Pages

Wednesday, July 27, 2011

ஆபாச வியாபாரிகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு!!!


கடந்த தி மு க ஆட்சியில் இயற்றப்பட்ட முட்டாள்தனமான சட்டங்களில் ஒன்றுதான் "தமிழில்" பெயர்வைக்கும் படங்களுக்கும் வரி விலக்கு  எனபது...

இந்த சட்டத்தை பயன்படுத்தி ஆபாச வியாபாரிகள் செய்த கூத்து இருக்கிறதே...அப்பப்ப்பா. 

படங்களுக்கு சிறிதும் சம்மந்தமில்லாத தலைப்புக்களை தமிழில் வைத்துவிட்டு, படம் முழுவதும்  ஆபாசமும்  வன்முறையும்  வெறும் கேலிக்கூத்துமாக நிரப்பி வைத்து வரிவிலக்கு பெற்ற  படங்கள்தான் எத்தனை எத்தனை. 

தமிழ்கலாச்சாரம் என்ற பெயரில் வெளிநாடுகளில் கூத்தடித்து எடுக்கப்படும் படங்கள், ஆபாச படங்கள், அருவருப்பான பண்டங்கள் என்று வரிவிலக்கு பெற்றன.

சினிமாக்கூத்தாடிகள் ஏதோ அன்றாடம் கூழுக்கும் கஞ்சிக்கும் பிச்சை எடுப்பதுபோல வரிவிலக்கு பெற்று மக்கள் பணத்தை இந்த வகையிலும் கொள்ளையடித்தன..

சினிமாக்காரர்களுக்காகவே தனது ஆட்சிக்காலத்தின் பெரும்பகுதியை கழித்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் ஜால்ரா சத்தமே தனது ஆட்சியை காப்பாற்றும் என்று கிறுக்குத்தனமாக இந்த கூத்தாடிகளில் பாராட்டுவிழா ஜால்ரா விழா என மூழ்கிக்கிடந்தார்.

ரஜினிகாந்த்  என்கிற மிகப்பெரிய கூத்தாடி நடித்தார் என்ற காரணத்திற்காக, "சிவாஜி" என்ற பெயர்கூட தமிழ் பெயராக தெரிந்தது இந்த தமிழ்பெரியாருக்கு . 

இப்படி மக்களை சாராயாத்திலும், சினிமாக்களில் மூழ்கிவிட, கடந்த ஆட்சிக்காலத்தில் கூத்தாடிகள் கருணாநிதிக்கு ஜால்ரா அடித்து மக்களை ஏமாற்றி கொள்ளையடித்து வந்தனர்.

அதற்கெல்லாம் இந்த ஆட்சியில் ஜெயலலிதா ஆப்பு வைத்துவிட்டார்..  

சினிமாவில் வன்முறை ஆபாசம் அதிகம் இருந்தால் வரிவிலக்கு கிடையாது என்று தமிழக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது...

அது போக தமிழில் பெயர் இருந்தாலும் "யு" சர்டிபிகேட் பெற்றிருந்தால்தான் வரிவிலக்கும் என்று அறிவித்துள்ளது..?

இன்றைய ஆபாசக்கூத்தாடிகளால் ஆபாசம் அருவருப்பான காட்சிகள், வன்முறை என்று இல்லாமல் படம் எடுக்க முடியுமா?

அல்லது
இவர்களுக்கு ஏன் வரிவிலக்கு கொடுக்கவேண்டும்?

வரிவிலக்கு கொடுக்கும் அளவுக்கு எவனாவது தரமான படம் எடுக்கிறானா?

சினிமா என்றாலே ஆபாசமான வியாபாரம்தான்.
இவர்களுக்கு எந்த  காரணம் கொண்டும் வரிவிலக்கு மட்டுமல்ல...எந்த விதமான சலுகையும்  கொடுக்ககூடாது என்பதே நல்ல முடிவாக  இருக்கும்.

அவன் வியாபாரம் செய்கிறான்..மக்களை வழி கெடுக்கிறான்  கோடி கோடியாக சம்பாதிக்கிறான்..

அப்புறம் ஏன் வரிவிலக்கு, இதர சலுகைகள் மற்றும் விருதுகள்?

8 comments :

"ராஜா" said...

சரியான கருத்து நண்பரே ... நல்ல படம் எவன் எடுக்குறான் வரி விலக்கு தர ....

சக்தி கல்வி மையம் said...

சரியான சவுக்கடி கருத்து..

ஜீவன்பென்னி said...

இந்த கவர்மெந்த் செஞ்ச நல்ல விசயத்துல இதுவும் ஒன்னு..

நம்பி said...

