Pages

Sunday, August 21, 2011

தமிழ் சினிமா, தமிழ் தொடர்


சூது, வாது இல்லாத பாத்திரங்களே இல்லை. பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம்.
உன் புருஷன் உன்னை ஏமாற்றி மற்றவனுடன் வாழ்ந்தால், விடாதே... நீயும், உன் புருஷனை ஏமாற்றி, மற்றவளின் புருஷனுடன் வாழ்ந்து காட்டி, உன் புருஷனுக்கு புத்தி புகட்டு.
ஓரகத்தியுடன் சண்டையா...உடனே உன் தங்கையை, உன் மச்சினனை மயக்கச் செய்து, அவனை வயப்படுத்தி, ஓரகத்தியை பழிவாங்கு. அவன் சாம்ராஜ்யம் அழியணும்; நான் முன்னுக்கு வரவேண்டும். சாகும் தருவாயில், மகளிடம் அப்பன் கேட்கும் உதவி...
என் குடும்பத்தை நாசமாக்கிட்டான் அவன். நயவஞ்சகத்தால், கூட இருந்து குழி பறித்து, அவன் குடும்பத்தில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையிலும்; பெற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையிலும்; உடன்பிறப்புகளுக்கு இடையிலும் பிரிவு ஏற்படுத்தி, ஒருவருக்கு ஒருவர் பகைவராக்கி, அந்த குடும்பத்தை நாசம் செய்ய வேண்டும். இதுவே என் கடைசி ஆசை; அப்போது தான், என் ஆத்மா சாந்தி அடையும்...'
நீ தான் மணமேடையில், சண்டை செய்து, உன்னை மணக்க இருந்தவளின் திருமணத்தை நிறுத்தி விட்டாயே! அதன் பின், மற்றொருவளுக்குத் தாலி கட்டி, மணம் செய்து குடும்பம் நடத்துகிறாயே! நீ கைவிட்ட பெண்ணை நான் மணம் செய்து கொள்ள, நீ யார் என்னை எதிர்ப்பது?' இதற்கு ஒன் லைன் பதில்: "என்ன பெரிய தாலி? இப்ப கூட நான் கட்டிய தாலியை அறுத்து எறிந்து விட்டு, முன்னவளை கட்டிக்குவேன். நீ இதுல குறுக்கிடாதே!'
அரசியல்வாதிகளுக்கும், தாதாக்களுக்கும், போலீசுக்கும் உள்ள ஒட்டுறவு.
இவர்கள் நாட்டின் நடப்பைச் சொல்கின்றனரா? இல்லை, மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கின்றனரா?
அம்மம்மா... எங்கு சென்று ஒளிந்தது நம் நாட்டுக் கலாச்சாரம்? நம் கலாசாரத்தின் உயர்வு என்ன? நமக்கு அவை புகட்டிய அறிவுரைகள் என்ன? நாம் எங்கு செல்கிறோம்?
உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், அகிம்சை, நட்பு, மரியாதை, இன்சொல், வன்சொல் களைதல், ஒழுக்கம், பணிவு, அடக்கம் எல்லாம் எங்கு சென்றன? மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகியதால், "டிவி'யில் தமிழ் சினிமா, தமிழ் தொடர்களைப் பார்ப்பதை நிறுத்தி விட்டோம். என் மன எண்ணங்களை கொட்டித் தீர்த்து விட்டேன்!
என்றும், இன்னும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் எழுதலாம். ஏதாவது ஒரு தனியார், "டிவி'யாவது, நம் பண்பாடுகளை நிலைநிறுத்தும் விதமாக, ஒரே ஒரு தொடராவது சோதனை முயற்சியாக எடுத்து ஒளிபரப்புமா?.

நன்றி : பயனுள்ள தகவல்கள் .

0 comments :

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?