Pages

Monday, November 1, 2010

பணக்காரனுக்கு வக்காலத்து வாங்கும் பதிவல்ல!!


எனது சென்ற (பெண்கள் படிக்ககூடாத (பெண்களை பற்றிய) ஒரு பதிவு! பதிவில் சென்னையில் சாலையோரத்தில் வசிப்போரை விமர்சித்ததில் - சற்று அதிகமான கண்டனங்களை பெற நேர்ந்தது.

எனவே இதில் எனது நிலைப்பாட்டை விளக்க விரும்புகிறேன்.

பெரும்பாலான பதிவர்கள், பணக்காரர்கள் என்றால் அவர்கள் மிகவும் கொடூரமானவர்கள் என்றும், ஏழைகள் என்றால் அவர்கள் மிகவும் நல்லவர்கள் என்றும் - அது தவறு என்று தெரிந்தும் - அவ்வாறு பதிவிடுவதே நடுநிலைமை என்ற விதத்திலேயே பதிவுகளையும், மற்றும் பின்னூட்டங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

பணக்காரன் அதிக லாபமீட்டினால் "அவன் ஏழைகளின் வயிற்றிலடித்து சம்பாதிக்கிறான்" என்றும், ஏழையாய் இருப்பவன் பொறுக்கித்தனம் செய்து திருடினாலோ, கொள்ளை யடித்தாலோ, வழிப்பறி செய்தாலோ, வயிற்றுப் பிழைப்புக் காகத்தான்  செய்கிறான் அவனுக்கொரு வேலை இருந்தால் இப்படியெல்லாம் செய்வானா? என்று வியாக்கினம் செய்வதுதான் - நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொள்வோரின் விதண்டாவாதமாக இருக்கிறது.

இது எம் ஜி ஆர் கால சினிமாக்களில் இருந்து தொன்று தொட்டு வரும் ஒருவித திணிப்புதான் என்று சொல்லவேண்டும்..
காரணம் சாலையோர மக்கள்தான் கள்ள வோட்டு போடவும் அடாவடித்தனம் செய்யவும் உபயோகப் படுத்தபடுகிறான்.


சமீபத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற ஒரு தமிழ் திரைப்படம் (அங்காடித் தெரு) இதைத்தான் பிரதிபலித்தது.


அதிகார வர்கத்தில் உள்ளவன் இரக்கமே அற்ற மிருகமாகவும், ஏழை என்பவன் எந்த பாவமும் அறியாத புண்ணிய ஆத்மா எனபது போலவும் சித்தரிக்கப்பட்ட அந்த படம்தான் பதிவர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது..
ஆனால் அதே படத்தில், இயக்குனர் அவரையும் அறியாமல்  ஒரு காட்சி வைத்திருந்தார்..

ஒரு பையனை அவன் தந்தை கண்டிப்பார்...ஒழுங்காக படிக்கவில்லை, பரீட்சையில் சரியான மார்க் வாங்கவில்லை என்று..
அதற்க்கு அந்த பையன இன்னொருவனை அடிப்பான்..எதற்கு என்று கேட்பதற்கு, " இந்த நாய் ஒழுங்கா எழுதி இருந்தால் (தந்தையைக் காட்டி) இந்த நாய் என்னை இப்படி அடித்திருக்குமா?" என்று தந்தை மீது அந்த ஏழை எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறான்  என்பதை காட்டுவான்..


தெருவில் வசிப்போர்தான் இந்த மாதிரி எந்த ஒரு மரியாதை அன்பு பாசம் எனபது இல்லாமல் பெற்றோரை மிகவும் கேவலப்படுத்துவார்கள்..

இதுபோன்ற காட்சிகளை வைத்து மக்களை வழிகெடுக்கும் சினிமாக்கள்தான் அதிகம்..
விவேக், வடிவேலு,கருணாஸ், கஞ்சா கருப்பு போன்ற காமெடி நடிகர்களும் இது போன்ற பெற்றோரை கேவலப்படுத்துவதில் முன்னோடிகளாக இருக்கின்றனர்..
இந்த கேவலமான சினிமாக்களுக்கு வெறி பிடித்த ரசிகர்களாக இருப்பவர்கள் சாலையோரவாசிகளே..

ரஜினிக்கும், அஜித்துக்கும், விஜய்க்கும் சாலைகளில் ரசிகர் மன்றம், தியேட்டர்களில்  ஆளுயர கட் அவுட்டுகளும் அவர்களுக்க் பாலாபிஷேகம், பீராபிஷேகம் பண்ணுவதும் இவர்கள்தான்..ஏழைகள் பாட்டாளிகள் என்போருக்கு, சாராயத்திற்கும், நடிகர்களுக்கு கட் அவுட், பீராபிஷேகம் பண்ணுவதற்கும்  ரஜினி பட டிக்கெட்டை ருபாய் ஆயிரத்திற்கு மேலும் வாங்குவதற்கு பணம் எங்கே இருந்து வருகிறது? 


ஒரு பணக்காரன் ஒரு தொழில் செய்கிறான்..அவன் மற்றவர்கள் வாழவேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு தொழிலை செய்வதில்லை..தானும் சம்பாதிக்கவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு முதலாளியின் நோக்கம்..
அவனிடம் முதலில் காலை கையைப்  பிடித்து வேலைவாங்குவது..பிறகு தனது நிலையை உறுதிப் படுத்திக்கொண்டு, சம்பள உயர்வு, வேலை நிறுத்தம் என்று யூனியன் சேர்த்துக்கொண்டு அந்த முதலாளியை - தனக்கு தனது கஷ்டத்திற்கு வேலைதந்து உதவிய முதலாளியை போண்டியாக்குவது..இதுதான் இந்த ஏழைகளின் நியாயம்..

