Pages

Thursday, March 25, 2010

அசினுடன் என் முதல் அனுபவம்!!!

பொழுது நன்றாகத்தான் விடிந்தது...வழக்கம்போல ஜிம்முக்கு போய்விட்டு குளித்துவிட்டு, அலுவலகத்துக்கு வந்து, எல்லா வேலைகளையும் முடித்து மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பும்வரை எல்லாம் நன்றாகத்தான் நடந்தது..

அப்புறம்தான் என் நண்பன் ஒருவன் பார்க் ஹோட்டலில் நடக்கும் ஒரு பார்ட்டிக்கு அழைத்தான்..சாதாரணமாக பார்ட்டியில் கலந்துகொள்ளுவதில் சற்று கூச்ச சும்பாவம் உடையவன் நான்..அதிலும் இந்த மாதிரி பார்ட்டி நடக்கும் ஹோட்டலுக்கு வரும் நபர்கள் பயங்கர பருப்பு மாதிரி நடந்து கொள்ளுவார்கள்..இந்தியாவுக்கு சம்மந்தமில்லாத கோட்டும் சூட்டும் (அதுக்கு பேர் பார்மல் டிரஸ்ஸாம் ) போட்டுக்கொண்டு, ஏதோ இங்கிலாந்தில் இருந்து குதித்து வந்தமாதிரியும், தமிழ் அப்படீங்கற மொழியப் பத்தி தெரியாத மாதரியும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருப்பார்கள்...அங்கே போன சாராயம் குடிக்க வேண்டும்..அப்படி குடிக்காதவனை ஏதோ தீண்டத் தகாதவனை போல பார்ப்பதும் அந்த ஆங்கிலேய பருப்புகளின் வழக்கம்..

அதனால் நான் மறுத்தேன்..ஆனால் பெரிய பெரிய நடிக நடிகைகள் (அது என்ன பெரிய நடிகன், பெரிய நடிகை? நடிகன்னாலே கூத்தாடிதானே?) எல்லாம் வருவாங்க..என்றான்..என்னதான் கூத்தாடி என்றாலும் ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது..சாராயம், சிகரெட் போன்றவைகளை வெறுக்கும் என்னால் இந்த ஜொள்ளு வகையிலிருந்து மட்டும்..ஹி ஹி...

வேற என்ன உடனேயே கிளம்ப வேண்டியதுதானே...

இருக்கிறதிலேயே ஒரு நல்ல டிரஸ்சை அணிந்து கொண்டேன்..அப்புறம் அந்த ஹோட்டலுக்கு உள்ளே போகனும்ன ஷூ போடணுமாம்...ஷூ இல்லே...சரி பரவாயில்லே..நண்பனே கொடுத்தான்..(ரொம்ப நல்லவனா இருக்கானே?)

ஹோட்டல் பிரம்மாண்டமாகத்தான் இருந்தது..இந்த ஹோட்டலில்தான் ஸ்னேஹா என்ற நடிகை அடிக்கடி போலீசில் சிக்குவாளாம் - மனோரமா என்னும் நடிகை..பெரிய அரசியல் தலைவர்களிடம் பேசி விடச் சொல்லுவாளாம்..- இதெல்லாம் என் கற்பனை அல்ல...குமுதம், ஆனந்த விகடன், நக்கீரன் போன்ற ஆபாசப் பத்திரிக்கைகளில் படித்தது..

பார்ட்டி நடக்கும் ஹாலுக்குள் சென்றோம்...ஏராளமான பருப்புகள்....அதுதான் இங்கிலாந்துக்காரனுக்கு பிறந்த (? ) கோட்டு சூட்டு ஆண்களும், கம்புகட்டு அழகிகளும் (ஸ்லீவ்லெஸ் சட்டை போடும் அழகிகள்) குழுமி இருந்தார்கள்..ஆண் பெண் என்ற பேதம் அங்கில்லை..நினைத்துக் கொண்டேன்..பண்பாடு, ஒழுக்கம் எல்லாம் நடுத்தர மக்களுக்குத்தான்..தரையில் வாழும் தரைப்படைகளுக்கும், (அதுதாங்க பிளாட்பாரத்தில் இருக்குமே சில ஜென்மங்கள்) பணத்தில் வாழும் வானரப்படைகளுக்கும் (தரையில் வசிப்பவன் தரைப்படை என்று சொன்னால் மாடியில் வசிப்பவன் வானரப்படைதானே?) இந்த கோட்பாடு பொருந்தாது...தரைப்படைகளுக்கு பக்கத்தில் படுப்பவள் (அல்லது படுப்பவன்)தான் மனைவி (அல்லது கணவன்) அது யாராக இருந்தாலும்....இந்த பணக்கார ஜென்மங்களும் முக்கால்வாசி அப்படித்தான் நடந்து கொள்கின்றன..

