Pages

Saturday, April 30, 2011

"வானம்" - அமிலமழை


குப்பத்தில் வசிக்கும் கேபிள் டிவி பணம் வசூலிக்கும் ஒரு இளைஞன் - தன தகுதிக்கு மீறிய ஒரு பணக்கார பெண்ணை காதலிக்கிறான். அவளிடம் நுனிநாக்கு ஆங்கிலம் பேசி, தான் ஒரு பணக்காரன் என்று நம்ப வைக்கிறான். அதற்காக, தான் வேலை செய்யும் முதலாளியிடம் பணம் ஏமாற்றுகிராரன், இன்னும் ஏராளமான தகிடுதத்தம் செய்கிறான். நியூ இயர் சாராய பார்ட்டிக்கு காதலி பாஸ் எடுக்க சொல்கிறாள். அதற்க்கு நாற்பது ஆயிரம் கட்டணம். அதற்காக சாலையில் பெண்களிடம் செயின் திருடும் அவன் போலீசிடம் சிக்குகிறான்.

கிராமம் ஒன்றில் கந்து வட்டி கடன்காரனிடம் அடிமையாக இருக்கும் தனது குழந்தையை மீட்க, கிட்னி விற்க வரும் ஏழை தாயும் அவரது மாமனாரும், கிட்னி ஆபெரசன் செய்யப்பட்டு ஒரு மருத்துவமனையில் இருக்கிறார்கள்.


இராணுவத்தில் உயிரை இழந்த ஒருவரின் மகன், வெறும் கிதார் வாசித்து சாதிப்பேன் - இராணுவத்தில் சேரமாட்டேன் என்று கச்சேரி செய்வதற்காக தனது பரிவாரங்களுடன் சென்னை வருகிறான். வரும் வழியில் அவன் மனிதாபிமானம் என்னவென்று உணர சில சம்பவங்கள். அதன் காரணமாக ஒரு விபத்து ஒன்றில் அடிபட்டு இருக்கும் கர்ப்பிணி பெண் ஒருத்தியை காப்பாற்றி மருத்துவமனை வருகிறான்.

தனது மனைவிக்கு இரட்டை குழந்தைகள் கருத்தரிப்பதை அறிந்து மகிழ்ச்சியுடன் வரும் முஸ்லிம் ஒருவர் - விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் பொறுக்கிகளால் தாக்கப்படுகிறார் . அவருக்கு உடந்தையாக போலிஸ் அதிகாரி ஒருவரும் இவரை தீவிரவாதி என்று குற்றம் சாட்டுகிறார். இந்த சம்பவத்தால் அவரது மனைவியின் கர்ப்பம்  கலைகிறது. இதனால் பாதிக்கப்பட்டு அவரது தம்பி தலைமறைவாகிறான். தனது தம்பி சென்னையில் இருக்கிறான் என்பதை அறிந்து அவனை தேடி வருகையில் - ஏற்கனவே சந்தித்த அதே போலிஸ் அதிகாரி அவரை ஒரு தீவிரவாதி என்று பொய் கேஸ் போட்டு சிறையில் தள்ளுகிறார். இதில் தப்பிக்கு முயற்ச்சிக்கும் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார்.

ஒரு விபச்சாரி, போலீசிடம் தப்பி தனியாக "கம்பெனி" தொடங்கலாம் என்று சென்னை வருகிறார். அங்கே அவளுக்கு தொடர் தொல்லைகள். இதிலிருந்து தப்பிக்கும்போது, தனக்கு துணையாக வரும் - திருநங்கைக்கு - கத்திகுத்து காயத்தால் அதே ஆஸ்பத்திருக்கு கொண்டுவரப்படுகிறாள்.


