Pages

Thursday, October 24, 2013

ஆறு மெழுகுவர்த்திகள் - ஆண்மை தவறேல்.


ஒரு குழந்தையை தவற விட்டவனின் தவிப்பை அருமையாக சொல்லி இருக்கும் ஒரு படம்....

சில நாட்களுக்கு முன் ஆண்மை தவறேல் என்றொரு படம் வந்திருந்தது...ஏறக்குறைய அதே கதையம்சம்தான் படத்தில்....இறுதிக்காட்சியில் கூட தன்னை காப்பாற்றவரும் காதலனை "ஏன்டா இவ்வளு லேட்" என்று ஆண்மைத்தவறேல் படத்தில் கதாநாயகி கேட்பதுபோல, இப்படத்திலும் தன்னை காப்பாற்றவந்த தந்தையை " ஏம்ப்பா இவ்வளவு நாள் ?"  என்று இப்படத்தில் மகன் கேட்கிறான்.....அதில் பெண்களை கடத்தும் கதையை சொல்லி இருந்தாலும் பெண்களை எப்படி கடத்துவது என்பதை விலாவாரியாக சொல்லப்பட்டு இருந்தது...அனால் இதில் முழுமையாக குழந்தை கடத்தும் பயங்கரவாத நெட்வொர்கிங் மறுபக்கம் இரக்கமின்மை, மனிதாபிமானமின்மை போன்ற கோரங்களை இந்த படம் வெளிக்கொண்டு  வருகிறது...

படம் பார்க்கும் ஒவ்வொரு தாயும் தந்தையையும் பயம் கொள்ள வைக்கிறது.....

சில சினிமாத்தனங்கள்  இருந்தாலும், நன்றாக ஓடி இருந்தால் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கும்...

ஆனால், தறுதலை தனுஷையும் சொறிநாய் சூரிகளையும் , சிவகார்த்தி கேனயன்களையும்  , குடிகார நாய்களையும் ரசிக்கும் டாஸ்மாக் தமிழனுக்கு இதெல்லாமா முக்கியம்..?

Monday, October 14, 2013

நய்யாண்டி - விமர்சனம்...

எனக்கு சினிமா பார்ப்பதில் அவ்வளவாக ஆர்வமும் கிடையாது, நேரமும் கிடையாது.


ஆனாலும், ஒருவித எதிர்பார்ப்புடன் (நீங்களாகத் தொப்புளை நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பாகமுடியாது)..…..

நையாண்டி படத்தையும் நஸ்ரியாவையும் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்து- பார்த்துமாகிவிட்டது.

விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுந்த கதைதான்.

தனுஷுக்கு நஸ்ரியா மேல காதல். இவங்க ரெண்டு பேரும் சந்திச்சு, வழக்கம்போல நண்பர்கள் உதவியோட சினிமாத்தனம் பண்ணி…….. இவங்களுக்குள்ளே லவ் ஸ்டார்ட் ஆகிறதுக்குள்ள, நமக்குத் தூக்கம் ஸ்டார்ட் ஆகிடுது

ஒரு வழியாக் கல்யாணத்தை முடிச்சு வீட்டுக்கு வந்தா.... இன்னொரு பிராப்ளம். தனுஷுக்கு ரெண்டு அண்ணன்கள். நாற்பது வயசைத் தாண்டியும் கல்யாணம் ஆகாதவர்கள்.


அவங்களுக்கு மத்தியில….. நஸ்ரியாவைத் தன்னோட மனைவின்னு சொல்லாம வேறு பொய்யைச் சொல்லித் தங்கவச்சிட்டுப் பாத்தா……

மைதா மாவாட்டம் இருக்கிற நஸ்ரியாவைப் புரோட்டவாப் போட்டுச் சாப்பிட்டா எப்படி இருக்கும்கிற ஆசை அண்ணன்களுக்கு வத்துவிட….. தம்பி பதற….. கதை நத்தை மாதிரி நகறுது.

பாவம் நஸ்ரியா…. பாரம்பரியமிக்க, கட்டுக்கோப்பான ஒரு குடும்பத்திலிருந்து நடிக்க வந்த பெண் என்பதால்- தனுஷைக் கட்டிப்பிடிக்கிறார். முத்தம் கொடுக்கிறார். காமம் பொங்க ஒட்டி அணைக்கிறார். முழங்காலுக்கு மேலே புடவை பறக்க ஆடுகிறார். முன்னாலே பாடலுக்கு மட்டும் டூப் போடாத தொப்புளைக் காட்டுகிறார். மற்றபடி ஒன்றும் தப்பாக நடித்துவிடவில்லை.

