Pages

Monday, March 8, 2010

பெண் சுதந்திரம் போற்றுவோம்...!

இன்றைய தினம் மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது..அத்துடன் மகளிருக்கான 33% இடவொதுக்கீட்டுக்கான மசோதாவும் தாக்கல் செய்யப்படப்போகிறது..சரி..நமது நாட்டில் பெண்கள் எவ்வாறு மதிக்கப்படுகிறார்கள் என்று பாப்போம்..

டி.வி விளம்பரங்கள்..

ஒரு ட்ரெயினில் பெண் டிக்கெட் பரிசோதகர் வருகிறார்..ஒரு இளைஞனிடம் டிக்கெட் கேட்கும் போது அன்று அவன் பல்துலக்கிய பற்பசையின் வாசம் அவரை இழுக்கிறது..அந்த இளைஞனை தன்னுடன் இழுத்துச் சென்று விடுகிறார்..(எதற்கென்று சொல்லத்தேவை இல்லை).

அடுத்து, ஒரு லிப்ட்..அதில் body spray பயன் படுத்திய ஒருவர் சென்ற பிறகு இன்னொரு இளைஞன் வருகிறான்..ஒரு அழகியும் வருகிறாள்..ஏற்கனவே "body spray" பயன்படுத்தியவன் சென்றுவிட்டாலும் அந்த வாசனை இருப்பதால் அவளுக்கு மூடு வந்து, லிப்டை நிறுத்தி அந்த இளைஞனுடன் இன்பம் அனுபவித்து விட்டு வெளியேறுகிறாள்..


காரில் ஒரு பெண் வருகிறாள்..சிக்னலில் அவள் அருகில் வந்து நிற்கும் இளைஞனிடமிருந்து வரும் "body spray" வாசத்தால் தன் மொபைல் என்னைக் கொடுத்து தொடர்பு கொள்ளச் சொல்லிவிட்டு போகிறாள். (எதற்கு?)

ஒரு பெண்ணை அடைய பலர் போட்டி போடுகின்றனர்.. அதில் கேவலமான தோற்றம் உடைய ஒருவன் வாயிலிருந்து வரும் மின்ட் வாசனையால் அவனிடம் போய் விடுகிறாள் அந்த பெண்.

ஒரு இளைஞன் தன் பெண் நண்பியுடன் தனித்திருக்கும் வேளையில் இன்னொரு பெண் தோழிக்கு "STD" போன் போட்டு அவளுடன் உறவு வைத்துக்கொள்வதர்க்கு idea கேட்கிறான்..அந்த பெண்ணும் அதற்கு ஆலோசனை சொல்லி கூட்டிகொடுக்கிறாள்..

இப்படி சின்ன சின்ன அல்ப காரணங்களுக்காக தம் உடலை அர்ப்பணிப்பதாக காட்டப்படும் விளம்பரங்கள்தான் மேலே சொல்லி இருக்கிறேன். மேலே சொல்லப்பட்டது சின்ன உதாரணங்கள்தான்..இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.

அத்தனை விளம்பரங்களிலும் நடித்தது - இதே பெண்ணுரிமை பேசும் - அழகிகள்தான்..வேறு ஆண் யாரும் பெண் வேஷமிட்டு நடிக்கவில்லை..காசுக்காக தம்மையே இழப்பதுபோல் காட்டப்படும் இந்த விளம்பரங்களில் நடித்துவிட்டுதான் பெண் சுதந்திரம்பற்றி பேசுகிறார்கள்..


அரை குறை ஆடையும், அல்ப விஷயங்களுக்காக விலைபோவதும்தான் பெண் சுதந்திரம் என்றாலும்..


நாமும் நம் பங்குக்கு பெண் சுதந்திரம் பேணுவோம்..பெண்ணுரிமை காப்போம்..!!


0 comments :

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?