Pages

Monday, April 25, 2011

ஓட்டுப்பிச்சை எடுக்கும் ஓநாய்கள்


தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டது..

தேர்தலுக்கு முன்பு இலங்கை பிரச்சினையை கிளப்பி ஒட்டு பிச்சை எடுக்க அரசியல் ஓநாய்கள் செய்த கூத்தெல்லாம் முடிந்து விட்டது..

தேர்தல் முடிவுகள் வர இன்னும் கால அவகாசம் இருப்பதால் இந்த அரசியல்"வியாதிகள்" வேறுமாதிரி கணக்கில் ஈடுபட ஆராம்பித்து விட்டன..


தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற சந்தேகத்தில், தமிழ் பற்று நாடகம் நடத்தி இந்த சாக்கடைகள் இப்போதே அறிக்கை அரசியலை தொடங்கிவிட்டன.

இலங்கை எனபது அந்நிய நாடு. அண்டை நாடு. அங்கு வசிக்கும் சில தீவிரவாத குழுக்கள் அந்நாட்டில் மட்டுமல்ல  , அண்டை நாடான இந்தியாவிலும் அராஜகம் செய்தன..அதை அந்த நாடு அடியோடு நசுக்கியது. அது இங்குள்ள - தேச துரோகிகளுக்கு பொறுக்கவில்லை..வருமானம் போய் விட்டது..எனவே அதை வைத்து இங்கு அரசியல் செய்ய குரைத்து குரைத்து ஓய்ந்துவிட்டாலும், ராஜ பக்சேயை தூக்கில் போடு, சர்வதேச கோர்ட்டில் நிறுத்து என்று அலறும் இந்த சாக்கடைகளுக்கு ஒரு கேள்வி..குஜராத் இந்தியாவில்தானே இருக்கிறது..?

அங்கு நரபலி நாய் நரேந்திர மோடி என்ற மிருகம் அப்பாவி மக்களை கொன்று குவித்தானே, கொல்லப்பட்டவர்கள் மக்கள் இல்லையா?

நரேந்திர மோடி இன்னும் இந்தியாவில்தானே இருக்கிறான்.

அவனை அரசியல் புரோக்கர் சோ என்பவன் விழாவுக்கு வரவழைக்கிறான்

ஜெயலலிதா விருந்து கொடுத்து மகிழ்கிறார்...

கருணாநிதி கைகுடுத்து போஸ் கொடுக்கிறார்.

ஊழலை ஒழிக்க பிரிந்த அன்ன ஹசாறேவுக்கு பயங்கர வாதத்தை ஒழிக்க மனமில்லாமல் அவனை பாராட்டுகிறார்..

இங்கே ராஜ பக்சேயை மட்டும் குறிவைக்கும் வெறி நாய்களுக்கு நரேந்திர மோடியை தண்டிக்க சொல்ல ஏன் மனமில்லை..

அதற்க்கு ஏன் கூட்டம் போடவில்லை..

அவனை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்தவில்லை..

குஜராத் என்ன அந்நிய நாடா?

இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் மட்டும்தான் உனக்கு உலகத்தில் மனிதர்களாக தெரிகிரார்களோ?

குஜராத்தில் கொல்லப்பட்டவர்கள், சிதைக்கப்பட்டவர்கள், குழந்தைகள், கருவருக்கப்பட்டவர்கள், கற்பழிக்கபட்டவர்கள் உங்களுக்கு மனிதர்களாக தெரியவில்லையோ?

அந்நிய நாட்டில் நடவடிக்கை எடு என்று ஓலமிடும் முட்டாள்களே, குஜராத் இந்தியாவில்தான் இருக்கிறது, அதை ஆளும் அரக்கன் நரேந்திரன் அனைத்து நாடுகளாலும் விரட்டப்பட்ட ஒரு கொடிய மிருகம்,

மோடி நடத்திய கொலைவெறி தாண்டவத்திற்கு, தெஹல்கா இணையதளத்தின் ஆதாரம் உள்ளது..இன்னும் அடுக்ககடுக்கான சாட்சியங்கள் வந்து கொண்டே இருக்கின்றன..