படம் சரியான மொக்கை….. ஓடாது என்று உறுதியாகத் தெரிந்துகொண்டுதான்- தொப்புள் விளம்பரம் செய்திருப்பார்கள் போல.

படம் பார்க்க நினைப்பவர்கள்…..

பக்கத்துத் தியேட்டரில் ஓடும் ராஜா ராணிக்கோ அல்லது ஓநாயும் ஆட்டுக்குட்டிக்கோ போங்க….

தண்டணையிலிருந்து தப்பிச்சுக்கலாம்!.
 
(இது பேஸ்புக்கில் சுட்டது.....நான் படம் பார்க்கவில்லை...)

நன்றி - உதயசூரியன் (பேஸ்புக்)

Monday, September 23, 2013

தமிழ் பற்று வீரர்கள் நிறுத்தவேண்டியவை...


நாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்..

1.நடிகனுக்கு பூசை செய்வதையும், கொடி பிடிப்பதையும் நிறுத்த வேண்டும்.

2.யோசிக்காமல் அறியாமையால், இலவசத்திற்காக மட்டும் ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டும்.

3.எதற்காக இதை படிக்கிறோம் என்று தெரியாமலேயே உயர் கல்வி கற்பதை நிறுத்த வேண்டும்.

4.நம் வசதிகளுக்காக,நம் தேவைகள் சுலபமாக நிறைவேற அரசாங்க அலுவலங்களில் ஐந்து ,பத்து கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

5.படிப்பறிவு இல்லாதவர்களிடமும், இயலாதவர்களிடமும் நம் புலமையையும், வீரத்தையும் காட்டுவதை நிறுத்த வேண்டும்.

6.கேள்வி கேட்க வேண்டிய இடங்களில் கேட்காமல் இருப்பதை நிறுத்த வேண்டும்.

7.தாய் மொழி பேசுவது வெட்கம் என்றும், அடிப்படைக் கல்வியை தாய்மொழியில் கற்பது பயனற்றது என்றும் நினைப்பதை நிறுத்த வேண்டும்.

8.டாஸ்மார் ன் வருமானத்தை கோடிக்கணக்கில் உயர்த்துவதை நிறுத்த வேண்டும்.

9.பெண்களை சோப்பு சீப்பு பவுடர் விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை, சிகப்பு தான் அழாகான நிறம் என்ற முட்டாள் தனமான விளம்பரங்களை
மக்களிடம் திணிப்பதை நிறுத்த வேண்டும்.


10.ஆணாதிக்கம், பெண்ணடிமை, பெண்ணுரிமை போன்ற வார்த்தைகளின் புரிதல் இல்லாமல் தொட்ட தொண்ணூறுக்கும் அவைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

11.ஆன்மிகத்தின் அர்த்தம் அறியாமல் அதை ஆயுதம் ஆக்குவதை நிறுத்த வேண்டும்.

12.கலாச்சார காவலர்கள் என்று பேர் வைத்துக் கொண்டு கலாச்சாரத்தை பாதுகாப்பது போலவே சீரழிப்பதை நிறுத்த வேண்டும்.

13.சினிமாவால் வாழ்க்கை பாதிக்க படாமல் இருக்க , முகநூலால் சுய முன்னேற்றம் முடங்காமல் இருக்க, எதற்குமே அடிமை ஆவதை நிறுத்த வேண்டும்.

# அவனை நிறுத்த சொல்லு , நான் நிறுத்தறன்னு சொல்லாம , நாம மாறினா இங்கு நிறையவே மாறும்.


நன்றி : Aathika Ashreen (facebook) 

Monday, September 16, 2013

முட்டாள்களின் மூடர் கூடமும், வருத்தப்பட வைத்த வாலிபர் சங்கமும்....!!!



வலைத்தளங்களில் எவ்வளவுதான் பதிவர்கள் பல்வேறு பதிப்புகளிட்டாலும், புதிய புதிய பதிவர்கள் வந்து கொண்டிருந்தாலும் பெரும்பாலும்  சினிமா சம்மந்தப்பட்ட பதிவுகளே அதிகமதிகம் பார்க்கப்படுகின்றன எனபது வருந்தத்தக்க விஷயம் .