ஏழையாய் இருப்பவன் நல்லவனாக இல்லையா என்று கேட்கலாம்..நான் ஏழைகளை சொல்லவில்லை..சாலையில் வசித்துக் கொண்டு, தினமும் குடித்துக்கொண்டு, சாலையிலேயே கழிந்து கொண்டு, மனைவி குழந்தைகளை மிருகங்களை விட கேவலமாக அடித்துக் கொண்டு, (அதற்க்கு அந்த மனைவியும், ஏன் குழந்தைகள் கூட சளைத்தவை அல்ல ) ரோட்டில் போகும் மற்றவர்களை பற்றி சிறிதும் கவலைப் படாமல் கூத்தடித்துக் கொண்டு, பான் பராக் துப்பி கொண்டு, இப்படி எல்லா அசிங்கங்களையும் செய்துகொண்டு இருக்கும் இவர்களை பற்றிதான் சொல்ல வருகிறேன்.

ஒவ்வொருத்தருக்கும் அந்தரங்கம் என்று ஒன்று உண்டு..அது எவ்வளவு அசிங்கமாக கேவலமானதாக இருந்தாலும், அது வெளியில் தெரியாதவரை அசிங்கமில்லை...

ஆனால் இந்த சாலையில் வசிப்போர்தான், மலம் கழிப்பது முதல் மற்றவர்களுடன் படுப்பதுவரை, கூச்சமின்றியும் வெட்கமின்றியும், சாலையில் செல்வோரைப் பற்றிய எந்த ஒரு கவலையும் இன்றி பகிங்கரமாக இந்த அசிங்கங்களை செய்கின்றனர்.
பெற்ற குழந்தைகளுக்கு அம்மா அப்பா என்று சொல்லிகொடுக்கிரானோ இல்லையோ "ங்கோத்த ..ங்கொம்மா " என்று கண்டிப்பாக சொல்லிகொடுத்து " அதுகளையும்" தங்களைப்போல் பொறுக்கியாக வளர்வதில் மகிழ்கிறான்..

இவர்கள் வீடுகளில்லாதோர் இல்லை..இவர்களுக்கென்று வீடுகள் இருக்கும்..அரசு இலவசமாகக் கொடுத்ததோ, அல்லது இவர்களது சொந்த வீடாகவோ இருக்கலாம்..அதை வாடகைக்கு விட்டு விட்டு, இங்கே சாலைகளில் குடித்துக்  கொண்டு பொறுக்கித்தனம் செய்து கொண்டிருப்பான். இது எனது கற்பனை அல்ல...அவர்களிடமே நான் கேட்டு அறிந்தது..


அப்படியே சாலையில் வசிப்போருக்கென்று கழிவறைகளும் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது...இதையெல்லாம் உபயோகப்படுத்தாமல், அவர்களும் சாலையோரங்களை அசிங்கப் படுத்தி, தமது குழந்தைகளையும் அதே போல பழக்கப்படுத்தி ..வருங்கால இந்தியாவை இன்னும் பின்னோக்கி செல்ல  வைக்கிறான்..சாலையில் நீங்கள் நடந்து கொண்டிருப்பீர்கள்...அவன் நடுரோட்டில் கற்களை இருபுறமும் அடுக்கி வைத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பான்..நீங்கள் ஒரு மனிதனாகவே அவனுக்கு புலப்பட மாட்டீர்கள்..உங்கள் தலையில் பந்து பட்டு, மண்டை உடைந்தாலும் அது உங்களது  தவறுபோல உங்களையே பாய்ந்து பிராண்டுபவந்தான் சாலையில் வசிக்கும்  பொறுக்கிகள்..


வடசென்னை பகுதிகளில் இவர்களை "தரைப்படை" என்றே அடைமொழி வைத்து அழைக்கிறார்கள்..

சாலையில் நாம் நிம்மதியாக நடந்து செல்ல முடியாது..ரிக்ஷா ஓட்டுபவன் வேண்டுமென்றே இடிப்பது போல வந்து நிற்பான்.. அப்படியே இடித்துவிட்டு நமக்கு முன்னே நம்மையே அசிங்கமாக திட்டி ஏதோ நாம்தான் தவறு செய்தமாதிரி ஒரு சூழலை எற்படுத்திவிடுவான்.

ஒருவன் செல்போனில் பேசிக்கொண்டு சென்றால் இவனுக்கு எரியும்..ஏதோ இவன் காசில் நாம் செல்போன்  வாங்கி பேசுவதுபோல நம்ம எதிரி போல  பார்த்து.."தோ செல்போனே பேசிக்கினு போறான் பாரு" என்று நம்மையே நக்கலடிப்பான்..

மீன்பாடி வண்டி என்று ஒரு வண்டி..வடசென்னைப் பகுதிகளில் முக்கால் வாசி டிராபிக் குளறுபடிகளுக்கு இந்த வண்டிகளே காரணம்..இதை ரொம்பவும் திமிர்த்தனமாக ஓட்டுவது இந்த தரைப்படைகளே...அதுவும்  7- 8  வயதுகூட நிரம்பாத சிறுவர்களும் சிறுமிகளும்..

