Pages

Tuesday, July 20, 2010

மதராச பட்டினம் - விமர்சனம்.

பெயரை பழசாக வைத்து, பின்னன்னியில் கருப்பு வெள்ளையில் கிராபிக் செய்தால் பழமையாகத் தெரிந்துவிடும் என்று நினைத்து இருக்கிறார்கள்..

அப்படி ஒன்றும் பாதித்ததாகத் தெரியவில்லை..

கதை என்று பார்த்தால்...

இந்தியா சுதந்திரத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கையில்..தம்மையும் காதலையும் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு ஜோடி அலைவதும், அதற்காக சில இளைஞர்கள் உயிரைக் கொடுப்பதும்தான்...இடையில் ஒன்றிரண்டு தேசபக்தி பிட்டுக்கள்...


ஆர்யா சில இளைஞர்களுடன் மல்யுத்தம் நடத்துவதைப் பார்த்தால் ஏதோ சுதந்திரப் போராட்டம் நடக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாந்துதான் போக வேண்டும்...சும்மா விளயாடிக் கொண்டிருக்கிறார்கள்..

சலவைத் தொழிலாளர்களின் இருப்பிடத்தை அபகரிக்க முயலும் அன்னியரைத் தாக்குவதற்காக முகத்தைக் கட்டிக்கொண்டு வரும் கதாநாயகன், வெள்ளைக்காரப் பெண்ணைக் கண்டு காதலில் விழுவது ஏற்கனவே "வீர்" என்றொரு ஹிந்திப் படத்தில் வந்தது..(இந்த மாதிரியான திரைப் படங்களில் இது மாதிரியான காட்சிகளை வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது).

அதேபோல கதாநாயகனைக் கட்டிவைக்கும் அதிகாரி, அவனைக் காப்பாற்றும் கதாநாயகி, வழக்கமான காட்சிகள் . அதுவும், விடுதலையான கதாநாயகனை, "இந்தமுறை நீ தப்பி விட்டாய்" என்று அந்த அதிகாரி கூறுவதும், "அதேதான் நானும் சொல்றேன்" என்று அவன் பதிலளிப்பதும், "நாயகன்" படத்தில் அப்பட்டமான காப்பி.

ஆசிரியராக வரும் ஒருவர் இரவு பகல் பாராமல் மனைவியுடன் கூடிக்கொண்டிருப்பதாகக் காட்டுவது ஆபாசம்.

கதாநாயகனிடம் இருந்து பிரிக்கப்பட்ட கதாநாயகி, வேறொருவனை மணந்து பேரன் பேத்திகளுடன் சந்தோசமாக வாழ்ந்துவிட்டு, இறுதிக்காலத்தில் தன காதலனை நினைவுகூறுவது நல்ல நகைச்சுவை..

அதே போல அவள் நினைவாகவே கதாநாயகன் வாழ்ந்து கோடீஸ்வரனாக ஆகி, திருமணமே செய்யாமல் மரணிப்பதும் காமெடிதான்..

இந்தப் படத்திலும் தாலி செண்டிமெண்டைக் காட்டி ஏமாற்றப் பார்த்திருக்கிறார்கள்..எடுபடவில்லை..

நல்லவிசயம் என்று பார்த்தால்.......

ஒன்றுமே இல்லை..(எந்தப் படத்தில்தான் இருக்கிறது?)


ஹ்ம்ம்..இன்னும் எத்தனைப் படம்தான் இதுபோல் வரப்போகிறதோ...

5 comments :

நான் மட்டும் said...

niga oru nall padam yaduthu relese pannukalan...
vai erukutha nu ellam pasakudathu Mr.Marmayoki...

மர்மயோகி said...

நன்றி திரு நான் மட்டும்
ஒரு ஹோட்டலில் போய் காசு கொடுத்து சாப்பிடுகிறோம்..உணவு நன்றாக இல்லை என்றால் நீங்கள் போய் சமைக்க ஆரம்பித்துவிடுவீர்களா?

விஸ்வாமித்திரன் said...

Good and honest review

Adirai khalid said...

நல்ல அலசல் .,

மக்களை முட்டால் ஆக்க பல கூட்டம்
அதில்

சினிமா கூத்தாடிகளுக்கு அமோக
வரவேற்ப்பும் கொண்டாட்டமும்.
,
நம் தமிழ் நாடு பல ஆயிரம் ஆண்டுகளாக
கவிஞ்ஞனையும், புராணக் கதைகளையும்
அதில் புனையப்படும் கட்டுக் கதைகளையும்
மக்களை நம்ப வைத்து ஆளுமை செலுத்துவது
நம் கண்முன்னே கருணாநிதி எம்ஜிஆர், செயலலிதா
போன்றோர்கள ஆட்சிகளே சாட்சி

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட
திரு "நான் மட்டும்"
திரு " விஸ்வாமித்திரன்"
திரு "உன்னைப்போல் ஒருவன்"
ஆகியோருக்கு நன்றி..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?