கேபிள் டிவி பணம் வசூலிப்பவன், தனது காதலியுடன் பார்ட்டிக்கு செல்ல பணம் புரட்ட முடியாமல் இறுதியில் - கிட்னி ஆபரேசன் செய்யப்பட்டு கிடக்கும் அந்த பெண்ணின் பணத்தை பறித்துக்கொண்டு ஓடுகிறான்..ஹோட்டலில் பணம் கட்டும்போது மனசாட்சி உறுத்த - திரும்பவும் அந்த மருத்தவமனைக்கே வந்து- அவர்களிடம் பணத்தை ஒப்படைக்கிறான்...

இப்படியாக ஐந்து கிளைக்கதைகளும் - இறுதியில் ஒரு மருத்துவமனையில் ஒன்று சேருகின்றன..

ஒரு காட்சியில் இரண்டு முஸ்லிம் இளைஞர்களை போலிஸ் விசாரிக்கும்போது , அந்த இளைஞர்கள், ஐதராபாத், அஜ்மீர், ராஜஸ்தான் , டெல்லி, மும்பை, போன்ற இடங்களில் வெடித்ததுபோல சென்னையிலும் குண்டு வெடிக்கும் என்று சொல்கிறார்கள்..

மேற்கண்ட இடங்களில் குண்டுவைத்தது இந்துத்துவா பயங்கரவாதிகள் என்று புலனாய்வு விசாரணையில் உண்மை வெளிவரும் வேளையில் மீண்டும் மீண்டும் முஸ்லிம்களையே தீவிரவாதிகள் எனக்காட்டும் இந்த - சினிமா பயங்கரவாதிகளைதான்  - முதலில் உள்ளே தள்ள வேண்டும்..

ஐந்து கதைகளை வைத்துக்கொண்டு, என்னசெய்வது என்று தெரியாமல் இறுதியில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அவர்கள் இரக்கமற்றவர்கள் என்று சொல்வதற்காகவே கதை எழுதி படம் எடுக்கும் இந்த கூத்தாடிகள்தான் நிஜ பயங்கரவாதிகள்..

காதலிக்காக திருடும் குப்பத்து இளைஞனும், - இந்திய ராணுவத்தால் என் தந்தையை இழந்தேன், அதனால் நான் இராணுவத்தில் சேரமாட்டேன், பாரிலும், பப்பிலும் கிதார் வைத்துகொண்டு டான்ஸ் ஆடுவேன்...என்னை உலகம் புகழும் என்று சொல்லும் பொறுப்பற்ற இளைஞர்கள் இறுதியில் அனைவரையும் தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவது போலவும், தீவிரவாதத்தை உண்மையாகவே வெறுக்கும் முஸ்லிம், - தன்னை தீவிரவாதி என்று சித்தரித்த போலிஸ் அதிகாரியை மட்டும் காப்பாற்றுவது போலவும் காட்டும் இந்த கூத்தாடிகள்தான் இந்த நாட்டை சுடுகாடாக்க முயலும் துரோகிகள்..

வானம் - முஸ்லிம்கள் மீது அமிலமழை பொழியும் துரோகம்..

15 comments :

மர்மயோகி said...

நானே கமெண்ட்ஸ் போட்டுகிறேன் ..

இறை நேசன் said...

கமெண்டா?

//மேற்கண்ட இடங்களில் குண்டுவைத்தது இந்துத்துவா பயங்கரவாதிகள் என்று புலனாய்வு விசாரணையில் உண்மை வெளிவரும் வேளையில் மீண்டும் மீண்டும் முஸ்லிம்களையே தீவிரவாதிகள் எனக்காட்டும் இந்த - சினிமா பயங்கரவாதிகளைதான் - முதலில் உள்ளே தள்ள வேண்டும்..//

மேற்கண்ட உண்மை சுடும்ங்க.

புதிவுலக அரசியல் புரியாத ஆளா இருக்கீங்க.

david said...

dei tulukan tiviravathi naaye.....enna periya utamanu nenapa?? thiviravatathin maru peyare ungge matham thane....

Vaanampadi said...

Entha Padam Telugu remake "Vedam". copy adikirathe vidamattingala

word of the citizen said...

