Pages

Tuesday, August 30, 2011

தேசிய அவமானம்.

ஒரு தேசிய தலைவர் கொல்லப்படுகிறார், கொலை செய்த பயங்கரவாதிகள் இந்தியாவில் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்..அவர்களுக்கு இங்குள்ள சில தேச துரோகிகளும் உடந்தை. விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த  அந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது..

சட்டம் தன  கடமையை செய்யவிடாமல் இங்கே சில தேச துரோகிகள் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய சொல்லி இந்தியாவின் இறையாண்மைக்கு வேட்டு வைக்க மக்களை தூண்டி விடுகின்றன..

இலங்கையில் தமிழர்களை கொன்ற ராஜபக்ஷேவை இவர்களால் நெருங்க முடியவில்லை..மக்களோடு மக்களாக  பழகிய - மாலைக்கு தலையை கொடுத்த ஒரு தலைவனை - கோழைத்தனமாக கொன்று விட்டு இந்த பயங்கரவாதிகள் - தம்மை அப்பாவிகள் என்கின்றன..

விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த இந்த பயங்கரவாதிகளுக்கு இங்குள்ள் தேச துரோகிகள் உதவின..அப்பாவிகள் என்று ஓலமிடுகின்றன..செய்யாத குற்றத்திற்கு தண்டனை என்றால் கொஞ்சமாவது பயம் வேண்டாம் இந்த பயங்கரவாதிகளுக்கு? இருபது வருடங்களாக சிறையில் இருந்தவர்கள் போலவா இருக்கிறார்கள்..நன்றாக உண்டு கொழுத்து இருக்கிறார்கள்.

தமிழர்களை கொன்ற ராஜபக்சேவுக்கு தூக்குதண்டனை வேண்டும் என்று ஓலமிடும் இந்தியாவில் இருக்கும் சில கைக்கூலிகள், இந்திய தலைவனை கொன்ற பயங்கரவாதிகளை விடுவிக்க ஏன் இவ்வளவு ஆர்வம்? 
வைக்கோ , சீமான், நெடுமாறன், சீமான் போன்ற தேச துரோகிகளின் சொந்தங்கள் இந்த பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருந்தால் வலி தெரியும்.

ஆங்கங்கே மக்களை தூண்டி, தீக்குளிக்க வைக்கும் இந்த தேசதுரோகிகளை முதலில் கைது செய்து உள்ளே தள்ளி தண்டிக்க வேண்டும்.

சட்டம் தீர்ப்பளித்ததை, எதிர்க்கும் இந்த கைக்கூலிகளின் குடியுரிமையை ரத்து செய்யவேண்டும்..

கோயமுத்தூரில் குற்றபத்திரிக்கைகூட தாக்கல் செய்யப்படாமல் - ஜாமீனில் வெளிவராமல் இருக்கும் அப்பாவி மக்களைப் பற்றி அக்கறை இல்லாமல், குற்றம் நிரூபிக்கப்பட்ட கொலையாளிகளை காப்பாற்ற துடிக்கும் தேச துரோகிகள்தான் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்..

இந்த கொலையாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் தேசதுரோகிகளை இன்னும் அரசு தண்டிக்காமல் விட்டு வைத்திருப்பது தேசிய அவமானம்.

13 comments :

• » мσнαη « • said...

நல்ல பதிவு!!!...தாங்கள் ஒரே ஒரு விளக்கத்தை கொடுத்து விட்டு மேற்கொண்டு தொடரலாம்...அதற்காக நான் விடுதலைபுலிகளை ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை...எந்த ஒரு கூட்டத்திலும் தலைவனுக்கு அல்லக்கையாக துணை/வளரும் தலைவர்கள் சுற்றி கொண்டிருப்பார்கள் .....ஆனால் ராஜீவ் கொலை நடக்கும்போது மட்டும் தங்கபாலு,ஜெயந்தி நடராஜன் ,மூப்பனார்,சு.சாமி ,சிதம்பரம்,இளங்கோவன் எல்லாம் எங்கே போனார்கள்???இதை பத்தி எந்த நாயாவது கேட்டுதா????சொம்மா சாமியாட மட்டும் அலைவார்கள்!!!!குற்றத்திற்கு முழு ஆதாரம் இருந்தும்,கசாப்,அப்சல் குரு போன்றவர்களின் தூக்கு தண்டனையை இன்னும் நிறைவேற்றாமல்,ராஜீவ் கொலையாளிகளாக சந்தேகப்படும் அனைவரையும் விசாரிக்காமல் ,போதிய ஆதாரம் இல்லாமல்,யூகத்தின் அடிப்படையில் இம்மூவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற துடிப்பதன் காரணம் என்ன!!!

sundarmeenakshi said...