தமிழகத்தில் என்னதான் தமிழ் கலாசாரம், தமிழர் பண்பாடு என்று வாய்கிழிய சிலர் காட்டுக்கத்தல் போட்டுக்கொண்டிருந்தாலும், தமிழர் பண்பாடு, தமிழ்பற்று  எனபது சினிமாவிலிருந்து மட்டுமே வியாபாரத்திற்காக பயன்படும் வார்த்தைகளாகத்தான் இருக்கின்றவே ஒழிய நடைமுறையில் அவனவன் மேலைநாடுகளின்  காப்பியடித்த காலாசார வித்தகர்களா கவே இருக்கின்றனர்...

ஒன்றே  ஒன்று...தமிழ்பற்று எனபது விடுதலைபுலிகள்  எந்த மாபாதகசெயல்கள்  செய்தாலும் அது தவறல்ல என்று அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதும், இந்தியாவை காட்டிக்கொடுக்கும் தேச துரோகம் என்பதும் தான் இங்குள்ள அரசியல் வியாதிகள் இந்த டாஸ்மாக் தமிழர்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளனர்...

அதேபோல , தமிழ்நாட்டின் முதல்வனாக சினிமாக்கூத்தாடிதான் வரவேண்டும் என்பதும், முதல்வராக மட்டுமல்ல, எதிர்கட்சியாக , எதிர்கட்சியின் எதிர் கட்சியாக இன்னும் அனைத்து கட்சிகளுமே சினிமாக்கூத்தாடிகளை முன்னிறுத்தியே இருக்க வேண்டும்  என்பதும் இந்த டாஸ்மாக் தமிழகத்தின் தலைஎழுத்தாகிவிடது நமது சாபக்கேடுதான்....

அதனால்தான் பயங்கரவாதி  மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த சங்க்பரிவார பயங்கரவாதிகள் ரஜினி எந்த கூத்தாடியிடம் மண்டியிட்டுள்ளனர்....

இதற்க்கு முன் நான் "ஒரு நல்ல செய்தி ..ஒரு கெட்ட செய்தி..!" என்று எழுதிய ஒரு அரசியல் பதிவு, அதிகம் கண்டுகொள்ளப்படவில்லை எனபது இதற்க்கு நல்ல உதாரணம்....

ஆனால் இந்த பதிவு அதிகம் வாசிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது...காரணம் இதில்.."மூடர் கூடம்" மற்றும் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" ஆகிய சினமா பற்றிய விமர்சனங்கள் இடம்பெறுகின்றன....


மூடர்கூட ம் என்ற படம் மூடர்களால் எடுக்கப்பட்ட படம்தான் என்பதுடன், இதை விட மெதுவாக நகரும் படங்கள் வங்காள மொழியில்  கூட வந்திருக்காது .. இந்த படத்தை  எடுத்த முட்டாள்கள், அவர்கள் முட்டாள்களாக இருப்பதுடன், படம்பார்க்க வந்த அனைவரையும் முட்டால்களாக்கி  இருப்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்...

திருடர்களை கதாநாயகர்களாக்கி,  இறுதியில் அவர்கள் நல்லவர்களாககாட்டும் இந்த மூடர்கள்,   இன்னுமொரு சமுதாய சீர்கேட்டை இந்த படத்தின் மூலம் விதைத்திருக்கிறார்கள் ....

நான்கு திருடர்களில் , சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படித்த திருடன், படம் முழுவதும் மெதுமெதுவாக பேசி அட்வைஸ் என்ற பெயரில் அறுத்துத் தள்ளுகிறான்....திருட்டுதொழிலை நியாயப்படுத்தி பேசுகிறான்....

சென்ட்ராயன் என்பவன் பார்க்க சகிக்கமுடியாத பொருக்கி மாதிரி இருக்கிறான்... அவனிடன் இப்படத்தின் இயக்குனர் எவ்வளவு காசு லஞ்சம் வாங்கினானோ தெரியவில்லை...அவனுக்கு கிளி மாதிர ஒரு அழகியுடன் டூயட் மட்டுமிலாமல், காட்டிப்பிடிக்கவும் வாய்ப்பு வழங்கி தனது மாமா விசுவாசத்தை காட்டுகிறான்....
அந்த குரங்கு ஒரு தமிழ்பற்று வசனம் ஒன்று பேசி விட்டு செல்கிறது.....

