Pages

Saturday, July 3, 2010

காமெடி பீசு..

நகைச்சுவைப் பதிவுகள் நிறைய நண்பர்கள் எழுதுகிறார்கள்..அவைகளுக்கு நல்ல வரவேற்ப்பும் உள்ளது.


விமர்சனப் பதிவுகளுக்கு எதிர்ப்பாளர்களே அதிகமதிகமாக உள்ளார்கள்...ஏனெனில் அவர்களது கருத்துக்களோடு நமது கருத்துக்கள் ஒத்துப் போவது இல்லை.

நடிகர்களையோ, இயக்குனர்களையோ விமர்சித்தால் ஏதோ இவர்களது தந்தைகளை விமர்சித்தது மாதிரி கோபம் வருகிறது..

ஜீவபாலன், sathish என்ற பெயருடைய இரண்டு வெத்து வேட்டுக்கள் ஏதேதோ மிரட்டல்கள் விடுத்தன (பார்க்க : ராவணன் விமர்சனம் http://marmayogie.blogspot.com/2010/06/blog-post_18.html#comments ) அனால் எனது பதிலுக்கு பிறகு அவர்களைக் காணவில்லை பேப்பரில் விளம்பரம் கொடுக்கலாமோ என்று கூட தோன்றுகிறது !...பாவம்..பயப்பட வேண்டாம்..உங்கள் பதிவுகளை பதியுங்கள் நண்பர்களே..சரி..நாமும்தான் நகைச்சுவை பதிவு ஒன்று போடுவேமே என்று பார்த்தல் எழவு வரவே இல்லை..

சரி ட்ரை பன்னுவோமே..


அதிகமதிகம் பேர் நகைச்சுவைப் பதிவுகள் போட்டாலும் அதில் சிலருடைய பதிவுகள் சகிக்கவில்லை..இவர்களுக்கு நாம் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்றும் நினைத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தால்தான் தெரிகிறது நகைச்சுவைப் பதிவு ஒன்றும் அவ்வளவு சுலபமல்ல என்று! ..விமர்சனம் ஈசியாக வந்து விடுகிறது..ஆனால் காமெடி?முதலில் காமெடி பதிவுக்கு சில வார்த்தைப் பிரயோகங்கள் முக்கியம்..

கொய்யால.. ங்கொக்காமக்கா, பயபுள்ள..அப்புறம் ஆணி புடுங்குறது, வடை போச்சே..இப்படி.. நிறையபேர் இந்த வார்த்தைப் பிரயோககங்களை வைத்தே ஒப்பேத்தி விடுகிறார்கள்..

எனது பத்தாம் வகுப்பில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது..(ங்கொக்காமக்கா) அரையாண்டுத்தேர்வு என்று நினைக்கிறேன்.


விடைத்தாள்களை விநியோகித்துக் கொண்டிருந்த அறிவியல் ஆசிரியர் (கொய்யால)ஒரு மாணவனை மட்டும் நிற்க வைத்துவிட்டு விடைத்தாளை மற்றவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்...


இறுதியாக அவனது விடைத்தாளை படித்தார்..


அதில் (பயபுள்ள) அவன் கடைசி பக்கத்தில் " பரீட்ச்சைக்கான நேரம் முடிந்து விட்டதற்கான மணி அடித்து விட்டது..ஆசிரயர் போதும் என்று சொல்லிவிட்டார் எனவே நான் மேலும் விடை எழுதவில்லை" என்று எழுதி இருந்தான்..

 " இப்படி நீ (ஆணி புடுங்குறது) எழுதின நாங்க மார்க் போட்டுவிடுவோமா? இதுக்கு நீ ரெண்டு மூணு கேள்விக்கு பதில் எழுதி இருக்கலாமே" என்று ஆசிரியர் கேட்டபோது அந்த மாணவனின் முகம் போன போக்கை பார்க்கணுமே..பாவம்....

அடடா வடை போச்சே..!!

நன்றாக இருக்கிறதா?

பின் குறிப்பு : இப்போது அந்த மாணவன் ஒரு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறான்..15 comments :

ஷர்புதீன் said...

:)

வெங்கட் said...

:-)

மங்குனி அமைச்சர் said...

அப்படி வாங்க , நல்லாதான இருக்கு , தொடருங்கள்

ராம்ஜி_யாஹூ said...

WHAT HAPPENED

மங்குனி அமைச்சர் said...

சிலருடைய பதிவுகள் சகிக்கவில்லை.///


நான் இல்லை , நான் இல்லை

rk guru said...

அருமை...

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள்
திரு மங்குனி அமைச்சர்
திரு ராம்ஜி யாஹூ
திரு rk guru
ஆகியோருக்கு நன்றி.

அப்புறம்
திரு ஷர்புதீன் அண்ட் வெங்கட்.. ஆகியோருக்கும் நன்றி..
பட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super

பாலமுருகன் said...

நல்ல முயற்சி. தொடருங்கள்.

ஜீவன்பென்னி said...

அட மர்மயோகியா இது. என்னால நம்பவே முடியலா. நண்பரே நல்லாயிருக்கு.

ஷர்புதீன் said...

உசுப்பேத்திவிடும் கனவான்களை நம்பாதீங்கோ ... ஹி ஹி ஹி எப்பவும் போல் ப்ளட் பிரசர் ஏற்றும் கட்டுரையை பதிவேற்றுங்கள் ..

இப்படிக்கு
தலைவர்
சோ மற்றும் நாரதர் கழகம்

மர்மயோகி said...

நன்றி திரு ரமேஷ் - ரொம்ப நல்லவன் (சத்தியமா),
நன்றி திரு திரு பாலமுருகன்
நன்றி திரு ஜீவன் பென்னி
நன்றி திரு ஷர்புதீன்

Barari said...

athaan comedyil kalakkukireerkale thodarungal vazthukal.elloraiyum pol neengalum goyyale,payapulle pondra varthai pirayohagal thevai illai marmayogi ezuthukal thanithuvamakave irukka vendum.

மர்மயோகி said...

நன்றி திரு barari
அந்த வார்த்தைகளை பிராக்கெட்டுக்குள்தான் போட்டு இருக்கிறேன் ..இனி முயற்ச்சிக்கிறேன்
நீங்கள் கீழ்க்கண்ட முகவரியில் தமிழில் டைப் செய்துகொள்ளலாம்
http://www.google.com/transliterate/

தனி காட்டு ராஜா said...

அட ..கொய்யால ......நீங்களும் காமடி பண்ணினா ...அப்புறம் யார் விமர்சனம் பண்ணுவா ...அட ...ங்கொக்காமக்கா...
காமடி ஆணி புடுங்க தான் நெறைய பயபுள்ளக இருக்காங்களே....
விமர்சன வடை ஆறி போச்சா ????

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?