ஒருவன் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு இடம் வாங்குவான்..அந்த பழைய இடத்தை இடித்துவிட்டு புது இடம் கட்டுவதற்கு இடித்து வைத்து இருப்பான்..அதற்குள் இவைகள் அதனை ஆக்கிரமித்துவிட்டு - காலி காலிசெய்வதற்கு  ஐம்பதாயிரம் ரூபாய் ஒருலட்ச ரூபாய் என்று அடாவடி செய்து பிடுங்கிக்கொண்டுதான் காலி செய்வார்கள்..இவர்களுக்கு பொறுக்கிகளும் உடந்தை..

தெருவோரங்களில் உள்ள கோவில்களுக்கு திருவிழா என்ற பெயரில் அடாவடியாக பணம் வசூலித்து குடித்து கும்மாளமிடுவது
அந்த திருவிழா என்ற பெயரில் ஒரு தெருவையே ஆக்ரமித்து ஸ்பீக்கரில் ஆபாசப் பாடல்களை அலறவிட்டு ஆபாச நடனமாடுவது..இதெல்லாம்தான் அவர்களது லைப் ஸ்டைல்.


அதுவும் தீபாவளி காலங்களில் நீங்கள் சாலையில் நடந்து செல்லும்போது, உங்களை ஒரு மனித ஜென்மமாகவே கருதாமல் உங்கள் காலுக்கடியிலேயே பட்டாசை வெடிக்கும்  மிருகங்கள்தான் அந்த பொறுக்கிகள்..இந்த அனுபவத்தை பெறாத சென்னை வாசி ஒருவராவது உண்டா?

நான் நேரிடையாக சந்திக்க நேர்ந்த அனுபவங்களில் மிகவும் கேவலமான ஒன்று..

எப்போதும்போல சாலையில் அவர்களின் கூச்சல்...சண்டை போன்று இருக்கும்..கிட்டே  சென்று "ஏய் யே..!" என்று கத்திக் கொண்டே இருப்பார்கள்..ஆனால் எல்லாம் வெத்துவேட்டு..மோதிக்கொள்ளமாட்டார்கள்..
ஆனால் இது ஒரு பெண் ஆவேசமாக..- அவர்களின் பாரம்பரிய கேவலமான தமிழ் சொற்களால் ஒருவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்..
அவள் திட்டி கொண்டிருந்தது தனது சகோதரனை..
இரவில் படுக்கும்போது தனது சகோதரியிடமே  தவறாக  நடந்திருக்கிறான்.."அது"வும் இரவெல்லாம் சும்மா இருந்து ஒத்துழைத்துவிட்டு  காலையில் தன் தாயிடம் இது பற்றி கத்திக்கொண்டிருந்தாள்..
இதற்க்கு அந்த தாய் சொன்ன பதில்தான் மிகவும்கேவலம்..
"அய்யே...ஊராமூட்டனா உம்மேல படுத்தான்...கூடப் பொறந்தவந்தானே..சும்மா கெட..!"
இதற்க்கு சிரிப்பதா..அழுவதா? 


பக்கத்தில் யார் படுத்தாலும் அவனோ அவளோ அன்றிரவு அவன்தான் அல்லது அவள்தான் மனைவி அல்லது கணவன்..
அவன் உழைக்கிறான் என்று சொல்கிறார்கள்..உழைக்கிறான்தான் ..ஆனால் அவன் கேட்கும்  கூலி எவ்வளவு அடாவடி என்று உங்களில் யாருக்காவது தெரியாமல்  இருக்குமா? 
ஆட்டோவில் மீட்டருக்குமேல் காசு கேட்பவன்  பணக்காரன் அல்ல..
ரோட்டில் பிக் பாகெட் அடிப்பவன் பணக்காரன் அல்ல
த்தியைக் காட்டி வழிப்பறி செய்பவன் பணக்காரன் அல்ல..
வீடுகளில் கொள்ளை அடிப்பவன் பணக்காரன் அல்ல
சாராயக்கடைகளில்  கூட்டம் கூட்டமாய் சாராயம் வாங்கி ரோட்டிலேயே வைத்துக் குடித்துக்கொண்டு நிர்வாணமாய் சாலையில் படுத்து உருளுபவன்  பணக்காரன் அல்ல..
பெற்ற குழந்தையையே நாயை அடிப்பதுமாதிரி அடித்து தூக்கி எறிபவன் பணக்காரன் அல்ல
கட்டிய (கட்டியவளோ ஒட்டிக்கொண்டவளோ) மனைவியுடன் நடுரோட்டில் சரிக்கு சரி யை சண்டை வளர்த்து ஊரைக்கூட்டி அசிங்கம் செய்பவன் பணக்காரன் அல்ல..
கூலிக்கு காசு வாங்கிக் கொண்டு, தனக்கு சம்மந்தம் இல்லாதவனை கொல்லும் இரக்கமற்ற மிருகங்களான  கூலிப்படை பணக்காரன் அல்ல..
அப்படியே அவனவன் பணக்காரனாக இருந்தால் கூட அவன் இந்த மாதிரி ஈனத்தொழில் செய்துதான் பணக்காரனாக இருப்பான்..


