Pages

Monday, November 15, 2010

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் டைரக்ஷன் - கலைஞர் மு.கருணாநிதி

தினகரன் நாளிதழ் வெளியிட்ட ஒரு கருத்துக் கணிப்பால் கலைஞர் கருணாநிதி குடும்பத்திற்கும் - சன் டி வி (மருமகன்கள் டி வி?) குழுமத்திற்கும் ஏற்பட்ட குடுமிப்பிடி குடும்பச்சண்டையில் மத்திய மந்திரி பதவியை இழந்தார் தயாநிதி மாறன்..அதன் பிறகு அந்த -தொலை தொடர்பு துறைக்கு அமைச்சரானவர் ஆர். ராசா.


அதன் பிறகுதான் 1999 இல் இருந்து அதாவது பிரமோத் மகாஜன் பொறுப்பிலிருந்தபோது பின்பற்றப்பட்ட முறையே அலைவரிசை ஒதுக்கீடு முறையில் இப்போதும் பின்பற்றபடுவதாக தி.மு.க அறிவித்து வரும் - அந்த ஸ்பெக்ட்ராம் ஊழல் விஷயம் பரப்பானது..தினகரன் நாளிதழில் இதற்கென்றே ஒரு பக்கம் ஒதுக்கினார்கள்..


இதற்கு பிறகு கலைஞர் கருணாநிதி குடும்பத்திற்கும் - சன் குழுமத்திற்கும் இணக்கம் ஏற்பட்ட பின்பு கூட ஆர் ராசா அந்த பதவியிலேயே தொடர்ந்தார். அதன் பிறகு சன் குழுமம் அந்த செய்தியை அடக்கிவாசிக்க ஆரம்பித்தது..(வாசிக்கவே இல்லை)..


பின்பு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது கூட ராசாவே அதே பொறுப்பில் தொடர்ந்தார். அப்போதே இது பற்றி கேள்வி எழுந்தது..ஏன் தயாநிதி மாறனை தொலை தொடர்புத்துறைக்கு அமைச்சராகவில்லை என்று..இதில்தான் கலைஞரின் ராஜதந்திரம் (இதற்கு பெயர் "தந்திரம்தான்") வெளிப்பட்டது.

இதில் ராசாவை பலிகடாவாக்க நினைத்துதான் ராசாவே இந்த பதவியில் தொடரவைக்கப்பட்டார் என்று பேசப்பட்டது..இதோ இப்போது "அப்பன் குதிருக்குள் இல்லை என்று கலைஞரே ராசாவை பலிகொடுத்து - அறிக்கையும் வெளியிட்டு விட்டார்..ராசா ராஜினாமாவை தொடர்பாக தி.மு.க., தலைமை கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "" பார்லிமென்ட்டின் ஜனநாயக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவும், நாட்டு மக்களுக்கு தேவையான பிரச்னைகள் விவாதித்து முடிவெடுக்கப்பட வழிவகுத்திடும் வகையில், ராஜா அமைசசர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென்று தி.மு.க., முடிவெடுத்து அவருக்கு அறிவுறுத்தியுள்ளது,'' என, தெரிவிக்கப்பட்டது.


இதில் ராசா ஒரு கருவியாக பயன்படுத்தப் பட்டிருக்கிறார் என்று அப்பட்டமாக தெரிகிறது- பாவம்..!!!
 
 
ஒரு காமெடி பீசு : செல்வி ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில் படுத்துக்கொண்டு ஒரு அறிக்கை விட்டார்...


"ராசாவை பதவியில் இருந்து நீக்கினால் - அதன் காரணமாக தி .மு. க தனது ஆதரவை மத்திய அரசுக்கு விலக்கிகொண்டால் அ.தி.மு.க ஆதரவளிக்கும்" என்ற காமெடியான அறிக்கையைகூட கருணாநிதி முறியடித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும்..

15 comments :

எம்.ஏ.சுசீலா said...

சுடச் சுட வந்திருக்கும் சுறுசுறுப்பும்,விறுவிறுப்புமான பதிவு.

தமிழ் வினை said...

சரவெடி! தயாரிப்பு யாருன்னு சொல்லவேயில்லையே ?

ramalingam said...

மறுபடியும் தயாநிதி மாறனை போட்டிருந்தால் அவர் ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு கண்டிப்பாக ஒத்துக் கொண்டிருக்க மாட்டார் என்பது என் கணிப்பு. என்றாவது ஒருநாள் இது விபரீதம் ஆகும் என்பது அவருக்குத் தெரியும். இப்போது அவர் கிளீன் ஸ்லேட். ராசா டூ லேட்.

தமிழ்மலர் said...

// கதை, திரைக்கதை, வசனம் மற்றும் டைரக்ஷன் - கலைஞர் மு.கருணாநிதி //

கதாநாயகிக்கு அமைச்சர் பதவி தரப்படாது தான் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.

பகுதி 2 விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

மர்மயோகி said...

//எம்.ஏ.சுசீலா said...
சுடச் சுட வந்திருக்கும் சுறுசுறுப்பும்,விறுவிறுப்புமான பதிவு.//

இந்த செய்திதானே இப்போது ஊடகங்களுக்கு இப்போது தீனி போட்டுகொண்டிருக்கிறது மேடம்..

மர்மயோகி said...

// தமிழ் வினை said...
சரவெடி! தயாரிப்பு யாருன்னு சொல்லவேயில்லையே ? //

தயாரிப்பு யாரென்று உங்களுக்கு தெரியாதா?

மர்மயோகி said...

//ramalingam said...
மறுபடியும் தயாநிதி மாறனை போட்டிருந்தால் அவர் ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு கண்டிப்பாக ஒத்துக் கொண்டிருக்க மாட்டார் என்பது என் கணிப்பு. என்றாவது ஒருநாள் இது விபரீதம் ஆகும் என்பது அவருக்குத் தெரியும். இப்போது அவர் கிளீன் ஸ்லேட். ராசா டூ லேட். //

ராசா தெரிந்தேதான் இதற்க்கு உடன்பட்டிருப்பார் - உண்மையான விசுவாசம்..

மர்மயோகி said...

தமிழ்மலர் said...

//கதாநாயகிக்கு அமைச்சர் பதவி தரப்படாது தான் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.

பகுதி 2 விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம். //

சீக்கிரமே கதாநாயகிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்..ஏன் ராசாவுக்கும் கூட கிடைக்கும்....

மங்குனி அமைச்சர் said...

ஐம்பது வருட அனுபவம் பேசுகிறது

மர்மயோகி said...

ஐம்பது வருட அனுபவம் இதற்குத்தானா மங்குனி?

விக்கி உலகம் said...

எம் பொண்ணு பெரியாளா ஆவரத விரும்பாத எதிரிகளுக்கு செக்

மர்மயோகி said...

எந்த செக் ? "check" ஆ ? இல்லை "cheque" ஆ?

சாமக்கோடங்கி said...

நரித்தந்திரம்...

சாமக்கோடங்கி said...

இன்னைக்கு செம டைமிங் காமெடி.. ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தி ஓடிக்கொண்டு இருக்கும்போது சேனலை மாற்றினால்..

"ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள.."

என்று ரஜினி பாடிக் கொண்டு இருந்தார்..
சிரிப்பை அடக்க முடியவில்லை...

vaithiyanathan said...

தயாநிதி மாறன் அவர்களிடம் எந்த துறையை கொடுத்தாலும் சிறப்பாக செயல்படுத்தடுத்த முடியும் என்பதை நிருபித்துள்ளார்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?