங்குள்ள அடிமைப் பத்திரிக்கைகள் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் வர்ணிக்கிறான்..இவன் கூற்றுப்படி பார்த்தால் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவன் தீவிரவாதியா? .உண்மையில் அங்கு தீவிரவாதியும், பயங்கரவாதியும் அமெரிக்கன்தான்..

இதற்கும் முன் "சினிமா நடிகனெல்லாம் தலைவனா?" என்றொரு பதிவில், வைகோ என்பவன் ஒரு தேச துரோகி என்பதை சுட்டிக்காட்டி இருந்தேன்..அதற்கு ஒரு நண்பர் - அவர் பெயர் marutheesan - நீ LTTE விசயத்தில் விமர்சிக்காதே என்று பின்னூட்டமிட்டிருந்தார்...


இலங்கையில் நடக்கும் உரிமைப்போருக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்மந்தம்? இந்திய ஒரு அண்டை நாடு என்பதால், அங்கு நடுக்கும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவிக்கலாம்..அவ்வளவுதான்..அவன் உள்நாட்டுப் பிரச்சினையில் எப்படி தலையிட முடியும்?

இந்த விடுதலைப்புலிகளுக்கு இந்தியா உதவப்போய் நாம் கண்ட பலன்கள் என்ன தெரியுமா?


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குண்டுகள் வைத்து பல அப்பாவி உயிர்களைப் பலிகொண்டது..

கோடம்பாக்கத்தில், சகோதர இயக்கத்தைச் சேர்ந்த பத்மநாப உட்பட பல தமிழர்களை சுட்டுக் கொன்றது..

பாண்டிபஜாரில் உமா மகேஸ்வரனுடன் துப்பாக்கி சண்டை நடத்தி பெரும் பீதியைக் கிளப்பியது..

1980 களில் கீழே கிடக்கும் பைகளை எடுத்துவிட வேண்டாம் என்று பொதுமக்கள் எச்சரிக்கப் பட்டிருந்தனர்..காரணம் வெடிகுண்டு பயம்தான்..இதற்கும் காரணம் விடுதலைப்புலிகள்தான்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் பிரதம வேட்பாளரான ராஜிவ்காந்தியையும் மற்றும் ஏராளமான தமிழர்களையும், போலீசாரையும்  மனித வெடிகுண்டு வைத்து கொன்றது., அதுவும் அமைதிப்பூங்கா என்று வர்ணிக்கப்பட்ட தமிழகத்திலேயே இதை நடத்திக்காட்டியது யார்? இவர்கள்தானே...

கேட்டால் "அது ஒரு துன்பியல் நிகழ்வாம்!"

அப்படி என்றால் அமைதிப்படையின் தவறையும் "துன்பியல் நிகழ்வு!" என்று எடுத்துகொண்டிருக்கவேண்டியதுதானே?சொந்த நாட்டில் போராடுபவனை, தீவிரவாதி என்றும் வர்ணிக்கும் இந்த அமெரிக்கா அடிமைப் பத்திரிக்கைகள் - இந்தியாவில் கொலைபாதக செயல்களைப் புரிந்த விடுதலைப் புலிகளை - போராளிகள் என்று வர்ணிக்கின்றன..(ராஜீவ் காந்தியை கொன்றதில் அமெரிக்காவின் "CIA" பங்கு உண்டென்பதும் இந்த அடிமைகளுக்குத் தெரியும்).வைகோ என்பவன்,தான் சார்திருந்த கட்சிக்கும், தனக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கும், தனது சொந்த நாட்டிற்கும் துரோகம் செய்து, கள்ளதோணி மூலம் விடுதலைப்புலிகளை சந்திக்கச் சென்றான்...இவன் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அன்றைய திமுக தனது ஆட்சியை இழந்தது..ராஜீவ் காந்தியை கொன்றதின் பயனை அந்த விடுதலைப் புலிகள் இன்று அனுபவித்தனர்..அவர்களது போராட்டம் அடக்கப்பட்டது, பிரபாகரன் கொல்லப்பட்டான்...