அடுத்த காட்டுமிராண்டிக்கு "முட்டாள்" என்று சொன்னால் மட்டுமே கோவம் வருமாம் ...

கதாநாயகனாக வரும் இயக்குனன்  தன்னை  10 வயதுகூட நிரம்பி இராத ஒரு சிறுமி காமம் வயப்படுவதாய் காட்டி தனது ஈனத்தனத்தை காட்டி தமது அரிப்பை தீர்த்துக்கொள்கிறான் ..

இன்னொருவன் தனது மாமன் வீட்டில் கொள்ளையடிக்க மற்ற மூன்று பொறுக்கிகளையும் கூட்டி செல்வதுதான் இப்படத்தின் மையக்கரு...

அவன் தனது  மாமன் மகளை ஒரு "பாய்" பையனுடன் அனுப்புவதுடன்  , அவன் ஒரு " பாய் " பெண்ணை காதலித்து தோல்வியடைந்ததாய்  ஒரு முன் கதை வேறு...

இதே போன்ற உப்புச்சப்பில்லாத முன்கதைகள் படத்தில் வரும் அனைத்து பொறுக்கிகளுக்கும் உண்டு....

வடநாட்டு பொருக்கி ஒருவனை பயங்கர வில்லன் போல காட்டி அவன் மூலம் தமிழ் பற்று வியாபாரம் செய்ய முயர்ச்சிப்பதுதான் உலகமாக நகைச்சுவை....

அதாவது இந்தியா முழுதும் அனைத்து மாநில மக்களும் ஹிந்தியை கற்றுக்கொண்டு தாய் மொழியை மறந்து விட்டார்களாம்,,,,தமிழ்நாடு மக்கள்தான் இன்னும் தமிழை  பேசிக்கொண்டிருக்கிறார்களாம் என்ற ஒரு காமெடி..

இயக்குனர் தமிழ நாட்டுக்கரந்தான என்ற சந்தேகம் வருகிறது...இங்குள்ள தமிழன்தான் டாஸ்மாக் கடைகளில் உருண்டு பெரண்டு ஆங்கில அடிமைகளாகி இருப்பது தெரியவில்லை போலும்,,,,அல்லது விடுதலைபுலி பயங்கரவாதிகளின் தமிழ்நாட்டு அடிமைகள் சிலரை திருப்தி படுத்த இந்த வசனத்தை சேர்த்திருக்கலாம்....

அடுத்து "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" என்ற டுபக்கூர்ர் படம்

இதில் நடித்திருக்கும் சிவா கார்த்திகேயன் மற்றும் சூரி என்பவர்கள் இதற்க்கு முன் என்ன புடுங்கினார்கள் என்று தெரியவில்லை..இந்த படத்தில் இந்த பொறம்போக்குகளுக்கு அவ்வளவு பில்ட் அப்....

சிவகார்த்தி "கேனயன்"  நடந்து போகும்போது ஹார்ன் அடித்தால் அவன் மணல் கொள்ளை  என்று போட்டுக்கொடுத்துவிடுவாராம்....
தான் சைட் அடிக்கும் டீச்சருக்கு லவ் லட்டர் கொடுக்கும் பெண்ணுக்கு திருமணம் என்றதும் மைனர் பெண்ணுக்கு திருமணம் என்று போலீசில் புகார் செய்து திருமணத்தை நிறுத்து விடுவானாம்..
கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் நடத்துவதற்கு முன்னின்று வேலை செய்வானாம்....

அடுத்து இந்த சூரி என்பவன்...இஞ்சி தின்ற குரங்குமாதிரி இருந்துகொண்டு இவன் காமெடி என்ற பெயரில்  படம் பார்க்கும் அனைவரையும் சாகடிக்கிறான்....

ஏதோ ஒரு படத்தில் பரோட்டா காமெடியை பார்த்து ரசித்த பாவத்திற்காக நிறைய படங்களில் இந்த மூதேவியின்  அறுவையை  பார்த்து தொலைக்க வேண்டியுள்ளது...

