Pages

Friday, November 16, 2012

அம்மாவின் கைப்பேசி - நாட் ரீச்சபிள்


பணத்திற்கு பேராசைப்பட்டு,  தீயவர்களுடன் சேர்ந்து - கொலை செய்து - பணத்தை கொள்ளையடித்துவிட்டு   - அதன் காரணமாக மனது உறுத்தி பணத்தை  உரியவர்களிடம் சேர்த்துவிட்டு பிரயாச்சித்தம் தேடும் ஒரு படிக்காதவனின் கதை.

ஆரம்பகட்ட காட்சிகளில் வெளிப்படும்  செயற்கை தன்மை, மற்றும் நாடகத்தன்மை, படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை குலைத்துவிடுகிறது.

நடிகர்கள் தேர்விலும் - நடிப்பிலும் படு செயற்கை..

கதாநாயகனாக வரும் தங்கர் பச்சான் படம் முழுவதும் ஒரு பேக்கில் நெறைய பணத்தை வைத்துக்கொண்டு அலைகிறார்..
தங்கர் பச்சானின் ம மனைவியாக வரும் மீனாள் , சிலநேரம் அழுதுகொண்டும் சிலநேரம் கணவனிடம் சண்டையிட்டுக்கொண்டும் ஒரு கவர்ச்சிப்பாட்டும் பாடிவிட்டு செல்கிறார்

திருட்டு பட்டம் சுமத்தப்பட்டு, ஊரை விட்டு விரட்டப்படும் சாந்தனு, நடிக்கத்தெரியாமல் பலரிடம் வேலை செய்து பணக்காரராக உயர்கிறார்.

கல் குவாரி முதலாளியாக வரும் அழகம் பெருமாள் ஏமாந்த சோனகிரியாக இருக்கிறார்.

கல்குவாரி முதலாளியை ஏமாற்றும் குவாரி சூப்பர்வைசராக வரும் வடநாட்டு வில்லன் ஒருவர் ஆரம்ப காட்சியில் பெரிய மைனராகவும் இறுதியில் ஒரு வழிப்பறி திருடனாகவும் ஆகிறார்.

அம்மாவின் கைப்பேசி என்ற தலைப்பிற்காக - வயதான பெண் ஒருவருக்கு அவர் மகன் செல்போனே ஒன்றை அனுப்பி - ஒருகாட்சியில் அவருடன் பேசிவிட்டு மற்ற காட்சிகளில் தனது மாமன் மகளும், முன்னாள் காதலியும் தற்சமயம் திருமணம் ஆனவருமான ஒரு பெண்ணுடன் பேசி அழுது  கொண்டிருக்கிறார்கள்

அழகி, சொல்லமறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம் போன்ற படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தவில்லை என்பதுதான் நிஜம்.

அம்மாவின் கைப்பேசி - நாட் ரீச்சபிள்..

7 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான்...

RK.KALYAN said...

self confidence ,,over talking about cinema falls down.. sorry pachan.... learn the trend now

r.v.saravanan said...

இந்த படம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

Unknown said...

yes.. truely

ABDULMALIK said...

Athu sari

ABDULMALIK said...

Athu sari

arshiyaas said...

தனது சொந்தக்கதையை எடுத்து தங்கர் குழம்பிப் போய் விட்டார்.கடைசிக்கட்ட பிளாஷ்பேக் கொஞ்சம்......... நீளம். இரண்டே முக்கால் மணிநேரம் ஓடிய படம் ஒண்ணே முக்கால் மணி நேரத்துக்குக் குறைத்திருந்தால்... சரியாக வந்திருக்கும்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?