Pages

Friday, March 4, 2011

கொண்டாட்டங்களும் - தொந்தரவுகளும் - பிரச்சினைகளும்....


பஸ் டே என்ற பெயரில் பொறுக்கிகளின் கொண்டாட்டத்திற்கு ஒரு பிரிவினர் - வினவு - தளம் போன்றவர்கள் முறையற்ற ஆதரவளித்து, திசை திருப்பிவருகின்றனர்..

மாணவர்கள் என்றால் படிக்கத்தான் பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்கின்றனர்.

பஸ் டே எதற்கு? அதனால் என்ன சாதித்து விட்டன இந்த பொறுக்கிகள்? இவர்களை எப்படி மாணவர்கள், வருங்கால இந்தியா என்று நாம் மதியற்று சொல்லமுடியும்?

போலீசிடம் அடிவாங்கி இவர்கள் கூக்குரலிடுகிறார்கள்?

வருடத்தில் இந்த ஒருநாள்தான் சந்தோசமாக இருக்கிறார்களாம்? அப்போ உனக்கு படிக்க பிடிக்கவில்லையா? பின்னே என்ன மயிருக்கு படிக்க வருகிறாய்?

ஏதோ ஒரு குட்டிசுவரில் சாய்ந்துகொண்டு, பான்பராக்கை மென்றுகொண்டும் சிகரெட்டை ஊதிக்கொண்டும் பெற்றோருக்கு பாரமாய் ஊர் சுற்றவேண்டியதுதானே?

வருடத்தின் பஸ் டே அன்றுதான் நீ சந்தோசமாக இருக்கிறாய் என்றால் மற்றனாளெல்லாம் துக்கம் அனுஷ்டிக்கிறாயா?

இவர்களுக்கும் ஒரு கேடுகெட்ட கூட்டம் ஆதரவளிக்கிறது..

ஆனால் மாணவன் என்றால் காலித்தனம் செய்யவேண்டும், ஆசிரியரையோ, பெற்றோரையோ மதிக்கக்கூடாது, என்று கேடுகெட்ட சினிமாக்கள் வரையறுத்து இன்று மக்களை குட்டிச்சுவராக்கி வைத்திருக்கின்றன..

சினிமாக்கூத்தடிகளைப் பற்றி அறிந்திருக்கவேண்டும், சாதனை என்றால் குத்துப் பாட்டுக்கு டிவி நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்டு, சினிமாகூத்தாடிகள் ஜட்ஜெஸ் என்ற பெயரில் போடும் மார்க்குகளை கண்ணீர் மல்க ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சின்னத்திரை கூத்தாடிகளும் வரையறுத்து வைத்துள்ளன.எந்த ஒரு டிவி சேனலை திருப்பினாலும், ஜட்ஜ் என்ற பெயரில் சினிமாக்கூத்தாடிகள் மேஜையில் அமர்ந்து கொண்டு கன்னத்தில் கை வைத்துக்கொண்டும் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இவர்கள் முன்னாடி, ஒரு ஆண்களும் பெண்களும் வெக்கமின்றி ஆபாச நடனம் ஆடிக்கொண்டு அவைகள் என்ன சொல்லப் போகின்றன என்று ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் அருவருப்பான காட்சிகள்.

இந்த ஆபாச கூத்தாடிகளும் ஏதோ வானத்தில் இருந்து குதித்தன போல - உனக்கு கெமிஸ்ட்ரி - கொரியாகிராபி என்று பருப்புபோல ஏதேதோ சொல்லி மார்க் பிச்சை இடுகின்றன..

இப்படி சீரழியும் இந்த இளைஞர்களை பார்த்தல் நாளைக்கு தமிழ்நாடு பூராவும் பாட்டுப் பாடுவதற்கும் குத்தாட்டம் போடுவதர்க்கும்தான் ஆட்கள் இருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சிறு குழந்தைகளைக் கூட ஆபாச நடனமிட அதன் பெற்றோர்களே பல்லிளித்துக் கொண்டு நிற்கும் காட்சிகள் மிகக் கேவலமாக உள்ளது..

இன்னும் - டீலா நோ டீலா நிகழ்ச்சியில் பங்கேற்க வருபவர்கள் மானம் மாரியாதை இழந்துதான் அந்த நிகழ்ச்சியில் பங்கேர்க்கவேண்டியுள்ளது.

