Pages

Thursday, July 8, 2010

ஒரு நாள் மட்டும் கேர்ள் பிரண்ட் ஆக வர்றியா?

இது சமீபத்தில் ஒரு டி வி நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமியர் ஆடிப்பாடும் நிகழ்ச்சியில் நான் கேட்ட பாடல் வரிகள்..

இது போன்ற கேவலங்களை வைத்துத்தான் தனியார் டி விக்கள் வயிறு வளர்த்து வருகிறார்கள்..

பள்ளிக்கு போகும் சிறுவர்களையும் கெடுக்கும் இது போன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு ஆபாச நடிகைகள்தான் நடுவர்களாகவும் இருக்கிறார்கள்..

"ஒரு நாள் மட்டும் கேர்ள் பிரண்ட் ஆக வர்றியா? " இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்? ஒருநாள் என்கூட படுக்க வர்றியா என்றுதானே அர்த்தம்? .

அதை அந்த கேவலமான விபச்சாரிகள் செய்து விட்டிட்டு போகட்டும்..எதற்கு இளம் சிறுவர்கள் மேல் திணிக்கிறார்கள்...? இதற்க்கு அந்த குழந்தைகளின் பெற்றோரும் உடந்தையாக இருப்பதுதான் கொடுமையின் உச்சக் கட்டம்..

எந்த டி வியை திறந்தாலும் வட்டமான ஒரு மேஜை..சுற்றிலும் கலர்கலராக விளக்குகள்..இருப்பக்கமும் புத்த்தாடை அணிந்த சிறுவர் சிறுமியர்..

நடுவர்களாக விபச்சாரிகள்...அவர்களுக்கு " ஜட்ஜ்" ஆம், இந்த கேவலமானவர்களால் நீதிபதிகளின் மரியாதையே போய் விடும் போல இருக்கிறது..

சில சமயம் பயமாகக் கூட இருக்கிறது.. இப்படி எல்லாரும் சிறு வயதிலேயே பாடவும் கூத்தடிக்கவும் வந்துவிட்டால் நாளை இந்தியாவில் தொழில் செய்வது யார்? யார் வேலைக்கு போவார்கள்? இன்னொனுன்றும் நினைக்கத் தோன்றுகிறது..இப்படி எல்லாரும் பாட வந்துவிட்டால்..அப்புறம் ஒரு பாடலுக்கு ஆளுக்கு ஒரு வரியை பாடிவிட்டு செல்ல வேண்டியதுதான்..ஒரு பாடலை யார் பாடினார்கள் எனபது போக..எத்தனை பேர் பாடினார்கள் என்ற நிலைமைதான்..

நமது தலைமுறைக்கு முந்திய பாடல்களை மெனக்கட்டு ஆறு அல்லது ஏழு வயது சிறுவர்கள் பாடும்போது, இதனை மனப்பாடம் செய்ய இவர்கள் எவ்வளவு நேரம் எடுத்திருப்பார்கள்? இந்த முயற்ச்சியை தனது படிப்பிற்காக அவர்கள் செய்வார்களா?

கஷ்டப்பட்டு படிப்பவனை கேலி செய்தும், இது மாதிரி ஆபாசப் பாடலைப் பாடுபவனை உழைப்பால் உயர்ந்தவன் என்றும் (பாய்ஸ் போன்ற படங்கள்..) படமெடுக்கும் கேவலமான சினிமாக்கூத்தாடிகள் இருக்கும் வரை இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்..விவேக் போன்ற சினிமாக் கூத்தாடிகளை மட்டுமே சந்திக்க அடிக்கடி நேரம் ஒதுக்கும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்ன கனவு காணுங்கள் என்ற சொல் வெறும் கனவாகவே இருந்து விடும்..

12 comments :

மங்குனி அமைச்சர் said...

அதேதான் , இதற்க்கு அந்த குழந்தைகளின் பெற்றோரும் உடந்தை

Robin said...

உங்கள் ஆதங்கம் நியாயமானது.

தனி காட்டு ராஜா said...

எல்லா பாடலிலுமே இது போன்ற வரிகள் உள்ளன .....

Robin said...

பிஞ்சிலேயே அழுகவைக்கும் முயற்சி!

மர்மயோகி said...

//மங்குனி அமைச்சர் said...
அதேதான் , இதற்க்கு அந்த குழந்தைகளின் பெற்றோரும் உடந்தை//

ஆம் மங்குனி..இவர்கள் என்று திருந்தப் போகிறார்கள்?