நல்லது எது தேசிய அவமானம் .சட்டம் தீர்ப்பளித்ததை, எதிர்க்கும் இந்த கைக்கூலிகளின் குடியுரிமையை ரத்து செய்யவேண்டும்.. அமாம் உச்ச நிதிமன்றம் தன்னிற் தர சொல்லியும் தராதது தேசிய அவமானம் .உச்ச நிதிமன்றம் வினாகும் தானியங்களை தர சொல்லியும் மன்மோகன் தராதது தேசிய அவமானம் .மனிதர் மனிதர் சட்டம் போட்டு கொள்வது தேசிய அவமானம்.கல்வியை விற்பது தேசிய அவமானம்.மருத்துவ வசதி இல்லாதது தேசிய அவமானம்.குடிக்கிற நிரை விற்பதுதேசிய அவமானம்.

Elayaraja Sambasivam said...

உங்களுக்கு ஒரு சில விஷயம் சொல்றன் , நீங்க நெனைக்கிற மாதிரி இவங்க மூன்று பெரும் முதல் தர குற்ற வாளிங்க கிடையாது, இவங்க 18,19,21 நிலை குற்ற வாளிங்க, இவங்களுக்கு தூக்கு தண்டனை சாதாரணமா கொடுக்க முடியாது.

இன்றைக்கு அவங்ககிட்ட இருக்கற ஆதரத்த வச்சி யாரயும் குற்றம் சாட்டவே முடியாது, எங்களால குற்றவாளிய கண்டுபுடிக்க முடியலன்னு CBI சொல்ல முடியாது, ஏன்ன காங்கிரஸ் ஆட்சி நடக்குது, இல்லனா எப்பவே CBI சொல்லி இருக்கும்.

இந்திரா காந்தி இறந்தப்ப, டெல்லி மற்றும் பல பகுதிகள்ல, காங்கிரஸ் மந்த்ரிங்க எத்தனையோ பேர் சாவுக்கு காரணமா இருந்தாங்க, அவங்க எல்லாம் இது போல குற்ற வாலி லிஸ்ட்ல இருந்தாங்க, அப்படி பார்த்தா, அவங்க எல்லோருக்கும் தூக்கு கொடக்கணும், தமிழனா இளக்காரம், ஏன்ன இவனுங்க ஆட்டு மந்தைங்க, ஒரு பக்கம் விரட்டனா போதும். இவனுங்க கிட்ட ஒற்றுமையே கிடையாது, அதுக்கு நீங்க எல்லாம் சிறந்த உதாரணம்.

இது மட்டும் கேள்வி கிடையாது, ராஜீவ் கொலை நடந்தப்ப, அவருக்கு பாது காப்பு கொடக்கவேண்டிய அதிகாரிங்க யாரும் பாது காப்பு குடுக்கல, அப்புறம் இத கண்டு புடிக்க வந்த யாரும், சரியாய் இவர்தான் குற்ற வாலி அப்படின்னு சொல்ல, ஆனா என்னட்சினா

பாது காப்பு கொடுக்க தவறிய, குற்றத்த நிருபிக்க வேண்டிய யாரும் சரியா செயல் படல, ஆனா அவங்க எல்லோரும் இன்றைக்கி மிக முக்கிய அதிகாரிங்க, MLA மற்றும் MP , யார் குற்றவாளி, ராஜீவ் இறந்ததால யாருக்கு லாபம் அதிகம்,

௧ . தமிழர்கள்.
௨. விடுதலை புலிகள்
௩. இந்த மூன்று குற்றவாளிகள்.
௪. தங்கபாலு,ஜெயந்தி நடராஜன் ,மூப்பனார்,சு.சாமி ,சிதம்பரம்,இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள்.
௫. சோனியா
௬. ராகுல்
...

நீங்க சொல்லுங் யாருக்கு லாபம்.

Anbustalin said...

இந்த பதிவை கூசாமல் பதிந்ததற்கு நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும். முழுக்க முழுக்க அறியாமையில் தவிக்கும் உங்களையும் உள்ளடக்கியது தான் என் தமிழினம் என்பது உண்மையில் தமிழினத்திற்க்கே அவமானம்தான்.

• » мσнαη « • said...

