Pages

Monday, July 11, 2011

வேங்கை - தமன்னாவின் கடைசி தமிழ்படம்?



இயக்கம் ஹரி :
ஊரில் ஒரு பெரிய மனிதர்: அவர் வார்த்தைக்கு கட்டுப்படும் ஊர்  மக்கள். ஊர் சுற்றும் அவரது ஒரே மகன்.தந்தை என்றால் அடங்கி ஒடுங்கி செல்லும் பணிவு. தந்தை சொல் தட்டாதவன். அவருக்கு அதே ஊரில் சமமான ஒரு எதிரி..அவனால் மகனுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று நினைக்கும் தந்தை. அவரது மகனை சுற்றும் காமெடியன் மற்றும் அல்லக்கைகள்.  இறுதியில் கதாநாயகன் விரும்பிய பெண்ணுடன் திருமணம் . சுபம். - இன்னும் எத்தனை படம்தான் இதே போல இயக்கிக்கொண்டிருக்கப் போகிறாரோ ?


ராஜ்கிரண்.:
ஊரில் பெரிய அந்தஸ்தில் உள்ள ஊர் பெரியவர். ஊருக்காக பல நன்மைகள் செய்தவர்..அவருக்காக உயிரையே தர தயாராக இருக்கும் ஊர் மக்கள். ஊர் சுற்றும் ஒரே மகன். தந்தை என்றால் அடங்கி ஒடுங்கி செல்லும் பணிவு. தந்தை சொல் தட்டாதவன். கட்டுபெட்டியான மனைவி...மகன் மேல் வெளியில் சொல்லமுடியாத அளவுக்கு பாசம். உள்ளூரை மட்டுமல்ல சுற்று வட்டாரத்திலேயே செல்வாக்குள்ள மனிதர் - இன்னும் எத்தனை படங்கள்தான் இதே பாத்திரத்தில் நடிப்பாரோ...?


தனுஷ் :
தந்தை சொல் தட்டாத தனையன். தந்தை மேல் அளவுகடந்த பாசம். எப்போதும் நண்பர்களுடன் ஊரு சுற்றிக்கொண்டிருப்பது. அநியாயத்தை கண்டால் பொங்கி எழுவது. பலமடங்கு அழகான தனக்கு சற்றும் பொருத்தமில்லாத பெண்ணையே சுற்றி சுற்றி வந்து காதலுக்கு புதுவிதமான விளக்கம் சொல்லி - ஆபத்தில் அவளுக்கு உதவி அவள் காதலிக்க ஆரம்பித்தவுடன் அவளை தவிக்க விடுவது - இன்னும் எத்தனை படங்கள்தான் இதே மாதிரியே நடித்துக்கொண்டிருப்பாரோ?

தமன்னா :
அரை கிருக்காக அறிமுகம் ஆகி, பின்னால் குடும்பத்தில் பெரும் சோகத்தை வைத்துக்கொண்டு, காதலிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே காதலில் விழுவது..இன்னும் எத்தனை படங்களில்தான் இப்படி நடிப்பது என்று நினைத்துதான் வேறு தமிழ்படங்களில் நடிப்பதில்லையோ?

பிரகாஷ் ராஜ்:
அடக்க ஒடுக்கமான மனிதராக இருந்து, ஊரு பெரியவரின் ஆதரவுடன் பெரிய அரசியல்வாதியாகி, அவருக்கே துரோகம் செய்து கடைசியில் மண்ணை கவ்வுவது..: இன்னும் எத்தனைப்படங்களில்தான் இதே வில்லத்தனத்தை செய்து கொண்டிருப்பாரோ?

காமெடியன் :
ஊரில் ஏதாவது பெட்டிக்கடையோ - இந்த படத்தில் சைக்கிள் கடை - ஏதோ ஒன்று வைத்துக்கொண்டு, நாலைந்து அல்லக்கைகளுடன் வருகிறவன் போகிறவனை எல்லாம் கலாய்த்துக் கொண்டு ஊரில் வியாபாரம் செய்வது. கதாநாயகனுக்கு கண்டிப்பாக நண்பனாக இருப்பது. அவனுக்கு ஆபத்து எனும்போது - வியாபாரத்தை எல்லாம் விட்டு விட்டு அவனுக்கு துணையாக அவன் கூடவே இருப்பது: - இன்னும் எத்தனைப் படங்களில்தான்  இதை காமெடி என்று காட்டுவார்களோ..

ரசிகர்கள் : 

தினசரிகள் , மற்றும் ஆபாச பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களை பார்த்து மிகுந்த எதிர்பார்ப்புடன் முதல் நாளே படம்பார்த்து விட்டு ஏமாந்து திரும்புவது : இன்னும் எத்தனை நாள்தான் இப்படி ஏமாந்துகொண்டே இருப்பானோ..

மர்மயோகி :
இப்படி எல்லாப்படத்தையும் குறை சொல்லிக்கொண்டே இருப்பது : - இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படி குறை சொல்லிக்கொண்டே இருப்பானோ...

மேற்கண்ட எல்லாமே எல்லாரும் எல்லா படங்களிலும் செய்து வந்ததை இதே படத்திலும் அத்தனை பேரும் அதேபோன்றே நடித்துகொண்டிருக்கிரார்கள்..

காமெடி என்ற  பெயரில் "கஞ்சா கருப்பு" பண்ணுவது மிக மட்டமான கேவலமான, அருவருப்பான, ஆபாசமான  ரகம்.

வில்லன்களில் வேலையே  சவால் விட்டு சவால் விட்டு கதாநாயகனிடம் அடிவாங்குவதாகவே இருக்கிறது..

ராஜ்கிரனை கொல்வதற்காக தமன்னா வருவது - வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட காட்சி. கதைக்கு அது தேவையே இல்லை. ஒரு சமயம் இயக்குனருக்கே தாம் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியே கதை பண்ணுவதால் இப்படி ஒரு காட்சியை வித்தியாசமான கதை என்று காட்ட திணித்து இருக்கலாம்   அதற்க்கு காரணமான காட்சியும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.  அதோடு தான் தவறு செய்யவில்லை என்று  ராஜ்கிரண் தமன்னா குடுமத்தினரிடம் சொன்னவுடன் அவர்கள் மனம் திருந்துவதும் இது ஒரு தேவையற்ற காட்சி என்றே உணர்த்துகிறது. .பாடல்களும் அலுப்பூட்டுகின்றன..

வேங்கை - பல ஆட்டுக்கல்கள், கிரைண்டர்கள், மிக்சிகள் என்று  அரைத்து அரைத்து சலித்து புளித்துப்போன மாவு..





3 comments :

cisco said...

http://onelanka.wordpress.com/2011/07/10/rajini-singapore-guinness/

Prem S said...

good review supergood review super

மர்மயோகி said...

நன்றி திரு சி. பிரேம்குமார்

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?