Pages

Tuesday, March 16, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா..- விமர்சனம்..

இதிலும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால்..சினிமாக்களால் எந்த விதமான நன்மையையும் கிடையாது...

சரி..

சிம்புவை ஒரு பொறுக்கி என்றே கணித்து வைத்து இருக்கிறேன்..இவனது முந்தைய படங்கள் அனைத்தும் வயதுக்கு மீறிய திமிரைக் காட்டும் பொறுக்கித்தனமான படங்களே..இவனையும் கிரிக்கெட்டில் ஸ்ரீசாந்த் என்பவனையும் ஒரே பார்வையில்தான் வைத்து இருக்கிறேன்..இவங்கள் இருவரும் "ரியல்" பொறுக்கிகள்.

ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா படம் ஒரு இயக்குனரின் படமாக உள்ளது..ஏற்கனவே கவுதம் மேனனின், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச் சரம் போன்ற படங்களைப் பார்த்து இருந்தாலும், சிம்பு நடித்த காரணத்தால் இந்த இயக்குனரின் மேல்கூட கோபமாக இந்த படம் பார்க்கவே விரும்பவில்லை..சில நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில்தான் விண்ணைத்தாண்டி வருவாயா என்னும் படத்தை பார்க்க நேர்ந்தது...மிக இயற்கையான நடிப்பை சொல்லிக்கொடுத்து இருக்கிறார்..திரிஷா மிகவும் அழகு. எல்லா பத்திரிக்கைகளும் வர்ணித்தது போல அவள் பக்கத்து வீட்டு பெண் போல இல்லை...அப்படி இருந்தா பக்கத்து வீட்டு பசங்க கொடுத்து வெச்சவங்க.. சிலம்புவை அடக்கி வாசிக்கவைத்து இருக்கிறார். ஆனால் ஒரு படத்தை வைத்து அவனை ஆஹா ஓஹோ என்று புகழத்தேவை இல்லை.. பொறுக்கி பொறுக்கிதான். அப்புறம் ஓமனப் பெண்ணே என்ற பாடலைப் பற்றியும் பெரிசாக சொல்லி இருக்கிறான்கள்.. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை..அந்த பாடல் புரியவே இல்லை..பின்னணி இசை மட்டும் நன்றாக உள்ளது.. அப்புறம் "உன் கண்களால் யாரும் பார்க்கவில்லை போலும்" என்ற வசனத்தையும் ஏதோ புதிதாக சொல்லி இருப்பது போல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் ..சலீம் - அனார்கலி கதையில் அனார்கலி, சலீமிடம், ":நான் அவ்வளவு அழகா?" என்று கேட்கும் பொது "என் கண்களின் வழியாக பார்த்தால் நீ அழகுதான்!" என்பதின் அப்பட்டமான காப்பி. (இப்படித்தான், கிரி என்னும் படத்தில் அர்ஜுன் சொல்லும் வசனம் "பன்னிங்கதான் கூட்டமா வரும்! சிங்கம் தனியாத்தான் வரும் - இதை அப்படியே அப்பட்டமா காப்பி அடித்து சிவாஜி என்ற படத்தில் ரஜினி சொன்னவுடன் இங்கே உள்ள மாமா பத்திரிக்கைகள் எல்லாம் இதை ஏதோ ரஜினிதான் சொந்தமா கண்டு பிடிச்ச மாதிரி ஜால்ரா போட்டானுங்க)

சில காட்சிகள் எது கற்பனை, எது ரியல், எது ப்ளாஷ் பேக் என்று குழப்பமாக உள்ளது. மூன்று விதமான கிளைமாக்ஸ் வைத்து இருக்கிறார்கள்...நன்றாகத்தான் உள்ளது..

நம்மை மீண்டும் காதலிக்கத் தூண்டும் படம்தான் விண்ணைத் தாண்டி வருவாயா


இந்தப் படத்தில் கதா நாயகன், அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் " சார் உயிரைக் கொடுக்கலாம் சார்"..ஆனால் அப்படி ஒன்றும் ரிஸ்கான காட்சிகள் ஏதும் இல்லை..


7 comments :

KULIR NILA said...

Romba kastam ungal manasa indha paadu paduthikeereenga.

Unmayila ungalukku simbu mela alavuku adhigamana poramani irukkudhu endbadhu delivaagirathu.

ungalala avana maadhiri nadandukka vaaippu kedaikkala adhu than kaaranam unga manasa kettu paarunga adhu puttu puttu vaikkum

பித்தனின் வாக்கு said...

நல்ல கமெண்ட், ஆனா நான் படம் எதுவும் பார்ப்பது இல்லை. ஆதலால் எனக்குத் தெரியாது. நன்றி.

ஜெய்லானி said...

நல்ல வேளை நான் பார்கல தப்பிச்சேன்.

ஜீவன்சிவம் said...

படம் பார்க்கட்டுமா...வேண்டாமா

மர்மயோகி said...

நன்றி குளிர் நிலா, பித்தனின் வாக்கு, ஜெய்லானி மற்றும் ஜீவன் சிவம்..

குளிர் நிலா அவர்களுக்கு, சிம்பு மாதிரி நடக்க வாய்ப்பில்லை என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்..? எல்லாருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தே தீரும்..(ஆமான்..நீங்கள் எந்த வாய்ப்பை குறிப்பிடுகிறீர்கள்? ) அவன் மேல் எந்த பொறாமையும் கிடையாது.சினிமா நடிக நடிகைகளை ஒரு கேவலமான பிறவிகளாகத்தான் நினைக்கிறேன்..சினிமாக்களில் நடிக்கும் நடிகர்கள்...தங்களை ஏதோ தனிப்பிறவியாக நினைத்துகொள்கிரார்கள்..அதுவும் இந்த சிம்புவின் ஆட்டம்...யாருக்குமே அவனைக்கண்டால்...வெறுப்புத்தான் வருகிறது..

பித்தனின் வாக்கு..நல்ல பாலிசி..நானும் முயற்சிக்கிறேன்..
ஜெய்லானி அவர்களே நீங்களும் தான்..
ஜீவன் சிவம் அவர்களுக்கு, சினிமாவினால் எந்த பயனும் இல்லை என்பதுதான் என் கட்சி....புரிந்து கொண்டிருப்பீர்கள்..நன்றி

மங்குனி அமைச்சர் said...

ஒரு விமர்சனம் எழுதுறதுக்காக உன் தன மானத்த இலந்துட்டியே மர்மயோகி

ஜெய்லானி said...

சார் நான் பொதுவா காமெடி படம் மட்டுமே பார்க்கூடிய ஆள், அதுவும் ஓசியில மட்டுமே ,இதுக்கு செலவு பன்னும் காசை யாருக்காவது தருமம் பன்ன நினைக்கும் ஆள்!!நான். போதுமா??????/

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?