சரி அதை விடுவோம்..அந்த கூட்டத்தில் நான் ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டேன்..யாராவது பிரபலமான நடிகனோ நடிகையோ வருகிறார்களா என்று என் கண்கள் அலைந்து கொண்டிருந்தன..அவ்வளவாக நடிக நடிகையர் தென்படவில்லை என்றாலும்...அந்த கூட்டத்தில்..சற்று பளிச்சென்று..இருப்பது..எஸ்..அசின்தான்..நடிகை அசின்...அதுவும் என்னையே பார்த்துக்கொண்டு...நான் பின்னாடி பார்த்தேன்..யாரும் இல்லை..அவள் என்னைத்தான் பார்க்கிறாள்...ஐயோ சிரிக்கிறாள்....என் உடம்பெல்லாம் மின்சாரம் பாய்கிறது...எப்படி இது..? ஒரு பிரபல நடிகை என்னை மட்டும் பார்ப்பது எப்படி...நான் அவ்வளவு அழகா?...இப்போது அவன் என்னை நோக்கி வருகிறாள்..நான்.."சுட்டும் விழிச்சுடரே..." பாட்டை கற்பனை செய்து கொள்கிறேன்.....இப்போது என்னை நெருங்கிவிட்டால்...எனக்கு கை கால் நடுங்குகிறது..இது எனக்கு முதல் அனுபவம்..ஒரு நடிகை அதுவும் அழகான நடிகை...அசின் என்னிடம் பேச வருகிறாள்..கிட்டே வந்து .."ஏன் ஒதுங்கி இருக்கே? ...கம் ஆன் யா!" என்று ஏன் கையைபிடித்து இழுக்கிறாள்..எல்லாரும் என்னைப்பார்கிரார்கள்..எனக்கு கூச்சமாக இருக்கிறது....அப்போது அவள் மிகவும் என் அருகில் வந்து..(என்ன சென்ட் பூசுகிறாள்?) மணக்கிறது. உடம்பு நடுங்கிறது...காய்ச்சல் வருவது போல் இருக்கிறது..என்னை கட்டிபிடிக்கிறாள்....ஏன் நான் தடுக்கவில்லை? ..நடிகைகளை கேவலமாகபேசும் எனக்கு இப்போது அவள் அருகாமை கிடைத்ததும் எல்லாம் மறந்து விட்டது...இன்னும் அவள் என்னை நெருங்கி வரும்போது....

ட்ரின்க்க்...ட்ரின்ன்ன்னக்....என்ன அது என் செல் போனா..அதை எடுத்து ஆப் பண்ண முயல்கிறேன் முடியவில்லை....மீண்டும் மீண்டும் அது அடித்தக் கொண்டே இருக்கிறது..ஏன் என்னவாயிற்று எனக்கு.....

ச்சே..திடீரென்று முழித்து விடுகிறேன்..இவ்வளவு நேரம் சத்தமிட்டது அலாரமா...மணி என்ன....ஹ்ம்ம் காலை 8 மணி ஆகிவிட்டதா...அப்போ இவ்வளவு நேரம் எல்லாம் கனவா?

சரி விசயத்துக்கு வருவோம்..

தமிழ்மணம் இணையதளத்தில்..ஒட்டு வாங்க இது போன்ற மொக்கை (மொக்கைதானே? ) பதிவிட்டால்தான் முடியும் என்றார்கள்..அதுதான்..ஹி..ஹி... கன்பார்ம் பண்ணிக்கலாம்னுதான்....

5 comments :

மங்குனி அமைச்சர் said...

ஐ , நான்தான் பஸ்டு

Barari said...

கற்பனை கனவாக இருந்தாலும் எழுதியவை அனைத்தும் உண்மையே (அசின் விசயத்தை தவிர.)வாக்கு கேட்டீங்கள்ல போட்டாச்சு.

மர்மயோகி said...

நன்றி மங்குனி அமைச்சர்
நன்றி barari

mohamed said...

hi

iyarkai anu said...

yaaraayinum tharamatru vimarsippathu sariyalla

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?