தன் நாடு அமைதியாக இருக்கவேண்டும் என்று தீவிரவாதத்தை ஒடுக்கிய ராஜபக்சேயை தூக்கிலிட சொல்லும் தேசதுரோக நாய்களே,


குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதை தடுக்காதீர்கள், அதை கண்டுகொள்ளாதீர்கள் என்று சொன்ன நரேந்திரன் என்ற மிருகத்தை என்ன செய்யலாம்?

 
அவனை எதிர்க்க திராணியற்று, நடக்கமுடியாத ஒரு விஷயத்தை செய்ய சொல்லி - விடுதலைப்புலிகளிடம் வாங்கிய காசுக்கு - இந்தியாவுக்கு தேச துரோகம் செய்யும் துரோகிகளே...

பயங்கரவாதி என்று விசா ரத்து செய்யப்பட்டு, விசா மறுக்கப்பட்ட ஒருவன் தூக்கிலிடப்பட வேண்டியவனா? இல்லையா?


இந்தியாவில் தேடப்பட்டுவந்த ஒரு பயங்கரவாதியை தனது தலைவன் என்று சொல்வது தேச துரோகமா? தமிழ்பற்றா?


கொஞ்சமாவது மனித நேயத்தோடு சிந்தியுங்கள்..


25 comments :

நெல்லி. மூர்த்தி said...

"இலங்கை எனபது அந்நிய நாடு. அண்டை நாடு. அங்கு வசிக்கும் சில தீவிரவாத குழுக்கள் அந்நாட்டில் மட்டுமல்ல , அண்டை நாடான இந்தியாவிலும் அராஜகம் செய்தன..அதை அந்த நாடு அடியோடு நசுக்கியது. அது இங்குள்ள - தேச துரோகிகளுக்கு பொறுக்கவில்லை..வருமானம் போய் விட்டது..எனவே அதை வைத்து இங்கு அரசியல் செய்ய குரைத்து குரைத்து ஓய்ந்துவிட்டாலும், ராஜ பக்சேயை தூக்கில் போடு, சர்வதேச கோர்ட்டில் நிறுத்து என்று அலறும் இந்த சாக்கடைகளுக்கு ஒரு கேள்வி.."

"தன் நாடு அமைதியாக இருக்கவேண்டும் என்று தீவிரவாதத்தை ஒடுக்கிய ராஜபக்சேயை தூக்கிலிட சொல்லும் தேசதுரோக நாய்களே.."

மர்மயோகியாரே... நீரெல்லாம் ஒரு தமிழனா எனக் கேட்டால் இனவெறி கொண்டவன் என என்னைப் பொருள் கொள்ளலாம். ஆனால் மனித நேயத்துடன் சற்று சிந்தித்து எழுதுங்கள். மோடியை எதிர்க்க வேண்டும் என்பதில் மனித நேயம் கொண்ட எவரும் மறுப்பதிற்கில்லை. ஆனால் அதற்காக அப்பாவித் தமிழர்களையும் இனப்படுகொலையினை நியாயம் செய்வது. நம் தமிழக மீனவர்களைக்கொன்றுக் குவிப்பது..... இவையெல்லாம் உங்கள் கண்ணில் படவேயில்லையா....? ஓட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளின் மீது உங்களுக்கு கோபம் வருவது நியாயமே ஆனால் அதற்காக... ஆச்சரியம் மட்டுமின்றி அதிர்ச்சியாகவும் உள்ளது; 21ம் நூற்றாண்டின் ஹிட்லர் இராசபக்சேவிற்கு உரத்த குரல் கொடுக்க இந்தியாவினில் இப்படியும் ஒரு தமிழனா..? உங்கள் எழுத்து பிரவாகம் நன்றாக இருக்கின்றதே தவிர சிந்தனை.... மன்னிக்கவும்.. தாங்கள் குறிப்பிட்ட படி " சாக்கடை" தான்.

