Pages

Wednesday, March 24, 2010

நெஞ்சு வலிக்கான தீர்வு - எனக்கு தெரிந்தது..!!!

பச்சரிசியுடன் பாதியளவு உளுந்து, சிறிது தேங்காய் கூட்டி அரைத்து, மூன்றையும் கஞ்சி போலக் காய்ச்சி சர்க்கரையும், ஏலக்காயும் சேர்த்து குடித்து வர மார்பு வலி குணமாகும்.


உளுந்தம் மாவை களியாக கிண்டி சாப்பிட்டு வர நெஞ்சு வலி தீரும். மார்பு படபடப்பு குணமாகும். உடல் பலமடையும்.

உளுந்தம் பருப்பை வறுத்து, அதனுடன் மிளகு, சீரகம், சேர்த்து பொடியாக்கி நெல்லிக்காய் பொடி சம அளவு சேர்த்து சாப்பிட்டு வர இளமையும், சுறுசுறுப்பும் உண்டாகும்.

இதனை இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ளும் பொடியாக தினமும் பயன்படுத்தி வர சிறந்த பலன் கிடைக்கும்.

உளுந்தை இரவு நீரில் ஊற வைத்து மறுநாள் அதிகாலையில் இந்த நீரை அருந்தி வர சிறுநீர் பெருகும். நீர் கட்டு, நீர்கடுப்பு, நீர் எரிச்சல், முதலியவை குணமாகும்.

உளுந்தின் வேரை நிர்விட்டு மைபோல அரைத்து சூடாக்கி, பொறுக்கக் கூடிய சூட்டில் வைத்துக் கட்டிவர மூட்டு வீக்கம் குணமாகும்.
                                                                       
                                                                                                             - நன்றி : யாஹூ தமிழ்
 
மேற்கூறிய உணவு முறைகளையும் மீறி - ஆஸ்பத்திரி பில்லைப் பார்த்தவுடன் வரும் நெஞ்சு வலிக்கு இந்த முறை அப்ளையாகுமா என்பது உங்களது பொருளாதார நிலையைப் பொறுத்தது..

3 comments :

பித்தனின் வாக்கு said...

நல்ல தகவல்கள். ஆஸ்பத்திரி பில்லுக்கு நெஞ்சு வலி மட்டும் இல்லை. ஹார்ட் அட்டாக் வந்து ஆள் கூட காலியாகலாம். நன்றி,

மங்குனி அமைச்சர் said...

ஹா..ஹா..ஹா.. மர்மயோகி உன்னோட போன பதிவு கமண்ட்ஸ்ல நான்தான் ஹிரோ

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் மங்குனி அமைச்சர், பித்தனின் வாக்கு ஆகியோருக்கு நன்றி நன்றி நன்றி :)

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?