Pages

Monday, July 9, 2012

ஊழல் செய்யவில்லை என்றால் பதவிக்கே லாயக்கில்லை - பா ஜ க




பார " தீய " ஜனதா கட்சி கரநாடகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்து - மூன்றாவது முதலமைச்சராக ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராகி உள்ளார்.

இதற்க்கு முன்பு ஊழல் குற்றசாட்டில் சிக்கிய எடியூரப்பா என்பவருக்கு பதிலாக ' சதானந்த கவுடாவை பார "தீய" ஜனதா கட்சி முதல்வராக நியமித்தது....இதற்க்கு அக்கட்சியின்  பாபர் மசூதி இடிப்பு குற்றவாளி அத்வானி, எடியூரப்பா போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததினால் பதினோரு மாதகாலம் ஆட்சியிலிருந்த சதானந்த கவுடா ராஜினாமா செய்துள்ளார்...

இதற்க்கு விளக்கம் கொடுத்த அந்த தீய கட்சியின் தலைவர் நிதின் கத்காரி " சதானந்த கவுடா தனது பதினோரு மாத கால ஆட்சியில் ஊழல் எதுவும் செய்யவில்லை..சட்ட ஒழுங்கு நன்றாக இருந்தது..எனினும் கட்சியின் நலன் கருதி அவர்  முதல்வர் பதிவியிலிருந்து விலகி உள்ளார்..இனி கட்சியில் உட்பூசல் நீங்கிவிடும்.." என்று தெரிவித்துள்ளார்..
இவர்கள் தங்கள் வாயாலேயே உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டார்கள் தாங்கள் இந்த நாட்டிற்கு  தேவையற்ற கட்சி என்று..

அதாவது ஊழல் எதுவும் செய்யாமல் இருந்தால் அவன் ஆட்சி செய்வதற்கே லாயக்கு இல்லாதவன்  ..அது தமது கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று...இப்படிப்பட்ட பயங்கரவாதிகள்தான் நாளை இந்தியாவின் ஆட்சிக்கு கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்..ஹ்ம்ம் என்ன சொல்வது ?


0 comments :

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?