மர்மயோகி said...

நன்றி திரு நெல்லி.மூர்த்தி.
நான் ராஜபக்சேயின் செயலுக்கு உரத்த குரல் ஒன்றும் கொடுக்கவில்லை..இலங்கையில் நடந்தது போர்..
குஜராத்தில் நடந்ததுதான் அப்பட்டமான இனப்படுகொலை..
இதற்க்கு மோடியை தண்டிக்க இங்கே குரல் கொடுக்க ஒருவனுக்கும் ஏன் தைரியம் வரவில்லை..
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியா தலையிட முடியுமா
அப்படி கேட்பது முட்டாள்தனம் இல்லையா..
இதுகளுக்கும் அது தெரியும்..ஆனால் விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்றாகிவிட்டதே.. அதற்குதான் இந்த கூப்பாடு..
ஆனால் குஜராத் நிலைமை அப்படி இல்லை..
மோடி ஒரு கொடுங்கோலன் என்று தெரிந்தும் அவனை எதிர்த்து போராட இங்கே எவனுக்கும் மனமில்லை..
ஏனனெனில் அதனால் அவனுக்கு வருமானம் வராது..

கந்தசாமி. said...

///இலங்கை எனபது அந்நிய நாடு. அண்டை நாடு. அங்கு வசிக்கும் சில தீவிரவாத குழுக்கள் அந்நாட்டில் மட்டுமல்ல , அண்டை நாடான இந்தியாவிலும் அராஜகம் செய்தன..அதை அந்த நாடு அடியோடு நசுக்கியது./// தீவிரவாதம் என்றால் என்ன!!!! என்பதுகளில் இந்தியா தன் படைகளை ஈழத்துக்கு அனுப்பி அப்பாவி மக்களை கொன்று ஒழிச்சதே ... அதுவா????

கந்தசாமி. said...

தன் நாடு அமைதியாக இருக்கவேண்டும் என்று தீவிரவாதத்தை ஒடுக்கிய ராஜபக்சேயை தூக்கிலிட சொல்லும் தேசதுரோக நாய்களே, /// இன்னமும் எது அறியா குழந்தையாகவே இருக்கிறிங்களே, தீவிரவாதிகளை கொன்றதற்கு தூக்கில் போடா சொல்லவில்லை தீவிரவாதிகளை கொல்லுறோம் என்ற போர்வையிலே ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று புதைத்துள்ளார்கள். ஏனுங்க சார் அல்யசீரா சனல் 4 போற வேற்று நாட்டு ஊடக மனிதர்களால் புரிந்து கொள்ள முடியுது ஒரு தமிழனா உங்களால் மட்டும் எப்படி சார்................???

கந்தசாமி. said...

நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் என்றால் யுத்தத்தை நடத்தியது இலங்கை இல்லையே, இந்தியா ஆச்சே. மகிந்தர் தூக்கு மேடைக்கு போனால் அடுத்தது உங்கள் ஜனநாயக நாட்டு இந்திய ஆளும் வர்க்கமாச்சே?

பேசாமல் ஒன்று செய்யுங்கள் என்பதுகளிலே இரண்டு இலட்சம் படைகளை அனுப்பி செய்தது போல மீண்டும் ஒரு முறை அனுப்புங்கள். இலங்கையில் தமிழன் என்ற தீவிரவாத இனம் இல்லாமல் போகட்டும். அப்புறம் உங்களுக்கும் உங்கள் ஜனநாக நாட்டுக்கும் எந்த தொந்தரவும் இருக்காது...

கந்தசாமி. said...

பாதிக்கப்பட்டவனுக்கு தான் வலிகள் புரியும். தவறாக ஏதாவது சொல்லியிருந்தால் மன்னித்துவிடுங்கள்.

Kavippillai said...

