Pages

Saturday, April 2, 2011

சுயநலவாதிகளின் ஆடுகளம்



முன்பொரு பதிவில் குறிப்பிட்டது போலவே "இது ஒரு விசித்திரமான தேர்தல்! விவஸ்தை இல்லாத தேர்தல்! வடிகட்டிய சுயநலம் நிறைந்த தேர்தல்! அரசியல்வாதிகளின் முகத்திரையை அக்குவேறு ஆணி வேராகக் கிழித்தெரிகிற தேர்தல்! பசுத்தோல்களை உரித்துக் காட்டுபுலிகளை அடையாளம் காட்டும் தேர்தல்!"


இலவசத்தை எதிர்த்து இன்னொரு இலவசம்.

சலுகைகைகளை எதிர்த்து இன்னும் சலுகை

நடிகரை எதிர்த்து நடிகை

காமெடியனை எதிர்த்து இன்னொரு காமெடியன்

மதவாதியை எதிர்த்து மதவாதி

கிரிமினலை எதிர்த்து கிரிமினல்

ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரனை எதிர்த்து அதே ஜாதிக்காரன்.

தாழ்த்தப்பட்டவனை எதிர்த்து தாழ்த்தப்பட்டவன்..

பணத்தை எதிர்த்து பணம்

லஞ்சத்தை எதிர்த்து லஞ்சம்

வன்முறையை எதிர்த்து வன்முறை

ஆபாசத்தை எதிர்த்து ஆபாசம்


இப்படி கணக்குகளை வைத்தே ஒவ்வொரு தேர்தலும் நடக்கிறது. தேர்தல் அதிகாரிகள் என்னதான் கெடுபிடி செய்தாலும், அதை எதிர்த்தும் அரசியல் செய்ய இவர்களால் முடியும்..


ஜெயலலிதாவை அரசியலுக்கு வரவிடாமல் செய்ய கருணாநிதி எடுத்த முயற்சியால் அரசியலுக்கு வந்தவர்தான் ஜெயலலிதா.

திருமண மண்டபம் இடிபட்டதை பொறுக்க முடியாமல் அரசியலுக்கு வந்தவர்தான் விஜயகாந்த்

குடிகாரன் என்று வர்ணித்த ஜெயலலிதாவும், ஊற்றிக்கொடுத்தவர் என்று சொன்ன விஜயகாந்தும் கூட்டணி வைத்திருப்பது பொதுநலமா சுயநலமா?

நாட்டாமை படம் வீடியோ கேசட்டை சரத்குமாரிடம் இருந்து வாங்கி அவரிடம் சொல்லாமலேயே "ஜே ஜே" டிவியில் ஒளிபரப்பிய காரணத்தினால் திமுகாவுக்கு சென்ற சரத்குமார், அங்கே எம்பி பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, என் இறுதி ஊர்வலத்தில் திமுக கொடிதான் போர்த்தப்படவேண்டும் என்று சொல்லிய அடுத்தநாளே ஜெயலலிதாவை சந்த்தித்து பிரிந்து சந்தித்து இன்று அவருடன் கூட்டணி வைத்து அவரை வானளாவப் புகழும் சரத்குமார் கூட்டணி வைத்தது பொது நலமா சுயநலமா?

கருணாநிதியின் திட்டங்களுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டுவந்த ராமதாஸ், காடுவெட்டி குரு கருணாநிதியின் குடும்பத்தை கேவலமாக பேசியாதால் கூட்டணி பிரிந்தது பொது நலமா சுயநலமா?

அதே ராமதாசும் காடுவெட்டி குருவும் இன்று கருணாநிதியுட கூட்டு வைத்திருப்பது பொதுநலமா சுயநலமா?

தொகுதி உடன்பாடு காண்பதில் இரு கழகங்களும் கூட்டணிக்கட்சியினருடன் முரண்டு பிடித்ததும் பின்னர் பணிந்து சென்றதும் காரணம் பொதுநலமா சுயநலமா?

வடிவேலு திமுகவிற்கு பிரச்சாரம் செய்கிறேன் என்று விஜயகாந்தை காய்ச்சி எடுப்பதன் காரணம் பொதுநலமா சுயநலமா?

வடிவேலுவுக்கு எதிராக அதிமுகவிற்கு ஆதரவாக சிங்கமுத்து பாய்வது பொதுநலமா சுயநலமா?

தோல்விப் பட புகழ் டாக்டரு விஜய் - இன்று அதிமுகவிற்கு ஆதரவு என்கிறார்.

நாங்கள் மக்கள் நலனுக்காகத்தான் இந்த நிலையை எடுத்திருக்கிறோம் என்கிறார் அவர் தந்தை.

காவலன் படப்பிரச்சினைக்கு பிறகு மக்கள் நலம் பற்றி இவர்கள் சிந்திப்பது பொதுநலமா சுயநலமா?


இப்படி எல்லாவற்றிலும் ஆதாயம் தேடிவரும் இந்த கூத்தாடிகளின் ஆடுகளமாகிவிட்டது இன்றைய தேர்தல்கள்..

7 comments :

மங்குனி அமைச்சர் said...

super marmaygi.............best one

Barari said...

எதிர் சொல் அலங்காரம்.அரசியல்வாதிகள் நடிகர்களை நிர்வாணமாக்கும் பதிவு.தொடரட்டும் உங்கள் பணி

பொன் மாலை பொழுது said...

உங்களின் இந்த கருத்துக்கள் எனக்கு உடன்பாடான ஒன்று. சினிமா காரர்கள் தொட்டதெற்கெல்லாம் "அரசியலுக்கு வருவது" என்பது கேடுகெட்ட தமிழ் சமுதாய மக்களிடம் மட்டுமே எடுபடுகிறது. கூத்தாடிகளை நாம் எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க தவறிவிட்டோம் அதன் பலன்களை த்தான் அனுபவித்து வருகிறோம். பழங்காலம் போல இந்த கூத்தாடிகளை கீழ் மட்டத்தில் கொண்டு வைத்தால் மட்டுமே மக்களின் மனோபாவம் மாறும்.

நல்ல பகிர்வு.

அலைகள் said...

நல்ல பதிவு !தொடரட்டும் உங்கள் பனி

வலிப்போக்கன் said...

எல்லாமே சுயநலம்தான். அதுக்கத்தான்

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட அன்பர்கள்
மங்குனி அமைச்சர்
Barari
கக்கு மாணிக்கம்
அலைகள்
வலிப்போக்கன்
இன்னும் பார்த்து சென்ற அனைவருக்கும்
நன்றி..

ஷர்புதீன் said...

ivangala thitturatha vittuttu antha idaththa pidikka paarkalaam tholare!

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?