சாலையில் வாசிப்பவனில் நல்லவன் இருப்பான்..ஆனால் யாரையும் இவன் ஏழை என்று அனுதாபப் படவோ, அவகளுக்காகவோ இரக்கபடவோ முடியாத வகையில்தான் அவர்களது அனைத்து நடவடிக்கைகளும் அமைந்திருப்பதை அனுபவத்தால் உணர்ந்தவன் நான்..


இந்த பதிவுக்கு நிறைய கண்டனங்கள் வரும்...வெறும் புத்தகங்களை படித்துவிட்டும், தமிழ் படங்களை பார்த்துவிட்டும், பணம் படைத்தவன் எல்லாம் கொடுமைக்காரர்கள் எனவும், சாலையில் வசிப்பவன் கஞ்சிக்கில்லாதவன் என்றும் அப்பாவி, நியாயமானவன் என்றும்  வியாக்கியானம் பேசுவோர் இதற்க்கு பதில் எழுதுவார்கள்.. தினமும் சாப்பிட என்று காசு வாங்கி சாராயக்கடைகளில் நிற்பவர்களையும் (ஆண் பெண் என்று பேதமில்லாமல்) எனக்கு தெரியும்..

எனது அனுபவத்தில் இன்னும் இவர்களைப் பற்றிய அசிங்கங்கள் ஏராளமாக உண்டு...பிளாக்கில் சொல்லக்கூடியதே இவ்வளவுதான்..நானும் " சாரு " போல தரம் தாழ்ந்து போக விரும்பவில்லை..
அவர்கள் நல்லது செய்கிறார்கள் என்று ஏதாவது ஒன்றை.. இந்த வியாக்கியானவாதிகள் சொல்லட்டும்  பார்க்கலாம்..
இது பணக்காரனுக்கு வக்காலத்து வாங்கும் பதிவல்ல...
சாலையில் வசித்துக்கொண்டு பொறுக்கித்தனம் செய்துகொண்டிருப்போரின்  குணநலன்களை சுட்டிக்காட்டும் பதிவுதான்..


பணக்காரர்களிலும் மேற்கண்ட குணமுள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..

ஆனால், பொதுமக்களுக்கு இடைஞ்சலாக, அன்றாடம் பெரும் தொல்லையாக இருப்பவர்கள் சாலையோர பொறுக்கிகளே..

ஒரு ஆச்சாரியம்..:
நாம் நமது வீட்டில் குடியிருப்போம். நமது வீட்டுக்கு கீழே சாலையோரவாசிகள் குடி இருப்பார்கள்..நமக்கு ரேஷன் கார்டுக்கும், ஓட்டர் ஐடென்டிடி கார்டுக்கும் அல்லாடிக் கொண்டிருப்போம்..அதிகாரிகள் ஏகப்பட்ட என்கொயரிகள் கேட்பார்கள்..ஆனால் இந்த சாலைவாசிகளுக்கு மட்டும் நமது முகவரியில் ரேஷன் கார்ட் மற்றும் ஓட்டர் ஐடென்டிடி கார்ட் இருக்கும்..இது எப்படி என்று இதுவரையில் எனக்கு புலப்படவில்லை..

23 comments :

கே.ஆர்.பி.செந்தில் said...

உங்கள் பதிவில் இருப்பவை நியாயமான கோபங்களே.. அவர்கள் இப்படி வாழவதற்க்கு காரணம்.. அவர்களுக்கென்று ஒரு சமூக ஒழுங்கு இல்லாததுதான்.. பொதுவாகவே நாளைய வாழ்வு என்பது அவர்களுக்கு நிலையற்றதாக இருக்கும். அதனால்தான் இது என் வாழ்க்கை, நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன் என்கிற திமிர்த்தனம் இருக்கும். சென்னையின் சாலையோர வாசிகள் பெரும்பான்மையோர் தெலுங்கானாகாரர்கள். உலகம் முழுதுமே இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்...

மங்குனி அமைசர் said...

நியாயமான கோபம் . நானும் மர்மயோகியும் சேர்ந்தே பார்த்திருக்கிறோம் , எனக்கு தெரிந்த வீதியில் வாழும் அனைவருக்கு அரசு வீடு கொடுத்துள்ளது , அதை வாடகைக்கு விட்டு விட்டு மறுபடியும் வீதியில் வாழ்கிறார்கள் .

J.P Josephine Baba said...

சரியாக சொல்லியுள்ளீர்கள். இவர்கள் மறு (மனித)வாழ்வுக்கு என ஏதாவது செய்ய இயலாதா?

மர்மயோகி said...

நன்றி திரு கே ஆர் பி செந்தில் அவர்களே
உலகம் முழுவதும் இவர்கள் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் நம்மை சுற்றியுள்ள அசிங்கங்களைப் பற்றித்தான் சொல்லமுடியும்..

மர்மயோகி said...

நன்றி திரு மங்குனி அமைச்சரே..
அவர்கள் வீதியில் வாழமட்டும் இ ல்லை...மற்ற எல்லாருக்கு மிகப்பெரும் தொந்தரவாக இருக்கிறார்கள்..

மர்மயோகி said...

நன்றி J.P.Josephin Baba அவர்களே..இவரளுக்கு ஏராளமான வசதிகள் சலுகைகள் அரசு தரப்பில் வழங்கப் படுகின்றது..இன்னும் எல்லாவற்றிர்க்கும் அரசையே எதிர்பார்க்கும் பிச்சைக் காரர்களாக வாழவே அவர்களும் விரும்புகிறார்கள்..

