Pages

Sunday, June 17, 2012

கலாம் என்றால் கலகம்




கலாம் என்றால் கலகம் என்று கருணாநிதி சொல்வதில் தப்பே இல்லை என்றே தோன்றுகிறது..
ஏற்கனவே ஜனாதிபதி பதவியை அனுபவித்து, ஒவ்வொரு பள்ளிக்கூடமாக சென்று சிறுவர்களுடன் பொழுதை கழித்த அப்துல் கலாமை - மீண்டும் ஜனாதிபதியாக்க மம்தா முயல்கிறார்..மம்தாவின் எண்ணம் நிறைவேறாது என்று தெரிந்தும், கலாம் மௌனம் காப்பதின் அர்த்தம் என்ன? ...எனக்கு மீண்டும் அந்த பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டால் நிலைமை சீராகிவிடும்...தெரிந்தும் தனக்கு பதவி கிடைக்காதா என்ற பேராசையில் ஜனாதிபதி தேர்தலில் குழப்பம் ஏற்பட்டிருக்கும் இந்த வேளையிலும் தொடர்ந்து மௌனம் சாதிக்கும்  கலாமை கருணாநிதி அப்படி குறிப்பிட்டதில் ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது.

இதற்கும் முன்பு கலாமை  ஜனாதிபதியாக ஆதரவு தெரிவித்த ஜெயலலிதா, இந்த முறை - ஜனாதிபதவிக்கு ஆளாய் பறக்கும் சங்மாவை ஆதரிப்பதும் வேடிக்கை.. தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டை சேர்ந்த கலாமை இந்தமுறை ஜனாதிபதியாக ஆதாரிக்காமல் இருப்பதும், அதேபோன்று, மேற்கு வங்காள முதல்வர் மம்தா, மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக்க எதிர்ப்பு தெரிவிப்பதும் இவர்களின் ஈகோவை நமக்கு அறிய வைக்கிறது..

கருணாநிதியும் ஒன்றும் சளைத்தவரில்லை...எவ்வளவு கேவலப்படுத்தினாலும், ரஜினியை ஒரு அற்புதமாக இன்றுவரை போற்றி வரும் ஒரு பகுத்தரிவற்றவராகவே தோன்றுகிறார்...ஏதோ ரஜினி இருந்தால் தான் மீண்டும் பதவியை அடைந்துவிடலாம் என்று அவர் எண்ணுவது இவர் எப்படி இத்தனை காலம் அரசியலில் குப்பை கொட்டினார் என்று தோன்றுகிறது.

சன் குழுமத்திக்கும், கலைஞர் டிவிக்களுக்கும் ரஜினி படம் போடாவிட்டால் டிவியே நடத்த முடியாது போலிருக்கிறது..செல்லப்பிராணிகள் வாரம், கவர்ச்சி நடிகைகள் வாரம், ஸ்ரீதேவி வாரம், திகில் வாரம், என்று எந்த கருமாந்திர வாரம் என்று படம்போட்டாலும், அதில் கடைசியாக ரஜினி படம் போட்டு ஆகவேண்டும் என்று லூசுத்தனமான விதியே வைத்து இருக்கிறார்கள்..

இரட்டை இலைக்கு ஒட்டு போட்டுவிட்டு, நோய் வாய்ப்பட்டு படுத்திருந்தும் ஜெயலலிதாவுக்கு மறக்காமல் வாழ்த்து சொன்ன ரஜினி நேற்று கருணாநிதியை சந்திக்கும்போது கருணாநிதி முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி...கேவலமாக இருக்கிறது. சினிமாக்காரர்களின் ஆதரவு,,,அது நடிப்பாக இருந்தாலும் கருணாநிதிக்கு தெம்பளிக்கிறது என்றால் இவர் எப்படி மக்கள் நலனில் அக்கறை உடையவராக இருப்பார்?

நேற்று படித்த இன்னொரு செய்தி :

தடகள வீராங்கனை (?) பிங்கி என்பவர் பெண்ணல்ல ஆண் என்றும அவர் தன வாழ்க்கையிலும் விளையாடி விட்டார் என்றும் ஒரு பெண்மணி புகார் கொடுத்து இருக்கிறார் .
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை அவரை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருப்பதை பார்த்தால் சிரிப்பாகத்தான் வருகிறது.
ஒருவர ஆணா அல்லது பெண்ணா என்று அறிவதற்கு எதற்கு  மருத்துவ பரிசோதனை?
அல்லது ஆசிய போட்டிகளின் போது இவருக்கு எந்த பரிசோதனையும் நடத்தாமல் "சும்மா" விளையாட விட்டார்களா?

2 comments :

”தளிர் சுரேஷ்” said...

உன்மையான கருத்துக்கள்! வெல்டன்!

மர்மயோகி said...

நன்றி நண்பரே

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?