Pages

Tuesday, June 29, 2010

எரிபொருள் விலையேற்றமும், எதிர்கட்சிகளின் போலி வேடமும்...!!!

ஒவ்வொரு வருடமும் எந்த நிகழ்வுகள் நடந்தாலும் பெட்ரோல் டீசல் மற்று காஸ் சிலிண்டர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மட்டும் மாறாத ஒன்று..வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறைகள் இந்த விலையேற்றம் இருக்கும்...மற்ற பொருட்களின் விலைகளை வருடத்திற்கு ஒருமுறை ஏற்றும் அரசு, இந்த எரிபொருள்களின் விலையை மட்டும், காய்கறிகளின் விலை போல அடிக்கடி ஏற்றி வருகிறது..

இதனால் பாதிக்கப்படுவது சாதாரண பொதுஜனம்தான்..சொல்லப்போனால் நடுத்தர வர்க்கத்தினர்தான்..பணம் படைத்தவனுக்கு அதைப் பற்றிய கவலை இல்லை....அடிமட்டத்தில் இருப்பவனுக்கும் அதைபற்றிய கவலை இல்லை..


இன்னும் சொல்லப்போனால் பெரிதும் பாதிக்கப்படும் நடுத்தர வர்கத்தினரும் அதைப்பற்றிய கவலை கொண்டதாகத் தெரியவில்லை..ஏனெனில் பெட்ரோல், டீசல் பங்குகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது, காஸ் சிலிண்டருக்கும் ஆர்டர்கள் குறைந்தபாடில்லை, சாலைகளிலும் அதிகரித்து வரும் வாகனங்களைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம்..


இப்படி எவரும் கண்டுகொள்ளாத இந்த விலை ஏற்றைத்தை இங்குள்ள அரசியல்வியாதிகள் மட்டும் அதுவும் எதிர்கட்சிகள் மட்டும் வெறும் போராட்டம் போராட்டம் என்று ஒப்பாரி வைப்பதேன்?

பெட்ரோல் பங்குகள் பெரும்பாலும் இந்த அரசியல் வியாதிகளின் பினாமிகள் தான் வைத்து இருப்பார்கள்..

ஆனாலும் இந்த கபட நாடக வேஷதாரிகள் கூக்குரலிடுவதேன்?

இந்த வேஷதாரிகள் கூக்குரலிட்டு என்றைக்காவது இந்த எரிபொருட்களின் விலைகள் குறைந்துள்ளதா?

ஒவ்வொரு கட்சிக்காரனும் ஆளுக்கு ஐம்பது பேரைக் கூட்டிக்கொண்டு போராட்டம் மறியல் என்றால் அதை யார்தான் மதிப்பார்கள்? சொன்னால் அதுவும் மக்களுக்கு இடைஞ்சலாகத்தான் இருக்கிறதே தவிர உபயோகமாக இல்லை..

என்றைக்காவது இது போன்ற பொதுப் பிரச்சினைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்று கூடி இருக்கின்றனவா? அப்படி ஒன்று கூடினாலாவது ஏதாவது பலன் கிடைக்கலாம் எனலாம்..ஆனால் இவன்களுக்கு? என்ன பலன்?

இப்படி மக்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு துன்பமும் இவன்களுக்குதான் லாபம்..அதைவைத்துதான் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்.

ஏனென்றால் இந்த அரசியல் வியாதிகளுக்கும் ஒருமுறை எம்பி அல்லது எம் எல் ஏ பதவி கிடைத்துவிட்டால் போதும்..அப்புறம் இரயில் பயணம், விமானப் பயணம், பஸ் பயணம், தொலைபேசி போன்றவைகள் இலவசமாகி விடுகின்றன..நம்மிடம் ஓட்டுப் பிச்சை எடுத்து நமது வரிப்பணத்தையே கொள்ளையடிக்கும் இந்த பிணந்தின்னிகள் எப்படி நமது நலத்துக்காக பாடுபடும்..?


இதே காங்கிரஸ்காரன் எதிர்கட்சியாக இருந்தாலும் இந்த நிலைதான் ஏற்பட்டிருக்கும்...இந்த அரசியல்வியாதிகள் நடத்தும் ஆட்சி என்றைக்குமே பணக்காரர்களின் ஆட்சிதான்..