ஐயா சாமிகளா தீவிரவாதம் இஸ்லாமிய சகோதரர்களால் மட்டுமே நிகழ்வது இல்லை என்பது உங்கள் கருத்து.All Muslims are nor Terrorists But Terrorist are Muslims. That is True factor

மர்மயோகி said...

david என்பவன் ஒரு வெறிபிடித்த மிருகம்..அவனை பொருட்படுத்த தேவை இல்லை..

மர்மயோகி said...

மற்றும் பின்னூட்டமிட்ட

இறை நேசன்

vaanambaadi

ஆகியோர்களுக்கு நன்றி..

மர்மயோகி said...

அய்யா world of the citizen..

உங்கள் கூற்றை தயவு செய்து மாற்றுங்கள்..எவனோ கிருக்குபிடித்தவன் சொன்னான் என்று "all muslims are not terrorist but terrorist are muslim" என்ற கிறுக்குத்தனமான வாதத்தை வைக்கிறீர்களே...

பாலஸ்தீனத்தில் மக்களை கொள்ளும் பயங்கரவாத யூதர்கள் முஸ்லிம்களா?

இலங்கையில்லும் இந்தியாவிலும் பயங்கரவாத செயல்கள் புரியும் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களா?

நக்சலைட்டுகள் முஸ்லீம்களா?

மலேகான், அஜ்மீர், ராஜஸ்தான், ஹைதேராபாத் போன்ற இடங்களிலும், தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலகத்திலும் குண்டுவைத்த ஹிந்து தீவிரவாதிகள் முஸ்லீம்களா?

மொசாத் என்ற பயங்கரவாத இயக்கம் முஸ்லீம்களா?

ஆயுத விற்பனையை பெருக்க எல்லா நாட்டிலும் கலவரத்தை தூண்டும் அமெரிக்க பயங்கரவாத அரசாங்கம் முஸ்லீம்களா?

இங்கிலீஷில் சொல்லிவிட்டால் கிறுக்குத்தனம் உண்மையாகாது..

Faizal said...

nall nethiyadi yella padathilum theviravathigal yellam muslimgal yendru katti kattiyea muslimgalai theviravathigalaga parkkappaduthu . david polaa sila pannada paradesi payalgalai ........

david said...

dei tulukan thiviravathi naaye......ungga madam enna periya appatecker matham daa?? thiviravatigala.....ungga madatha alica than daa ulagam amthiya irukum.......islam thiviravathi pundamaunugala

velumani1 said...

விமரிசனம், விமரிசனமாக இருக்கனும். அதில் விமரிசகரின் கவலை,காலைல சாப்பிட்ட இட்லி பிடிக்காதது, மனைவியிடம் நைட் போட்ட சண்டை, பேங்கில் கட்ட முடியாத கடன் தொல்லை .......... இதெல்லாம் விரிசனத்தில் எதிரொலிக்கக் கூடாது..

மர்மயோகி said...

பின்னூட்டம் எழுதிய faizal அவர்களுக்கு நன்றி..

மர்மயோகி said...

நண்பர் Velumani1 அவர்கள் இரவில் மனையிடம் சண்டை போட்டிருப்பார் போலிருக்கிறது..அதனால் இட்லியும் பிடிக்கவில்லை..பேங்கிலும் கடன் கட்டமுடியாத தொல்லை போலும்..சாரி தோழரே..அதற்க்கு நாங்கள் ஒன்றும் பண்ண முடியாது..

மனோவி said...

Terrorism never allowed in any religion, Either it is Hindu or Muslim If they really believe in their religion they won't be doing these things anymore.

வானம் விமர்சனம்
 என்ன வாழ்க்கைடா இது?

மதுரை said...

தல படம் தெலுங்குல பட்டைய கிளப்புச்சு தமிழ்லே STR இருக்கும்போது எப்படி நல்லாயிருக்கும். சந்தானம் இருந்ததாலெ முதல் பாதி பரவாயில்லே. படத்தோட ஹிட் சாங் எவண்டி உன்ன பெத்தான் தமிழ் வரிக்கு. இங்கே செல்லவும் http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_07.html

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?