Pages

Saturday, October 23, 2010

வலைப்பூ தரவரிசையில் முன்னேறுவது எப்படி?வலைப்பூ தரவரிசையில் முன்னேறுவது எப்படி என்பதை ஆராய்வதற்கு முன்பு, ஒரு "கிசு கிசு" ஒன்றை தெரிந்து கொள்வோம்.

"அவர் ஒரு பிரபல பதிவர். "ம" வில் ஆரம்பித்து "கி" யில் முடியும் மர்மமான மனிதர் அவர். அவருக்கும், "ம" வில் ஆரம்பித்து "ர்" இல் முடியும் அமைச்சர் பதிவர் ஒருவருக்கும்தான் எப்போதும் போட்டி. இருவரும் எந்த வேலையை செய்கிறார்களோ இல்லையோ, காலையில் எழுந்ததும் ஒவ்வொருவரின் பதிவையும் பார்த்து, இவன் எத்தனாவது "rank"  இருக்கிறான் என்று  பார்த்துவிடுவது இருவரின் வழக்கம். மொக்கை பதிவாகவே போட்டு தரவரிசை ஏற்றிக்கொண்டே போகும் அமைச்சர் பதிவரும், அவரை முந்த விடக்கூடாது என்பதிலேயே குறியாக இருக்கும் மர்ம பதிவருக்கும் ஒருவரை ஒருவர் தரவரிசையில் முந்தவேண்டும் என்பதிலும், அதிக "hits" பெறவேண்டும் என்பதிலுமே எப்போதும் போட்டா போட்டி...!"


ஆரம்பத்தில் "ரேங்க்" பட்டையைப் பற்றி அறியாமால் நெடுநாள் இருந்து விட்டேன்..

இன்னொரு நலம் விரும்பி பதிவர் சொன்ன பிறகுதான் சரி நாமும் நமது வலைப்பூவில் ஒரு ரேங்க் பட்டையை போட்டு வைப்போமே என்று அந்த ரேங்க் பட்டையை இணைத்தேன்..ஆரம்பத்தில் ஒரு 300  ரேங்குக்கும் மேலாகத்தான் இருந்தது..அது நாளடைவில் பார்ப்போர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து "ரேன்க்" குறைய ஆரம்பித்த பிறகுதான் ஆஹா இதை மைண்டைன் பண்ணனுமே என்று கவலை கூட ஆரம்பித்து விட்டது...


இதை இப்படியே கண்டினியூ பன்னனனும்னா ஏதாவது பதிவு போட்டுக்கொண்டே இருக்கவேண்டும்..என்ன பண்ணுவது..கண்டதெல்லாம் கிறுக்க ஆரம்பித்துவிட்டாகிவிட்டது.

போட்டியாக அந்த அமைச்சர் பதிவரும், மீள் பதிவு, கீழ் பதிவு, மேல் பதிவுன்னு அவரும் பழைய பதிவெல்லாம் தூசு தட்டி போட ஆரம்பித்து விட்டார்...

ஆகவே, அவர் மட்டும் தரவரிசையில் முந்தக்கூடாது, பதிவர்கள் அனைவருமே நல்ல தரவரிசையை அடைய வேண்டும் என்பதன் நோக்கமே இந்த பதிவு...

ஆகவே,
அன்பார்ந்த பதிவர்களே
பதிவுல நண்பர்களே..
நல்லமனம் படைத்தோர்களே...

வலைப்பூவில் தரவரிசையில் முன்னேறுவது எப்படி? 
-
-
-
-
 என்று யாருக்காவது தெரிந்தால்...
தயவுசெய்து சொல்லுங்களேன்..பிளீஸ்.......
பின்குறிப்பு (அல்லது டிஸ்கி ) : இதுபோன்ற மொக்கை பதிவுக்கு எனக்கு அனுபவம் பத்தாத காரணத்தால் "மொள்ளமாரித்தனம், பயபுள்ளே, 
சின்னபுள்ளதனமா இருக்கு, ஆணி புடுங்குறது.இன்னும் இதுபோன்ற சம்பிராதய வார்த்தைகளை தேவையான இடங்களில்   சேர்த்துக்கொள்ளவும்..

14 comments :

Chittoor.S.Murugesan said...

