Pages

Tuesday, March 1, 2011

மன் மதன் அம்பு.. - மிகத் தாமதமான அம்பு..முன்பெல்லாம் கமலஹாசன் நடித்த படம் என்றால் சற்று ஆர்வமாக செல்பவர்களில் ஒருவனாக இருந்தேன்..
நாளடைவில் சினிமாவின் அசிங்கங்களும், நடிகர்கள் வெறும் கூத்தாடிகள் என்றும் உண்மை புலப்பட ஆரம்பித்த பிறகும், கமல் ஹாசன் படங்களில் ஏதாவது வித்தியாசமாக இருக்கும் என்று நாமாகவே கற்பனை செய்து செல்கின்ற படங்களும் உண்டு...

ஹேராம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களுக்குப் பிறகு, கமலின் உள்மனதின் வக்கிரங்களும், அவரது ஜாதிய உணருவும் வெளிப்பட்டது.
இருந்தும், தசாவதாரம், போன்ற படங்கள் ஒரு பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்ட படமாக வந்திருந்தது..

அனாலும், அப்போதிருந்த ஆர்வம், மன் மதன் அம்பு படத்தின் மீது இல்லை..காரணமும் புரியவில்லை..
கே. எஸ் ரவிக்குமார் ஒரு ஜனரஞ்சக இயக்குனர்.
கமலஹாசன் வித்தியாசமாக (?) நடிக்கக்கூடியவர்...
புதிதாக பேரழகி திரிஷா இணை..
தயாரிப்பு கழகத்தின் வாரிசு..
இப்படி ஏராளமான எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும்,
விளம்பரங்களில் படம் சம்மந்தப் பட்டவர்கள் ஆர்வம் செலுத்தாததினால் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு குறைந்து போனது உண்மைதான்.

தன நண்பரின் ஆபரேசன் செலவுக்காக - ஒரு நடிகையின் நடவடிக்கையை - உளவு பார்த்து அவளின் வருங்கால கணவனுக்கு சொல்லும், ஒரு மேஜராக கமல்.
நடிகையாக திரிஷா
திரிஷாவின் வருங்கால கணவனாக மாதவன்.

ஒரு ஷூட்டிங் முடிந்து மாதவனுடன் திரிஷா கார் ஒட்டி செல்கிறார்.
அப்போது இருவருக்கும் ஏற்படும் பேச்சுவார்த்தையில், கவனம் திசை மாறி எதிரில் வரும் காரை இடித்துவிட்டு ஒரு மலைப்பாங்கான இடத்தில் மோதி நிற்கிறது.
அதன் பிறகு ஏற்படும் சில குழப்பங்களில் திரிஷா மாதவனை விட்டு பிரிந்து ஓய்விற்காக வெளி நாட்டிற்கு சென்று ஓய்வெடுக்கிறார்.
அந்த சமயத்தில்தான் மாதவன் அவரை உளவு பார்பதற்காக கமல் ஹாசனை அனுப்பி வைக்கிறார்.
கமலுக்கு எந்த விதமான தவறும் திரிஷாமீது தென்படாததை, மாதவனிடம் சொல்ல, "அப்போ அவள் மீது தப்பு இல்லையே..அப்போ உனக்கு எதுக்கு நான் பேமென்ட் தரனும் " என்று பணம் கொடுக்க மறுத்து விடுகிறார்.
இதனால் கமல் - திரிஷா வேறொரு நண்பனை சந்திப்பதாக பொய் சொல்லி மாதவனிடம் பணம் வாங்க திட்டமிட்டு அதன் படியே பணம் பெறுகிறார்.

இதனிடையே - ஒரு சந்திப்பில் திரிஷா விபத்து ஏற்படுத்திய காரில் பயணம் செய்தவர்கள் கமலும் அவது கர்ப்பிணி மனைவியும் என்றும், அந்த விபத்தில் கமல் தனது மனைவியை பலி கொடுத்தார் என்றும் தெரிய வர திரிஷா அவர்மீது அனுதாபம் கொள்கிறார்.
ஆரம்ப கட்டங்களில் மிகவும் மெதுவாக செல்லும் அம்பு, கமல் திரிஷா வின் மீது தவறு இருப்பதாக சொல்ல ஆரம்பிக்கும்போது வேகமெடுக்கிறது.
அதன் பிறகு, கமல் - கிரேசி மோகன் கூட்டணி படங்களைப் போல் குழப்பமான பல காட்சிகளுக்கு பிறகு,
கமல் திரிஷா ஜோடி சேருகிறார்கள்..தமிழ்படங்களின் பார்முலாப்படி.

குடிக்கு முக்கியத்துவம் தரும் தமிழ் சினிமாக்களின் வகையில் இந்த படமும் சேருகிறது.
மாதவன் படம் முழுவதும் குடித்துக் கொண்டே இருக்கிறான்...

இது போன்ற கதைகள் உள்ள ஆயிரமாவது படங்களாக இருக்கலாம்
இதற்காக எதற்கு வெளிநாடு சென்றார்கள்?
அதே கதையில் ஒரு காட்சியில் வரும் வசனம் போல - தவறு செய்ய இருக்குமோ?

ஓவியா என்றொரு நடிகை சிறு வேடத்தில் வந்தாளாம்..அதை இங்குள்ள பெரிய பெரிய ஆபாச பத்திரிக்கைகளும், வலைப்பதிவர்களும், மிகவும் வருத்தப்பட்டு இருந்தன. ஏதோ ஓவியாதான் திரைப் படத்தையே கண்டுபிடித்தவள் போல..

நடிகை என்றால் எப்படி நடித்தாலும் நடிப்புதானே..


