Pages

Saturday, March 19, 2011

வெட்கம், மானம், சூடு , சொரணை = பணம், பதவி, ஆசை, பேராசை!

இங்கே அரசியல்வாதியாக இருக்கவேண்டிய தகுதி, வெட்கம் மானம் சூடு சொரணை இழந்து, எதற்கும் எவனையும் காலைபிடிக்க தயாராக இருக்கவேண்டும், பதவிக்காக எந்த ஒன்றையும் இழக்க தயாராக இருக்கவேண்டும். ஒவ்வொரு தேர்தலின்போதும், ஓட்டுப் பிச்சை எடுக்க அரசியல் கூட்டணி வைத்துக்கொள்ள இந்த அரசியல் கருங்காலிகளின் கூத்தை பார்க்கும்போது, இவர்களா நம் ஆட்சியாளர்கள் என்று நினைக்கும்போது கூனிக் குறுகி நிற்கிறோம்..

தன்மானம் தமிழ் மானம் என்று கூவிக்கொண்டிருந்த திராவிடக் கட்சிகள் இன்று, கூட்டணிக்காகவும், அரசியல் பேரத்திர்க்காகவும் , ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காகவும் மானம் வெட்கம் தன்மானம் இழந்து ஒவ்வொரு கட்சி அலுவலகத்திற்கும் நடையாய் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, இவர்களா மக்கள் நலனை சிந்திக்கிறார்கள்? இவர்களா நாளை நல்லாட்சி தரப்போகிறார்கள் என்ற எண்ணம் எழாமல் இல்லை..

முதலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக , காங்கிரசின் போக்கில் சந்தேகமடைந்து, அவசர அவசரமாக - பல நல்ல திட்டங்களையெல்லாம் வரவிடாமல் தடுத்த- பாமக வுடன் தொகுதிப் பங்கீடு செய்தது..

அதை அறிந்த காங்கிரஸ், ஸ்பெக்ட்ரம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்து, திமுகவை அதிக தொகுதி பங்கீடு கேட்டு மிரட்டியது.

இரண்டு மூன்று நாட்கள் தன்மான நாடகம் ஆடிய திமுக, இறுதியில் காங்கிரசிடம் சரணாகதி அடைந்து, அதன் பிறகும், தொகுதி பிரித்துக் கொடுப்பதில் பிரச்சினையாகி, இன்று பல்வேறு உள்குத்து நாடகங்கள் முடிந்த நிலையில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது..

சென்ற தேர்தலில் "கதாநாயகனாக" இருந்த தேர்தல் அறிக்கை இந்த தேர்தலில் "கதாநாயகியாக" இருக்குமாம்..இப்படி மக்களை நேரடியாக முட்டாள்கள் என்று சொல்லும் வார்த்தையையும் நாம் கேட்டுக் கொண்டுதானிருக்கிறோம்..இந்தியப் படங்களில் "கதாநாயகிகளின்" முக்கியத்துவம் என்ன எனபது, முட்டாளுக்கு கூட தெரியும். அதாவது இந்த தேர்தல் அறிக்கை வெறும் கவர்ச்சி அறிக்கைதான் என்று சொல்கிறார் போலும்..

எந்த பிரச்சினை உண்டானாலும், எல்லாவற்றிலும் இருந்து தப்பி விடுவார் நமது பிரதமர், அதாவது கை சுத்தமாம்..ஆனால் இன்று அந்த "கை" யும் கறைபடிந்து நிற்கின்ற பரிதாப காட்சிதான், - நம்பிக்கை ஓட்டெடுப்பு தீர்மானத்தில் வாக்களிக்க எம்பிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்..

அடுத்தும் மக்களோடும், கடவுளோடும் மட்டுமே கூட்டணி என்று கூட்டத்திற்கு கூட்டம் ஓலமிட்டுக்கொண்டிருந்த விஜயகாந்த், ஜெயலலிதா முன்பு பம்மிக்கொண்டிருந்த காட்சி கண்கொள்ளா காட்சி..

அதோடு மட்டும் முடிந்ததா கதை..?

தொகுதி பங்கீடு முடிந்த கையோடு ஜெயலலிதா தன்னிஷ்டத்திருக்கு வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியில் தனக்கு உள்ள அதிகாரத்தை நிலை நாட்டினார்..


ஜெயாவின் அடிமைகள் வைக்கோல் மற்றும் நாஞ்சில் சம்பத் என்ற இருவர் மட்டுமே உள்ள ஒரு மதிமுக என்றதொரு கட்சி இருப்பதாகவே அவர் பொருட்படுத்தவில்லை..