மற்றபடி மார்கெட் இழந்த சத்யராஜ் என்ற நடிகர் படம் முழுவதும் உர்ரென்று வருகிறார், இறுதிக்காட்சியில் அவரும் ஒரு கேனயன் என்று காட்டி (நகைச்சுவையாம்) இந்த படத்தை (அப்படா) முடிக்கிறார்கள்....

மொத்தத்தில்...குறும்படம் எடுப்பவன் குறும்படம் மட்டும் எடுத்து யு டியூபில் மட்டும் பார்த்து ரசித்துக்கொள்ளட்டும்...ஏன் மற்றவர்களையும் காசை வாங்கிகொண்டு  "கொல்ல " வேண்டும்...? ஊடக விபாச்ச்சரிகள் இதை ஏன் ஊக்குவிக்கவேண்டும்?

இந்த மூடர் கூடமும், வருத்தப்படாத வாலிபர் சங்கமும் ஒன்றாய் ஒரே இடத்தில் பார்த்திருக்கிறீர்களா ? 

நேற்றைய தினம் (15.08.2013) வெறும் கற்சிலைகளை கரைக்கும் மூடர்கூட்டத்தில் குடித்துவிட்டு கும்ம்மாலமடிக்கும் வாலிபர்களைப்பார்த்தல் இந்த ஞாபகம்தான் வந்தது....

Saturday, September 14, 2013

ஒரு நல்ல செய்தி..! ஒரு கெட்ட செய்தி.....!!!


நேற்றும் இன்றும் செய்தித்தாள்களில் பரபரப்பாக பேசப்படும் இரு வேறுபட்ட செய்திகளில் இந்திய மக்களின் செம்மறியாட்டு மன நிலையும்  கேடுகெட்ட ஊடக விபச்சாரிகளின் பயங்கரவாத முகமும் தெள்ள தெளிவாக காணக்கிடைக்கிறது ..

முதலில் நல்ல செய்தி எனபது நல்ல செய்தியா என்று பாப்போம்....

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் நான்கு பேருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு வந்திருக்கிறது...

இது போன்ற குற்றங்களுக்கு மரணதண்டனைதான் சரியான தீர்ப்பு என்றாலும் நமது நாட்டு சட்டத்தில் அதற்கான தீர்வு இல்லை..கற்பழிப்பு குற்றத்திருக்கு 7 வருடங்கள்தான் தண்டனை....அப்படியே அந்த பெண் இறந்ததால் இது கொலை வழக்காக மாற்றப்பட்டாலும், வரும் காலங்களில் இந்த குற்றவாளிகள் மேல் முறையீடு செய்யும்போது தாங்கள் கொலை செய்யும் நோக்கத்தில் இந்த குற்றத்தை செய்யவில்லை என்று வாதிட்டு தப்பித்துக்கொள்ளும் வாய்ப்புகள்தான் உண்டு..

இன்று ஊடகங்களும், மேதாவிகளும் நீதி  கிடைத்தது என்று எக்காளமிட்டாலும், வடநாட்டு பெண் உரிமை அமைப்புகள்  தங்களுக்குள் இனிப்புகள் வழங்கிக்கொன்டாலும் இது வெறும் கண்துடைப்பு  தீர்ப்புதான் என்று அனைவருமே விளங்கி இருந்தும் இப்படி கூறிக்கொண்டிருப்பது கேலிக்கூத்தாகி இருக்கிறது...

ஏனெனில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ராஜிவ்காந்தி கொலைகாரர்கள்  விடுதலைப்புலிகளே இன்று ஊடக விபச்சாரிகளாலும், இந்திய தேச துரோகிகளாலும் தியாகிகளாக்கப்பட்டு கொண்டாடப்படுகிறார்கள்...இதைவிட ஒரு அவலம் வேறு என்ன வேண்டும்? நாளை இந்த கற்பழிப்பு பயங்கரவாதிகளும் தியாகிகளாக சித்தரிக்கப்படும் அவலமும் ஏற்படும் என்பதை மறுக்கத்தான் முடியுமா/?

சரி கெட்ட செய்தி?

வேறு என்ன...