மற்றபடி மிகவும் சாதாரண படம்

இதை பெரிய நடிகர்கள், இயக்குனர்., தயாரிப்பாளர் போன்ற பிரம்மாண்டத்தில் ஏமாற்ற முயற்ச்சித்து ஏமாந்து போய் இருக்கிறார்கள்.

மன் மதன் அம்பு..கத்துக்குட்டி இயக்குனரின் படம்போல உள்ள ஒரு மிக மிக சாதாரண படம்..


4 comments :

indo asia export said...

palich pathivu

Evercute said...

// ஹேராம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களுக்குப் பிறகு, கமலின் உள்மனதின் வக்கிரங்களும், அவரது ஜாதிய உணருவும் வெளிப்பட்டது.//
இதிலிருந்தே தெரிகிறது....நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவர் என்று....இது உங்கள் ரசனைககு சம்பந்தமில்லாத பதிவு...உன்னை போல் ஒருவனில் என்ன நடக்காததையா கமல் சொல்லி விட்டான்...அது தானே உண்மை........அந்த படத்தை பார்த்தாவது,ஜாதி,மதங்களை கடந்து இந்தியன் என்ற உணர்வு வர வேண்டும்.....நீங்கள் எல்லாம் பாலஸ்தீனத்தில் ஒருத்தன் செத்துட்டான்ன அதுக்கு கூட்டத்த கூட்டுறீங்க,....ஆனால் பக்கத்து நாட்டில் நம் இனம் அழிக்கப்படும்போது எங்கு போயிருந்தீர்கள்......முதலில் உங்களை திருத்திவிட்டு அடுத்தவநை குற்றம் சொல்லுங்கள்...

மர்மயோகி said...

மிக நன்றாக உள்ளது உங்கள் கூற்று திரு Evercute.
பாலஸ்தீனத்தில் ஒருத்தன் செத்ததற்காக நாங்கள் கூட்டம் போடவில்லை..பாலஸ்தீனத்தை யூதர்கள் அத்துமீறி ஆக்ரமித்து சொந்த நாட்டு மக்களை அகதிகளாக்கி உள்ளனர்.
உங்களுக்கு உலகத்தில் தமிழன் மட்டும்தான் மனிதனாகத் தெரிகிறான்..ஏனென்றால் விடுதலைப் புலிகளிடம் இருந்துதான் பணம் வருகிறது. அவன்தான் உலகம் பூராவும் தமிழ் சினிமாவை பார்கிறான். அரசியல் வியாதிகளும், சினிமாக்கூத்தாடிகளும் இப்படி வரிந்து கட்டிக் கொண்டு விடுதலைப்புலிகளை ஆதரிப்பப்தர்க்கு காரணம் 100% வியாபார நோக்குதான். ஒருத்தனும் மனிதாபிமானத்தோட எதிர்க்கவில்லை.
உண்மையில் அவன் நேர்மையானவன் என்றால் இலங்கையில் நடக்கும் போருக்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் அகதியாக இருந்துகொண்டு, சென்னை ஏர்போர்டில் குண்டு வைத்து தகர்க்கும்போது அவனை எதிர்த்து இருக்கவேண்டும்.
தி நகரிலும், கோடம்பாக்கத்திலும் சக இயக்கத்தவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றபோது கேட்டு இருக்கவேண்டும்...இங்கே ராஜீவ் காந்தியை கொன்றபோது எதிர்த்து இருக்கவேண்டும்..அவன் இங்கே செய்யும் அட்டூழியங்களுக்கேல்லாம் வாயையும் சூ..வையும் பொத்திக்கொண்டு இருந்துகொண்டு, தமிழன் தமிழ் என்று கோஷம்போடுவது வடிகட்டிய அயோக்கியத்தனம்.
சென்னை ஏர்போர்ட்டில் வெடி வெடித்து செத்தவன் சிங்களன் அல்ல, தமிழன்.
கோடம்பாக்கத்தில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவன் (பத்மநாபா) சிங்களன் அல்ல தமிழன்
அமிர்தலிங்கம், ஸ்ரீ சபாரத்தினம், போன்றவர்கள் சிங்களன் அல்ல தமிழன்
ராஜீவ் காந்தி யுடன் கொல்லப்பட்டவன் தமிழன்..
தமிழன் தமிழன் என்று கூக்குரலிடுகிறீர்களே இதையும் சொல்லவேண்டியதுதானே
இதே இந்தியாவில் குஜராத்திலும், மும்பையிலும், இன்னும் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்பட்டபோது வைக்கோவும் நெடுமாறனும், ராமதாசும், திருமாவும் ஏன் கத்தவில்லை..முஸ்லிம்கள் மனிதர்கள் இல்லையா? முஸ்லிம்களுக்கு உயிர் இல்லையா...
விடுதலைப் புலிகளுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கூக்குரல்?
காரணம் அவன் தான் பணம் தருகிறான், தமிழ் படம் உலகமெங்கும் ஓட வைக்கிறான்.
கிரிக்கெட்டில் கூட ஜெயசூர்யாவை எத்திக்கும் (விலைபோகாத) சீமான் போன்றவர்கள் அதே அணியில் இருக்கும் முத்தையா முரளிதரனைப் பற்றி ஏதாவது சொன்னது உண்டா..? அவன் தமிழன் என்றால் ஏன் அவர்களுடன் சேர்ந்து இருக்கவேண்டும்,,,,காரணம் பணம்..
நீங்களெல்லாம் பணத்திற்கு அலைபவர்கள்...உண்மையில் மனிதாபிமானம் உடையவன் அல்ல..

armaiuran said...

varlaru thriyaml pessathey tamilndu parthesi ellathmilan alivukum unga india karanam. etho rajivi kanthi naalthu panninamthiri pesura naayae indian army senatu maddu naala visiyama rajive kanthi kollapadvediyavan

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?