கக்கு - மாணிக்கம் said...

// இவரளுக்கு ஏராளமான வசதிகள் சலுகைகள் அரசு தரப்பில் வழங்கப் படுகின்றது..இன்னும் எல்லாவற்றிர்க்கும் அரசையே எதிர்பார்க்கும் பிச்சைக் காரர்களாக வாழவே அவர்களும் விரும்புகிறார்கள்..//

-----------------மர்மயோகி

உண்மைதான். இதனை ஏற்றுகொள்கிறேன். உங்கள் முந்தய பதிவில் நான் சொல்ல வந்தது, சாரு போன்றவர்களை விமர்சிக்க இந்த சாலை யோர மக்களை திட்டவேண்டுமா என்ற ஆதங்கத்தில் எழுதியது. இவர்களும் "மெட்ராஸ் தமிழ் " பேசுகிறார்கள் என்ற ஒரு காரணத்தினால் அந்த வட்டார வழக்கை அசிங்கமாக நாம் பார்க வேண்டியதில்லை என்பதைத்தான். நன்றி மர்மயோகி.

மர்மயோகி said...

புரிந்து கொண்டமைக்கு நன்றி திரு கக்கு மாணிக்கம் அவர்களே..
இவர்கள் போன்றோர்கள் பேசுவதாலேயே அந்த பாஷை மீது எனக்கு சொல்லொணா வெறுப்பும் கோபமும் ஏற்படுகிறது..நானும் சென்னைக்கு வந்த புதிதில் - ஹோட்டல்களில் சாப்பிடப்போகும்போது இவர்கள் "யஎஈ..பொங்கலு குடு...ராகி மால்ட் கொடு" என்று கேட்பார்கள். இதனாலேயே இன்று வரை எனக்கு பொங்கலும் ராகிமால்ட்டும் பிடிப்பதே இல்லை..அதுபோலத்தான் சென்னை தமிழும்..இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைய "ங்கோத்தா." என்ற வார்த்தை இல்லாமல் அந்த பாஷை பேச முடியுமா? அதுவும் ஒரு காரணம்..
நன்றி..

முசமில் இத்ரூஸ் said...

Nanba enakku theruvil vasikkum maari anna engira oru nanbar undu.avar mika nallavar.

Sumar irandu varudankalukku mun naan vasikkum veetin keel porshanil oruvar thanadhu muluchambala panadhodu thanadhu pursai (10000Rs) iravil tholaitthuvitar.marunal andha mari annan avarudaiya driving license photovai kondu panaththai uriyavaridam oppadaitthaar.munbu theruvil irundha andha annan ippodhu thirumanamagi oru siriya vadagai veetil vasikkirar.avar oru anaathai pennaitthaan thirumanam mudiththar.

Nalla manidharkalum rotil vasikkaththaan seikirarkal.

V.Radhakrishnan said...

:) நல்ல பதிவு.

மர்மயோகி said...

முசம்மில் இத்ரூஸ் அவர்களே . நீங்கள் குறிப்பிட்ட அந்த நபர் நிச்சயமாக தரைப்படையாக இருக்க மாட்டார்..அவர் சந்தர்ப்பவசத்தாலேயே அவர் அவ்வாறு வீதியில் வசிக்க வேண்டியிருக்கும். பாருங்கள் அவர் கல்யாணம் ஆகியவுடன் தனது மனைவியுடன் ஒரு குடிசை வீட்டுக்கு சென்று விட்டார்..ஆனால் தரைப்படைகள் வீடு இருந்தாலும் ரோட்டுக்கு வந்து விடும்...

மர்மயோகி said...

நன்றி திரு V.Radhakrishnan அவர்களே

problogger said...

நானும் இந்த மாதிரி நிறைய பார்த்திருக்கேன் . எங்க வீட்டுக்கு பக்கத்தில மற்றும் சந்து முனைல இருக்கிறவங்க செய்ற அநியாயம்..ஒரு பெரிய வண்டி அந்த ரோடு ல போக வந்தாலும் வழி விட மாட்டாங்க, எதோ அவங்க அப்பன் வீடு சொத்து போல அத ஆக்கிரமிச்சு அங்கேயே இருக்கிறது ..சின்ன பிள்ளைகள் பாவம் அதுகளுக்கு என்ன தெரியும் ..அந்த ரோடுலே அசிங்கம் பண்றது..வீனா தகராறு பண்றது ...குழந்தை கிட்ட பேசும் பொது கூட அறிவு இல்லாம பேசுறது ...ஒரு அம்மா குழந்தைக்கு சோறு கொடுத்துக்கொண்டு இருந்தா..குழந்தை அதை வாங்கல எதோ விளையாடிக்கிட்டு இருந்திச்சு ..அந்த பொம்பள சொல்லுது ..ந்க்கொம்மாலே உன் கூதிய கிழிக்கிறேன் இரு இன்னைக்கு...i hate these people..
அரசாங்கம் என்ன தான் செய்தாலும் இல்ல நாங்க ரோட்ல தான் இருப்போம் என்றால் என்ன செய்றது..எந்த ஒரு பிரச்னைக்கும் ஒரு தீர்வு உண்டு ..உங்க பதிவுல அந்த மாதிரி solutions எதாவது suggest பண்ணி இருக்கலாம் ..நல்ல பதிவு

உன்னைப்போல் ஒருவன் said...

very good article!!