ஆனாலும்,  வைகோ போன்ற துரோகிகள் இன்னும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறான்..இதன் மூலம் இவன் என்ன சொல்ல வருகிறான்..இப்படி சொன்னால் இவனுக்கு ஒட்டு விழும் என்று எதிர்பார்கிரானா?இல்லாத பிரபாகரனை வைத்து, இந்த வைக்கோவும், குமுதம், ஆனந்த விகடன், நக்கீரன் போன்ற ஆபாசப் பத்திரிக்கைகளும், வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றன..அல்லது இந்திய அரசாங்கம்தான் என்ன செய்து கொண்டிருக்கின்றது?பிரபாகரன் இந்திய அரசால் தேடப்பட்டுவரும் ஒரு கொலைக் குற்றவாளி..அவன் இருக்குமிடம் தெரியும் என்று கூறிக்கொண்டிருக்கும் வைகோவை ஏன் இன்னும் கைது செய்து விசாரிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள்? அல்லது அவன் பைத்தியகாரன் போல் உளறுகிறான் என்றால் எதாவது ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வைத்து வைத்தியம் பார்க்கலாம்.

இப்படி தேடப்படும் குற்றவாளிகளை எல்லாம் நமக்கு தெரியும், ஆனால் சொல்லமாட்டேன் என்று ஒரு சாதாரண பொது ஜனம் சொன்னால் இந்த அரசு சும்மா விட்டு விடுமா?

இவனைக் கைது செய்து கடுமையான விசாரணை செய்ய நிறைய ஆதாரங்கள் உள்ளன...விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகிய கருணாவே தனது கையால் இந்த துரோகிக்கு பணம் கொடுத்ததாகச் சொல்லி இவனை அடையாளம் காட்டி இருக்கிறான்..

ஏனென்றால்..இவனது இரட்டைவேடம் சுலபமாக புலப்படும்...விடுதலைப் புலிகளை தீவிரமாக எதிர்க்கும் ஜெயலலிதாவுக்கு அடிமைச் சேவகம் செய்துகொண்டே இவன் விடுதலைப் புலிகளிடம் பணம் பெறுகிறான்.

இந்தியாவில் ஓட்டுப் பிச்சை எடுத்து, இலங்கை பிரச்சினையை பேசுகிறான்,, உள்நாட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு இவனுக்கு ஓட்டுபோடும் மக்களுக்கும் துரோகம் செய்கிறான்..

இது போன்ற பிணந்தின்னிகளை நாம் அடையாளம் கண்டு விரட்டியடித்தால்...இந்தியாவின் ஒருமைப்பாடு நிச்சயமாக காக்கப்படும்..!!

14 comments :

Sri said...

ராஜீவ் காந்தியின் படு கொலை பற்றி பேசும் நீ ,

ஈழத்தில் இந்திய இராணுவதால் நடைபெற்ற படு கொலை , அப்பாவி பெண்கள் மீதான தொல்லைகள் பற்றி ஏன் பேச மறுக்கிறாய் ??

சரி, ஈழத்தை விடுவோம், இந்தியாவ பற்றி பேசுவோம்,
சிக்கிய படு கொலை நடத்திய ராஜீவ் என்ன மகாத்மாவ ??
சிக்கிய படு கொலை நியாம் படுத்திய ராஜீவ் தான்பிணம் தின்னி ??

பத்ம நபா படுகொலை பெற்றி பேசும் கருணாநிதி மற்றும் நீ --- முன்னால் மந்திரி தா கி , மதுரை கவுன்சிலோர் லீலாவதி பற்றி ஈன பேச மறுக்கிறாய் ?? .


சென்னை ராயபுரம் எழுமலை படுகொலை பற்றி ஏன் பேச மறுக்கிறாய் ???

யார் பிணம் தின்னிகள் ??

தமிழ்க்கு ஒரு தேசம் தமிழ் ஈழ தேசம் பெற போராடிய - விடுதலை போராளிகளை தாக்கி பேச எவ்வளவு பணம் உனக்கு தர பட்டது ??
இதை விட கேவலமான தொழில் இல்லை தோழா !!!.

மர்மயோகி said...

