Pages

Thursday, March 10, 2011

பிரியமானவளே...


சமீபத்தில் கே டிவியில் இரவு நேரத்தில் பார்த்த ஒரு படம்..

விஜய் - சிம்ரன் நடித்திருந்தார்கள்..விஜய்யின் ஜால்ராக்களாக விவேக், மற்றும் வையாபுரி..

கதை மிகவும் கேவலமான எண்ணமுடையவர்களது..

வெளிநாட்டில் வளர்ந்த டாக்குட்டர் விஜய்க்கு, திருமண உறவுகளைப் பற்றி தெரியாதாம்..மக்களையெல்லாம் முட்டாள்கள் என்று நினைத்திருக்கிறார்கள் இந்த சினிமாக்கூத்தாடிகள் ..எந்த நாட்டில் அவ்வாறு இருக்கிறதென்று தெரியவில்லை..

அவரிடம் வேலை செய்யும் சிம்ரனை ஒருவருட அக்ரீமெண்டில் திருமணம் செய்வானாம்..ஒருவருடம் நன்றாக அனுபவித்துவிட்டு, உன்னிடம் எந்த பீலிங்கும் இல்லை என்று அக்ரீமென்ட்டை காட்டி, அவளை வீட்டுக்கு அனுப்பிவிடுவானாம்..அப்புறம் தமிழ் சினிமா வழக்கப்படி ரெண்டு பேரும் சேரணுமே..

அதுக்காக சிம்ரன் வேலை செய்யிற கம்பெனி நஷ்டத்துல போனாலும் அதை வேலைக்கு வாங்கி இவன் எம்டி ஆகிவிடுவானாம்..அவளுக்கு பிடித்ததை எல்லாம் செய்வானாம்..

இப்படியும் தொடர்ந்து வெறுக்கும் சிம்ரன், இவனுடன் ஒரு வருடகாலம் வாழ்ந்த வாழ்க்கையில் கர்ப்பமாகிறாள்..

இதை சாக்காக வைத்து வளைகாப்பு நடக்கும் நேரத்தில் பலர் முன்னிலையில் விஜயை அவமானப் படுத்துகிறாள்..

பதிலுக்கு, சிம்ரனை - நான் உன்னை வற்புறுத்தவில்லை உன் ஆசைப்படித்தான் உன்னோடு செக்ஸ் வெச்சுக்கிட்டேன் - என்று பலர் முன்னிலையில் அவளை கேவலப்படுத்திவிட்டு "இன்னும் உன்னை லவ் பண்ணுகிறேன்" என்று சால்ஜாப்பு சொல்கிறான்..

அப்புறம் - எனக்கு செக்ஸ் வேணும்னா அக்ரீமென்ட் போடத்தேவை இல்லை...ஒரு கண் அசைவு போதும்..எல்ல பெண்களும் வந்து விழுவார்கள்" என்று சொல்லி தமிழ்நாட்டு பெண்கள் எல்லாரையும் இன்னும் கேவலப் படுத்துகிறான்..

இவன்தான் நாளைக்கு அரசியலில் "குதித்து" தமிழ்நாட்டை காக்கபோகிறான்..

படம் பூரா ஒழுக்ககேடான காட்சிகள்தான் அதிகம்..

வித்தியாசமான கதைகள் என்று - டிவிக்கள் மூலம் சீரியல்கள் ஒருபக்கம் வீட்டுக்கே வந்து குடும்ப உறவுகளை கெடுத்துக்கொண்டிருக்கின்றன....இது போன்ற தரங்கெட்ட திரைப் படங்கள் ஒருபக்கம் இன்னும் நாசமாக்கி வருகின்றன....ஹ்ம்ம் இதற்க்கெல்லாம் எப்போதுதான் ஒரு முடிவு வருமோ..11 comments :

ஞாஞளஙலாழன் said...

நல்ல பதிவு மர்மயோகி. நானும் அந்த படம் பார்த்தேன். நம்பத் தகுந்ததாக இல்லை.

வால்பையன் said...

அண்ணே, விஜய் ஒரு வருசத்திற்கு பிறகு பிடிச்சிருந்தா சேர்ந்து வாழலாம்னு சொல்லி தான் கல்யாணம் பண்ணுவாங்க!

தெரிஞ்சும் கல்யாணம் பண்றது சிம்ரன்!

ரெண்டாவது அது சினிமா, ஏற்கனவே ஹிந்தி பிறகு தெலுங்கு என்று சுத்தி தமிழுக்கு வந்தது.

உங்களுக்கும் நடிகர்களுக்கும் என்ன வாய்க்கா தகராறுன்னு தெரிஞ்சிக்கலாமா!?

மர்மயோகி said...

நன்றி திரு ஞாஞளஙலாழன்
இந்த படத்துக்கும் வக்காலத்து வாங்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.....உ.ம் : திரு வால்பையன்.

மர்மயோகி said...

நன்றி வால்பையன்..
எந்த மொழியில் வந்தா என்னங்க..விஜய் என்ன ஹிந்திலேயா நடிச்சுக்கிட்டு இருக்கான்?
சினிமாக்கூத்தாடிகளை விமர்சிக்க வாய்க்கா தகராறுதான் இருக்கனுமாங்க?

வால்பையன் said...

//ஹ்ம்ம் இதற்க்கெல்லாம் எப்போதுதான் ஒரு முடிவு வருமோ..//

அதான் நீங்க இருக்கிங்களே, எல்லாத்தையும் முடிச்சு கட்ட!

விரல் நமநமங்குது, வேண்டாம்னு டாபிக் மாத்தாம வேற வேலையை பார்க்க போறேன்!

வேடந்தாங்கல் - கருன் said...

என்ன பன்னரது.. இப்படியே புலம்பிட்டு போகவேண்டியதுதான்..

Jayadev Das said...

இந்தப் படத்தை முதலில் ஹிந்தியில் தான் எடுத்தார்கள், ஸ்ரீதேவியின் கொழுந்தனார் விஜய் ரோலில் நடித்திருந்தார், அந்தக் கதையை அப்படியே வாங்கி தமிழில் எடுத்திருக்காங்க. மற்றபடி இவனுங்க சொந்த கற்பனை இல்லை, ஆப்டர் ஆல் இது வியாபாரம்தானே!! ஆனாலும் அமெரிக்கவிலேயே ஊறி, அவங்க கலாச்சாரத்துலேயே வாழ்ந்த ஒருத்தனுக்கு ஆங்கிலமே தெரியவில்லை, என்பதுதான் கொடுமை, படம் பூராவும் நம்ம குப்பத்து பசங்க மாதிரி பேசிட்டு அமெரிக்கவுல இருந்து நானு டவுன் லோடு ஆயிருக்கேன்னு டபாய்ச்சிட்டாறு டாக்குடரு.

விக்கி உலகம் said...

நண்பா ஒரு தலவலியப்பத்தி இப்படி சொல்லிபுட்டீங்களே ஹி ஹி!

மர்மயோகி said...

நன்றி நண்பர்களே...
திரு வேடந்தாங்கல் கருண்
திரு Jeyadev Das
திரு விக்கி உலகம்
இன்னும் பார்த்துவிட்டு சென்ற அனைவருக்கும்

DISCOVERY BOOK PALACE said...

நியாயமான கோபந்தான்.

ஷர்புதீன் said...

எது எப்படியோ, ஹிட்ஸ் வாங்கும் கலை உமக்கு நன்கு புடிபடுகிறது மர்மயோகியாரே

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?