ஆம் மர்மயோகி அவர்களே! மோடியின் அராஜகத்தை ஒழிக்க வலியுறுத்தும் உங்களின் எண்ணங்களுக்கு பாராட்டுக்கள். அதே சமயம் ராஜபக்சேவும் அதை விட கொடியவர். தண்டிக்க பட வேண்டியவர் . அவன் நாட்டில் நடப்பதை நாம் எதிர்த்தால் ஒன்றும் ஆகாது என நினைக்க வேண்டாம். கிளர்ச்சி எங்கேயும் நடைபெறலாம். அதன் வேர்கள் எங்கும் இருக்கலாம். இது இலங்கைக்கு மட்டும் அல்ல. லிப்யப்புரட்சி, மற்றும் இதர புரட்சி மற்றும் போற்குற்றங்களுக்கும் பொருந்தும்.

உங்கள் பணிக்கு எனது வாழ்த்துகள்.

Kaliyan said...

//இலங்கையில் நடந்தது போர்..
குஜராத்தில் நடந்ததுதான் அப்பட்டமான இனப்படுகொலை..//

என்னையா கொடுமையாயிருக்கு... ஆமா உனக்கு என்ன பிரச்சனை.. ஹிட்ஸ் வேணும்னா ஏ ஜோக் போட்டு பொழப்பு நடத்தலாம்ல.. புண்ணாக்கு மாதிரி ஒரு பதிவு போட்டு ஏன்யா சாவடிக்கிற.. ஒண்ணுந்தெரியலன்னா மூடிக்கிட்டிருக்க வேண்டியதுதான... இதுலவேற எல்லாருக்கும் மெயில்வேற அனுப்புற...ஒழுங்கா மாத்திரைய சாப்பிடு..எல்லாஞ் சரியாயிடும்..

மர்மயோகி said...

நன்றி திரு கந்தசாமி அவர்களே.
உங்களது கருத்துக்களை தெரிவிப்பதில் தவறில்லை..அதற்கான களம் தான் அது..நீங்கள் உங்கள் சார்பு வாதங்களை சொல்லி இருக்கிறீர்கள்..இதில் மன்னிப்புகேட்கவேண்டியது ஒன்றும் இல்லை. இருந்தாலும் உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி..
மேலும், ராஜபக்சேயை நான் நியாயப்படுத்தியதுபோலவே திசை திருப்ப நிறையபேர் தயாராக இருப்பது தெரிகிறது..
நன்றாக சிந்தித்துபாருங்கள்..ராஜபக்சேயை தவறு செய்தவன்தான்..
ஆனால் இந்தியா அங்கே எப்படி தலையிட முடியும்..கருணாதி என்ன இந்தியாவின் மன்னனா? அல்லது சோனியா இந்தியாவின் மகாராணியா?
ஏற்கனவே ராஜீவ் படை அனுப்பியதற்கே இந்தியாவில் பல பிரச்சினைகளை சந்தித்தாயிற்று..
ராஜீவை இழந்துவிட்டோம்.
இன்னும் பல போலிஸ் அதிகாரிகளையும் இழந்துவிட்டோம்.
குஜராத் இந்தியாவில்தான் உள்ளது.
மோடியை ஏன் தண்டிக்கும்படி கேட்க எவனுக்கும் திராணி இல்லை?
இதனால்தான் சந்தேகம் எழுகிறது..
நீங்கள் பாதிக்கப்பட்டவர் சரி..
வைக்கோலும், சீமானுக்கும் என்ன கேடு..நாடு நிலைமை வாதிஎன்றா குஜராத்தின் பயங்கர மிருகம் மோடியை கைது செய்ய சொல்ல எவனுக்கும் மனம் இல்லமால் போனது ஏன்?

மர்மயோகி said...

நன்றி திரு kavippillai

புரிந்து கொண்டமைக்கு நன்றி

ராஜபக்ஷேவை தண்டிக்க கேட்கும் இந்த ஓட்டுப்பொறுக்கிகளுக்கு, மோடியை தண்டிக்க சொல்ல ஆண்மை இல்லாமல் போனது ஏன்?

மர்மயோகி said...

Kaliyan என்ற பெயர்கொண்ட A ஜோக் விரும்பியை இந்த விசயத்தில் பொருட்படுத்த தேவை இல்லை என்று நினைக்கிறேன்..

