Pages

Sunday, April 22, 2012

குஜராத் இனப்படுகொலையில் மோடிக்கு சம்மந்தம் இல்லையா?

குஜராத் இனப்படுகொலையில் மோடிக்கு சம்மந்தம் இல்லையா? அடப்பாவிகளா ? நீங்களெல்லாம் மனிதர்கள்தானா?


குஜராத்தில் 2002 - ம் ஆண்டு நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலைகளில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீதான புகாருக்கு ஆதாரமில்லை என்ற ராகவன் குழு சமர்பித்த அறிக்கையை அஹ்மதாபாத் விசாரணை நீதிமன்ற  நீதிபதி எம்.எஸ். பட வெளியிட்டு இறுதி அறிக்கையை 30 நாட்களுக்குள் ஜரியா  ஜாப்ரிக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.



ஜரியா ஜாப்ரி, குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின்போது கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஹ்சான் ஜாப்ரியின் மனைவி எனபது குறிப்பிடத்தக்கது. ராகவன் சொல்லிவிட்டதாலேயே பயங்கரவாதி மோடி பரிசுத்தமாகி விடமாட்டார். விசாரணையும் முற்றுபெற்றுவிட்டதாக சொல்லிவிடமுடியாது.இதற்க்கு மேலும் சட்டபயணம் இருக்கிறது. கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் இறந்தவுடன் முஸ்லிம்கள்தான் 59 கரசேவகர்களை தீவைத்து விட்டார்கள் என்ற குஜராத் அரசு வதந்தி பரப்பியதா இல்லையா? குஜராத் அரசு, காவல்துறை, சங்பரிவார் ஆகிய மூவரும் கூட்டு சேர்ந்துகொண்டு இந்த வதந்தியை பரப்பினார்கள் எனில் மோடிக்கு முஸ்லிம் இனப்படுகொலையில் எப்படி சம்மந்தமில்லாமல்  இருக்கும்?

குஜராத்தில் முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்படும்போது, "இந்துக்களின் கோபத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள்..அவர்களை தடுக்காதீர்கள்" என்று மோடி காவல்துறைக்கு உத்தரவிட்டாரா இல்லையா? அப்படி உத்தரவிட்ட பிறகு மோடிக்கு சம்மந்தமில்லை என்று எப்படி சொல்லமுடியும்? மோடியின் இந்த உத்தரவுக்கு பிறகுதானே சங்கபரிவாரின் கொலைவெறியாட்டத்தை காவல்துறை வேடிக்கை பார்த்தது. ஒளிந்து கொண்டிருந்த முஸ்லிம்களையும் காட்டி கொடுத்ததது..

குஜராத்தில் நடந்தது மதக்கலவரமல்ல..அது மதக்கலவரமாக இருந்திருந்தால் இருபக்கமும் சேதம் ஏற்ப்பட்டிருக்கும்..அல்லது ஒருபக்கம் அதிக சேதமும், இன்னொருபக்கம் குறைந்த சேதமும் ஏற்பட்டிருக்கும்.  அவ்வாறு இல்லாமல் முஸ்லிம்கள் மட்டுமே கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டார்கள். முஸ்லிமல்லாதவர ஒருவர்கூட கொள்ளப்படவில்லை..மோடியின் ஆசியோ, மாநில அரசின் உதவியோ இல்லாமல் இவ்வாறு நடந்திருக்க முடியுமா?

காவல்துறையின் வயர்லெஸ் அறைகளில் சங் பரிவார தலைவர்கள் அமர்ந்துகொண்டு காவல்துறைக்கு கட்டளைகள் பிரப்பித்தார்களா இல்லையா? அப்படி கட்டளைகள் பிரப்பித்ததால்தானே அந்த தடயங்கள் அனைத்தையும் குஜராத் அரசு அழித்தது. அந்த தடயங்களை முழுவதையும் குஜராத் அரசு  அழித்தது ஒன்று போதாதா மோடிக்கு இதில் இருக்கும் தொடர்பு பற்றி தெரிவிக்க? முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகள் அகோரமாய் நடந்து கொண்டிருக்கும்போது "ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு" என்று மோடி சொன்னாரா இல்லையா? இது படுகொலைக்கும் மோடிக்கும் சம்மந்தம் உண்டு என்று தெரிவிக்கவில்லையா?

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை மோடி திட்டமிட்டு தூண்டி, அப்பாவிகளை அளிக்கிறார், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார் என்பதால்தானே "ராஜ தர்மத்தை பின்பற்றுங்கள்" என்று மோடிக்கு வாஜ்பேய் அறிவுரை சொன்னார். அவர் அதை கேட்காமல் போனதால் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்றார் வாஜ்பேய். வாஜ்பேயின் இந்த அறிவுரையும், கவலையும் மோடிக்கு முஸ்லிம் இனப்படுகொலையின் சம்மந்தம் உள்ளது எனக் காட்டவில்லையா?

