Pages

Tuesday, July 3, 2012

மரணதண்டனை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது ?
தீவிரவாதிகளான விடுதலைப் புலிகள் அமைப்பினால் இந்திய நாட்டின் பிரதமர் வேட்பாளார்  ராஜுவ்காந்தி கொலை செய்யப்பட்டார். ராஜுவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் மரண தண்டனை நிறைவேற்றும் நிலை இருந்துவருகின்றது.

தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற அதிலும் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற வைக்கோ போன்றவர்கள் எடுத்துக் கொண்ட முக மூடிதான் மரண தண்டனை எதிர்ப்புக் கோஷம்.

ஒரு பக்கம் தீவிரவாதத்திற்கு எதிராக பேசுவதாகவும், பிரச்சாரம் செய்வதாகவும் நடித்துக் கொண்டிருக்கும் வைக்கோ போன்ற சைக்கோக்கள் கொலை, கொள்ளை, குண்டு வைப்பு, தீவிரவாதம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மறுபக்கம் வெற்றுக் கூச்சல் போடுகின்றார்கள்.

பாதிக்கப்பட்டவனின் இடத்தில் இருந்து சிந்திக்க வேண்டியவர்கள் கருணை மனு என்ற பெயரில் குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டும் என்று கூச்சலிடுகின்றார்கள். வைக்கோவின் உடன் பிறப்புகள் அல்லது சொந்தக் காரர்கள் யாராவது கொலை செய்யப்பட்டால் அல்லது குண்டு வெடிப்புக்களில் சிக்கி உயிரிழந்திருந்தால் அவர்களை இவர்கள் மண்ணிக்க வேண்டும் என்று பொதுக் கூட்டம் போடுவார்களா? மாநாடுகள் நடத்துவார்களா? மேடைகளில் முழங்குவார்களா?

மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது ஏன்?


தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் (?) போராடிவரும் வேளையில், தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கூடாது என்று ஓய்வு பெற்றுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி லகோதி சொல்லியுள்ளார். இதை ஒரு கருத்தாக மட்டும் சொல்லாமல் அதற்குத் தேவையான வாதங்களையும் அடுக்கடுக்காய் வைத்துள்ளார் லகோதி.

“தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டுகளில் எத்தனையோ அப்பாவிகள் உயிரிழந்து இருக்கின்றனர். அந்த அப்பாவி மக்களுக்கு இந்தத் தீவிரவாதிகளால் உயிர் கொடுக்க முடியுமா? கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மறந்து விட்டு தண்டனை பெறப்போகும் ஒரு நபரைப் பற்றி மட்டுமே நாம் சிந்திக்கும் நிலை உள்ளது” என்று கூறி தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரும் மனித உரிமை அமைப்புகளுக்கு விடையளிக்க முடியாத வினாவை எழுப்பியுள்ளார் லகோதி.

“ஒரு குற்றவாளியைத் தூக்கில் போட்டு விடலாம். ஆனால் அவனுக்கு வாழ்க்கை கொடுக்க முடியுமா?” என்று சிலர் கேட்கிறார்கள். இந்தக் கேள்வியை அவனை தீவிரவாதச் செயலுக்குத் தூண்டிவிடும் நபரைப் பார்த்து கேட்க வேண்டும் என்றார் லகோதி. தூக்குத் தண்டனைக் கைதிக்கு ஆதரவாக கருணை மனுபோடும் கண்ணியவான்கள் இந்தக் கேள்வியில் உள்ள அர்த்தத்தை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.

ஒருவன் பத்துப்பேரைக் கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையை கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையை சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால், அதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.

அதே நேரத்தில் கண்ணை இழந்தவன் குற்றவாளியை மன்னித்து விட்டால் குற்றாவளி தண்டிக்கப்பட மாட்டார். அல்லது குற்றவாளியிடம் நஷ்ட ஈட்டைக் கோரி பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டார்.

அது போலவே கொல்லவப்பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.

அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.

சட்டங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மனநிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.

கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.

இந்த நிலைமைக்கு என்ன காரணம்? கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாக உள்ளது எனலாம்.