குறிப்பாக வட சென்னைபோன்ற பகுதிகளில் இவர்களின் குடியமர்வு திட்டமிட்டு பல நெடுங்காலமாக நடந்தேரிவருகின்றது.

இதர்க்கு சூத்திரகாரிகள் அரசியல் கட்சிகள்தான். ஒவ்வொரு கட்சிகளும் தானக்கென்று தனிப்படைகளை வைத்துள்ளது.

சாந்தோம் ஏரியாவை தான்டிவிட்டால் இவர்களின் ஆதிக்கம் குறைவு. why is that? deferent classes people living over there?

பலவருடங்கலாக ஒரு கட்டிடத்தின் கீழ் குடியிருந்து அந்த கட்டிடத்திலுள்ளவர்களின் உணவு, பணம் போன்றவைகளை வாங்கி தின்டபிறகும் அந்த பில்டிங்கில் நடந்த ஒரு கொலைக்கு கீழ் வசிக்கும் தரைபடை சம்மந்த பட்டிருப்பதை கண்டரிந்தது காவல் துறை.

இவர்கலால்தான் தேவையில்லாத சாலையோரகோயில்களும், தர்காகளும் ஆங்காங்கே முலைத்து வாகன போக்குவரத்திற்கும் நடைபாதசாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல் செய்துகொண்டிரிக்கின்றார்கள்.


problogger said...
///அரசாங்கம் என்ன தான் செய்தாலும் இல்ல நாங்க ரோட்ல தான் இருப்போம் என்றால் என்ன செய்றது..எந்த ஒரு பிரச்னைக்கும் ஒரு தீர்வு உண்டு ..உங்க பதிவுல அந்த மாதிரி solutions எதாவது suggest பண்ணி இருக்கலாம் ///

இவர்களை வழுக்கட்டாயமாக இரும்பு கரம் கொண்டு துரத்தியடிக்கவேண்டும். இதர்க்கு முன்புபோல் காலக்கெடுவை கொடுத்து கொடுத்து இழுத்தடிக்காமல் துரிதமாக சென்னை மாநகர மேயர் தான் இதர்க்கு பொருப்பேர்க வேண்டும்.

மர்மயோகி said...

நன்றி திரு problogger அவர்களே..
நீங்கள் சொல்வது மாதிரி இதற்கு நல்ல தீர்வு காண அரசு அதிரடியாக முடிவு எடுக்க வேண்டும்.
வீட்டு முகவரி இல்லாதோருக்கு , ரேசன் கார்டு, ஓட்டு உரிமை, மற்றும் ஓட்டுனர் உரிமம் போன்றவைகளையும் இலவச திட்டங்களையும் ரத்து செய்யவேண்டும்..அவர்களது சம்பாத்தியத்தை அறிந்து வரி விதிக்க வேண்டும். உண்மையிலேயே கஷ்டப்படுகிரவர்களுக்குதான் அரசின் இலவச திட்டங்கள் பொருந்தும் என்ற சட்டத்தை கடுமையாக அமல் படுத்தவேண்டும். இவர்களை திருத்தவேண்டும் அல்லது ஒழிக்க வேண்டும் . நிச்சயமாக சென்னை சிங்கார சென்னையாக மாறிவிடும் அல்லது..ஒருக்காலும் உருப்படாது.

மர்மயோகி said...

நன்றி திரு உன்னைப் போல் ஒருவன்.
கள்ள ஓட்டு போடுவதற்கும், கொள்ளையடிப்பதர்க்கும் இந்த பொறுக்கிகளை அரசியல் கட்சிகள் உபயோகப் படுத்திக் கொண்டிருக்கின்றன..பிறகு எப்படி அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்..பொதுமக்கள்தான் இவர்களைப் புறக்கணிக்கவேண்டும். ஒரு பொருக்கி ரவுடித்தனம் செய்தால் அனைவரும் சேர்ந்து அவன் கை காலை உடைத்து போலீசில் ஒப்படைத்து கடுமையான தண்டனை பெறும்வரை விடக்கூடாது..

thameem said...

verry good article thank you marmayogie

VJR said...

இந்த தெருவாசிகள் செய்யும் இந்த ஈனசெயலை, ஏசி அறையில் வசிக்கும் கொழுத்தப் பணக்காரன் 70 ஆயிரம் கோடி ஊழல் செய்து மறைமுகக் காரணியாக இருக்கிறான் என்பது உங்களுக்குப் புரிகிறதா?

எந்த ஒரு தெருவாசியும் இதுவரை எம்.எல்.ஏ வாகவோ மந்திரியாகவோ, முதல்வராகவோ ஏன் ஒரு ஆபிசராகவோ இல்லை என்பது தெரியுமா?

அப்படியென்றால் இந்த தெருவாசிகளை அதினின்று முன்னேறவிடாமல் செய்வது யார்? தெருவாசிகளா இல்லை ஏச்சுப்பிழைக்கும் ஏசிவாசிகளா?

மர்மயோகி said...

நன்றி திரு thameem

மர்மயோகி said...