பாஸ் தர வரிசையில முன்னேற என் டிப். எவர் க்ரீன் பதிவுகள் பத்தாச்சும் இருக்கனும் ( தினம் தினம் மறுபடி மறுபடி படிக்கிறாப்ல - உ.ம் 2010 குரு பெயர்ச்சி பலன்கள். அப்பாறம் அலெக்ஸால போய் உங்க சைட்டுக்கு சனத்தை ஓட்டிக்கிட்டு வந்த டாப் கீ வோர்ட்ஸ் என்னனு பாருங்க. நூல் பிடிச்சாப்ல பதிவு போடுங்க. தூள் கிளப்புங்க .வாழ்த்துக்கள்

மங்குனி அமைசர் said...

"ம" வில் ஆரம்பித்து "ர்" இல் முடியும் அமைச்சர் பதிவர் ////

நானும் ஒன் அவரா யோசிச்சு பாக்குறேன் யாருன்னு கண்டுபுடிக்க முடியலையே ? ஒரு குழு குடுங்க மர்மயோகி சார்

மங்குனி அமைசர் said...

ஆரம்பத்தில் "ரேங்க்" பட்டையைப் பற்றி அறியாமால் நெடுநாள் இருந்து விட்டேன்..///

அந்த கிசு கிசு அமைசர் கூட உங்களுக்கு அப்புறம் ரெண்டு மாசம் கழிச்சுதான் அந்த ரெண்ட் பட்டையை வச்சாராமே ?

மங்குனி அமைசர் said...

வலைப்பூவில் தரவரிசையில் முன்னேறுவது எப்படி? ////

எப்படி முன்னேறனும் லெப்ட்டுகாவா? இல்லை ரைட்டுகாவா ?

மங்குனி அமைசர் said...

ஆகவே, அவர் மட்டும் தரவரிசையில் முந்தக்கூடாது, ///

அந்த மர்ம அமைச்சரை உங்களால் விஞ்ச முடியாது , இப்பவும் அவருக்கு கீழ்தான் நீங்க இருக்கீங்க . அவரு 68 நீங்க 64 . 68 பெரிசா இல்லை 64 பெரிசா ????

மங்குனி அமைசர் said...

உங்களது ப்ளாக்ல் தமிழ் மனம் ஒட்டு பட்டை வேலை செய்ய வில்லை

மர்மயோகி said...

//மங்குனி அமைசர் said...
உங்களது ப்ளாக்ல் தமிழ் மனம் ஒட்டு பட்டை வேலை செய்ய வில்லை//

இது அந்த "ம" வில் ஆரம்பித்து "ர்" இல் முடியும் அமைச்சரோட சதியாகத்தான் இருக்கும்...

ப.செல்வக்குமார் said...

உங்களுக்கு மொக்கை போடும் திறமை வந்துவிட்டது ..
நீங்கள் களத்தில் குதிக்கலாம் ..!!

எஸ்.கே said...

இப்ப உங்க வலைப்பூ எத்தனையாவது இடத்தில் இருக்கிறது? இதை முன்னேற்றி நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டியது உங்க பொறுப்புதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னலே இது ஒரே கொழப்பமா இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொள்ளமாரித்தனம், பயபுள்ளே,
சின்னபுள்ளதனமா இருக்கு, ஆணி புடுங்குறது.இன்னும் இதுபோன்ற சம்பிராதய வார்த்தைகளை தேவையான இடங்களில் சேர்த்துக்கொள்ளவும்///

இப்பிடி அத இத சேத்துக்க இது என்ன உப்புமாவாலே?

ஜீவன்சிவம் said...

உங்களின் வளர்ச்சியும் ஆர்வமும் பிரமிக்க வைக்கிறது

பட்டாபட்டி.. said...

மங்குனி விடாதே..சீக்கிரமா அடுத்த பதிவைப்போடு..
ஹா..ஹா

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//பட்டாபட்டி.. said...

மங்குனி விடாதே..சீக்கிரமா அடுத்த பதிவைப்போடு..
ஹா..ஹா
//

ஆஹா.. அப்ப மங்குனி தான் அந்த கிசு கிசு அமைச்சரா...???? அடடா.. இவ்வளவு நேரமா தெரியாமப் போச்சே...

பட்டா.. தரவரிசையில் நீர் எந்த இடம்....??

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?