மர்மயோகி said...

//தனி காட்டு ராஜா said...
எல்லா பாடலிலுமே இது போன்ற வரிகள் உள்ளன ..... //

எல்லாப்பாடல்களுமே அப்படித்தான் உள்ளது...எல்லாவற்றையும் விமர்சிக்கத்தான் ஆசை..பண்ணிடுவோம்..

மர்மயோகி said...

//Robin said...
உங்கள் ஆதங்கம் நியாயமானது.//
//Robin said...
பிஞ்சிலேயே அழுகவைக்கும் முயற்சி!//
ஒரு நாட்டின் முதல்வரே நடத்தும் டி விக்களிலும் இந்த கேவலத்தை தொடர்ந்தால்...எப்படி உருப்படப்போகிறார்களோ..?

thiru said...

இந்தப்பாடல்கள் கேவலமானவை என்பதில் சந்தேகமெ இல்லை. ஆனால் என்னுடய கேள்வி 'விபச்சாரிகள்" என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது?

என் அம்மா ஒரு கதை சொல்வார்கள்;ஒரு ஊரில் ஒரு சாமியார் இருந்தாராம் ,அவர் வீட்டு எதிர்த்த வீட்டில் ஒரு பெண் தம் உடலை மூலதனமாக்கி வாழ்ந்துவந்தாராம். இந்த சாமியார் எப்போதும் அந்த பெண் வீட்டிர்கு எத்தனை பேர் வருகிறார்கள் என்ரு கணக்கு போடுவாராம். கடைசியல் இருவரும் இறந்தபோத்து, இறைவன் அந்த பெண்ணை தனிடமும் ,சாமியாரை நரகத்திர்கும் போகும்படி செய்தாராம். சாமியார் என இப்படி என்று புலம்பிய போது இறைவன் சொன்னாராம்'நீ கண்ணை மூடிக்கொண்டு என்னை கும்பிடாமால் எதிர்த்த வீட்டு பெண் எத்த்தனை ஆடவனுடன் படுத்தாள் என்று கணக்கு போட்டாய், ஆனால் அவளோ இந்த வேலை செய்ய வேண்டிவந்துவிட்டதே என்று என்னையே நிநைத்தாள் ஆகாஇயால் அவள் சொர்க்கத்துக்கு போகிறாள் என்றாம்.

மர்மயோகி said...

நன்றி திரு thiru அவர்களே
இந்த குட்டிக்கதை கூட யாரோ ஒரு சினிமாக்கூத்தாடிதான் சொல்லி இருப்பான் என்று நினைக்கிறேன்..
அந்த விபச்சாரி கூட இரவிலோ ஒரு தனி இடத்திலோதான் அந்தரங்க உறவுக்கு சம்மதிப்பாள்..
ஆனால் இந்த நடிகைகளை நாடு ரோட்டில் ஆயிரம் பேருக்கு மத்தியில் கண்ட கண்ட ஆண்கள் கட்டிப் பிடிப்பார்கள்..அந்த அளவுக்கு காசுக்காக மானம் வெக்கம் இழந்து எதற்கும் துணிந்தவர்கள் நடிகைகள்..சொல்லப்போனால் விபச்சாரிகளை விட கேவலமானவர்கள்..எனவே விபச்சாரி என்று சொன்னதற்காக வருந்துகிறேன்..

செந்தழல் ரவி said...

கெமிஸ்ட்ரி சரியில்லை என்று இன்னும் கட்டிப்பிடி என்று குழந்தைகளை சொன்ன நிகழ்வும் நடந்திருக்கிறது. அதுவும் தெரிந்தால் இன்னும் உங்கள் ரத்தம் கொதிக்கும்.

செந்தழல் ரவி said...

என்னுடைய ஓட்டுகளையும் போட்டுட்டேன்.

WiNnY said...

யொவ்.. எந்த ஊருயா உமக்கு... கீழ்ப்பாக்கம் னு உன் எழுத்த படிச்சாலே தெரியுது...

தர்மனுக்கு எல்லாரும் நல்லவர்களா தெரிந்தார்கள்.
ஆனால் உமக்கு ???

நல்லவன் எங்கிருந்தாலும் நல்லவன் தான்...
சிந்தித்து பின்பு பதிவுகளை பதிவு செய்யுங்கள்.

சாருவை போல பதிவைஎழுதி வாங்கிக்கட்டிக் கொண்டு பெரிய ஆளாகலாம் என்று கணக்கு போடாதீர்கள். _ உண்மையான வாசகன்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?