இன்னும் ஜெயலலிதாவின் ஒரிஜனல் ஜால்ரா தா பாண்டியன் போன்றோருக்கு தொகுதிகள் வழங்கினாலும், நாம் என்ன செய்தாலும் கேட்பதற்கு அவர்களுக்கு மானம் ரோஷம் இருக்கிறதா என்ற அளவிற்கு எதைப் பற்றியும் கவலைப் படாமல் வேட்பாளர்களை அறிவித்தார்.

உடனேயே இந்த மக்கள் நலம் விரும்பிகள் கொதித்து எழுந்தனர்..

234 தொகுதிகளிலும் செல்வாக்கு உள்ளதென்று சொல்லும் விஜயகாந்த் - எதெற்கு குறிப்பிட்ட தொகுதிதான் வேண்டும் என்று சொல்லணும்?

கம்யூனிஸ்டுகள், ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதி என்றால் அது அதிமுகவை எதிர்த்து வெற்றி பெற்ற தொகுதிகள்தான்..அதாவது அது அதிமுக தொகுதிகள்தான்..அதுதான் வேண்டுமாம்..மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எல்லா தொகுதிகளையும் சமமாகத்தான் பார்பார்கள்..

உடனேயே மூன்றாவது அணி என்றொரு நாடகம்,

சன் டிவி, கலைஞர் டிவி போன்றவை - உருவ பொம்மை எரிப்பு என்ற விளையாட்டு நிகழ்ச்சிகளை பெரிது படுத்தி குளிர்காய நினைத்தன..

மிரட்டல் அதிகமானதும், ஜெயலலிதாவும் இறங்கி வந்து இருக்கிறார்..பைசா பெறாத கட்சிகளையெல்லாம் அழைத்து அழைத்து தொகுதி உடன்பாடு செய்கிறார்..
இனிமேல் கூட்டணியே கிடையாது என்று சொன்ன தா. பாண்டியன் ஜெயலலிதா வீட்டு வாசலில்..

நல்லாட்சி தருவோம் என்று சொல்ல வக்கில்லாமல், காங்கிரஸ் திமுக ஆட்சியை விரட்டவே இந்த கூட்டணி என்று சொல்லும் அவலம்.

என்னை ஒரு கட்சியாக பார்க்க வேண்டாம் ஒரு அடிமையாகவாவது வைத்துக் கொள் என்று - ஜெயலலிதா உருவ பொம்மை எதிர்ப்புக்கு கண்டனம் தெரிவித்த வைக்கோலின் புலம்பல்..

தமது கட்சியை ஒரு கட்சியாக கருதாமல் விட்டதை கண்டிக்காமல், - நாங்கள் எவ்வளவு விசுவாசமாக இருந்தோம் என்ற இன்னொரு அடிமை ஆபாச பேச்சாளன்,நாஞ்சில் சம்பத்தின் வெட்கங்கெட்ட பேச்சு..

சாரயக்கடை வருமானம், இலவச டிவி, ஒரு ரூபாய் அரிசி, காப்பீட்டு திட்டம் போன்றவை மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைத்துவிடும் என்று தைரியத்தில் ஒட்டுக்கேட்டு வரும் திமுக.

இவர்களில் யாருக்கும் மக்கள் நலனில் அக்கறை இல்லை...


பதவி அதிகாரம், இதன் மூலம் கிடைக்கும் அபரிதமான வருமானம்..இது ஒன்றே குறிக்கோள்..

நாளை இவர்கள்தான் நம்மிடம் ஓட்டுகேட்டு வருவார்கள்..

கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை தருவார்கள்..


ஏன் நமக்கு லஞ்சம் கொடுத்து ஒட்டு போடவும் சொல்லுவார்கள்..


நமது தொகுதி வேட்பாளர்களில் யார் மற்றவரைவிட, தவறுகள் குறைவாக செய்து இருக்கிறாரோ..(அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது) அவரைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்..நாளை அவனும் இதைவிட கூடுதல் குற்றம் புரிந்தவனாவான்..

இந்த நிகழ்வுகளுக்கு முடிவு கூற எனக்கு தெரியவில்லை..வேறு யாருக்காவது தெரியுமா?


பின்னூட்டமிடுங்களேன்..


வேறு வழி?

அப்புறம் ஒரு டிஸ்கி..:


தேர்தல் நெருங்கிவந்தவுடன், சன் பிக்சர் நிறுவனத்தின் எந்த படமும் வெளியாகவில்லை அல்லது எந்த படத்தையும் அவர்கள் அடாவடியாக வாங்கவில்லை கவனித்தீர்களா?