மக்களைக்கெடுக்கும், டிவி, சிகரெட், சாராயம், பான்பராக் போன்ற பொருட்கள் என்றைக்காவது இந்த அளவு விலையேற்றத்தை சந்தித்துண்டா..?

சிகரெட், சாராயம் பான்பராக் போன்ற கேடுகளை ஏன் இன்னும் தடை செய்யாமல் வைத்து இருக்கிறார்கள்?


அத்தியாவசியப் பொருட்களான, காய்கறிகள், அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களின் விலைகள் ஏறிக்கொண்டே இருக்கின்றன.

தேவையற்ற டிவி, போன்ற பொருட்கள் ஒவ்வொரு வருடமும் விலை குறைந்தே வருகிறது..


இலவச அரிசி கொடுக்கிறான். இலவசமான மண்ணெண்ணெய் கொடுக்கிறானா?

இலவச டிவி கொடுத்தான். இலவச மின்சாரம் கொடுத்தானா?



இலவச திருமணம் என்கிறான்..ஒரு குடும்பம் வளமாக வாழ வழி ஏற்படுத்தி கொடுக்கிறானா?

இப்படி தேவையற்ற இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறியாக்குவதோடு மட்டுமில்லாமல் குடித்து சீரழிவதற்காக சாராயக்கடைகளை ஆங்காங்கே திறந்து வைத்து அவன் கொடுத்த இலவசங்களை இப்படி பறித்துக் கொள்கிறான்..

பெப்சி கோக் போன்ற அந்நிய பானங்களை பூச்சி மருந்தாகக் கூட உபயோகிக்கலாம் என்று கூக்குரலிட்ட இந்த அரசியல் திருடர்களும் பத்திரிக்கைகளும், சாராயம், சிகரெட் பான்பராக் போன்ற நேரடி விஷங்களை எதிர்த்து என்றைக்காவது போராட்டங்களை நடத்தியதுண்டா?


பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைத்து இதுபோன்ற விஷங்களுக்கு வரியை அதிகமதிகம் ஏற்றினால் என்ன?

இந்த நாய்களின் ஓலங்கள் கூச்சல்கள் எல்லாம் ஒட்டுபிச்சைக்கான ஒத்திகையே தவிர வேற எந்த நல்லெண்ணங்களும் கிடையாது..


இவைகளை அடையாளம்கண்டு வரும் தேர்தல்களில் புறக்கணித்தால் - இவைகள் திருந்தப்போவது இல்லை- ஆனால் நாம் கொஞ்சமாவது தப்பித்துக் கொள்ளலாம்..

10 comments :

தனி காட்டு ராஜா said...

//மக்களைக்கெடுக்கும், டிவி, சிகரெட், சாராயம், பான்பராக் போன்ற பொருட்கள் என்றைக்காவது இந்த அளவு விலையேற்றத்தை சந்தித்துண்டா.....//

விலையேற்றம் போன்றவற்றை மறக்க,கவனத்தை திசை திருப்ப இது தானே வழி.......

ஜீவன்பென்னி said...

என்னைய பொருத்த வரைக்கும் எல்லாரும் புறக்கணிக்கப்படவேண்டியர்கள்தான். ஏன்னா அவங்க தான் அதிகமா இருக்காங்க. அடுத்ததா மக்கள் யாருக்கு ஓட்டு போடுவாங்க. பெரும்பான்மையானவங்க புறக்கனிச்சாலும் பதிவாகுற 25% ஓட்டுல 15% வாங்கி ஆட்சிக்குவருவாங்க. அதையும் நம்ம அரசியல் சட்டம் அங்கீகரிக்கும்.

அட... கொய்யால said...

எண்ணெய் வளம் இல்லாத அமெரிக்கா, பிரிடிஷ் காரனிடமிருந்து எப்பொழுது பெட்ரேலியப் பொருட்கள் வாங்குவது
நிருத்தப் படுகின்றதோ, மேலும் இந்தியா தற்பொழுது வள்ளரசாக முயற்சிப்பது தேவையில்லை குறைந்த பட்சமாவது எண்ணெய் வியாபார பேரத்தில் இறங்கலாம். அம்பானிப் போன்றவர்கள் இந்திய மக்களை சுரன்டுவதை குறைத்துக் கொண்டு இது போன்ற பண்ணட்டு பெட்ரோலிய வியாபரத்தில் தன் மூக்கை நுழைக்கலாம்.

