Pages

Tuesday, August 28, 2012

தமிழர் என்றோர் இனமுண்டு...தனியே அவர்கோர் குணமுண்டு - 2இந்தியாவில் அடைக்கலம் பெற்று எவ்வளவு அநியாயமும் செய்யலாம்...குண்டு வைக்கலாம், ஏர்போர்ட்டை தகர்க்கலாம்,,ராஜீவ் காந்தியை கொல்லலாம்....கள்ள நோட்டு அடிக்கலாம், கொள்ளை அடிக்கலாம்..அனால் தமிழர்களாக இருக்கவேண்டும்....அல்ல அல்ல பயங்கரவாத விடுதலைப்புலிகளாக இருக்கவேணும்..வைகோ, சீமான் நெடுமாறன் போன்ற தேச துரோகிகள் இதற்கென்றே போராட்டம் உண்ணாவிரதம் என்ற நாடகத்தை அரங்கேற்றுவார்கள்..
அடைக்கலம் கொடுத்தது என்று போதாதென்று, எங்களுக்கு சொகுசான வாழ்க்கை அமைத்துத்தரவேண்டும் என்று உண்ணாவிரத நாடகம் நடத்துவார்கள்...இந்து போதாதா இந்த கைக்கூலிகளுக்கு..இந்த வைக்கோ ஒரு தனி உண்ணாவிரதம் தொடங்கிவிட்டான்..தமிழ்பற்று வியாபரிகளேல்லாம் போய் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அடேய் தமிழ்நாட்டில் விலைவாசி கட்டுக்கடங்காமல் போகிறது...குடிச்சு குடிச்சு தமிழ்நாட்டு தரைப்படைகள் எல்லாம் அழிந்து கொண்டிருக்கிறது..சாரயாக்கடைகளில் ரேசன் கடைகளைவிட கூட்டம்...சுற்றி சுற்றுப்புற சுகாதாரம் நாசமாய் போய்க்கொண்டிருக்கிறது..கொலை கற்பழிப்பு என்று சட்டவிரோத செயல்களால் தமிழ்நாடு சீரழ்ந்து வருகிறது..சினிமா பைத்தியம் முற்றிபோய் தமிழன் தியேட்டரும், டீவியும், கள்ள வீசிடியும் என்று அலைந்து கொண்டிருக்கிறான்..

பேப்பரை எடுத்தல் கொலை, கொள்ளை, ஈமு கோழி சீட்டிங், சினிமாக்காரியின் கவர்ச்சி படம், சினிமாக்காரனின் விளம்பரம் என்று தமிழ நாட்டுக்காரனை சீரழிக்கும் செய்தியை தவிர வேறு ஏதாவது நல்ல செய்தி உண்டா..? இந்தியாவையே கலக்கும் ஊழல்கள் மயமாகிறது..ஒரு பக்கம் மதவெறி சங்கபரிவாரின் மதவெறியை கிளப்பும் பிரச்சாரங்கள், குண்டுவைப்புகள்...

மின்வெட்டால் பாதி  பொருளாதாரம் நாசமாகிறது..

தமிழ்நாட்டில் கூலி வேலை செய்யும் அனைவரும் வடநாட்டை சேர்ந்தவர்கள்..காரணம் தமிழனுக்கு இலவச தொலைக்காட்சி, இலவச அரிசி, இலவச மின்விசிறி, இலவச கிரைண்டர் என்று தேவையான அனைத்தையும் இலவசாமாக கொடுத்து அவனை தொலைக்காட்சிக்கும், சாராயத்துக்கும் அடிமையாக்கிவிட்டாயிற்று..

எல்லா தமிழனும் சோம்பேறியாகி கிடக்கிறான்...இன்னும் சில கூத்தாடிகள், மானாட மயிலாட, சூப்பர் சிங்கர், யார் பிரபுதேவா என்ற கூத்தடிக்கும் டிவி நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடிக்கொண்டு வாழ்கையை இளம்பிராயத்திலேயே வீனடித்துக்கொண்டிருக்கின்றனர்..பிள்ளைகளை வைத்து சம்பாதிக்கும் நோக்கில் அவர்களின் பெற்றோர்களும் இந்த கேவலமான செயல்களுக்கு உடந்தையாக சேர்ந்து கூத்தடிக்கின்றன..


அரசியலுக்கு வருகிறவன் எல்லாம் சினிமாக்காரனாகவே இருப்பது இந்த நாட்டின் சாபக்கேடு..

வைகோ, சீமான் (இவனும் சினிமாக்கூத்தாடிதான்) நெடுமாறனுக்கு இதெல்லாம் தேவை இல்லை..

இந்தியாவில் பயங்கரவாதம் செய்த விடுதலைப்புலிக்கு ஏதாவதென்றால் கொதித்து எழுந்து விடுவார்கள்...

இந்தியாவில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த மக்கள் ராஜீவ் காந்தி யை கொன்ற பயங்கரவாத் விடுதலைப்புலிகள் ஒழிந்ததில் மகிழ்ச்சியடைந்திருக்கையில், இந்த குடிகார தமிழ்நாட்டை சேர்ந்த தேசத்துரோகிகள் நாலு பேர் சொல்லைக்கேட்டு  , இலங்கைக்கு யாரும் போகக்கூடாது, இலங்கைக்கு விமானம் விடக்கூடாது, இலங்கைக்கு கப்பல் விடக்கூடாது  இலங்கையிலிருந்து யாரும் வந்து விடக்கூடாது..இலங்கை வழியாக பிளைட் போகக்கூடாது....ஏன் இலங்கையே இருக்காகூடாது...என்று இந்த காமெடி பீசுகள் காமெடி பண்ணிக்கொண்டிருக்கின்றன..

காரணம் தமிழ்பற்றாம்...

தமிழன் என்றோ இனமுண்டு..தனியே அவர்கோர் குணமுண்டு...

3 comments :

Bala Mugundan said...

unmai throgi needann

ஸ்ரீராம். said...

//பேப்பரை எடுத்தல் கொலை, கொள்ளை, ஈமு கோழி சீட்டிங், சினிமாக்காரியின் கவர்ச்சி படம், சினிமாக்காரனின் விளம்பரம் என்று தமிழ நாட்டுக்காரனை சீரழிக்கும் செய்தியை தவிர வேறு ஏதாவது நல்ல செய்தி உண்டா..?//

எனக்கும் (எங்களுக்கும்) இந்த வருத்தமும் ஆதங்கமும் இருப்பதால்தான் 'எங்கள் பிளாக்'கில் சனிக்கிழமைதோறும் கண்ணில் படும் பாசிட்டிவ் செய்திகளை மட்டும் எடுத்துப் போடுகிறோம்!

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி...

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?