//இந்த தெருவாசிகள் செய்யும் இந்த ஈனசெயலை, ஏசி அறையில் வசிக்கும் கொழுத்தப் பணக்காரன் 70 ஆயிரம் கோடி ஊழல் செய்து மறைமுகக் காரணியாக இருக்கிறான் என்பது உங்களுக்குப் புரிகிறதா?//
ஒருத்தனிடம் இரந்து வாழ்ந்தால் அவனிடம் அடிமையாகத்தான் இருக்கவேண்டும்..ஏ சி அறையில் உள்ளவன் கொடுக்கிற எலும்புத்துண்டுக்காக இவன் நாயை வாலை ஆட்டுவது ஏன் ? இவனுக்கு சொந்தமாக மூளை இல்லையா?

//எந்த ஒரு தெருவாசியும் இதுவரை எம்.எல்.ஏ வாகவோ மந்திரியாகவோ, முதல்வராகவோ ஏன் ஒரு ஆபிசராகவோ இல்லை என்பது தெரியுமா?//
அவனது தராதரம் தெரிந்து அவனை யாரு இது போன்ற பதவிகளுக்கு தேர்ந்துடுப்பார்?
தவிர தெருவில் வசிப்போர் கவுன்சிலராக வந்த கதை சென்னையில் உண்டு..அதுவும் அவர்களின் அடாவடித்தனத்தினாலும், கள்ள ஒட்டினானுள்.

இன்னும் சொல்லப்போனால் திரு VJR அவர்களே.
இது தெருவாசிங்களின் குணங்களையும் அவர்களால் மக்கள் படும் அவதிகளையும் சொல்லும் பதிவுதான்..ஏ சி வாசிக்கு வக்காலத்து வாங்கும் பதிவல்ல..

தமிழ் வினை said...

மன்னிக்கவும் இதில் பாதிக்கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. உங்களுடன் முரண்படுகின்றவற்றைச் சுட்டிக்காட விரும்புகிறேன். நல்லவர்கள், கெட்டவர்கள் என்பதல்ல என் நோக்கம். மேலும் பொறுக்கிகளுக்கு வக்காலத்து வாங்கும் பின்னூட்டமல்ல.
//பணக்காரனுக்கு வக்காலத்து வாங்கும் பதிவல்ல...சாலையில் வசித்துக்கொண்டு பொறுக்கித்தனம் செய்துகொண்டிருப்போரின் குணநலன்களை சுட்டிக்காட்டும் பதிவுதான்// என்றாலும் உங்களுக்கு அறிந்தோ அறியாமலோ பணக்காரர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். இதில் பொதுமக்களுக்கு தொல்லை தரும் பொறுக்கிகள், அரசாங்கத்தை ஏமாற்றுபவன், ஏமாற்றிப்பணம் வாங்குகிறவன் ஆகியோரைச் சாடும் நீங்கள் இவரகளால்தான் ஏழைகளின் மீது இரக்கம் வரவில்லை என்கிறீர்கள். அப்படியே போகிற போக்கில் பணக்காரர்கள், அதிகாரவர்க்கத்தின் மீது தவறில்லை என்கிறீர்கள். அதாவது குற்றம்செய்யவும் குற்றவாளிகளை உருவாக்குபவனையும் விட்டுவிட்டு, எய்தவனை விட்டுவிட்டு அமபை மட்டும் நோகிறீர்கள். பணக்காரகளின் பேராசையால் போடப்ப்ட்ட அரசின் திட்டங்களால் விவசாயம் பொய்த்துப் போய் கூலி வேலைக்காக நகரத்திற்கு ஓடிவரும் கிராம வாசிகள்தான்.ரோட்டில் இருப்பவர்கள் பணக்காரர்கள் கட்டிக்கொண்டிருக்கும் க்ட்டடங்களுக்காக கொண்டுவந்து கொட்டப்படுகிறார்கள். குழந்தைகள் பெண்கள் உட்பட.
//சாராயக்கடைகளில் கூட்டம் கூட்டமாய் சாராயம் வாங்கி ரோட்டிலேயே வைத்துக் குடித்துக்கொண்டு நிர்வாணமாய் சாலையில் படுத்து உருளுபவன் பணக்காரன் அல்ல// குடித்துவிட்டு மப்பில் காரைக்கொண்டுபோய் தெருவில் படுத்திருப்பவன் மீது ஏற்றிக் கொல்பவன் பணக்காரன்.

//சாலையோர மக்கள்தான் கள்ள வோட்டு போடவும் அடாவடித்தனம் செய்யவும் உபயோகப் படுத்தபடுகிறான்// கள்ள ஓட்டுப்போடவும், கலவரம் செய்யவும் பண்ம் கொடுத்து தூண்டுவது பணக்கார அரசியல்வாதிகள் தானே?
//தெருவில் வசிப்போர்தான் இந்த மாதிரி எந்த ஒரு மரியாதை அன்பு பாசம் எனபது இல்லாமல் பெற்றோரை மிகவும் கேவலப்படுத்துவார்கள்// நாட்டில் எத்தனையோ முதியோர் இல்லங்கள் உள்ளன, அதிலுள்ளவர்கள் சாலையோரவாசிகளா?
//ரஜினிக்கும், அஜித்துக்கும், விஜய்க்கும் சாலைகளில் ரசிகர் மன்றம்// இது போன்ற பணம் கொடுத்து இரசிகர் மன்றம் வைத்து தமது செல்வாக்கைக்காட்ட நினைக்கும் நடிகர்கள் பணக்காரர்களா இல்லை தெருவாசிகளா?

