Pages

Saturday, June 18, 2011

நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம்..!!!


முதலிடம் எனபது யாருக்குமே மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்தான், அதுமட்டுமல்ல பெருமைக்குரிய விசயம்கூட..

பணத்தில், படிப்பில், விளையாட்டில், போட்டியில் இப்படி எதிலும் முதலிடத்தில் இருக்கிறோம் என்பது மிகவும் பெருமைக்குரிய விசயம்தான்.

தமிழர்களாகிய நாமும் நிறைய விஷயங்களில் முதலாக இருக்கிறோம்..

எதில்..?

சினிமாக்காரர்களை பூஜிப்பதில் (இதைத்தான் இவன் சொல்வான் என்று முணுமுணுப்பது புரிகிறது)

சாராயம் வாங்குவதற்காக வரிசைகட்டி நிற்பதில்

சினிமாவுக்கு டிக்கெட் எடுப்பதில்

சாலை விதிகளை மீறுவதில்

சாமியார்களிடம் ஏமாறுவதில்

டிவி பெட்டியின் முன்பு நாள் கணக்கில் அமர்ந்து இருப்பதில்

கிரிகெட் போன்ற விளையாட்டு போட்டிகளை நாள்முழுவதும் அமர்ந்து பார்ப்பதில்

இலவசங்களுக்காக வாய் பிளந்து நிற்பதில்

காசுக்காக ஓட்டுப் போடுவதில்..

நடிகன் நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் அமைப்பதில்

சினிமாக்கூத்தடிகளை பார்த்துவிட்டால் பெற்ற பிள்ளைகளைக்கூட மறந்து விடுவதில்

மொபைல் போனில் வெட்டியாய் எஸ் எம் எஸ் கொடுப்பதில்

மொபைல் போனில் மணிக்கணக்கில் கதை பேசுவதில்

காலேஜ் போகிறேன் என்று பொறுக்கித்தனம் செய்து மாணவர் உரிமை என்று வியாக்கியானம் செய்வதில்..

தியேட்டர்களில் கட் அவுட்களில் பாலாபிஷேகம் பீராபிஷேகம் செய்வதில்

பொறுக்கி அரசியல்வாதிகளையும் வெட்டி சிநிமாகூத்தடிகளையும் தலைவனாய் கொண்டாடுவதில்

இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்

ஆனால் இதில் ஏதேனும் பெருமையோ வெற்றியோ இருக்கிறதா?

தமிழனின் பெருமை என்று பழைய கற்பனை கதைகளை கேட்டே பழகிவிட்டதால் சிநிமாகூத்தடிகளை நிஜ வாழ்விலும் அவனை நாயகர்களாக  மட்டுமல்ல ...மனிதனுக்கும் மேலே வைத்து கொண்டாடுவதில் நமது பகுத்தறிவை மட்டும் அல்ல மொத்த
 அறிவையும் அடமானம் வைத்து சினிமாவிலும் , டிவியிலும் சாராயத்திலும் மதிமயங்கி கிடக்கும் தமிழன் நாளை நமது பெருமையாய் தமது சந்ததிக்கு எதை சொல்லப்போகிறான்?

















6 comments :

KANNAA NALAMAA said...

arumaiyaana karuththukkal

Er/Ganesan/Coimbatore

கடவுள் said...

சூப்பரு ......... அதோடா இதையும் சேர்த்துக்கோங்க எழுதுறத்துக்கு ஒரு ப்ளாக் கிடைத்தா காணும் என்ன வேண்டலும் எழுதுரத்தில நம்ம தமிழ் லன் தான் முதல் இடம்

மர்மயோகி said...

நன்றி சிவகாமி கணேசன்

மர்மயோகி said...

நன்றி naan

Sankar Gurusamy said...

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே... இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். நுகர்வு கலாச்சாரத்தின் ஒரு பரிணாம வளர்ச்சியே இந்த நிலை. இது இப்போதைக்கு மாற வழி இருப்பதாக தெரியவில்லை.

தங்கள் அக்கறைக்கும் பகிர்வுக்கும் நன்றி..

http://anubhudhi.blogspot.com/

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/2_23.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?