பேரறிவாளன் எதற்கு என்று தெரியாமலேயே பேட்டரி வாங்கி கொடுத்தததுக்கு தூக்கிலிட வேண்டும் என்றால்,லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்ல தெரிந்தே ஆயுத உதவி/பயிற்சி அளித்த சோனியா & அல்லக்கைகளை என்ன செய்யலாம்???அஹிம்சை பூமியில் இருந்து செய்யப்பட்ட இந்த காரியம் உங்களுக்கு தேசிய அவமானமாக தெரியவில்லையா... உங்களின் அறியாமையை நினைத்து ஒரு தமிழனாக வெட்கப்படுகிறேன் !!!!!அது சரி ,மனதளவில் இல்லாமல் , ஒரு ரூபாய்க்கு கொடி வாங்கி சட்டையில் குத்தி கொண்டு தன்னை தேசபக்தியாலன் என்று காட்டும் சுய தம்பட்டக்காரர்கள் நிறைந்த நாடு தானே இது....

சாமக்கோடங்கி said...

அன்பு நண்பர் மர்மயோகி அவர்களே.. உங்களின் பல பதிவுகளை நான் படித்தும் பின்னூட்டம் போட்டும் உள்ளேன். ஆனால் இந்த பதிவில் உங்களிடமிருந்து வேறுபடுகின்றேன். தயைகூர்ந்து ராஜீவ் காந்தியின் முழுச் சரித்திரத்தை தேடிப் படிக்குமாறு வேண்டுகிறேன்.
தூக்குத் தண்டனை ஒன்றும் சாதாரமானதல்ல. முதன்மை எதிரிகள் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகும் பட்சத்தில், அந்த வழக்கின் அனைத்து முக்கு மூலைகளும் சந்தேகத்திற்கு இடமின்றி ஊர்ஜிதப் படுத்தப் பட்ட பின்னரே, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து பேனா முனை உடைக்கப் படும். ஆனால் இந்த வழக்கில் இன்னும் தீர்க்கப் படாத சிக்கல்கள் பல உள்ளன. அதற்குக் காங்கிரஸ் பிரமுகர்கலாலேயே பதில் சொல்ல முடியாது. ஆக காங்கிரசின் அந்தரங்க விளையாட்டுக்கு இம்மூவரும் அவசர அவசரமாக இன்று பலிகடா ஆக்கப் பட்டுள்ளனர் என்பதே என்னுடைய எண்ணம். எதிரிகளை விட துரோகிகளே மிகப் பெரும் தேசிய அவமானம். கொலை நடந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகி இருந்த நமது காங்கிரஸ் கழக கண்மணிகளுக்கு இந்த உண்மை நன்கு தெரியும். மற்றபடி உண்மை ஊருக்கு வெளிச்சமானால் உங்களைப் போன்றே நானும் சந்தோஷப் படுவேன்..

வால்பையன் said...

உங்களுக்கு தமிழ்நாட்டில் இருப்பது கூட அவமானமாக தோன்றலாம், பக்கத்து மாநிலத்தில் அடைக்கலம் புகுதல் நலம்!

Tamilppannai said...

மர்ம யோகி!........... நல்ல பெயர்!........யோகி என்றால் நேர்மையாக இருப்பவன் என்ற ஒரு பொருளும் உண்டு!...ஆனால் நீ அப்படி இல்லையே!....அதனால்தான் மர்ம யோகியா!?.......அய்யோகியா?!.................பேச வந்துட்டான் தேச துரோகத்தைபத்தியும் இந்திய தேச இறையாண்மையை பத்தியும்!..........

hari ram said...

enimal viko photo ipadi podathenga,u dont know about viko

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி..

heartripper said...

இவனுங்க உளர்ரத பாத்தா சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 3 பேரு பேர மட்டும் பாத்துட்டு தண்டனை குடுத்த மாதிரி இருக்கு.

velumani1 said...

இவனுங்களை இன்னும் தூக்கில் போடாததற்கு நிச்சயம் இந்தியா வெக்கப் படனும். எப்போ வி.பு.கள் தம்ப்ழ்னாட்டில் நுழைந்தார்களோ அப்போ நமக்கு பிடித்தது சனி.
கையில் D.L. இல்லாமலோ, வேறு I.D. இல்லாமலோ இரவில் வீடு திரும்ப முடியாமல் போன நமது நிலை அவர்களால் வந்தது.

தமிழகத்திற்கே கேடு விளைவித்த ஈழத்தினர் ( அது தமிழர்களோ, இல்லையோ ) இந்தியாவின் ஒரு பிரதமர் (அவர் காங்கிரஸோ இல்லையோ) சாக காரணமான வர்கள் எப்படி நம்மிடம் நட்பு பாராட்ட முடிகிறது, முடியும்? அவர்கள் நம்மவர்கள் அல்ல! நல்லவர்கள் அல்ல !!

ARM said...

pooda punda

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?