நன்றி திரு sri அவர்களே..
தமிழ் தமிழ் என்று பேசும் நீங்கள் முதலில் உங்கள் பெயரை தமிழில் எழுத கற்றுக்கொள்ளுங்கள்..
அப்புறம் இங்கு நடந்த அரசியல் கொலைகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்..
அதுவும் நிச்சயமா கண்டிக்கத்தகுந்ததே..
ஆனால் அந்தக் கொலைகளை அவர்கள் நியாயப் படுத்தவில்லை..
இந்தியா எங்கள் நாடு..உங்கள் நாட்டில் நடக்கும் பிரச்சினைக்கு நீங்கள் எங்கள் நாட்டில் குழப்பம் விளைவித்தால் அது குற்றம்தான்..நாங்கள் அதை கடுமையாக எதிர்ப்போம்..உள்நாட்டில் எல்ல சுகத்தையும் அனுபவித்துக்கொண்டே எங்கள் நாட்டுக்கு துரோகம் செய்யும் எந்த அரசியல்வாதியும் தேச துரோகிதான், பிணம் தின்னிதான்..
எங்கள் நாட்டில் குழப்பம் விளைவிப்பவனை எதிர்க்க எங்களுக்கு பணம் தேவை இல்லை..தேசப் பற்றுள்ள எவனும் சொல்லக்கூடிய கருத்தைதான் நான் சொல்லி இருக்கிறேன்..

பாலமுருகன் said...

மர்மயோகி ஒரு நடை இங்கு வந்து செல்லுங்கள்.
http://ekanthabhoomi.blogspot.com/2010/03/blog-post_26.html

தங்களை ஒரு தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறேன்.

Sri said...

தோழா ,

'Sri' என்பது என்னது கூகிள் இ மெயில் (google e-mail) இல் இருந்து நேரிடையாக 'Blogspot' பெற்றுள்ளது(imported). அதில் இருந்து என்னது தமிழ் பற்று எடை போட முடியாது . தமிழ் பெயர் மாற்றி ராஜபக்ஹ்சே விடம் பரிசு பெற்றவர்களை விட நான் எவ்வளவு மேல் !!! .//அப்புறம் இங்கு நடந்த அரசியல் கொலைகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.. அதுவும் நிச்சயமா கண்டிக்கத்தகுந்ததே.. ஆனால் அந்தக் கொலைகளை அவர்கள் நியாயப் படுத்தவில்லை..

Commenting on the anti-Sikh riots in the national capital Delhi, Rajiv Gandhi said, "When a giant tree falls, the earth below shakes"; a statement for which he was widely criticised

ஆதாரம் : http://en.wikipedia.org/wiki/Rajiv_Gandhi

இது என்ன ???


The Congress itself projected a very different view. In a public speech after the genocide, Rajiv Gandhi said: "When a big tree falls, the earth trembles!"

ஆதாரம் : http://www.tribuneindia.com/2003/20031102/spectrum/main1.htm

இது என்ன ???

மதுரை கவுன்சிலோர் கொலை வழக்கில் தண்டனை பெற்றோர் , தண்டனை குறைத்து விரைவில் விடுவிக்க பெற்றனர் . கனிமொழி மற்றும் அழகிரி சந்தித்து ஆசி பெற்றனர்.

ஆதாரம் : http://www.thehindu.com/2008/09/17/stories/2008091760590800.htm

இது என்ன ???


//நீங்கள் எங்கள் நாட்டில் குழப்பம் விளைவித்தால் அது குற்றம்தான்..நாங்கள் அதை கடுமையாக எதிர்ப்போம்..

நானும் உங்களை போல போலி காந்தியம் பேசும் இந்தியா வை சேர்ந்தவன் தான் . ஈழத்தில் குழந்தைகள் சாவுவதை கண்டு ரசித்த சோனியா தலைமை ஏற்று உள்ள உங்கள் இந்தியா வை சேர்ந்தவன் தான்.


இலங்கை கடற் படை தமிழ் மீனவர்களை படு கொலை செய்ததை ?? அதை எதிர்த்து போராடுங்கள் !!.

