Pages

Saturday, March 26, 2011

பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடா?


தேர்தல் என்று அறிவுப்பு வந்துவிட்டாலே, மாநிலக்கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் வெளியிடுவது வழக்கம்தான்..அதில் சில பல கவர்ச்சித் திட்டங்கள் இடம்பெற்றிருந்தாலும், மக்கள் நலத்திட்டங்களே முதலிடம் பிடிக்கும்..

ஆனால் தற்போதைய காலகட்டங்களில், மக்கள் நலத்திட்டங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, வெறும் கவர்ச்சித்திட்டங்கள் மட்டுமே வெளியிடப்படுகின்றன..அத்தனையும் மக்களை ஏமாற்றும் அறிவிப்புகள்..

ஒட்டு வாங்குவதற்கு இந்த அரசியல் வியாதிகள் சொல்லும் அறிவுப்புகளைப்பார்த்தால், தமிழகம் மட்டுமே ஏழைகளும், பிச்சைக்காரர்களும் நிறைந்த ஒரு மாநிலம்போல காட்டபடுகிறது..
தமிழகமக்கள் எல்லாரும் இலவசத்துக் அலைவதுபோலவும்

ஒவ்வொருவரின் தேர்தல் அறிவுப்பும் உள்ளது..இந்த இலவசத்திர்காக, ஒரு அரைமணிநேரம் செலவழித்து ஒட்டுபோட்டுவிட்டு ஐந்தாண்டுகள் அடிமையாகவும், ஒட்டாண்டியாகவும் வாழ பெரும்பாலும் தமிழர்களும் தயாராகத்தான் உள்ளனர்.

ஏழைமக்கள் படிக்க வரவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட "மதிய உணவுத்திட்டம்" எம்ஜியாரால் "சத்துணவு திட்டம்" என்ற கவர்ச்சி திட்டமாக மாற்றப்பட்டு, அசைக்கமுடியாத முதலமைச்சராக இருந்தார்..மற்றபடி எம்ஜியார் எந்த ஒரு நன்மையையும் தமிழகத்திற்கு செய்ததாகத் தெரியவில்லை..

சினிமாக்காரர்களின் அடிமைகளாகிவிட்ட தமிழர்கள் இன்றுவரை அந்த மாயைகளிலிருந்து விடுபட்டதாக தெரியவில்லை..சினிமாவில் சற்று பிரபலாகிவிட்டால் எப்போ அரசியலில் குதிப்பாய் என்று பத்திரிக்கைக்காரன் கேட்பதும், அதைப் பற்றிய செய்திகளாக வெளியிட்டு காசு பார்ப்பதும், இங்குள்ள முட்டாள்களும் எதோ அவன் அரசியலுக்கு வந்துவிட்டால் இந்தியாவே வல்லரசாகிவிடும் என்பது போலவும் அவன் பின்னால் நாயாய் அலைவதும், இது தமிழ்நாட்டின் சாபக்கேடாகி விட்டது.

சினிமாவில் கண்ட கண்ட நடிகைகளுடன் கூத்தடிக்கும் நடிகன், என்னத்தை புடுங்கிவிடப்போகிறான் என்ற சிறு அடிப்படை அறிவுகூட இல்லாததால்தான், அரசியலுக்கு வரும் அனைவரும் சினிமாக்காரனாகமட்டுமே இருக்கிறான்..

அவன்தான் படம் எடுக்கிறான், அவன்தான் விநியோகம் செய்கிறான், அவன்தான் தொலைகாட்சி நடத்துகிறான் இப்படி ஊடகம் மற்றும் பொழுதுபோக்குகள் சம்மந்தப்பட்ட அனைத்தும் அரசியல்வாதி மற்றும் சினிமாக்காரர்களின் கைகளில் சென்றுவிட, தொழில்செய்யும் ஒவ்வொருவனும் சினிமாக்காரன் பின்னாடியும் அரசியல்வாதிகள் பின்னாடியும் ஏவல்காரனாக மண்டியிட்டு கிடக்கும் அவலம் தமிழகத்தில் மட்டுமே பார்க்கமுடியும்..

இதன் மூலம் கொள்ளை கொள்ளையாக கொள்ளையடித்த கூட்டங்கள்தாம் இன்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, இலவச திட்டங்களை அறிவிக்கின்றன....

இப்படி அறிவித்து ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் இவரகளது உள்நோக்கம் என்னவாக இருக்கும்? தமிழ்நாட்டுக்காரனை பிச்சைக்காரனாக்கி, இன்னும் சுரண்டுவதர்க்குதானே..ஹொகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ஜப்பான் நாட்டில் பிச்சை எடுக்கும் இவர்களுக்கு இந்த இலவசங்களுக்கு மட்டும் எங்கே இருந்து பொருளாதாரம் வருகிறது..?

எல்லாம் கருணாநிதி வீட்டு பணமும், ஜெயலலிதா வீட்டுப் பணமுமா?


அதனால்தான் கருணாநிதி அறிவிக்கும் இலவசங்களை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் அதற்க்கு போட்டியாக இன்னும் இலவசங்களை ஜெயலலிதா அறிவிக்கிறார்..