//கடந்த தி மு க ஆட்சியில் இயற்றப்பட்ட முட்டாள்தனமான சட்டங்களில் ஒன்றுதான் "தமிழில்" பெயர்வைக்கும் படங்களுக்கும் வரி விலக்கு எனபது...//

முட்டாள் தனமான சட்டம் இல்லை முக்கியமான சட்டம் தான்...அதற்கு முன் வந்த படங்களின் பெய்ர்களை பார்த்தால் முட்டாள் தனமா? இல்லையா என்பது தெரியும். ஜீன்ஸ், போன்ஸ், டபுள்ஸ், டிரிபுள்ஸ்....லவ் டுடே...பாய்ஸ் என்று தமிழ் படங்களுக்கு வரிசையாக ஆங்கிலத்தலைப்புகளை வைத்தனர். இதை வெற்றிக்கான சென்டிமென்டாகவே திரைத்துறையினர் உருவாக்கி வைத்திருந்தனர். அதை முற்றிலும் நீக்கும் பொருட்டு இந்த வரிச்சலுகை கொடுக்கப்பட்டது. அதன் பிறகு பெரும்பாலான படங்களுக்கு தூயத் தமிழில் பெயர் வைக்காவிட்டாலும் வழக்குத் தமிழில், வட்டாரத் தமிழில் கணிசமான அளவில் திரைப்படங்களுக்கு பெயர் வைத்தனர்.

இதில் சில பேர் வரைமுறையில்லாமல் கொச்சைத் தமிழில், இரட்டை அர்த்தத்துடன், இளசுகள் பேசக் கூடிய அளவில் வசைச்சொற்களையும் தமிழ் பெயர்களாக வைத்தனர். அதற்கு அரசு சார்பிலும் கண்டனம் வைக்கப்பட்டது. இனி இம்மாதிரி படங்களுக்கு வரிச்சலுகை தருவதிலிருந்து விலக்கி வைக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுத்ததால் சற்று குறைந்தது.

இந்த முன்னேற்றங்களை திரைத்துறையில் இருக்கும் மூத்த இயக்குநரான பாலச்சந்தரே பாராட்டியுள்ளார்.

இது முதற் கட்டம். அடுத்த கட்டமாக இப்ப்பொழுது முழுக்க முழுக்க தமிழ் வசனங்கள், வன்முறையற்றப் படங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை என்ற அறிவிப்புகள் வீம்புக்காக உருவாக்கப்பட்டதோ என்னவோ? ஆனால் அதில் உள்ள சில விஷயங்கள் வரவேற்புக்குரிவை.

ஏனென்ன்றால் சில விஷயங்கள் (வன்முறைக்காட்சிகளற்ற படம்)படத்திற்கு இரண்டாவது தணிக்கை (சென்சார்) என்ற தோற்றத்தை உருவாக்கக் கூடியவை.

குறிப்பாக வன்முறைக் காட்சிகளை, ஆபாசக் காட்சிகளை கட்டுப்படுத்துவது போன்ற விஷயங்கள் மத்திய அரசு தணிக்கைத் துறையினரிடமே இருக்கிறதே!

முழுக்க முழுக்கத் தமிழ் வசனங்கள், சரியானத் தமிழ் பெயர்கள், யூ சான்றிதழ்......... போன்ற கட்டுப்பாடுகள் வரவேற்க கூடியவை.

(யூ சான்றிதழ் என்று வந்து விட்டாலே வன்முறைக்காட்சிகள் இடம் பெற்றிருக்க கூடாது. ஆபாசக் காட்சிகளும் இடம் பெற்றிருக்க கூடாது....மீறி வந்தால் மத்திய தணிக்கைத் துறையிடமே பரிந்துரைக்கலாம்.)

எடுத்த எடுப்பிலேயே எல்லாம் வந்து விடாது. முதலில் (காமராஜர்) மதிய உணவு...அப்புறம் (எம்ஜிஆர்)சத்துணவு...அப்புறம் முட்டையுடன் (கலைஞர்) சத்துணவு...இலவசப் பாடப்புத்தகம், சீறுடை...அப்புறம் பொது பாடத்திட்டம்...அப்புறம் சம அந்தஸ்துடன், வசதியுடன் கூடிய பள்ளிகளால் கல்வி...அடுத்து அனைவருக்கும் ஒரே மாதிரியான இலவசக் கல்வி.

முந்தைய சட்டம் வந்ததினால் தான் இந்த இன்னும் சீர்மைப்படுத்தப்பட்ட சட்டம் வந்தது. இதற்கடுத்தும் சட்டம் வரும்.

மர்மயோகி said...

நன்றி திரு ராஜா

நன்றி திரு வேடந்தாங்கல் கருன்

நன்றி திரு ஜீவன் பென்னி

நன்றி திரு நம்பி

Anonymous said...

லாம் நம்ம காசு தான்...நல்ல பதிவு நண்பரே...

மர்மயோகி said...

நன்றி திரு Reverie

நாய் நக்ஸ் said...

நான் நம்பி-ஐ வழி மொழிகிறேன்

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?