Pages

Friday, August 31, 2012

நயவஞ்சக ஊடகங்கள்....


குஜராத்தில் நடைபெற்ற - நரேந்திர மோடி என்ற பயங்கரவாதியின் தலைமையிலான சங்பரிவார் இயக்கங்களின்  - கலவரங்கள் பற்றி அனைவரும் அறிந்ததே..

"நரோதா பாட்டியா வன்முறை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் மதக்கலவரங்களின் போது நரேதா பாடிட்யா எனும் இடத்தில் 97 பேர் கொல்லபப்ட்டனர்.

இது தொடர்பிலான வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வந்ததுடன், 32 பேரை குற்றவாளிகள் என அண்மையில் அறிவித்திருந்தது. தற்போது அவர்களுக்கான தண்டனை விபரங்களை அஹமதாபாத் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. அதன் படி, முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த பாஜகவின் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு 2 வழக்குகளில் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிப்பதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி யோத்சனா யஜ்னிக் தீர்ப்பு வழங்கினார்.

மேலும், பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கிற்கு ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், அவர் ஆயுள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும் எனவும் கூறினார். ஒருவர் ஜாமினில் வெளிவந்து தலைமறைவாகிவிட்டார். இதனால் ஏனைய 29 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சி நிலவும் குஜராத்தில் அக்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு இவ்வளவு பெரிய தண்டனை வழங்கப்பட்டிருப்பது அம்மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது."
நன்றி : www.4tamilmedia.com
இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் பயங்கரவாதிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பது இந்தியாவில் இன்னும் கொஞ்சம் நீதி வாழ்ந்துகொண்டிருக்கிறது, நேர்மையான நீதிபதிகளும் இருக்கிறார்கள் என்பதை நிரூபணம் செய்திருக்கிறது..
அதே சமயம், ஒரு நடிகைக்கு சுளுக்கு ஏற்பட்டாலேயே முழுப்பக்கம் செய்தி அளித்து அலறும் ஆபாச பத்திரிக்கைகளான மாலை இதழ்களில் முக்கியமான இந்த செய்தி பற்றி எந்த தகவலையும் காணோம்..
தினசரி பத்திரிக்கைகளின் லட்சணம் நாளைதான் (01/09/2012) தெரியும்...
எங்கு ஒரு குண்டு வெடிப்போ அசம்பாவிதமோ நடந்தால் இவர்களாகவே கற்பனையாக உருவாக்கிக்கொண்ட முஸ்லிம் இயக்கங்கள் மீது பலி சுமத்தும் இந்த ஆபாச பத்திரிக்கைகள, சங்பரிவார் பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டும் மெளனமாக இருப்பது இவர்களின் நயவஞ்சக தன்மை எப்படிப்பட்டது என்பதை விளங்க முடியும்..
டிஸ்கி..:
டிஸ்கிக்குள் டிஸ்க்கி : இதை நான் எழுதுவதாலேயே நான் அஜ்மல் கசாபுக்கு ஆதரவாளன் என்று கருதிவிடக்கூடாது..காரணம் மரணதண்டனை சம்மந்தப்பட்டதே இது ...அஜ்மல் கசாப் கொல்லப்பட வேண்டிய பயங்கரவாதியே..
ஒரு தேசத்தின் பெருவாரியான மகளின் ஆதரவு பெற்ற, பிரதமர் வேட்பாளரை  கொன்ற பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளுக்கு தூக்குத்தண்டனை விதித்தவுடன் - அந்த மூன்று பேருக்காகவே உலகமெங்கும் தூக்குத்தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று அலறிய - தமிழ்பற்று வியாபாரிகளான, வைகோ, சீமான், நெடுமாறன் மற்றும் உலகத்தமிழர்களின் தலைவர் கலைஞர் போன்ற மாமேதைகள் - இப்போது தூக்குத்தண்டனை அறிவித்ததும் மௌனம் காப்பதின் மர்மம் என்ன?

3 comments :

Segu said...

இன்றைய பத்திரிக்கைகள் ஒரு திமுக எமஎல் எ கொலைக்கு கொடுத்த முக்கியத்துவம்கூட இதற்க்கு கொடுத்ததாக தெரியவில்லை . உங்கள் கூற்று சரிதான் தோழரே

வெங்காயம் said...

நயவஞ்சக ஊடகங்கள்

உங்களுள் ஒருவன் said...

nanbera... vithuthali puligalin nilaipadu veru kasabin nilaipadu veru.... irantaiyum innaithu kuratirkal....

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?