Pages

Monday, October 31, 2011

ஏழாம் அறிவு - சிற்றறிவு.



பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கதைகளை திரைப்படங்களாக எடுக்கும்போது - அதைப்பற்றிய ஒரு பிரம்மாண்டத்தை பரப்பிவிடுவது இங்குள்ள சினிமாக்காரர்களுக்கும், அதை நம்பியே வாழும் ஆபாச ஊடகங்களுக்கும், அதைப்பற்றியே பிரஸ்தாபிக்கும் - இலவச விளம்பரதாரர்களான பதிவர்களுக்கும் ஒரு கடமையாகிவிட்டது. 


பதினாறு நூற்றாண்டுகளுக்கு முன்பு  வாழ்ந்த ஒரு மன்னன் சீனாவிற்கு சென்று அங்கு வாழ்ந்த  மக்களை ஆபத்திலிருந்து  காப்பாற்றியது மட்டுமல்லாமல் சில கலைகளையும் கற்றுகொடுத்ததாகவும், இன்னும் அங்கு அவர் தெய்வமாக போற்றப்படுவதாகவும் அந்த மன்னன் தமிழன் என்றும் பீலா விட்டிருக்கும் கதைதான் ஏழாம் அறிவு.

 பதினாறு நூற்றாண்டுகளுக்கு முன்பு   காஞ்சிபுரம் புகுதியை ஆண்ட ஒரு மன்னன் தனது  மகன் போதி தர்மனை சீனாவிற்கு அனுப்பி வைக்கிறார். - மூன்றாண்டுகளுக்கு பிறகு சீனாவிற்கு கொடிய நோய் பரவப்போகிறது, எதிரிகள் தாக்கப்போகிரார்கள் என்று அறிந்த அந்த தந்தைக்கு, தனது மகன் அதே சீனர்களால் விஷம் வைத்து கொல்லப்படுவான்  என்று அறியாதது வேடிக்கையே..

இவர்களால் தமிழர் என்று போற்றப்படும் போதி தர்மர், சீனர்களுக்கு வித்தைகள் மற்றும் அறிய மருத்துவ கலைகளை கற்று கொடுத்ததாக சொல்லும் இவர்கள், அவர்களுக்கு எந்த மொழியில் இதையெல்லாம் பயிற்றுவித்தார் என்று காட்டவே இல்லை. காரணம் போதி தர்மர் சீனர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசியதாக காட்டப்படவே இல்லை..ஊமை பாஷை பேசுவது போல தான் இருக்கிறது..எப்படி இவர் அறிய குறிப்புகளை கொடுத்தார் என்றே தெரியவில்லை.

தங்களை உயர்த்திக்கொள்வதர்காக  , மற்றவர்களை கொடியவர்களாக சித்தரிக்கும் இந்த போக்கு எவ்வளவு பயங்கரமானது என்று இவர்கள் அறியவில்லையா? தம்மை எல்லாவிதத்திலும் காப்பாற்றிய போதிதர்மனை அந்த சீனர்களே விஷம் வைத்து கொன்றதாகக்காட்டுவது எவ்வளவு பெரிய நயவஞ்சகத்தன்மை? எப்பேர்ப்பட்ட வரலாற்று திரிபு?

தற்காலத்துக்கு வரும் கதையில், பதினாறாம் நூற்றாண்டில் சீனர்களுக்கு வந்த அதே பயங்கரமான வியாதியை, இந்தியாவுக்கு பரப்பி, அதன் மூலம் இந்தியர்களை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சீனர்களின் தந்திரம் என்றால்,   இந்த வியாதி சீனாவுக்கு பரவும் என்று முன்கூட்டியே யூகித்து தன மகன் போதி தர்மனை அனுப்பி அவர்களை  போதி தர்மனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தந்திரம் யாருடையது..?அப்படி பார்த்தால் அந்த வியாதியை சீனர்களுக்கு பரப்பி விட்டது போதி தர்மனின் தந்தையா ? என்ற எண்ணம் ஏற்படுவதற்கு காரணம் இவர்களது  கதையமைப்புதான்.

இந்தியாவில்  போதி தர்மனைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் மாணவியை கொள்வதற்காக வரும் டான்க்லீ என்ற வில்லன் எல்லாரையும் "நோக்கு வர்மம்" மூலம் தன கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிறான்..அப்படி நோக்கு வர்மத்தால் கட்டுப்பட்டவர்கள் எல்லாம், - ஒரு சந்தர்பத்தில் சகல கலைகளையும் கற்றவர்கள் போல சண்டை போடுவது மாபெரும் கேலி கூத்து..? நோக்கு வர்மத்தில் ஒருவனது மனதை கட்டுப்படுத்தலாம் என்றுதான் அவர்களே கூறுகிறார்கள் ..எனில்...சகல கலைகளையும் எப்படி நிமிடத்தில் கற்றுக்கொன்றார்கள் என்ற கேள்வி எழுகிறது..