சண்டை முடி உற்று ஒரு ஆண்டு ஆகியும் - இன்றும் தமிழ் மீனவர்கள் தாக்க படுகிறார்கள் . அதையும் கண்டு கொள்ளுங்கள் .

உங்கள் manmohan , சோனியாவும் காவேரி தண்ணீர் பெற்று தர சொல்லுங்கள் !!. இந்த குழப்பம் புலிகள் செய்த தா ??

உங்கள் ராகுலும், சோனியாவும் ஒகேநேகள் தண்ணீர் பெற்று தர சொல்லுங்கள் !!. இந்த குழப்பம் தமிழ் தேசியம் பேசும் நாங்கள் செய்த தா ??

உங்கள் கம்யூனிஸ்ட், சோனியாவும் முல்லை பெரியாறு தண்ணீர் பெற்று தர சொல்லுங்கள் !!. இந்த குழப்பம் வைகோ செய்த தா ??

வட கிழக்கில் (அச்சம், மிசாரம், அருன்ச்சல் பிரதேசம் ) நடை பெரும் மனித உரிமை மீறல்களை பற்றியும் பேசுவமா ????.


--- துரை . ஸ்ரீதர்

Sri said...

//எங்கள் நாட்டில் குழப்பம் விளைவிப்பவனை எதிர்க்க எங்களுக்கு பணம் தேவை இல்லை..தேசப் பற்றுள்ள எவனும் சொல்லக்கூடிய கருத்தைதான் நான் சொல்லி இருக்கிறேன்..

மும்பாயில் முன்னர் தமிழர்களும், இப்பொழுது வட இந்தியர்களும் தாக்க படுகிறார்கள் ?? தேச பற்று இருந்தால் இதையும் பேசவும் !!!!.

ராஜ் தாக்ரே வின் வன்முறை தொடக்கத்தில் அடக்காத காங்கிரஸ் அரசு பற்றி பேசவும் !!.

ஆதாரம் :http://news.oneindia.in/2010/03/18/nhrc-slams-maharashtra-govt-over-mns-violence.html

விதர்பா வில் கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள் . பற்றி முதலில் பேசவும் !!!!!

ஆதாரம் : http://www.dnaindia.com/india/report_one-suicide-every-8-hours_1049554

தொடர்ந்து புறகணிக்க பட்டு , தெலுங்கான கேட்டு போராடும் மாணவ சமுதாயம் பற்றி பேசவும்!!!.

காவேரி தண்ணீர் இல்லாமல் , தஞ்சை தமிழ்கள் எலி கரி சாப்பிட நேர்ந்ததை பற்றி பேசவும்!!!.

ஆதாரம் : http://www.indianexpress.com/oldStory/48764/

இதை போல் பல பிரிவினை முலம் தான் காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க ஆட்சி செய்கின்றன !!,

எதற்கு எடுத்தாலும் எங்கள் தலைவரை பற்றி பேச்சு எதற்கு ??
தெரியும் , பணம், பணம் பணம் !!!! (அ) அவர்களின் தியாக உணர்வு உங்களால் பொறுத்து கொள்ள முடிய வில்லை--- துரை . ஸ்ரீதர்

மர்மயோகி said...

நன்றி நண்பரே...
நீங்கள் குறிப்பிடும் அனைத்து உரிமை மீறல் பற்றியும் பேசலாம்..
பதிவு அதைப் பற்றியதல்ல..வைகோ என்பவன் ஏன் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவுதருகிறான் எனபது பற்றிதான்...அவன் இந்தியாதானே? அவன் ஏன் இந்த பிரச்சினைகளில் இவ்வளவு தீவிரம் காட்டவில்லை?
ஒரு பக்கம் விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்க்கும் ஜெயலலிதாவிடம் அடிமையாக இருக்கிறான்..
இன்னொரு பக்கம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அளித்து தேச துரோகம் செய்கிறான்..
விஷயம் இதுதான்..

Sri said...

தோழா,,

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து போராட சொன்னது யார் ?? இந்திய தான். !!!!

தேவை போடும் பொது ஆயுதம் கொடுத்து போராட சொல்வது, பின்னர் அடங்கி இரு என்று சொல்வது ஏன் ?? .

