Pages

Saturday, November 6, 2010

ஒபாமா வருகை - வீணாகும் பொருளாதாரம் - பறிபோகும் சுயமரியாதை

அமெரிக்க அதிர்பர் ஒபாமா வருகையை ஒட்டி இந்தியா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. (ஆமாம்...வரலாறு கண்ட பாதுகாப்பு யாருக்குதான் போடுவார்கள்?) அவருக்காக - மும்பை தாஜ் ஹோட்டல் முழுவதும் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது பாதுகாப்புக்காக அமெரிக்க விமானப்படை, கப்பல் படை எல்லாம் மும்பையை முற்றுகை இட்டுள்ளன. சொல்லப்போனால் மும்பை டெல்லி போன்ற நகரங்கள் ஒபாமா வருகைக்கு நான்கு நாளைக்கு முன்பேயும், அவர் இந்தியாவில் தங்கி இருக்கப்போகும் நான்கு நாட்களும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கப்போகிறது. அதாவது ஒரு நாட்டின் ஜனாதிபதி இந்தியாவிற்கு வருவதற்காக நமது நாட்டையே அவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் ஒரு அவலத்தை செய்திருக்கிறார்கள்..இதற்குத்தானா இவ்வளவு பாடுபட்டு சுதந்திரம் வாங்கினார்கள்?


நமது பிரதமரும்தான் முக்கால்வாசி நாட்கள் ஒவ்வுறு நாடாக பயணம் செய்து கொண்டிருக்கிறார்..இப்படித்தான் ஒவ்வொரு நாட்டிலும் ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கின்றவா? அவரகளது நாட்டை நம் கட்டுப்பாட்டில் வைத்துகொள்கிறோமா?

ஏன் இந்த அடிமை புத்தி?

இன்னும் சொல்வதென்றால் நமது மத்திய அமைச்சர்கள் அமேரிக்கா சென்று, அங்குள்ள குடியுரிமை அதிகாரிகளால் ஆடைகளை களைந்து சோதனை செய்யப் பட்டிருக்கிறார்கள்..

இவ்வளவு கேவலப்பட்டும் ஏன் ஒபாவுக்கு இப்படி ஒரு மரியாதை?

அவர் அமெரிக்காவுக்குதானே அதிபர்? உலகத்துக்கு இல்லையே?
இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கேவலப்படுத்தும் அளவுக்கு ஒபாமாவுக்கு சிறப்பு கார் ஒன்று..எல்லாவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நிறைந்ததாம். இங்குள்ள ஆபாசப் பத்திரிக்கைகள் அதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதி புளங்காகிதம் அடைந்துகொள்கின்றன..த்தூ..வெட்கம்கெட்டவர்களே..!


இந்தியாவின் பாதுகாப்பில் நம்பிக்கை இல்லையென்றால் ஏனடா இங்கே வருகிறீர்கள்..ஒரு நாளைக்கு ஒபாமாவிர்கான செலவு எவ்வளவு தெரியுமா?


சுமார் இந்திய பணம் 900 கோடி ரூபாய்..அப்படி என்றால் நான்கு நாட்களுக்கு? 3600 கோடி ரூபாய்களாகும்.


இதெல்லாம் யாருடைய பணம்? அல்லது எதற்காக இந்த செலவு?

இப்படி இவ்வளவு செலவு செய்து, சுயமரியாதையும் இழந்து நிற்கிறது இந்திய அரசு..அப்புறம் :

நமது நாட்டில் நேற்றைய தினம் தீபாவளி..

எல்லா மக்களும் உறவினர்களுடன் - இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையான படங்களுடன் - டி விக்களை பார்த்த வண்ணம் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி இருப்பீர்கள்..


வருடம் பூராவும் உழைத்ததற்காக முதலாளிகளிடம் உரிமையாக போனஸ் பெற்று, ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு பட்டாசு வாங்கி கொளுத்தி மகிழ்ந்திருப்பீர்கள்..

சாலையில் வருவோர் போவோர்பற்றி கவலைப் படாமல் வெடிகளை வெடித்து தீபாவளியை கொண்டாடி இருப்பீர்கள்...

ஒபாமாவுக்கான செலவு மட்டுமல்ல - ஒவ்வொரு வருடமும்


தீபாவளிக்கும்தான் இவ்வாறு காசு கரியாகிக் கொண்டிருக்கிறது..


 

4 comments :

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ஒபாமாவின் வருகை இருதரப்பு நட்பை பலப்படுத்தும் என்பது நம்பிக்கை.. ஆனால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நமது நாடு செய்திருக்க வேண்டும்.. அமெரிக்காவின் பாதுகாப்புப் படை இங்கு வந்தது நமது நாட்டுக்கு கேவலமே...

காசு கரியாக மாறுகிறது என்று நான் சொன்னேன்.. என் அண்ணன் சொன்னார்.. "காசு கரியாக மாறவில்லை.. காகிதம் மகிழ்ச்சியாக மாறி இருக்கிறது..." என்று...

சாமக்கோடங்கி..

மங்குனி அமைச்சர் said...

பழகிப்போன பெருமையாக நினைக்கும் அவமானங்கள் .

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ஆஹா நான் தான் மோதல் ஆளா...? எல்லாரும் சொல்ற மாறி இன்னைக்கு வடை எனக்கு தானா...?

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

மங்குனி.. ஜஸ்ட் மிஸ்ஸூ ... வடையை நான் தட்டீட்டேன்...

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?