Pages

Thursday, July 7, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் : தயாநிதி ராஜினாமா ; பிரதமரை சந்தித்து கடிதம் கொடுத்தார்



 ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் தயாநிதி தனது அமைச்சர் பதவியை இன்று மதியம் ராஜினாமா செய்தார். தயாநிதி ராஜினமா கடிதம் கொடுத்தார் என்பதை பிரதமர் அலுவலகமோ, தி.மு.க., வட்டாரமோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் வெளியிடவில்லை. முன்னதாக தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் தயாநிதி ஆலோசனை நடத்தியதாகவும், இதன் பின்னரே ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.




2004- 2007 ஆம் ஆண்டு கணக்கில் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது ஏர்செல் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது.



இந்த புகாரை அடுத்து ஏர்செல் நிறுவன மாஜி உரிமையாளர் சிவசங்கரனிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது. இதில் தயாநிதி தமக்கு அலைவரிசை ஒதுக்காமல் காலம் தாழ்த்தினார். இதனால் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மாக்ஸிஸ் நிறுவனத்திடம் விற்க வேண்டியதாயிற்று. விற்ற உடன் இந்த நிறுவனத்திற்கு உடனடியாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று கூறியிருந்தார். இந்த காலக்கட்டத்தில் சன் டி.டி.எச்., நிறுவனத்தில்., மாக்ஸிஸ் துணை நிறுவனம் ரூ. 600 கோடியை முதலீடு செய்தது. இதனால் தயாநிதி அமைச்சரவையில் நீடிக்க கூடாது என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.


இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., வக்கீல் இது தொடர்பான விசாரணை அறிக்கையை நேற்று தாக்கல் செய்தார். இதில் தயாநிதி மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் தயாநிதி எந்நேரமும் ராஜினாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று மதியம் டில்லியில் பிரதமரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியே வந்த தயாநிதி பத்திரிகையாளர்களிடம் பேச மறுத்து விட்டு சென்று விட்டார். முன்னதாக இன்று காலையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி பங்கேற்றார்; ஆனால் பாதியிலேயே கூட்டத்திலிருந்து வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது .



2 comments :

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.

hot tamil actress gallery

பாகிஸ்தான்காரன் said...

அதுதான் தினமலர் ஏற்கனவே இந்த செய்தியை வலையேற்றிவிட்டதே . பிறகு ஏன் நீங்க திரும்பவும் வலையேற்றி இருக்கிறீங்க? ஏன் உங்களிற்கு மந்த புத்தியா? எதையும் இரு முறை வாசித்தால்தான் புடியுமா? அதை ஏன் நீங்க தினமலர் வலை பக்கத்திலயே போய் வாசிக்கலாமே?

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?