நம் நாடு இந்திய என்பதற்காக - தமிழ் மற்றும் உலக மக்களின் உரிமை போரை ஆதரிக்க kudadha ??

இந்திய வெளி உறவு கொள்கை என்ன மக்களின் உணர்வு கலை பொறுத்து இருக்குறதா ??

"People of India love you , Bush" -- என்ற இந்தியா பிரதமர் இன் கருத்தை நீங்கள் ஒத்து கொள்கிறர்கள ??
ஆதாரம் : http://www.thehindu.com/2008/09/27/stories/2008092760171200.htm

நம் நாடு இந்திய என்பதற்காக - இந்திய செய்வதை எல்லாம் ஆதரிக்க முடியுமா ??

விடுதலை புலிகள் எதிர்க்கும் இந்திய , பாலஸ்தீன ஆயுத குழுக்களை ஆதரப்பது ஏன் ??
பலுசிஸ்தான் (பாக்) ஆயுத குழுக்களை இந்தியா ஆதரவு கொடுப்பது ஏன் ??

ஆப்கானிஸ்தான் இல் அமெரிக்க படைகளை அதிக படுதும்மாறு இந்திய கேட்பது ஏன் ??

வைகோ வின் அரசியல் பற்றி பேச வேண்டுமானால் , அதை பற்றி மட்டும் பேசவும். மற்ற தமிழ் தலைவர்களின் சுய நலன் அரசியல் பற்றி பேசவும் !!

விடுதலை போராளிகளின் தியாகங்களை கொச்சை படுதாதிர் !!!! எம் தேசிய தலைவரை பழி போடதிர் !!!


//விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அளித்து தேச துரோகம் செய்கிறான்..

எது தேச துரோகம் ??? .

போபோர்ஸ் ஊழல் செய்வதா ???, உரிமை போரை ஆதரிப்பத ??

Spectrum ஊழல் செய்வத ??? ,, உரிமை போரை ஆதரிப்பத ??

இந்தியா வை அமெரிக்காவுக்கு விற்பதா ?? உரிமை போரை ஆதரிப்பத ??

--துரை. ஸ்ரீதர்

Sri said...

தோழா,,

Nepal மக்களின் உரிமை போரை , நசுக்க இந்தியா செய்த குழப்பங்கள் தெரியும்மா ?? . இதை எதிர்த்தல் தேச துரோகம்!!

பர்மா வில் சு கி சிறை இல் அடைத்து, ராணுவ ஆட்சி செய்யும் ராணுவத ஆதரிக்கும் இந்தியா கொள்கைகளை எதிர்த்தல் தேச துரோகம்!!

உங்கள் (நமது) இந்தியாவின் பெரிய அண்ணன் போக்கை , நீங்கள் ரசிக்கலாம் , என்னால் முடியாது !!!.

--துரை. ஸ்ரீதர்

ஜெய்லானி said...

ஆக்கப்பூர்வமான கேள்விகள் மிஸ்டர் துரை. ஸ்ரீதர் ஏன் நீங்கள் ஒரு பிளாக் தொடங்ககூடாது. நமது மர்மயோகியை போல இரண்டு பேருக்குமே ஒரே சிந்தனை!!!!!!

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள்
திரு ஜெய்லானி
திரு ஸ்ரீதர்

ஆகியோருக்கு நன்றி..

Sri said...

நண்பரே...

எனது கருத்துகளை ஏற்று கொண்டு இருந்தால் மிக்க நலம் ..

இந்திய அரசு தடை செய்தது என்பதற்காக - விடுதலை புலிகள் ஆதரிக்கும் நாங்கள் எல்லாம் தேச துரோகி அல்ல .

ஏன் என்றல் இந்திய அரசு ஒரு போலி ஜனநாயகம் , ஊழல் அரசியல் வாதிகள், ஊழல் அதிகாரிகளால் நிர்வாகம் செய்ய படுகிறது.

தேச பற்று உடைய நாம் (நீ , நான், மற்ற ஏனையோர் ) மற்ற தேச நலன்களை பற்றி சிந்திப்போம் !!. நான் குறிப்பிட்ட குழப்பங்களை செய்வோர் எதிர்த்து போராடுவோம்!