மகாத்மா காந்தியை கொன்ற இயக்கம்....நான்கு முறை இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு.... இந்தியாவில் நடைபெற்ற, நடைபெற்று வரும் மதக்கலவரங்கள், குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் உள்ள ஒரு அமைப்பு சங்க்பரிவார ஆர் எஸ் எஸ் என்ற ஒரு பயங்கரவாத அமைப்பு....
அந்த அமைப்பு ஒரு பயங்கரவாத கட்சிக்கு, பயங்கரவாதி ஒருவனை பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கக் கூறி நிர்பந்திக்கிறது...

அந்த பயங்கரவாதி எப்பேர்ப்பட்டவன்?

தமது சொந்த மாநில மக்கள் 2000 க்கும் மேற்பட்டவர்களை அநியாயமாக கொன்றவன்....போலி என்கவுண்டர்கள்  மூலமும் பலரை கொன்று இன்று குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு கேவலப்பட்டு நிற்பவன்...உலக பயங்கரவாதி அமெரிக்காவிநாளும் அவன் கூட்டாளி இங்கிலாந்தினாலும் விசா நிராகரிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டவன்...

தமது மாநிலம் வளர்ச்சி பெற்று வருகிறது என்றுநாள்தோறும்  பொய் மூட்டைகளை அள்ளிவீசி ..கேவலப்பட்டு நிற்ப்பவன்....

பாரதீய கட்சியின் தலைவர்களில் ஒருவரான - நாடெங்கும் மதக்கலவரங்களை தூண்டிவிட்ட இன்னொரு பயங்கரவாதி அத்வானியே அவனை வெறுக்கும்போது இவன் எவ்வளவு மாபாதகன் எனபது உள்ளங்கை நெல்லிக்கனி.....

அப்படிப்பட்ட ஒரு பயங்கரவாதியைத்தான்  - பார " தீய " ஜனதா கட்சி என்கிற தீய சக்திகள் பிரதம வேட்பாளருக்கு முன்மொழிந்துள்ளன.
இதை இங்குள்ள தமிழ் ஆபாச ஊடக விபச்சார நாய்கள் கொண்டாடி முன்னுரிமை செய்தியாக தருவது எவ்வளவு பெரிய கேவலம் எவ்வளவு பெரிய அவலம்?

ஆனாலும் எது எப்படியோ மேற்கண்ட எந்த விசயமும், நாம் நல்ல விஷயம் என்று கருதக்கூடிய மரணதண்டனையும் நிறைவேறப்போவதில்லை....

கெட்ட செய்தி என்று கருதும் பயங்கரவாதி மோடியும் பிரதமராக வரப்போவதில்லை...

எனினும் இதை பதிவு செய்து வைப்போமே..

Tuesday, September 10, 2013

சிங்கம் 2 - விமர்சனம்?



சென்ற பதிவில்....ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு சிங்கம் 2 விமர்சனம் பதிவேன் என்று சொன்னாலும் - வழக்கம்போல வேலைப்பளு (?)...போன்ற காரணங்களால் அந்த விமர்சனம் பதிவிட முடியவில்லை...
மேலும் சிங்கம் 2 பற்றிய பல்வேறு விமர்சனங்கள் வந்துவிட்டதாலும், அதை மீண்டும் நாமும் விமர்சிப்பதால் அதனால் பயன் இல்லை என்பதாலும் அதை விட்டுவிடலாம்....

ஒரு நண்பர் பாலா என்பவர் மட்டும், - அப்படத்தில் ஒரு முஸ்லிம் வில்லன் வருவதால் உங்களிடம் இருந்து நிச்சயம் விமர்சனத்தை எதிர்பார்த்தேன் என்று பின்னூட்டமிட்டிருந்தார்....
இதுபோன்ற அப்படத்தில் வருவதுபோன்ற வில்லன்கள் நிச்சயம் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள்..அதை ஒரு பொருட்டாய் கருதுவதில்லை...இஸ்லாத்திற்கெதிரான - காரணமற்ற சுய வன்மங்களை சில கூத்தாடிகள் படமாய் எடுக்கும்போதுதான் நமக்கு கோபம் வருகிறதே தவிர, தனி மனிதன் எப்படியும் இருப்பான்....இதை அந்த நண்பர்  புரிந்துகொண்டால் நல்லது...

சிங்கம் படத்தை பொருத்தவரை அதில் பிரதானமாய் இருப்பது - கதாநாயகன் சூர்யாவின் காட்டுக்கத்தல்கள்தான் ....காமெடி என்ற பெயரில் விவேக் கின் அறுவைகளும், சந்தானத்தின் காப்பியடித்த காமேடிகளும்தான்....

