Pages

Friday, March 11, 2011

ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பேரழிவு.(படங்களுடன்)


பொருளாதார வலிமை மிக்க நாடுகளில் ஒன்றான ஜப்பான் இன்றையதினம் மிகப்பெரும் பேரழிவை சந்தித்திருக்கிறது.

11 மார்ச் 2011 இன்று..டோக்கியோ துறைமுகத்தில் ஏற்ப்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தாலும் (ஏறக்குறைய 8.4 ரிக்டர் அளவு) 25 அடி உயரத்திற்கு ஏற்பட்ட சுனாமி பேரலைகளாலும் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.



பெரிய பெரிய கட்டிடங்களும், பாலங்களும் இடிந்துள்ளன. நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பூகம்பத்தால் ஏற்பட்ட அதிர்வால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தீப்பிடித்து எரிகின்றன..

சுனாமி அலைகளால் சாலைகள் எங்கும் வெள்ளமாக காட்சியளிக்கிறது..

கார்களும், பஸ்களும், கப்பல்கள், போட்கள் என்று பாரபட்சமின்றி வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுவிட்டன..

செண்டாய் விமான நிலையம் முழுதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது..


டோக்கியோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது..


ஜப்பான் முழுவதும் மின் இணைப்பு, மற்றும் தொலை தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டது.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து செயலிழந்து விட்டது..



தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை அறியமுடியவில்லை.

எனினும் பெரிய அளவில் உயிரிழப்பு எற்பற்றிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது..

ஜப்பானில் மீட்பு பணியில் பங்கேற்க அந்நாட்டு மக்களை வேண்டியுள்ளார் அந்நாட்டு பிரதமர்..


900 மீட்ட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன..

உடனடியாக அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது




இதற்க்கு முன் டோக்கியோ நகரில் 1923 ம் ஆண்டு ஏற்ப்பட்ட பூகம்பம்தான் மிகப்பெரிய பூகம்பமாக இருந்தது..அந்த பூகம்பத்தில் ஏறக்குறைய 140000. க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது..

அதுபோல் இல்லாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் நம்மால் முடிந்த ஆதரவையும் வழங்க முயற்சிப்போம்..


12 comments :

சக்தி கல்வி மையம் said...

அந்நாட்டு மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

Unknown said...

dua pannunga...avanaanri anuvum asaiyathu

Adirai Media said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் . படிப்பினை பெறவேண்டிய சமூதாயத்திற்கு இது ஒரு எச்சரிக்கை .

தமிழ்வாசி பிரகாஷ் said...

மனம் கலங்குகிறது...

எனது வலைபூவில் இன்று:ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

டக்கால்டி said...

இயல்பு வாழ்க்கை முடிந்த மட்டும் சீக்கிரம் திரும்பவும், அதிக அளவில் சேதாரமும், உய்ரிழப்பும் ஏற்பட்டிருக்க கூடாது என எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்...

சண்முககுமார் said...

வணக்கம் தங்கள் படைப்புகள இந்த தளத்தில் இணைக்கவும்
தமிழ் திரட்டி

gvarathu said...

இரண்டாம் உலகப் போரின் அழிவுகளில் இருந்து மீண்டதுபோல் ஜப்பான் மக்கள் இம்முறையும் மீண்டு வருவார்கள்.எல்லாம் வல்ல இறைவன் அதற்கு அருள் புரிவானாக.

Anonymous said...

வேதனைப் பட்ட சமூகத்துக்கு அனுதாபங்களைத் தெரிவித்து துணையாக இருக்க வேண்டும்..

படிப்பினைப் பெறவும், எச்சரிக்கை செய்யவும், மதங்களைத் தூக்கிக் கொண்டு வெந்தப் புண்ணில் வேலைப் பாய்க்காதீர்கள் .............

simmakuralon said...

iyarkai annaiye engal meedhu ungalukku enna
kobam.ungal kuzhandaigalana engal ulaga makklai iniyavadhu aravanaippai thaiye.

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி..
நடந்தது ஓர் மாபெரும் இயற்க்கை சீரழிவு..அதற்க்கு யார் மனதும் புண்படாமல் நமது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிப்போம்..

குடந்தை அன்புமணி said...

இயற்கையை வெல்ல யாரால் முடியும். போராட்டமான கட்டத்தையெல்லாம் வென்று சாதித்த ஜப்பானியர்கள் இப்போது வெல்வார்கள். ஆனாலும், உயிரிழப்பு என்பது ஈடு செய்ய முடியாததுதான். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அலைகள் said...

manathu kanakirathu

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?