விவாதம் நிறுத்தி கொள்வோம்..

ஸ்ரீதர்

மர்மயோகி said...

நன்றி நண்பரே..
தவறு எதுவாகினும் சுட்டிக்காட்டுவது தவறல்ல..நான் ஒன்றும் காங்கிரஸ் ஆதரவாளன் அல்ல..
எனினும் இந்தியன்..நமது நாட்டுக்குள்ளேயே எவ்வளவு அத்துமீறல்கள், வன்முறைகள் நடந்து கொண்டிருக்கும்போது, மற்ற நாட்டின்மீது மூக்கை நுழைப்பது சரியல்ல..குஜராத் கலவரம், ஒரிசாவில் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல், போன்ற சமீபத்திய நிகழ்வுகளுக்கு வைகோ போன்றவர்கள் ஏன் அவ்வளவு தீவிரம் காட்டவில்லை, தமிழர்கள் மட்டும்தான் மனிதர்களா? (நானும் தமிழ்தான்..) அல்லது வைகோ உண்மையிலேயே விடுதலைப்புலி ஆதவாலன் என்றால் இன்னும் ஜெயலலிதாவின் அடிமையாக இருப்பது ஏன்..இதை மட்டும் சிந்தியுங்கள்..நன்றி...

Jayadeva said...

//வைகோ போன்ற துரோகிகள் இன்னும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறான்..இதன் மூலம் இவன் என்ன சொல்ல வருகிறான்..இப்படி சொன்னால் இவனுக்கு ஒட்டு விழும் என்று எதிர்பார்கிரானா?// இது ரொம்ப சிம்பிள். "பிரபாகரனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், தமிழ் நாட்டில் ரத்த ஆறு ஓடும்"- இது வை கோ விட்ட சவால். இப்போது பிரபாகரனை கொன்று விட்டதாகச் செய்திகள் வருகின்றன. வை கோ ஒன்று இரத்த ஆற்றை ஒட்டிக் காண்பிக்கணும் [அது யாராலும் முடியாது]. அல்லது பிரபாகரனை உயிரோடு காட்ட வேண்டும். [அதுவும் முடியாது]. சவாலில் இருந்து எஸ்கேப் ஆக
ஒரே வழி பிரபாகரன் சாகவே இல்லை என்று புருடா விட்டுக் கொண்டே இருப்பதுதான், அதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார்.

nirvana said...

Hi Marmayogi

I really like all your articles but I strongly disagree with your views on LTTE. I am a Tamilan from Tamilnadu who works for a NGO; I have met hundreds of Srilankan refugees. Pages won’t be enough to describe their horrific lives. I don’t want to create sympathy votes here for the LTTE. I know you are an open minded person with fair and honest opinions. From what I have understood you are saying that every country should mind their own business and I think that this attitude is one of main reasons why this World has become such a bad place to live. Imagine if you and your neighbour pick up a fight and he is beating you to death. Your neighbour who watches this has got two choices, he can interfere and stop the fight or he can help your neighbour by giving him a knife to kill you. The latter thing is what India did. You will even forgive the neighbour who beat you but not the one who helped with a knife to kill you. Indian government rubbed salt in the wounds of the victims. I am not justifying Rajiv’s assassination here but he is no saint also. You criticise Bush and other American presidents, if they are Rowdies and Rascals, Rajiv is a Poriki also. He didn’t feel any remorse for the happenings in Srilanka.He was responsible for this situation knowingly or unknowingly.

We are all fortunate man, let me tell you one thing try tackling a cornered cat inside a closed room. We can write so many things comfortably sitting in an AC room, when you are in that situation everything changes. When your mom, wife or sister are raped & killed by 20/30 police or military men in front of you. Will you go and report to the police and military. When people supposed to protect you harm you, everything changes.


Coming to Vaiko , I completely agree that he is an echai elai . His acts don’t contribute to any improvement in the life of Srilankan Tamils or Tamilnadu people. We just need to ignore him , let him bark all his life.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?