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கருணை காட்டச் சொல்லி சிலர் வேண்டியுள்ளனர். அதுபோல் பாகிஸ்தானில் பயங்கரவாதச் செயல் புரிந்து மாட்டிக் கொண்ட ஒரு இந்தியரைத் தூக்கில் போட வேண்டாம் என்று இந்திய அரசே கருணை மனு போட்டுள்ளது. குறிப்பாக பி.ஜே.பி தலைவர் அத்வானி போன்றவர்கள் இதற்காக படுபிரயத்தனம் எடுத்துக் கொண்டார்கள்.

பாராளுமன்றத் தாக்குதலுக்கு உதவி புரிந்ததாக பேராசிரியர் ஜீலானி கைது செய்யப்பட்டவுடன், அப்படிப்பட்டவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று கர்ஜித்த இந்தப் புண்ணியவான்கள்(!) பாகிஸ்தான் நீதி மன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ராஜேந்தர் சிங்குக்கு தூக்கு கூடாது என்கிறார்கள்.

இவ்வாறு நாட்டுக்கு நாடு ஒரு நீதி. இனத்துக்கு ஒரு நியாயம் பேசும் அத்வானி வகையறா – லகோதியின் கருத்தைக் கேட்டாவது திருந்த வேண்டும்.

தேர்ச்சக்கரத்தில் சிக்கி இறந்த கன்றுக்காக தனது மகனையே பலி கொடுத்த மன்னனை மனுநீதிச் சோழன் என்று போற்றுகிறார்கள். ஆனால், இறந்து போன பசுவின் தோலை உரித்தெடுத்த தலித் மக்களை ஹரியானாவில் கொன்று குவித்த சண்டாளர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். ஆனால் ஒரு மனிதனைக் கொன்ற கொலையாளிக்கு தூக்குத் தண்டனை கொடுப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்.

கொலையாளியை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு தூக்குத்தண்டனை கூடாது என்று சொல்பவர்கள் கொலை செய்யப்பட்டவரையும், அவரது குடும்பத்தாரையும் கவனத்தில் கொள்ளட்டும். கொலையாளியைக் கொல்வதின் மூலம் அப்பாவி மக்களின் உயிர் பாதுகாக்கப்படுகிறது என்கிறது இஸ்லாம். இந்தக் கருத்தை தனது பாணியில் உரக்கச் சொன்ன லகோதி உண்மையில் பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை.

பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் – பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ – இதைக் கவனத்தில் கொள்கிறது.

5 comments :

♔ம.தி.சுதா♔ said...

தங்கள் ஆக்கம் படித்தேன்...

ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஆணித்தரமாக உரைத்துள்ளீர்கள்...

நீங்கள் மார்க்கம் சார்ந்து அளித்த விளக்கங்கள் சம்பந்தமாக எனக்கு எந்த விளக்கமும் தரத் தேவையில்லை...

ஆனால் ஒரே ஒரு கேள்விக்கு பதில் தாருங்கள்... அந்த மூவரது குற்றங்களையும் கூற முடியுமா? (தயவு செய்து வேற்று இடங்களின் லிங் தந்து குழப்ப வேண்டாம்... மிக சுருக்கமாகவென்றாலும் உங்கள் மொழியில் தாருங்கள்)

மர்மயோகி said...

சிபிஐ விசாரிதாயிற்று, கீழ்க்கோர்ட்டில் தண்டனை விதித்தாகிவிட்டது, உயர் நீதி மன்றத்திலும் உச்சநீதி மன்றத்திலும் தீர்ப்பான பிறகும், குடியரசுத் தலைவராலும் கருணை மனு நிராககரிக்கப்பட்டது...இன்னும் அவைகள் குற்றம் செய்யவில்லை என்று கூறுவீர்களாயின் உங்களது முடிவு தான் என்ன? யார் வந்து அவர்கள் குற்றவாளி என்று சொல்லவேண்டும்?வைக்கோ வந்து சொல்லனுமா?

MAHAA said...

