Pages

Thursday, September 6, 2012

இப்படியுமா இருப்பார்கள் ? பிரபல பெண் பதிவரின் லட்சணம் !!!

இப்படியுமா இருப்பார்கள் ? பிரபல பெண் பதிவரின் லட்சணம் !!!

இது எனக்கு ஆச்சரியத்தை அளித்ததது..நாம் பதிவர்களைப் பற்றி எவ்வளவு உயர்வாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்... ஆனா இதை பார்க்கும்போது நமக்கே ஆச்சரியாமாக உள்ளது..

இந்த பதிவை பாருங்கள் தெரியும்....!!!!

5 comments :

பாலா said...

நண்பரே உங்களின் தளத்திற்கு அவ்வப்போது நான் வருவதுண்டு. ஆனால் பின்னூட்டமிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது. காரணம் என்னவென்று உங்களுக்கே தெரியும். உங்களுக்கு அட்வைஸ் பண்ணுமளவிற்கு எனக்கு அறிவோ, அனுபவமோ இல்லை. ஆனால் என்னைக்காவது ஒருநாள் உங்களுக்கு இந்த நிலை வரும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

அவ்வப்போது வருவதும் எதற்கு என்று கேட்பது போல இருக்கிறது உங்களின் இந்த பதிவு. உங்களின் இந்த தலைப்பைப்பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டு இங்கே வந்து வயிறெரிந்து கருத்துரை அளிக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் எனக்கு சிரிப்பாகத்தான் வரும். பதிவுலகில் உங்களின் தரத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வருவீர்கள். மற்றுமொருமுறை அது நிரூபணம் ஆகி இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி. ஆனால் இது உங்களுக்கு முற்றி விடாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

மர்மயோகி சார்.. எங்கள் தளத்தில் இன்று

http://www.terrorkummi.com/2012/09/hunt-for-hint-2-10000.html

மறக்காம கேம் விள்ளாட வாங்க சார். மெயில் போட்டு கூப்பிட முடியவில்லை அதான் உங்களை இப்படி வீட்டுக்கு வந்து மொறை வாசல் செஞ்சி கூப்பிடுகிறேன்.. :)

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட, வாழ்த்திய...வசைபாடிய.....பல்லை கடித்த..என்று அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..உங்கள் பின்நூட்டங்களைஎல்லாம் பார்த்த பிறகு...அடுத்த பதிவுக்கு தலைப்புகூட ரெடியாய்டுச்சுங்கோ......செம காமெடி போங்க....

மர்மயோகி said...

நன்றி பாலா அவர்களே..
//ஆனால் என்னைக்காவது ஒருநாள் உங்களுக்கு இந்த நிலை வரும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. //

இது எனக்கு சிரிப்பைதான் வரவழைக்கிறது..என்னவோ நான் (செங்கோட்டையன் போல) பெரிய பதவியில் இருந்தது போலவும், இப்போது திடீரென்று என் பதவியும் கட்சிப்பொருப்பும் பறிக்கப்பட்டு ஓட்டாண்டியாய் நிற்பது போலவும் இருக்கிறது உங்கள் பின்னூட்டம்..
எனினும், பின்னூட்டங்கள் ஆரோக்கியமான விவாதமாய் இருப்பது மகிழ்ச்சியே..
எல்லோரும் ஒரு மொக்கை பதிவை போட்டு ஒப்பேற்றுவது போலிருக்க - இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்களை இந்த அரசு திருப்பி அனுப்பியது தவறு என்று நான் சொல்ல வந்த விசயங்களை அதிகமான பேரிடம் கொண்டு செல்ல விரும்பினேன்..
வலைப்பதிவர் விழாவில் ஏதோ வலைப்பதிவர்கள் சமூக மாற்றத்திற்கு வித்திடுவார்கள் என்று ஒரு சில பதிவர்களின் பேட்டியை மக்கள் டிவியில் காண நேர்ந்தது..சமூக மாற்றத்திற்கு வித்திடும் பதிவர்களில் பெரும்பாலானோர், சினிமா தலைப்புகளையும், இதுபோன்ற கேலிக்கூத்தான தலைப்புகளையும்தான் பெரும்பான்மையோர் விரும்புகின்றனர் என்பதை உணர்ந்து அதை பற்றிய விழிப்புணர்வு சம்மந்தமாய் அங்கு பேசினார்களா என்று தெரியவில்லை..

வெறும் அறுபது பேர் பார்த்திருந்த அந்த "ஆஹா இதுவல்லவோ தமிழர் பண்பாடு" என்ற அந்த பதிவு - ஒரு பென்பதிவரைபற்றி பதிவு என்ற லிங்க் கொடுத்தவுடன், அறநூறு பேர் பார்க்கும் பதிவானது எப்படி.? ஒரு பின்னூட்டம் கூட வராத அந்த பதிவுக்கு (எனது பதில் பின்னூட்டங்களை கழித்து) இருபத்தைந்து பின்னூட்டங்களை கடந்தது ஏன்? இன்னும் அத்தனை பின்னூட்டங்களும் தாம் ஏமாற்றப்பட்டோம் என்ற விரக்தியையும் கொபத்தையும்தான் வெளியிட்டனவே ஒழிய - அந்த பதிவைப்பற்றி அல்ல...

நான் செய்தது பதிவர்களை என் கருத்தை படிக்க வேண்டும் என்பதற்காக திசை திருப்பும் ஒரு முயற்ச்சியே...அது தவறு என்றால் வருந்துகிறேன்..நன்றி..

மர்மயோகி said...

ஏற்கனவே இதே போன்ற "பிரபல நடிகையின் அந்தரங்க வாழ்க்கையும் ஆபாச படங்களும்" என்ற ஒன்றுமில்லாத தலைப்பை கொடுத்ததற்கே..இன்றுவரை ஐம்பதாயிரம் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது...ஹ்ம்ம் என்ன செய்ய நண்பரே...

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?