Pages

Thursday, October 21, 2010

ரவுடியின் கூச்சல்

மும்பையின் பிரபலமான ரவுடி, "ரஜினிகாந்தின் கடவுள்" பால்தாக்கரே என்பவன்.

இவன் தமிழர்களை மும்பையில் இருந்து விரட்டுவதற்காகவே சிவசேன என்கிற கட்சியை ஆரம்பித்து, தனது குடும்பத்தினருக்கும் ஆளுக்கொரு கட்சியை வைத்து ரவுடித்தனம் பண்ணிக்கொடிருப்பவன்.

இவனது கிறுக்குத்தனமான கட்டுரைகளை வெளியிடுவதற்கென்றே "சாம்னா" என்ற பத்திரிக்கையை நடத்தி வருகிறான். இதில் இவன் எழுதும் கட்டுரைகள்தான் பெரும்பாலும் மும்பையில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கெல்லாம் காரணமாக  அமைந்து வருகிறது.

அந்த பொறுக்கியின் சமீபகால கட்டுரைதான் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை தடை செய்யவேண்டும் என்பதாகும்.

இந்த முட்டாள் அதற்க்கு கூறும் காரணம் மகா மடத்தனமாக உள்ளது. 

"சாந்தாகுரூசில் வி.என்.தேசாய் மாநகராட்சி மருத்துவமனையில் பிறந்து இரண்டு மாதமே ஆன ஆண்குழந்தையை கடந்த பதினைந்தாம் தேதி பர்தா அணிந்த ஒரு பெண் திருடிச் சென்று விட்டாராம் . இதன் காரணமாகத்தான் திருட்டிற்குப் பயன்படும் பர்தா எனும் ஆடையை தடைசெய்ய வேண்டும்" என்று கிறுக்குத்தனமாக உளறியுள்ளான்.
 
அடப் பொறுக்கியே, 

எத்தனையோ சாமியார்கள் காவி உடை அணிந்து கயவாளித்தனம் செய்கிறான்..அதற்காக காவி உடையை தடை செய்ய சொல்லுவியா?

எத்தனையோ திருடர்கள் போலீஸ் உடை அணிந்து திருடுகிறார்கள்...அதற்காக போலிஸ் உடையை தடை செய்ய சொல்லுவியா?

எத்தனையோ கொள்ளைக்காரர்கள் அதிகாரிகள் போல உடை அணிந்து திருட்டுத்தனம் செய்கிறார்கள் அதற்காக அதிகாரிகள் அணியும் உடையை 
தடை செய்ய சொல்லுவியா?

ஏன் இரண்டு நாட்களுக்கு முன்புகூட, ஒரு முன்னாள் எம் எல் ஏ - இன்கம் டாக்ஸ் அதிகாரிபோல சென்று திருடி இருக்கிறான்.

இப்படி ஒவ்வொரு காரணத்திற்காகவும், சீருடைகளையே தடை செய்ய சொல்லுவானா இந்த லூசு?

பிரான்சில் பர்தா தடை செய்யப் பட்டுள்ளதாம்..
இந்த லூசுப் பயலை போய் தலைவன் என்று கொண்டாடுகிறார்கள்..

பிரான்சில் தடை செய்யப்பட்டது பர்தா அல்ல...முகத்தை மறைக்க கூடாது என்றுதான் தடை செய்யப்பட்டுள்ளது..உடலை மறைப்பதற்கு தடை இல்லை..

பத்தாதற்கு பள்ளிவாசல்களில் பாங்கு (தொழுகைக்காக ஐந்து நேரம் அழைப்பது ) கூறப்படுவதையும் தடை செய்ய சொல்கிறான்.

காரணம் அதிகாலையில் தூங்குவதற்கு இடைஞ்சலாக உள்ளதாம்.
அதிகாலையில் எழுந்திருப்பதை உலகமே ஆரோக்கியமாகக் கருதிக்கொண்டிருக்கும்போது இந்த லூசுக்கு மட்டும் தூங்கணுமாம்.....

இப்படி கேனத்தனமாக உளரும் ரவுடிகள்தான் இன்று ராஜ்ஜியம் நடத்தி வருகிறார்கள்..

ஹ்ம்ம்ம்....

 

3 comments :

மங்குனி அமைசர் said...

இவன் தமிழர்களை மும்பையில் இருந்து விரட்டுவதற்காகவே சிவசேன என்கிற கட்சியை ஆரம்பித்து///

இலக்கணப் பிழை உள்ளது மர்மயோகி , தமிழர்கள் மட்டுமல்ல மராட்டியர்கள் தவிர வேறு யாரும் அங்கு இருக்கக் கூடாது என்று சொல்பவன்

மங்குனி அமைசர் said...

மும்பையின் பிரபலமான ரவுடி, "ரஜினிகாந்தின் கடவுள்" பால்தாக்கரே என்பவன்.////

கடவுள் தூணிலும் இருப்பார் , துரும்பிலும் இருப்பார், ஏன் பால்தாக்ரே கிட்ட இருக்கக் கூடாதா ? ....... ஒன்னும் இல்லை சும்மா தோணிச்சு அதான் கேட்டேன் . (இதுக்கு எடக்கு மடக்கா அப்பரும் என்கிட்டே திருப்பி எதுவும் கேள்வி கேட்க்கக் கூடாது )

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இது மாறி ஆட்களை நம்பும் ஆட்களை என்ன செய்ய....?

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?