கொலை, கொள்ளை, குண்டு வைப்பு, தீவிரவாதம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மறுபக்கம் வெற்றுக் கூச்சல் போடுகின்றார்கள்.மற்ற தீவிரவாத செயல்களோடு ராஜீவ் கொலையை சேர்க்காதீர்கள்... காரணம் நீங்களே இந்த வாசகத்தை கூறியிருக்கிறீர்கள். இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால், அதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம். இதைதான் விடுதலை புலிகளும் செய்தனர்... அது மட்டுமல்லாது ராஜீவுடன் இருந்த்தது ஆப்பாவி மக்களாக இருக்கமாட்டார்கள்.. உங்கள் கொள்கைபடி (அணைத்து அரசியல் வாதிகளும் தேச துரோகிகலாயிற்றே) ராஜீவும் அருகில் இருந்தவர்களும் தேசத்துரோகிகல்தானே. ஈழப்பெண்களை மனிதாபம் இல்லாமல் கற்பழித்த இந்திய படைகளை அனுப்பிய ராஜீவ்காந்திக்கு உடனே தண்டனைகொடுத்தனர்... படைவீரர்கள் செய்த குற்றத்திற்கு ராஜீவ் என்ன செய்வார் என்று கீட்கிரீர்களா... அதற்கும் நீங்கள் தந்த பதில் இதோ... “ஒரு குற்றவாளியைத் தூக்கில் போட்டு விடலாம். ஆனால் அவனுக்கு வாழ்க்கை கொடுக்க முடியுமா?” என்று சிலர் கேட்கிறார்கள். இந்தக் கேள்வியை அவனை தீவிரவாதச் செயலுக்குத் தூண்டிவிடும் நபரைப் பார்த்து கேட்க வேண்டும் ... இந்த இடத்தில் அந்த ராணுவ வீரர்களுக்கு தூண்டுகோலாய் இருந்தது ராஜீவ்தானே அதனால் இந்த கொலை உங்கள் தத்துவத்தின் படி குற்றமாகாது........ நண்பரே....வைகோ, பழநெடுமாறன், சீமான் ஈழபிரச்சனையில் இவர்களெல்லாம் கருணாநிதி ஜெயாவைபோல் அரசியல் நடிகர்கள் இல்லை... மக்களை ஏமாற்றுபவர்கள் இல்லை... ஆட்சிக்கு வரமுடியாது என்று அறிந்தும் அன்றிலிருந்து இன்று வரை ஈழத்தமிழர்களுக்காக கதறி துடித்துகொண்டிருந்தவர்கள்..
உன்னைப்போல் இலவச பிளாக்ஸ் பாட்டில் நான்கு அறைகளுக்குள் டைப் செய்துகொண்டிருப்பவர்கள் அல்ல... தினமும் களத்தில் நேராக நின்று தொண்டை கிழிய போராடிக்கொண்டிருப்பவர்கள்.
அனைவரும் கெட்டவர்கள் என்று மறுபடியும் எனக்கு பதில் சொல்ல நீங்கள் விரும்பினால்... இங்கே எழுதாதீர்கள்... இன்றிலேருந்து ஒரு கட்சி தொடங்கி நல்ல தலைவனாய் மக்களுக்காக போராடுங்கள். உங்கள் கட்சியில் நானும் ஒரு கடைசி தொண்டனாய் சேர்ந்துகொள்கிறேன்...

மர்மயோகி said...

ஓஹோ..அப்போ ஒரு நீதிபதி ஒரு குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை விதித்தால் அந்த நீதிபதியை பழிவாங்க அவரையும் தூக்கில் போடவேண்டுமா?
அரசு சட்டம் இயற்றி ஒரு வரைமுறை செய்துள்ளது..
பிரபாகரன் தலைமயிலான - வைகோவின் விடுதலைப்புலிகள் உலகின் பயங்கரமான பயங்கரவாதிகள். அவர்களின் கைகூலிகள் இந்தியாவின் தேச விரோதிகள்..
நீங்களே வந்து இலங்கை விசயத்தில் தலையிடுங்கள் என்று கெஞ்சுவீர்கள்..தலையிட்டால் அநியாயம் செய்துவிட்டான் என்று கொலை செய்துவிட்டு அதை நியாயமும் படுத்தி வன்முறை தேச துரோகம் செய்வீர்கள்..நல்ல இருக்கு திரு MAHA....

Godfrey Moses said...

ADEY MUSLIM VESA MAGANEY NEE TAMIL EELAM PRACHANAIYAI PATHI KATHIKA ONAKU ENTHA ARUKATHIYUM ILLAI INIMAL UN BLOGIL ELLA THAMILAR PATHI EATHAVATU ELUTHINAI ENDARA MAVENEY ONN NADU ROADLA VACHU VETTUVENDA

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?