செங்கோவி said...

http://krvijayan.blogspot.com/2011/02/blog-post_17.html

Chandran said...

இந்தியாவில் தேடப்பட்டுவந்த ஒரு பயங்கரவாதியை தனது தலைவன் என்று சொல்வது தேச துரோகமா? தமிழ்பற்றா?
கொஞ்சமாவது மனித நேயத்தோடு சிந்தியுங்கள்..

மர்மயோகி, உங்களுடைய மிக நியாயமான வேண்டுகோள். மிக கொடூரமான புலி இயகத்தை ராஜபக்சே அழித்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கந்தசாமி, நீங்கள் பிறக்கும் போதே வசதியான வெளி நாட்டில் பிறந்ததால் புலிகள் பற்றி இன்னமும் எது அறியா குழந்தையாகவே இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ரெலோ என்ற இயகத்தை சேர்ந்த தமிழர்களை அரை உயிருடன் ரயர் போட்டு எரித்தார்கள் புலிகள். இன்னொரு மதத்தை சேர்ந்த தமிழ் மக்களை யாழ்ப்பாணத்தை விட்டு பலவந்தமாக வெளியேற்றினார்கள் புலிகள். இப்படி நிறைய கொடுமைகள் இருக்கு. தமது பிள்ளைகளை புலிகளின் யுத்தத்திற்க்கு கட்டாய ஆள் பிடித்து பலி கொடுப்பதில் இருந்து தப்புவிப்பதற்க்காக உங்களால் கொடிய சிங்களவன் என்று தமிழகத்தில் பிரசாரபடுத்தபடும் மக்களிடமே அடைகலம் தேடி ஓடினார்கள் தமிழர்கள்.

Kavippillai said...

மோடி மட்டுமல்ல, கனிமொழி, ராசா, மது கோடா, ரெட்டி சகோதரர்கள், மற்றும் ஊழல் செய்த பல பேரை தட்டி கேட்க இங்கு எவனுக்கும் தைரியம் இல்லை. ராஜபக்சேவை பார்த்து குரைத்தால் அவர் நம்மை கடிக்க மாட்டார். இங்கே உள்ளவர்களை பார்த்து குரைத்தால், கடிப்பார்கள், அடிப்பார்கள், ஒருவேளை உயிரே போகலாம். இவர்களது தயவு தேவை, அதனால் எதிர்க்க முடியாது.

கிரிக்கெட் மற்றும் ஏனைய பொழுதுபோக்கு, மற்றும் திரை ஹீரோக்களை ஆதரிக்கவும், அதில் நேரம் செலுத்தும் இவர்கள் ஒரு இயக்கமாக இருந்தால் மோடி என்ன, ஒரு அரசு அலுவலக அதிகாரி குட ஊழல் செய்ய முடியாது.

மர்மயோகி said...

நன்றி திரு செங்கோவி
திரு kavippillai
திரு சந்திரன்

விக்கி உலகம் said...

பகிர்வுக்கு நன்றி!
சில இடங்களில் உடன் படுகிறேன் நண்பா!

SENTHILKUMARAN said...

HAPPY NEWS. Osama Bin Laden has been killed by US troops

SENTHILKUMARAN said...

ஒழிந்தான் ஒசாமா.... ஹஹஅஹா.......

SENTHILKUMARAN said...

உலக மக்களை அச்சுறுத்திய மிக பெரிய தீவிரவாதி கொல்ல பட்டுள்ளான். அமெரிக்க அரசுக்கு பாராட்டுக்கள். அதே சமயம், இந்தியாவில் உச்ச நீதி மன்றத்தால் தண்டனை தரப்பட்டு கையாலாகாத காங்கிரஸ் அரசால் தண்டனை நிறைவேற்றபடாமல் உள்ள தீவிரவாதிகளுக்கு தண்டனை தருமாறு அமெரிக்க அரசு இந்தியாவை நிர்பந்திக்க வேண்டும்.

