Pages

Sunday, August 7, 2011

டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம்..


என்னதான் ஆயிரம் சந்தர்பவாதி என்று சொல்லப்பட்டாலும், ஜாதி வெறியூட்டி கட்சி வளர்ப்பவர் என்று விமர்சிக்கப்பட்டாலும், ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு நிலையை எடுப்பவர் என்று அறியப்பட்டாலும், பாமக கட்சியின் நிறுவனர் ராமதாசின் மூன்று நிலைப்பாடுகள் முழுதும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியது மட்டுமல்ல ஆதரவளிக்கக்கூடிய ஒன்றுகூட..

சாராயம், புகைப்பிடித்தல் மற்றும் சினிமா போன்ற சமூக சீர்கேடுகளுக்கு அவர் என்றும் ஒரு வலுவான எதிர்ப்பு காட்டி வருவது வரவேற்க்கத்தக்கதே..

 மரம் வெட்டுதல், இன்னும் அரசின் சில நல்ல திட்டங்களுக்கு கூட தேவையற்ற எதிர்ப்பு (துணை நகரம், விமான நிலைய விரிவாக்கம் - போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது) போன்ற  மக்கள் விரோதப்போக்கில் செயல்பட்டாலும், மது, புகை, சினிமா போன்றவைகளி அவர் கடுமையாக எதிர்த்து வருவது பாராட்டத்தக்கது.

இதோ, உள்ளாட்சி தேர்தல்களுக்கு பிறகு, "டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம்" என்று ஒன்றை அறிவித்திருக்கிறார்.

மக்கள் நலனை பேணவேண்டிய அரசுகளே, மூலைக்கு மூலை சாராயக்கடைகளை திறந்து வைத்துக்கொண்டு, அந்த விஷத்தை விற்கும் கேவலத்தை செய்துகொண்டிருக்கின்றன.
இதை எதிர்க்க வேண்டிய எதிகட்சிகளே, குடிக்கு ஆதரவான நிலையில் இருப்பதால் குடிகாரர்களின் எண்ணிக்கையும், அநியாயமும், பொறுக்கித்தனமும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கின்றன.
சாலையோரங்களில் அநாகரீகமான முறையில் நாய் போன்று கத்திகொண்டிருப்பது, கூச்ச்சளிட்டுக்கொண்டிருப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற கேவலங்களை மனிதன் என்ற மிருகங்கள் செய்துகொண்டிருக்கின்றன.

இவைகளை களைவது மட்டுமே சமூக உயர்வுக்கு நல்ல வழிவகுக்கும்..

டாக்டர் ராமதாஸ் சொன்னமாதிரி எந்த விட அடக்குமுறைக்கும் பயப்படாமல் இந்த சாராயக்கடைகளை அடித்து நொறுக்கி ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி இந்த சமூக அவலங்களை அகற்றினால் நாளைய சமுதாயம் அவரை நன்றியுடன் நினைவுகூறும்.

6 comments :

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இனி ஏதாவது செய்யனும் அல்ல அதான்...

பார்க்கலாம் பமக எவ்வளவு தூரம் செல்கிறது என்று பார்ப்போம்...

ஜெய்லானி said...

இருப்பதை வெளியே காட்டாட்டி வேலைக்காகாதே அதான் இப்படி ..அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...!!

ஷர்புதீன் said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...!!

Bala said...

நண்பா நீங்கள் பாமக மாநாடு, பொதுக்கூட்டங்கள் நடக்கும் இடத்திற்கு சென்றதுண்டா? காவிரியை விட தண்ணீர் கரைபுரண்டு ஓடும் இடம் என்றால் அதுதான். பாமக கட்சி அலுவலகங்களிலேயே கேஸ் கேஸாக மதுபாட்டீல் இருக்கும்.

அரசியலில் தனித்து விடப்பட்ட பிறகு, எப்படியாவது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து விடவேண்டும் என்ற எண்ணத்தினாலேயே ஒழிய வேறெந்த நல்ல எண்ணமும் இந்த ஆளுக்கு கிடையாது. இதற்கு முன் தன் மகன் அமைச்சராக இருந்தபோது இதே போராட்டம் நடத்தி இருக்கலாமே? ஏன் நடத்தவில்லை? அப்போது வரவேண்டியது வந்துகொண்டிருந்தது. அதான்.

மதுக்கடைகள் வேண்டும் என்பது என் வாதமல்ல. ஆனால் இந்த ஆள் செய்வது சரியல்ல, எல்லாம் சுயநல அரசியல். அவ்வளவுதான். குடிகாரர்கள் அனைவரும், அது வன்னியராக இருந்தாலும் என் கட்சியில் இருக்க கூடாது என்று அறிக்க விட சொல்லுங்கள் பார்போம்?

vels-erode said...

its a poewrful advt.

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி..
டாக்டர் ராமதாஸ் ஒரு அரசியல் பச்சோந்தி . அதுமட்டுமல்ல அரசியல்வாதிகள் அனைவருமே சுயநலத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும், புகழுக்காகவும்தான் எந்த ஒரு காரியமும் செய்வார்கள்.
இருந்தாலும் - அவர்கள் எதற்கு வேண்டுமென்றாலும் செய்துகொண்டு போகட்டும், - இந்த போராட்டம் மட்டும் வெற்றியடைந்து விட்டால் - மக்களுக்கும் - எதிர்காலத்திற்கும் பயன்தரும்தானே?

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?