12 comments :

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இன்றைய அரசியல்வாதிகளுக்கான சவுக்கடிப் பதிவு...

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி , இதெல்லாம் நடக்கலைன்னா அதுதான் ஆச்சரியம் , அப்போதான் அதை பத்தி பதிவு போடணும் ...........

மர்மயோகி said...

நன்றி திரு வேடந்தாங்கல் - கருன்

மர்மயோகி said...

மங்குனி..இப்படியெல்லாம் எப்போதான் நடக்காம போகும்? அதுவரைக்கும் இந்த உலகத்துல யாராவது உயிரோட இருப்பாங்களா?

ஜீவன்சிவம் said...

"மைனாரிட்டி தி மு க அரசை கண்டித்து" என்ற வார்த்தையை கேட்டு கேட்டு புளித்து விட்டது.
அதற்காகவாவது அந்தம்மா ஜெயித்து தொலையட்டும் விடுங்க சார்..பாவம்

Barari said...

paambu sattaiyai(tholai) urippathu pol manam rosaththai uthirththu vittuthaan arasiyalukke varukiraarkal avarkalidam ithaiyellaam ? anaalum neengal ungal sattaiyai vilaasungal nanbare.sirappaana pathivu.

மர்மயோகி said...

நன்றி திரு ஜீவன் சிவம்..
ஆனால் இந்தமுறை யார் வந்தாலும் "மைனாரிட்டிதான்" என்று தோன்றுகிறது...
மீண்டும் அந்த வார்த்தைகளை முன்பைவிட கேட்பதற்கு தயாராக இருங்கள்..
ஏனென்றால். ஜெயலலிதாவிற்கு ஒரு டிவிதான்...கருணாநிதிக்கோ பல டிவிக்கள்..ஹ்ம்ம் பாவம் மக்கள்தான்..

மர்மயோகி said...

நன்றி barari..

இது அவர்கள் திருந்தவேண்டும் என்பதற்கான பதிவு அல்ல...ஏதோ இன்னமும் இவர்களில் நல்லவன் என்று யாராவது இருப்பான் என்று நம்பும் அப்பாவிகளுக்கு..

ttpian said...

ஒப்பாரும் மிக்காரும் அல்லாத
உலக நவரச நாயகன்,

மோதல்வரு: கார்த்திக்க்க்கக் ...

நான்காவது அணி!
எவரும் எதிர்பார்க்காத தேர்தல் முடிவுகள்!:
எல்லா தொகுதிகளிலும் வென்று நவரசம் ஆட்சி அமைத்ததை காணச் சகிக்காமல்
பச்சை புடவையும்,மஞ்சள் துண்டும் வனவாசம் போன பிறகு நவரச நாயகன்
மேக்கப் போடாத நடிகன் உலக முதல்வரு கார்த்திக்க்க்க்...
தினப்புருடா நிருபன்-(மன்னிக்கவும்- நிருபர்ர்ர்ர்) கவுண்டர் பெல்லுக்கு அளித்த முதல் செவ்வி
மக்களை கொள்ளை கொண்ட இந்த ஆட்சி மக்களுக்கு மட்டும் அல்ல நாய் ,குருவி நலன் பெற பாடுபடும்!,
நாய்கள் குட்டி போட ஒவ்வொரு கிராமத்திலும் பிரசவ ஆசுபத்திரி கட்டி (அதற்கு நடிகை .......பெயர் சூட்டி ) நாய்கள் பிரசவம் முடிந்து ஊட்டுக்கு திரும்பும் வரை நாய் சோப்பு முதல் நண்டு சூப்பு வரை அரசாங்கமே செலவு செய்யும்!
குருவிகள் இனிமேல் பறந்து திரிந்து குச்சி
பொறுக்கி கூடு கட்ட சிரமப்படவேண்டாம்!

அரசாங்க செலவில் பிளாஸ்டிக் குச்சிகள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தருவதோடு, குருவிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்!
கடன் வழங்குவதில் முறைகேடு நடந்தால்....
நடிகை நமீதாவுடன் சேர்ந்து பெண்டு நிமிர்த்தி விடுவேன்!

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட அன்பர்களுக்கும் பார்த்துசென்றவர்களுக்கும் நன்றி..

thameem said...

nalla nadikirangappa........pavam makkal....!?

velumani1 said...

prrrrrrrrrrrrrrrrrrrrrr.....

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?