ஊரெங்கும் சாராயக்கடைகளை திறந்து வைத்து எல்லாரையும் குடிகாரனாக்கி அதிலிருந்து வருமானம் பெற்று நமக்கே திரும்பத்தரும் ஏமாற்று வேலை..


இன்னும் அனைத்து தொழில் துறைகளிலும் அரசியல்வாதிகளின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தை புகுத்தி கோடிகோடியாக சம்பாதிக்கின்றார்கள்..இன்னும் எங்கும் லஞ்சம் ஊழல் என்று நிர்வாகம் சீரழிந்து கிடக்கிறது..

காங்கிரசின் அனைத்து மிரட்டல்களுக்கும் பணிந்து..இன்று கூனிக்குறுகி நிற்கிற திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்ச்சிப்பது ஏன்?

கருணாநிதியிடம் இருந்து ஆட்சியைப் பறிக்க ஜெயலலிதா என்னன்னேம்மோ செய்கிறார்..கஜானா காலி என்று சொல்லிக்கொண்டே இலவச திட்டங்களை அறிவிப்பது ஏன்?

மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒருபக்கம் நடவடிக்கை அதே கட்சியுடனேயே பிடிவாதமாக காங்கிரஸ் கூட்டு வைப்பது ஏன்?

பூரண மதுவிலக்கு கொண்டுவர வற்புறுத்துவோம் என்று சொல்லிக்கொண்டே பாமக திமுகவுடன் கூட்டணி அமைப்பது ஏன்?

அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக்கொண்டு 41 சீட்டுகளுக்காக ஜெயலலிதாவின் வீடு தேடி விஜயகாந்த் செல்வது ஏன்..?

இதில் மக்கள் நலம் என்று என்ன உள்ளது..

அனைவரும் கொள்ளைக்காரர்கள்தான்..ஏமாற்றுக்காரர்கள்தான்..

இறுதியில் இலவசங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களை நிரந்தர சோம்பேறிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் ஆக்கிவிட முயற்ச்சிக்கும் இந்த அரசியல்வியாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு எப்போதுதான் விடுதலை?

நாளைக்கு ஆளுக்கொரு கார், பஸ், டிரையின் இன்னும் விமானம் என்று இலவச அறிவிப்பு செய்துவிடுவார்களோ என்று அச்சமாக உள்ளது..இந்த தேர்தலைப் பற்றிய ஒரு பத்திரிக்கையாளரின் கூற்று :

"இது ஒரு விசித்திரமான தேர்தல்! விவஸ்தை இல்லாத தேர்தல்! வடிகட்டிய சுயநலம் நிறைந்த தேர்தல்! அரசியல்வாதிகளின் முகத்திரையை அக்குவேறு ஆணி வேராகக் கிழித்தெரிகிற தேர்தல்! பசுத்தோல்களை உரித்துக் காட்டுபுலிகளை அடையாளம் காட்டும் தேர்தல்!


வஞ்சகமும், சூழ்ச்சியும், சதியும் துரோகமும் மலிந்துபோன தேர்தல். மனிதனில் மறைந்திருக்கும் அத்தனை குணக்கேடுகளையும் அம்பலமாக்கும் தேர்தல்.

உருட்டல் மிரட்டல், பிளாக்மெயில், கெஞ்சல் போன்ற எல்லாவிதமான நடைமுறைகளும் இதுவரை எந்த தேர்தலிலும் இந்த அளவிற்கு அரங்கேறியது கிடையாது.

இந்த தேர்தல் வர்த்தக சூதாடிகளின் வியாபாரமாகிவிட்டது. பலமடங்கு லாபத்தை ஈட்டும் குதிரைப்பந்தயமாகிவிட்டது. பொய்யையும் புனை சுருட்டையும் பேசத்தெரியவேண்டும். வார்த்தை ஜாலங்களால் வாக்காளர்களை வருடத்தெரியவேண்டும். வாக்குறுதிகளை பஞ்சமே இல்லாமல் வாரி இறைக்கவேண்டும். கட்டியுள்ள துணிகூட களவு போவது தேறாத வகையில் அவனை ஏமாற்றதெரிந்திருக்க வேண்டும்.

இதுதான் ஜனநாயகம் என்றால் இந்த போலி ஜனநாயகம், இந்த ஏமாற்று ஜனநாயகம், இருப்பதையும் பறித்து செல்லும் சுயநல ஜனநாயகம் நமக்கு வேண்டாம்."

12 comments :

thameem said...

i see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social communit

துளசி கோபால் said...

well said.

I agree with you.

ஷர்புதீன் said...

i need 10lakhs as free, i will live next 5 year comfortably!
:)

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

present

sivams said...

பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடா?NOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO(49 O)

Jayadev Das said...

Good, it reflects my feeling, Thanks.

மர்மயோகி said...

நன்றி thameem அவர்களே..உங்க ப்ளாக் என்ன?

மர்மயோகி said...

நன்றி திரு துளசி கோபால்

மர்மயோகி said...

நன்றி திரு ஷர்புதீன்

மர்மயோகி said...

நன்றி வேடந்தாங்கல் - கருன் (எங்கே ரொம்ப நாளா காணோம்?)

மர்மயோகி said...

நன்றி sivams

மர்மயோகி said...

நன்றி jeyadevdas

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?