Pages

Saturday, August 7, 2010

கொஞ்சம் ரிலாக்ஸ்?

முன் குறிப்பு : இதை ஒரு விமர்சனம் இல்லாத பதிவாகப் பதிவிடத்தான் நினைத்து எழுதினேன்..ஹ்ம்ம் அதுவே ஒரு விமர்சனப் பதிவாக மாறிவிட்டது..தொடர்ந்து விமர்சனப்பதிவாகவே எழுதி சற்றே போரடிக்குது....

விமர்சனம் எழுதும்போது ஒருசாரர் பாதிக்கப் படவே செய்கிறார்கள்..அவர்களுடன் சண்டை போடவேண்டியுள்ளது..அப்படி கருத்து மோதலில் ஈடுபடும்போது தனி நபர் தாக்குதலில் வந்து கடைசியில் அடையாளம் காட்டுடா..ஏன்டா மறைந்து இருக்கிறாய் என்று வந்து விடுகிறது..


முதலில் நான் ஏன் என்னை அடையாள படுத்திக் கொள்வதில்லை என்று விளக்குவதை விட..பெரும்பாலான பதிவர்கள் தன்னை அடையாள படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றே தோன்றுகிறது..நமது உள்ளக்கிடங்கைத் தான் நாம் வெளிப் படுத்துகிறோம்..நம்மை வெளிப்படுத்த வேண்டியதில்லை என்பதே என் நிலை..

சமீபத்தில் ஒரு இயக்கத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது..

அதற்கும் முன் அந்த இயக்கம் சமீபத்தில் நடத்திய ஒரு பிரம்ம்மண்டமான பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் பேசவில்லை..அவர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தன பங்களிப்பை வழங்கி இருந்தாலும், அவர் பேசாதது, அந்த இயக்கத்தின் போட்டி இயக்கங்கள் அதை வைத்து வதந்தியைக்கிளப்பிவந்தன..அதாவது தலைவரை அவர்கள் மதிக்கவில்லை..அல்லது தலைவருக்கு இந்த கூட்டத்தில் உடன்பாடு இல்லை எனபது போல..

அதை விளக்கவேண்டிய கட்டாயம் அதன் தலைவருக்கு...

அப்போத்துதான் அவர் சொன்னார்.."இந்த இயக்கம் தலைவருக்கானது அல்ல...அதன் கொள்கைகளுக்கானது..- தலைவருக்காக வரும் கூட்டம் எங்களுக்கு தேவை இல்லை..இன்று நான் தலைவராக இருக்கலாம்,, நாளை மற்றொருவர்..தலைவர்கள் மாறக்கூடியவர்கள்..கொள்கைகள் மாறக்கூடாது...!"

இந்த சொற்பொழிவு என்னை மிகவும் கவர்ந்தது..


அதுபோலத்தான்..வலைப் பதிவு, எண்ணங்களை பதிவதற்கே தவிர..நம்மைப் பற்றி சொல்வதர்க்கல்ல..

நம் குவாட்டர் அடித்து குப்புறப்படுப்பதையும், கடன் வாங்கி காலம் தள்ளுவதையும் எதனை நாளைக்குதான் நகைச்சுவை என்ற பெயரில் எழுதிக் கொண்டிருப்பது?

சினிமாக்காரன் தான் பிழைப்பதற்காக கேவலமான சினிமாக்களை வெளியிடுகிறான்..ஆபாசமாக கண்டவளுடன் ஆடுகிறான். ரவுடியிசம் செய்கிறான்..மொத்தத்தில் மக்களுக்கு எந்த ஒரு உபயோகமும் இல்லாமல்சிறு சிறு குழந்தைகளைக்கூட சீரழிப்பதற்காகவே எடுக்கப்படும் சினிமாக்களை, பத்திரிகைகக் காரன்கூட பணம் வாங்கிக் கொண்டுதான் விளம்பரம், விமர்சனம் என்று எழுதுகிறான். வியாபாரத்திற்காக, ஆபாசப் படங்களை வெளியிடுகிறான்..


ஆனால் பதிவர்களுக்கு என்ன வந்தது..அவன் எடுக்கும் ஆபாசப் படங்களை, இது நல்ல படம், இது உலகப்படம் என்று தரம் பிரித்து மக்களை பார்க்கத்தூண்டுவதால் என்ன ஆதாயம்..