தாமிரபரணி said...

/*தேர்தலுக்கு முன்பு இலங்கை பிரச்சினையை கிளப்பி ஒட்டு பிச்சை எடுக்க அரசியல் ஓநாய்கள் செய்த கூத்தெல்லாம் முடிந்து விட்டது..*/
இலங்கை பிரச்சனையை பற்றி யாரும் பேசவில்லை, இலங்கை தமிழர்களின் பிரச்சனையை பற்றிதான் பேசுகிறார்கள், அவர்களின் பிரச்சனையை தமிழ் அரசியல்வாதிகள் பேசாமல் வடநாட்டு அரசியல்வாதியா பேசுவான், இல்ல யாராவது பேசிதான் இருக்கிறார்கள்
/*தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற சந்தேகத்தில், தமிழ் பற்று நாடகம் நடத்தி இந்த சாக்கடைகள் இப்போதே அறிக்கை அரசியலை தொடங்கிவிட்டன*/
பாருடா செம கண்டுபடிப்பு.
தமிழ் பற்றி, தமிழ் மீனவர்கள் பற்றி, இலங்கை தமிழர்கள் பற்றி யாரவது பேசினால் உடனே ஒட்டுக்காக பேசுறான் பணம் வாங்கிட்டான் போன்ற தேவையில்லாத வார்தைகளை பேசுவது வாடிக்கையாச்சு, ஆனா அது நல்லதல்ல தயவுசெய்து இதுபோல் பேசவேண்டாம்.
/*குஜராத் இந்தியாவில்தானே இருக்கிறது..?
அங்கு நரபலி நாய் நரேந்திர மோடி என்ற மிருகம் அப்பாவி மக்களை கொன்று குவித்தானே, கொல்லப்பட்டவர்கள் மக்கள் இல்லையா?*/
நரேந்திர மோடி தண்டிக்க படவேண்டியவன் அதில் எந்த மாற்று கருத்தும்யில்லை, அதைதான் தமிழ் ஊடகங்களும் சொல்லுகின்றன சில பார்ப்பன ஊடகங்கள் தவிர.
/*நரேந்திர மோடி இன்னும் இந்தியாவில்தானே இருக்கிறான்*/
குஜராத் இந்தியாவில்தானே இருக்கிறது..?
/*அவனை அரசியல் புரோக்கர் சோ என்பவன் விழாவுக்கு வரவழைக்கிறான்
ஜெயலலிதா விருந்து கொடுத்து மகிழ்கிறார்...*/
எல்லோரும் பார்ப்பனர்கள்..
/*கருணாநிதி கைகுடுத்து போஸ் கொடுக்கிறார்.*/
அடடா இது என்ன சின்ன புள்ளதனமா இருக்கு, அரசியல் நாகரிமா கைகொடுத்தாகூட தப்பா?

தாமிரபரணி said...

/*இலங்கை எனபது அந்நிய நாடு. அண்டை நாடு. அங்கு வசிக்கும் சில தீவிரவாத குழுக்கள் அந்நாட்டில் மட்டுமல்ல , அண்டை நாடான இந்தியாவிலும் அராஜகம் செய்தன..அதை அந்த நாடு அடியோடு நசுக்கியது. அது இங்குள்ள - தேச துரோகிகளுக்கு பொறுக்கவில்லை.*/
இலங்கை தமிழர்களின் போராட்டம் எந்த வழியில் தொடங்கியது எந்த வழியை அடைந்தது, எத்தனை ஆண்டுகால போராட்டம் எனபதை பற்றி சிறிதேனும் தெரிந்தால் இதுபோல் பேசியிருக்கமாட்டாய், குறிப்பு;குசராத் கலவரம் நடந்தது 2002ல்
அதற்க்கு தமிழர்களின் ஆழ்ந்த வருத்தங்கள் உண்டு
விடுதலை புலிகள் தீவரவாத இயக்கம் என்றால் அன்று இந்தியாவில் நடந்த விடுதலை இயக்கங்கள் அனைத்தும் தீவிரவாதம்தான், தமிழ் உறவுகளுக்காக தாய்தமிழர் குரல் கொடுப்பது எனபது தேசவிரதோம் என்றால் இந்தியா என்ற உறவே தேவையில்லை இந்தியா தமிழர்களுக்கு என்றுமே உண்மையாக இருந்ததில்லை, இருக்க போவதும்யில்லை, தமிழன் தேவையில்லை ஆனால் தமிழர்களின் வரிபணம் தேவை அதைவைத்து இலங்கைக்கு உதவி செய்வது, இந்தி என்னும் மலத்தை இந்தி இல்லாத ஏனைய மாநிலத்தின் மேல் திணிப்பது.
உன் பார்வையில் விடுதலைபுலிகள் தீவிரவாதி இராசபக்சே நல்லவனாக இருக்கலாம், அதுபோல் குசராத் மக்களின் பார்வையில் நரேந்திரமோடி மத தீவிரவாத்தை கட்டுபடுத்தி நல்லாட்சி செய்கிறார் என்று எண்ணலாம் இல்லையா?.