இவன் குடும்பத்தில் பிரச்சினை, புருஷன் ஓடிவிட்டான், அம்மா பாசம் காட்டவில்லை, கடனாகி விட்டது இப்படி தன சொந்த சோகங்களை எல்லாம் லட்சக் கணக்கானோர் பார்க்கும் வண்ணம் அழுதுவிட்டு அந்த நிகழ்ச்சியில் அந்த கோமாளி கேட்கும் லூசுத்தனமான கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள்..

இது போக,

ஒவ்வொரு கொண்டாட்டங்களிலும் மக்களுக்கு எவ்வளவு தொல்லைகள் என்று பார்த்தல்..

பஸ் டே கொண்டாட்டங்களில் 60 பேர் செல்லும் பஸ்ஸில் நூற்றுக்கும் மேற்பட்ட பொறுக்கிகள் ஏறிக்கொண்டும் குடித்துக் கொண்டும், சாலையில் உள்ள கடைகளை அடைக்கசொல்லியும் பெண்களை கிண்டல் செய்தும் வருகின்றனர்..

அடுத்து இன்னொரு கொண்டாட்டாம் என்ற பெயரில் இறந்தவரை அடக்கம் செய்யவோ, தகனம் செய்யவோ இந்த குடிகார நாய்கள் செய்யும் கூத்துக்கள்..

ஒருத்தன் இறந்துவிட்டால் கவலை கொள்வதுபோல் தெரியவில்லை. பிணத்தின் முன் குடித்துவிட்டு டான்ஸ் ஆடிக்கொண்டும், சாலைகளில் போக்குவரத்துக்கு பெருமளவில் இடைஞ்சல் செய்துகொண்டும் இந்த குடிகாரர்கள் செய்யும் கூத்துக்களுக்கும் அளவே இல்லை..

இன்னும் ஆயுதபூஜை, வெள்ளிகிழமை போன்ற நாட்களில் சாலைகளில் மக்கள் நடந்து போகிறார்கள் என்ற உணர்வு சிறிதும் இன்றி..நாடு ரோட்டில் தேங்காய்களை உடைப்பதும், பூசணிக்காய்களை உடைப்பதும் மிக ஆபத்தில் முடிவதை இவர்கள் உணர்வதே இல்லை..


நியூ இயர் கொண்டாட்டம் என்ற பெயரில் சென்னை போன்ற பெரு நகரங்களில் குடிகாரர்கள் அடிக்கும் கூத்துக்களும் அதனால் ஏற்ப்படும் உயிர்ப் பலிகளும் ஒவ்வொரு வருடமும் முதல்நாள் தினசரிகளில் பார்த்துக் கொள்ளலாம்..இதுபோன்ற தேவையற்ற கொண்டாட்டங்களால் பெரும் இழப்புகள் ஏற்படுவதை அரசு எப்படி பார்த்துக் கொண்டிருக்கிறது?

இதற்க்கு ஏன் சிலர் ஆதரவு அளிக்கிறார்கள்?

இதுபோன்ற கேள்விகளுக்கு யாராவது விளக்கமளிப்பார்களா?
 

7 comments :

வேடந்தாங்கல் - கருன் said...

நல்ல, நல்ல அலசல்கள்... மிகவும் பயனுள்ள பதிவு ...

thiyagu said...

surukkunu irukku

alpha said...

sithippavargalluku ithu nalla pathivu....

thameem said...

verry good one

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..

nirvana said...

I was studying in my 6th standard in a private school, I must have been 10-11 yrs old and this happened 20 years ago. It is one of the famous schools and my class was a mixture of students from all religions, race, caste, class etc. One thing was common among the boys then was to see the women’s teachers’ breasts and hips. There used to be a competition to sit in the first row to have a good view. Those days we didn’t have internet and only watched Doordarshan on TV’s. Our only source of watching adult pictures was magazines like Kumudam especially the stills in the middle of the book. Boys used to tear those pictures and masturbate on it. Even at a young age our minds were corrupted. Today I am working in a MNC but this behaviour of men hasn’t changed. I still see men standing behind women in crowded buses rubbing their dicks. Majority of the men are sex starved but act like they are innocent. My opinion is that each and every man has a darker side and this entertainment industry is making things worse by feeding things to their darker side. Everything is being sexualised. I don’t know where we are headed to.

ஜீவன்சிவம் said...

ஒவ்வொரு தனிப்பட்ட இளைஞனும் நல்லவன் தான், குடும்ப கஷ்டங்களை உணர்ந்தவர்கள் தான். ஆனால் கூட்ட மனோபாவம் என்பது வேறு. இன்ற அரசியல் தலைவர்களையே அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?