கதாநாயகன் பைனாகுலரிலேயே கடத்தல்காரர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் (அவர்களது உரையாடல் உட்பட)  அறிந்து நடவடிக்கை எடுப்பதை காட்டுவது காமெடியிலும் காமெடி....

காதல் காட்சிகளில் - தன்னை ஒருதலையாய் காதலிக்கும் ஹன்சிகா மொத்வானிக்கு வண்டி வண்டியை அட்வைஸ் செய்வதும் இன்னும் ஒருவகை காமெடிதான்...
ஹன்சிகா மொத்வாணி பள்ளிக்கூட மாணவியை வருவது பள்ளிக்கூடக்காமேடி?

உள்துறை மந்திரியாய் வரும் - இயக்குனரின் மாமனார் - விஜயகுமார் - இவர் போலிசுக்கு உத்தரவிடுவதற்கு பதிலாய்..கதாநாயகனின் பேச்சை மட்டும் இவர் கேட்பதை காட்டுவதை காமெடியை விட வேறு ஏதாவது ஒன்று இருந்தால் அதற்க்கு ஒப்பிடலாம்...

மற்றபடி சிங்கம் - படத்தில் கதாநாயகியை வந்ததற்காக அனுஷ்காவை இதிலும் பாடல்களுக்கு மட்டும் உபயோகப்படுத்தி இருப்பதும், மற்ற நடிகர்கள் வந்து போவதுமாய் இருப்பதும்தான் விறுவிறுப்பு என்று மற்ற பதிவர்கள் கொண்டாடி இருப்பதும் - இணையதலக்காமேடியில் சேர்க்கலாம்....

சிங்கம் 2 - only sound....

 விமர்சனத்தை விட்டுவிடலாம் என்று சொல்லிவிட்டு  இந்த பதிவும் விமர்சனமாகிவிட்டது உச்சகட்ட வலைத்தள காமெடிதானே?

சொன்னதை செஞ்சுட்டோம்ல.....

Saturday, July 13, 2013

சிங்கம் II விமர்சனம் - விரைவில்...




ஏறக்குறைய  இரண்டு மாதங்களாகிவிட்டது பதிவுகளிட்டு....
வேலைப்பளு என்பதைவிட , பேஸ்புக்கில் - கவனம் சென்றுவிட்டதினாலும் , உண்மையிலேயே,  புதியதாக சில பொறுப்புகள் எற்றுக்கொண்டிருப்பதனாலும் பிளாக்கில் கவனமற்று இருந்ததினால்......பதிவுகளிடமுடியவில்லை என்பதுதான் உண்மை....

ஆரம்ப காலங்களில் இருந்த ஆர்வம் சற்று குறைந்துவிட்டதும் ஒரு காரணம்...முன்பு போல பல - சீனியர் பதிவர்களும் பேஸ்புக் பக்கம் கவனம் செலுத்துவதனாலேயோ  அல்லது அவர்களும் ப்ளாக்கில் இருந்து ஒதுங்கிவிட்ட காரணத்தினாலேயோ கூட எனது ஆர்வம் குறைந்து இருக்கலாம் என்றும் கருதுகிறேன்..

ஆனாலும் இந்த பிளாக்கை விட மனம் வரவில்லை. அப்பப்போ சிலருடைய பதிவுகளை படித்துகொண்டு இருக்கும்போது, நாமும் பதிவிடலாம் என்றும் தோன்றும்....சமீபத்தில் அதிகமதிகமாக எல்ல பதிவர்கலாலேயும் அளவுக்கதிகமாக பாராட்டப்பட்ட சிங்கம் II  என்ற திரைப்படம் பற்றிய விமரசனத்தொடு பதிவை மீண்டும் தொடரலாம் என்றிருக்கிறேன்...

விமர்சனம் எனபது - வெறும் பாராட்டாகவும் வீண் விளம்பரமாகவும் இருக்காமல் உண்மையான விமர்சனமாக இருக்கவேண்டும்...விமர்சனம் என்பதே குறைகளை கூறுவதுதான்...
எனது பார்வையிலான சிங்கம் II  விமர்சனம் எனது அடுத்த பதிவில்......

நன்றி...