தாமிரபரணி said...

தமிழர்கள் வேளாண்மை செய்ய தண்ணிர் இல்லாமல் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். கன்னடகாரன், மலையாளத்தானுங்க தண்ணிர் தர மறுக்கிறரார்கள், தமிழ் மீனவர்கள் கொத்து கொத்தாக கொல்லபடுகிறார்கள் இதை எல்லாம் எதிர்த்து போராட்டம் செய்ய கூடாது, குசராத் மக்கள் பாதிக்கபட்டிருப்பது உண்மையானால் அவர்கள் போராட்ட களத்தில் குதிக்க வேண்டும் அப்பறம் தமிழர்களின் ஆதரவு கண்டிப்பாக ரெட்டிப்பாக இருக்கும்.தமிழர்கள் அவர்களுக்கு/இவர்களுக்கு போராட்டம் செய்யவேண்டும் என்று சொல்ல நீ யார், இதுவரை தமிழகம் எத்தனையோ இன்னல்களை சந்தித்திருக்கிறது அப்ப எல்லாம் யாராவது ஒரு மாநிலம் தமிழனுக்கு குரல் கொடுத்ததுண்டா?
என்னமோ தமிழனுக்கு பிரச்சனையே இல்லாத மாதிரி பேசுற

தாமிரபரணி said...

உன் பேரபசங்க அமெரிக்கவுல நிரந்தர குடிமகனாக இருக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம் அவர்கள் இறந்துவிடுகிறார்கள், அதே நேரம் நீ வசிக்கும் அடுக்கு குடியிருப்பில் ஒரு இழவு நடக்கிறது இன்னொரு நாட்டின் குடிமகனான உன் பேரபசங்களின் பிரிவால் வாடி துயரப்படுவாயா?
இல்ல யாருக்காக உன் ஏக்கம் இருக்கும்?
உறவுகளை நாடுகளால் பிரிக்க முடியாது, அதுபோல்தான் தமிழ் உறவுகள் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு இன்னல் என்றால் தாய் தமிழகம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது

தாமிரபரணி said...

@கந்தசாமி.
/*நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் என்றால் யுத்தத்தை நடத்தியது இலங்கை இல்லையே, இந்தியா ஆச்சே. மகிந்தர் தூக்கு மேடைக்கு போனால் அடுத்தது உங்கள் ஜனநாயக நாட்டு இந்திய ஆளும் வர்க்கமாச்சே? */
மிக சரியாக சொன்னிர்கள்,
இந்தியா இலங்கை தமிழர்களை மட்டும் அல்ல, மாவோயிசுட் வேட்டை, காடு வேட்டை என்று சொல்லி அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது.

தாமிரபரணி said...

@நெல்லி. மூர்த்தி
தங்களின் கருத்து மிக அருமை,
கருத்து தெளிவாகவும்,நேர்த்தியாகவும்
வாழ்த்துகள்!!!, வழிமொழிகிறேன்

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?