// ரஜினி பட டிக்கெட்டை ருபாய் ஆயிரத்திற்கு மேலும் வாங்குவதற்கு பணம் எங்கே இருந்து வருகிறது?// தெருவாசிகள் எங்கே 1000 கொடுத்து வாங்குகிறார்கள்? அது இருக்கட்டும் 30 ரூ. சீட்டை 300 க்கு விற்று ஏமாற்றும் கலாநிதி மாறன் தெருவாசியா? திரையரங்க உரிமையாளர்கள் தெருவாசியா?

//தானும் சம்பாதிக்கவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு முதலாளியின் நோக்கம்// இந்த நோக்கத்திற்காகத்தான் போபால் விபத்து நேர்ந்தது என்பதை நினைவூட்டுகிறேன்.
//தனது கஷ்டத்திற்கு வேலைதந்து உதவிய முதலாளியை போண்டியாக்குவது..இதுதான் இந்த ஏழைகளின் நியாயம்// எத்தனை முதலாளி போண்டியானார்கள்? தொழிலாளிகளைத்தானே வேலை நீக்கம் செய்கிறார்கள்.மேலும் தனது கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாதபோதுதானே தெருவுக்கு வருகிறான், போராடுகிறான். நம்மைப் போன்ற வசதியானவர்கள் வருவதில்லை.
//.ஆனால் அவன் கேட்கும் கூலி எவ்வளவு அடாவடி// நீங்கள் சொல்லும் அவர்களில்தான் தெருக்கூட்டுபவர், சாக்கடையில் இறங்கியும், கழிவறைகளில் கைகளாலும் அடைப்பை எடுப்பவர்களும், மலத்தைக் கைகளால் அள்ளும் மனிதர்களும் இருக்கிறார்கள், மனசாட்சிப்படி சொல்லுங்கள் அவர்களுக்குக் கொடுக்கபபடும் கூலிகள் தகுமா?
//ஆட்டோவில் மீட்டருக்குமேல் காசு கேட்பவன் பணக்காரன் அல்ல// பெட்ரோல் டீசல் விலையை நடு இரவில் உயர்த்துகிறவன் பணக்காரனான அரசியல்வாதிகள், காரணம் பெட்ரோல் விற்கும் பணக்கார முதலாளி. அரிசி விலை உயரவும், ஆடம்பரக் காரின் விலை குறையவும் இவர்கள்தான் காரணம்.
//ரோட்டில் பிக் பாகெட் அடிப்பவன் பணக்காரன் அல்ல// கோடிக்கணக்கில் ஊழல் செய்கிறவன் பணக்காரன். மனிதனின் அடிப்படை உரிமையான தண்ணீரை பொட்டலமாகவும், புட்டிகளாகவும், குளிர்பானங்களாகவும் மாற்றி விற்று பணம் ச்ம்பாதிக்கிறவன் பணக்காரன். இவர்களின் மீது உங்களுக்கு கோபமில்லையா?
//கூலிக்கு காசு வாங்கிக் கொண்டு, தனக்கு சம்மந்தம் இல்லாதவனை கொல்லும் இரக்கமற்ற மிருகங்களான கூலிப்படை பணக்காரன் அல்ல// கூலிப்படையை ஏவுகிறவன் யார்? கூலிப்படைக்கு கொடுக்குமளவுக்கு பணம் அவனிடம்தானே இருக்கிறது.
//பொதுமக்களுக்கு இடைஞ்சலாக, அன்றாடம் பெரும் தொல்லையாக இருப்பவர்கள் சாலையோர பொறுக்கிகளே..// இவர்கள் கண்ணுக்குத் தெரியும் சாதாரணத் தொல்லைகள்தான். ஆனால் கண்ணுக்குத் தெரியாத முதலாளிகளும் பணக்காரர்களும்தான் நாம் உண்ணும் உணவு, விலை, உடை மருத்துவம் ஆகிய வாழ்க்கையின் அடிப்படையிலெயே நமமை தொல்லை செய்கிறாரகள், கொள்ளையடிக்கிறார்கள்.

மர்மயோகி said...

நன்றி தமிழ் வினை..
ஏழைகளை நான் குற்றம் சொல்லவில்லை
நான் இதே பதிவில் குறிப்பிட்டுள்ளதைப் போல, நீங்கள் வெறும் புத்தகங்களையும் திரைப்படங்களையும் பார்த்துவிட்டு குற்றம் சாட்டியுள்ளீர்கள்..
எல்லாரும் தவறு செய்கிறார்கள்..
ஆனால் ரோட்டில்வசிப்பவன் செய்யும் தவறுக்கெல்லாம் பணக்காரன்தான் காரணம் எனபது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமல்ல..
ஏன் அவனுக்கு மூளை இல்லையே..
"எய்தவன் இருக்க அம்பை குற்றம் சொல்வது " எனபது பழமொழிதான்...நடப்புக்கு ஒத்துவராது.
ரோட்டில் வசிப்பவன் பொதுமக்களுக்கு இடைஞ்சல் தான் தொந்தரவுதான்..
.

mahi said...

@தமிழ் வினை: Well said man, No one could have explained it so clearly. I also don't agree with Marmayogi in this article. He sometimes thinks too much and gets blindfolded. Whatever you said is 100% true and even though Marmayogi understands this ,he has failed to acknowledge what you have said. Marmayogi ,you sometimes need to accept others comments and shouldn’t think that your point of view is always right.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?