அந்த வில்லனில் வேலையே படம் முழுவதும் எல்லாரையும் நோக்கு வர்மத்தால் கொல்வதே. அப்படி இருக்கும்போது கதாநாயகியைக் கொல்வதற்கு ஏன் அவ்வளவு சிரமப்பட வேண்டும்? அவனது கைக்கூலி புரபாசர்ரிடம் சொன்னால் அந்த மாணவி வரப்போகிறாள். நோக்கு வர்மம் மூலம் அவளை கட்டுக்குக்குள் கொண்டுவந்து கத்தியை வைத்தோ தூக்கு மாட்டிக்கொண்டோ தற்கொலை செய்துகொள்ள செய்திருக்கலாம் தானே?

டி ஏன் எவை தூண்டுவதன் மூலம் போதி தர்மனின் வம்சா வழியை சேர்ந்த ஒருவனுக்கு அந்த திறமையை கொண்டு வருகிறார்களாம்..சிரிப்பாக இருக்கிறது..அந்த திறமையை பெற்ற அவன், அதே நேரத்தில் சிக்ஸ் பேக் உடம்பையும் பெறுவது மெகா மெகா நகைச்சுவை..

விடுதலைப்புலிகளுக்கு வக்காலத்து வாங்குவதற்காக தமிழர்களை உசுப்பேற்றும் வசனங்களை அங்கங்கே தூவி இருக்கிறார்கள்..இந்த படத்தில் வரும் ஒரு வசனம் போல - தமிழ் தமிழர்கள் என்று பேசுவது இவர்களுக்கெல்லாம் பேஷனாகி விட்டது..

மலேஷியாவில் அடிக்கிறான், இலங்கையில் அடிக்கிறான் கடைசியில் இந்தியாவிலேயே வந்து அடிக்கிறான் என்ற வசனம் வெறுப்பாக இருக்கிறது..

மலேசியாவில் சட்டத்தை மீறினால் இவர்களை தடவி கொடுக்க வேண்டுமா?

இலங்கையில் நடந்தது துரோகமாம்.. இலங்கையில் போரிட வக்கில்லாமால், இந்தியாவை தலை  இட செய்தது மட்டுமின்றி, நமது நாட்டிலேயே குண்டு வைத்து வன்முறை செய்ததற்கு என்ன பெயராம்?

கதாநாயகனுக்கு இப்படத்தில் வேலை குறைவுதான்...அதிலும் நடிப்பே வரவில்லை எனபது மகா ஆச்சரியம்.

சீனாவுக்கு எல்லா கலைகளையும் கற்று கொடுத்தது தமிழன்தான் என்று கதை விட்டது போல, அமெரிக்காவுக்கு அணுகுண்டை கற்று கொடுத்தது, ரஷ்யாவுக்கு கம்யூனிசத்தை சொல்லி கொடுத்தது, அரபு நாடுகளுக்கு எண்ணைவளத்தை கண்டு பிடித்தது, இன்னும் அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கும் காரணம் தமிழன்தான் என்று வரிசையாக ரீல் விட ஆரம்பித்து விடுவார்கள்..
காத்திருப்போம்..காதுகளில் பூச்சுற்றியபடி..
படம் எடுக்கிறானாம் படம்..

9 comments :

vivek kayamozhi said...