மேலைநாட்டிலும் இலவச சலுகைகள் வழங்கப் படுகிண்றது ஆனால் டிவி யல்ல மாணவர்களுக்காண கட்டுப் படுத்தப்பட்ட கம்யூட்டர்கள், இலவச பயணக் கட்டனங்கள் போன்றவை

இந்தியா போரட்டத்தால் உருவான நாடு அதைமறுக்க முடியாது, அது அப்பொழுது தேவையானதும் கூட‌
ஆனால் இந்த மோடிப் போன்ற "தீவிரவாத அரசியல் ஆசாமிகள்" ஒரு பிரிவினரை கொண்று குவித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடி அதுபோன்ற‌ துரோக அரசியல் சூத்திரத்தில் வெற்றியும் கண்டுள்ளனர்.

இது போண்ற அசிங்கமான அரசியல் வாதிகளிடமிருந்து மீண்டும் எப்பொழுது எம் மக்களுக்கு விடுதலை கிடைக்குமோ தெரியவில்லை

நிஸார் அஹமது said...
This comment has been removed by a blog administrator.
மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள்
திரு தனிக்காட்டு ராஜா
திரு ஜீவன் பென்னி
திரு அட கொய்யால
ஆகியோருக்கு நன்றி..

மர்மயோகி said...

நண்பர் ஜெய்லானி அவர்களுக்கு மிகவும் நன்றி..
விருது வாங்கும் அளவுக்கு எனது பதிவுகள் தரமானதாகவோ எனக்கு திருப்தியாகவோ இல்லை..
இருந்தாலும் நன்றி...

seeprabagaran said...

சிறந்த பதிவு. நமது கடமை பதிவு எழுதுவதோடு முடிந்துவிடக்கூடாது என்பதே எனது பணிவான வேண்டுகோள்! அதற்காக ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் பின்னால் செல்லவேண்டும் என்றோ தெருவில் இறங்கி போராடவேண்டும் என்றோ சொல்லவில்லை. இந்த சிக்கல்களைப்பற்றி முதலில் நமது குடும்பத்திலும், நண்பர்களிடத்திலும், உற்றார் உறவினர்களிடத்திலும் கலந்துரையாடவேண்டும். இந்த கலந்துரையாடல் இயல்பாகவே ஆட்சியாளர்களுக்கு எதிரான அலையை உருவாக்கும்

மர்மயோகி said...

நன்றி திரு sreeprabagaran,

எழுதுவதோடு நமது பணி முடிந்துவிடும் என நான் எண்ணவில்லை..அதேசமயம் தனிமரம் தோப்பாகாது..
நல்லது...
என்றைக்கு ஒரு தலைவன் சுயநல நோக்கில்லாமல், வெறும் ஐந்து வருடத்திற்கு மட்டுமே தம் ஆட்சியில் இருக்கவேண்டும் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கில் பதவிக்கு வருகிறானோ..அன்று எல்லாம் சரியாகிவிடும்..ஆனால் அப்படி ஒரு மனிதன் இருக்கிறானா..அல்லது வருவானா ?...

Jayadev Das said...

எதிர்க் கட்சியை விடுங்க, ஆளும் கட்சில் உள்ள கூட்டணிக் கட்சிகளே, விலையுயர்வை எதிர்க்கிறோம், கண்டனம் தெரிவுக்கிறோம், போராட்டம் பண்ணலாம்னு இருக்கிரோம்னு சொல்றாங்களே, இது வாடி கட்டுன அயோக்கியத் தனம் இல்லையா? எதிர்ப்பு என்றால் அந்த கூட்டணி ஆட்ச்சியில் ஏன் பங்கு வகிக்க வேண்டும், வெளியில் வர வேண்டியதுதானே?

மர்மயோகி said...

நன்றி திரு jayadeva அவர்களே..
அரசியல்வாதிகள் அனைவருமே அரசியல்வியாதிகள் தான்..!!!

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?