Pages

Wednesday, October 20, 2010

தொட்டில் பழக்கம்....

1980 களில் ஆனந்த விகடன் என்ற பத்திரிகையில் வெளியான ஒரு ஜோக்..

மேடையில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகளைப் பற்றி கீழே அமர்ந்திருக்கும் மக்களில் இருவர் பேசிக்கொள்வதாக அது அமைந்திருந்தது..

"ஒருவன் : இங்கே மேடையிலே இருக்கிறவர்களில் யார் எம் எல் ஏ. யாரு மந்திரி ?
இரண்டாமவன் : அதோ பிக்பாக்கெட்காரன் மாதிரி இருக்காரே அவர்தான் எம் எல் ஏ. முகமூடி கொள்ளைக்காரன் மாதிரி இருக்கிறவர்தான் மந்திரி."
மேற்கண்ட நகைச்சுவை வெளியான சமயம் எம். ஜி ஆர், முதலமைச்சர், சபா நாயகராக பி ஹெச் பாண்டியன். இந்த நகைச்சுவை அப்போது பெரும் பிரச்சினையை கிளப்பை அந்த வார இதழின் ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டு அப்புறம் பத்திரிக்கையாளர்களின் பெரும் போராட்டத்தின் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டதெல்லாம் நடந்தது..
இப்போது இந்த செய்தியை படியுங்கள்..
சென்னை மேற்கு மாம்பலம் மூர்த்தி தெருவில் வசிப்பவர் வெங்கட்ராமன் (83). இவர், பொதுப் பணித்துறையில் செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று பிற்பகல் 12 மணிக்கு தனது மனைவி வேதவள்ளி (73), மருமகள் ராதா (40) ஆகியோருடன் வீட்டில் இருந்தார். அப்போது 2 பேர் பைக்கில் வந்து, தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி அடையாள அட்டையைக் காட்டியுள்ளனர்.
பின் ‘நீங்கள் வருமானத்துக்கு ஏற்றார்போல கணக்கு காட்டவில்லை. வீட்டை சோதனையிட வேண்டும்’ என்று கூறி சோதனையிட்டுள்ளனர். பின் ‘நீங்கள் அதிகமாக வருமான வரித்துறையை ஏமாற்றியுள்ளீர்கள். அதனால், வீட்டில் உள்ள 25 சவரன் நகை,  ` 20  ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறோம். இதற்கு முறையான கணக்குகளை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்து காட்டுங்களp://3.bp.blogspot.com/_IAE�்று கூறி விட்டு பைக்கில் புறப்பட்டனர்.

அப்போது அவர்கள் மீது சந்தேகம் வந்ததால், மருமகள் ராதா வீட்டில் இருந்து வெளியில் வந்தார். 2 பேரும் பைக்கில் ஏறி புறப்பட்டனர். அவர்கள் மீது பாய்ந்து சென்ற ராதா, பின்னால் அமர்ந்திருந்தவரின் சட்டையை மட்டும் கொத்தாக பிடித்துக் கொண்டு, திருடன் திருடன் என்று சத்தம்போட்டார்.
அதற்குள் பைக் புறப்பட்டதால், பைக்கில் இருந்தவர் நகை, பணத்துடன் தப்பிச் சென்றார். பின்னால் இருந்தவர் பிடிபட்டார். அதற்குள் அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் ஓடி வந்து கொள்ளையடித்தவரைப் பிடித்து, அசோக்நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
பிடிபட்டவர் பெயர் ரவிசங்கர் (42). இவர், விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ. இவர் கடந்த 6 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:
விளாத்திகுளம் எம்எல்ஏவாக 1996ம் ஆண்டு இருந்தேன். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை எதிர்த்து வெற்றி பெற்றேன். சிறிய வயதில் எம்எல்ஏவாக இருந்ததால் பரபரப்பாக பேசப்பட்டேன். பின் எனக்கு இலங்கையைச் சேர்ந்தவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அதனால் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த ஆரம்பித்தேன். அதில் வருமானம் வந்ததால் தொடர்ந்து அந்த வேலையில் ஈடுபட்டேன்.
அதன்பின் 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி ` 10  கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டேன். ஓராண்டு சிறையில் இருந்தேன். 2004ம் ஆண்டு நெல்லையில் உள்ள ஒரு வழக்கில் ஆஜராவதற்காக போலீசார் என்னை  அழைத்துச் சென்றனர்.
அப்போது போலீசில் பிடியில் இருந்து தப்பினேன். கடந்த 6 ஆண்டுகளாக  தலைமறைவாக இருந்தேன். சென்னை போரூர் காட்டுப்பாக்கம் இந்திரா நகரில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். இப்போது வருமானமும் இல்லை. போலீசாரும் ஒரு பக்கம் தேடுகின்றனர்.
இதனால், என்னுடைய தம்பி இளஞ்செழியன் (38) என்பவருடன் சேர்ந்து வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து கொள்ளையடிக்க ஆரம்பித்தேன். சென்னையில் பல இடங்களில் அதுபோல கொள்ளையடித்துள்ளேன். இப்போது பொதுமக்கள் பிடித்துக் கொடுத்ததால் போலீசில் சிக்கிக் கொண்டேன். பைக்கில் தப்பிய என் தம்பியிடம்தான் நகை, பணம் உள்ளது.
இவ்வாறு தனது வாக்குமூலத்தில் ரவிசங்கர் கூறினார். அதைத் தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் ரவிசங்கரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கண்ட நகைச்சுவை இப்போது முற்றிலும் பொருந்துகிறதல்லவா?
பின்குறிப்பு : இந்த முன்னாள் எம். எல். ஏ பற்றி செய்தி வெளியிட்ட தினகரன், தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகள் இவன் - எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் -  எந்த கட்சியைசெர்ந்தவன் என்பதை மறைத்து விட்டன..இதிலிருந்தே தெரிகிறது இந்த கொள்ளைக்காரன் எந்த கட்சியை சேர்ந்தவன் என்று..


2 comments :

மங்குனி அமைசர் said...

என்ன சார் நீங்க , ஒரு சின்ன விசயத்த பண்ணினதுக்கு போயி பாவம் அவன் குற்றவாளிமாதி சித்திகரிச்சிட்டிங்க , அப்ப சிபு சொணன் , நம்ம அஞ்சா நெஞ்சம் (பேரு சொல்ல பயமா இருக்கு சார் ) போட்ரோர்களை எப்படி சொல்லுவிங்க ?

மர்மயோகி said...

நீங்க ஷங்கர் படமெல்லாம் பாத்து இருக்கீங்களா மங்குனி? ` 1000, ` 500 வாங்குரவனத்தான் தண்டிப்பாங்க...அதைவிட கூடவாங்குரவண எல்லாம் கண்டுக்கவே மாட்டானுங்க..கேட்டா இப்படி சின்னதா ஆரம்பிக்கிறதுதான் பின்னால பெரிசா வளர்ரதுன்னு சொல்லுவாங்க..அதுமாதிரிதான் இது..(ஆனா இது சின்ன விசயமா மங்குனி?)

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?