உங்கள் விமர்சனம் சரியே.... ஓவர் பில்ட் அப் உடம்புக்கு ஆகாது என்பதற்கு சமீபத்திய உதாரணம் இந்த படம். முதலில் வரும் போதி தர்மர் பகுதி ஒ.கே . பிற்பாடு நிகழ் காலத்தில் வரும் காட்சிகள் மட்டமான ராம.நாராயணன் ரகம். பின்னணி கதறல்இசை சிரிப்பையே வரவைத்தது. அதிக சத்தமாக இருந்துவிட்டால் அது பிரமாண்டமான இசையோ?
போதி தர்மரை தெரியாதது அவ்வளவு பெரிய குற்றமா? வீரமாமுனிவரை ஜெர்மனியில் யாருக்கும் தெரியாது, ஆனால் இங்கே அவர் ஒரு பிரபலமான மதகுரு, தமிழ் தொண்டு ஆற்றிய கிறிஸ்தவ பாதிரியாராம், அதேபோல் தமிழ் அறிஞர் கால்டுவெல் ஐ அவர்கள் ஊரில் யாருக்கு தெரியும்? பென்னி குக் -குமுளி முதல் ராம்நாடு வரை இருக்கும் விவசாய மக்களுக்கு ஒரு தெய்வம் போல தான், அவர் வாரிசுகளுக்கு இந்த வரலாறு சமீப காலம் வரை தெரியாது. அவ்வளவு ஏன்? மலையாளியான எம்.ஜி ஆர் க்கு கேரளாவில் ஒரு பிரபலமும் இல்லை, இங்கே அவர் சிலை இல்லாத தெரு இல்லை. ஐரோப்பிய ஆன்மிக உலகம் அவதாரமாக பார்க்கும் ரமணரையும்,சிவானந்தரையும் திருச்சுழி காரனுக்கும்,பத்தமடை காரனுக்கும் தெரியுமா? இந்த கதையெல்லாம் எதற்கு? தமிழன் மேல் உண்மையான அக்கறை இருந்தால் வசனத்தில் வரும் பக்கத்து நாடு என்பதற்கு பதில் இலங்கை என்று பேரை சொல்லி இருக்கலாமே? ஈழ போரை மையமாக வைத்து படம் எடுத்து தமிழர்களுக்கு வீரம் ஊட்ட வேண்டியது தானே? படம் வராது, போட்ட காசும வராது. நீங்கள் சம்பாதிக்க அரசியல் வியாதிகள் போல் தமிழும்,தமிழனும் தான் கிடைத்தானா?

Jawahar said...

ஓஹோ, படத்துக்கு இப்படி எல்லாம் விளம்பரம் தேடித் தர முடியுமா? நல்லா இருக்கே ஐடியா!

http://kgjawarlal.wordpress.com

sunilray said...

cghvhvbjvjhvh

vinoth said...

nee pappana da

ARM said...

Hello No one asked India to Interfere just your bloody Indian came here and got there ass kicked. and dialoges are true If you don't liked it then why the hell you watched it. Btw know the Eelam histroy before writing shit blogs like this asshole

Sign in Computers said...

இது ஒரு இனபெருமை பேசும் படம் ,எந்த ஒரு இனத்துக்கும் மொழியாலோ, நிறத்தாலோ பெருமை கிடையாது, ஒழுக்கம், நேர்மை,கண்ணியம் அடுத்தவரிடம் காட்டும் அன்பு, இதனால் மட்டுமே பெருமை. இவர்களே மஞ்சளை கண்டுபிடிததுபோல் பெருமை பட்டுகொலகிரர்கள், அப்போ பென்சிலின் கண்டுபிடித்தது யாரு, பல்பை கண்டுபிடித்தது யாரு, பஸ் கார் இன்னும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் எத்தனையோ சாதனங்களை கண்டுபிடித்தவர்கள் இனப்பெருமை பேசுவதிகல்லை. இன்னும் மக்கள் ஏழ்மையிலும், நோயிலும், மூட நம்பிக்கைகளிலும் , கஷ்டப்பட்டு கொண்டிஉருகின்ற நாடு இது , ஒரு பக்கம் ஏழை விவசாய மக்கள் வட்டி கடன்களால் தற்கொலை செய்து கொண்டு சாகிறார்கள் மறுபக்கம் பாபா களுக்கு தங்க சிலை வைகிறார்கள், தங்கள் ஏழைகளுக்கு தர்மம் செய்யாமல், வெடி வைத்து கரியாக்கி அதனால் இயற்கையை மசுபட்துகிரர்கள்

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட அன்பர்கள் vivek kayamozhi, jawahar, sunilray, ARM, மற்றும் sign in computer அனைவருக்கும் நன்றி

Suresh Kesavan said...

Don't see as a Tamilien.... he is an Indian. He did big achievements and made a big history in the world by doing great thing in china... Each Indian should be proud about Bodidharmar

மர்மயோகி said...

நன்றி திரு suresh kesavan
என்னதான் அவர் இந்தியர் என்றாலும் அதனால் நமக்கு எந்த உபயோகமும் இல்லை..தனது திறமையை (?) இந்தியாவுக்கு பயன்படுத்தாமல் சீனர்களுக்காகவே வாழ்ந்து மரித்தவர்..எனவே அவரைப்பற்றி பெருமை கொள்வது புத்திசாலித்தனமா ?

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?