முன்னாள் உளவுத்துறை எஸ்.பி சஞ்சீவ் பட்டுக்கும், மோடிக்கும் வயல் வரப்பு சொத்து சண்டையா? இல்லையே! முஸ்லிம் இனப்படுகொலையின்போது காவல்துறையினரை கை கட்டி வேடிக்கை பார்க்கசொன்னார் மோடி. கொலைகாரர்களுக்கு பாதுகாப்பா  இருக்க பணித்தார். அது இந்த மனசாட்சியுள்ள உயர் காவல்துறை அதிகாரிக்கு பிடிக்கவில்லை..அதனால்தானே மோடி, சஞ்சீவ் பட் சண்டை ஏற்பட்டது..இதற்க்கு பிறகும் மோடிக்கும், படுகொலைகளுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லமுடியுமா?

இஹ்சான் ஜாப்ரி உள்ளிட்ட 69 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது போல் ஆனந்த் மாவட்டம், ஓடே கிராமத்திற்கு அருகில் உள்ள பார்வாழி பகோப் என்ற இடத்தில் 23 முஸ்லிம்கள் சங்க்பரிவாரால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொலைகாரர்களை மோடி அரசு காப்பாற்ற முயன்றது. அதனால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகி "மோடியின் போலீசார் கொலைக்க் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து அவர்களை காப்பாற்ற முயல்கின்றனர். அதனால் உச்ச நீதிமன்றம் தனியாக சிறப்பு புலனைவுகுழுவை நியமித்து 23 கொலைகள்  குறித்து விசாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதனை உச்ச நீதிமன்றம் என்றுக்கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழு நியமித்து சம்மந்தப்பட்ட கொலைக்குற்றவாளிகள் 18 ஆயுள் தண்டனையும், மீதி 5  பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையையும் தற்போது நீதிமன்றம் விதித்துள்ளது.

மோடி அரசுதான் முஸ்லிம் இனப்படுகொலையை தூண்டி விட்டது. கொலைகாரர்களையும் காக்க முயன்றது என்பதற்கு இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு போதாதா?

முஸ்லிம்களுக்கும் அமெரிக்காவுக்கும் பிடிக்காது. அப்படிப்பட்ட அமெரிக்காவே குஜராத் முஸ்லிமி இனப்படுகொலையில் மோடிக்கு இருக்கும் சம்பந்தத்தை பார்த்துவிட்டு மோடிக்கு விசா தர மறுத்ததா இல்லையா? அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு அருகில் உள்ள ஹார்லி நகர சபையில் முஸ்லிம் உறுப்பினர்களே கிடையாது. அந்த நகர சபை, மோடிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு காரணம் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடிக்கு உள்ள சம்மந்தத்தினால்தான்?

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடிக்கு இருக்கும் தொடர்பு உலகபிரசித்தம். இதை ராகவன் குழுவினால் உளமூடி போட்டு மறைக்கவே முடியாது. ஒரு செல்போன் துப்பை வைத்துக்கொண்டு காவல்துறை குற்றவாளியை கண்டுபிடித்துவிடும். ஆனால் மோடிக்கு எதிராக அவரது வாக்குமூலம், காவல்துறை உயர் அதிகாரி சஞ்சீவ் பட்டின் சாட்சியம், வாஜ்பேயின் குமுறல், அமெரிக்காவின் எதிர்ப்பு, நீதிமன்றத்தின் தீர்ப்பு, தெகல்கா இணையதளத்தின் வீடியோ ஆதாரம் என அடுக்கடுக்கான ஆதராங்கள் இருந்து மோடியை ராகவன் குழு காப்பாற்றி இருப்பது "தான் ஆடவிட்டாலும், தன தசை ஆடும்" என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது.

மறுபடியும் சொல்கிறோம், குஜராத்தில் நடந்தது மதக்கலவரம் அல்ல. மாறாக முழுக்க முழுக்க் குஜராத் அரசால் நடத்தப்பட்ட முஸ்லிம் இன அழிப்பு. இதற்கும் மோடிக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்வதும் 2000  அப்பாவி முஸ்லிம்கள் தங்களுக்குத்தானே தீவைத்து எரித்ஹ்டுக்கொண்டார்கள் என்று சொல்வதற்கும் இடையில் எந்த வித்த்டியாசமும் இல்லை.

இயற்க்கை நீதி மாய்ந்து, மனு நீதி வெல்லும்போது இந்த வாதம் செல்லுபடியாகும். அதை இந்திய நாடு அனுமதிக்கபோகிறதா? என்பதே எல்லாரின் முன் உள்ள கேள்வியாகும்.

நன்றி : டி.ஜே. - உணர்வு வார இதழ்.

0 comments :

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?