இன்னும் சில பதிவர்கள் விமர்சனம் என்ற பெயரில் பாதிக் கதையைப் போட்டுவிட்டு முடிவை வெள்ளித்திரையில் காண்க என்று தொலைக் காட்சி லெவலுக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள்..

சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாரும் எந்த ஒரு சமுதாய மாற்றத்தையும் உண்டாக்க முடியாது..உண்டாக்கலாம்..அது மாற்றம் என்பதைவிட சீரழிவாகத்தான் இருக்கும். அப்படித்தான் ஆகி விட்டது..
 
நடிகனை தலைவன் என்று கொண்டாடும் கேவலம் இந்தியாவில்தான். இன்னும் சொல்லப்போனால் குறிப்பாக தமிழ்நாட்டிலும் இன்னும் தமிழர்கள் புலம்பெயர்ந்த இடங்களிலும்தான்..


செம்மொழி மாநாடு நடந்தபோது, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும்போது இந்த மாநாடு தேவையா என்று ஓலமிட்ட சில ஓநாய்கள்,
எந்திரன் என்ற சினிமாவிற்காக தமிழர்கள் வாழும் மலேசியாவில் பிரம்மாண்ட ஒரு நிகழ்ச்சி நடந்தபோது அதைக் கொண்டாடின..

மலேசியாவில் வாழ்பவன் தமிழனில்லையா? எந்திரன்  படம் எடுத்தவன் ஹாலிவுட் காரனா..? ஒரு ஆடியோ கேசட் வெளியிட இத்தனை ஆடம்பரம் தேவையா?

இன்னும் அந்த படத்திற்காக இந்த உலகமே காத்திருப்பது போல இன்னும் இந்த பத்திரிக்கைகளும், டிவிக்களும் ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றன..

ஒரு முதலமைச்சர் இந்த கேசட் வெளியீட்டு விழாவிற்கு வேலை மெனக்கெட்டு வாழ்த்துக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்..

இப்போதே சன் டிவியில் இந்த சினிமாவிற்கான விளம்பரத்தின் தொல்லை ஆரம்பமாகிவிட்டது..ஹ்ம்ம் இன்னும் படம் வெளிவந்து விட்டால் இந்த      டி விக்காரனின் அக்கப் போர் ஆரம்பித்துவிடும்..

பத்தாதற்கு நமது பதிவர்களும் அவர்கள் பங்குக்கு போட்டி போட்டுக் கொண்டு இலவச விளம்பரம் செய்வார்கள்..

பார்ப்போம்...!!!

7 comments :

RAJ said...

"க்ளிக்" செய்து படியுங்கள்.

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

உன்னைப்போல் ஒருவன் said...

///சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாரும் எந்த ஒரு சமுதாய மாற்றத்தையும் உண்டாக்க முடியாது..உண்டாக்கலாம்..அது மாற்றம் என்பதைவிட சீரழிவாகத்தான் இருக்கும். அப்படித்தான் ஆகி விட்டது..////

well said ., thANK YOU

மங்குனி அமைசர் said...

குறிப்பாக தமிழ்நாட்டிலும் இன்னும் தமிழர்கள் புலம்பெயர்ந்த இடங்களிலும்தான்..
///


தமிழ் நாடு மட்டும் இல்லை பாஸ் , கர்நாடகா , ஆந்திரா நம்மை விட மகா கேவலம்

மங்குனி அமைசர் said...

ஐஸுக்கு எவ்ளோ நல்ல போடோக்கள் இருக்கு , இத போட்டு எங்கள ஏமாத்திட்டியே மர்மயோகி

DrPKandaswamyPhD said...

//அதுபோலத்தான்..வலைப் பதிவு, எண்ணங்களை பதிவதற்கே தவிர..நம்மைப் பற்றி சொல்வதற்கல்ல..//

மிக நல்ல கருத்து.

ஆனால் அதிகம் பதிவர்கள் பின்னூட்டங்களுக்காகவும், ஓட்டுக்களுக்காகவும், followers வேண்டுமென்பதற்காகவும், ஹிட்ஸ் வேண்டுமென்பதற்காகவும் குழுக்களாக செயல்படுகிறார்கள் என்கிற சந்தேகம் ரொம்ப நாட்களாக என் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது.

ராஜவம்சம் said...

அந்த இயக்கத்தின் பெயரையோ அல்லது தலைவரின் பெயரையோ போடாமல் உங்களைத்தடுத்தது எது?

அல்தாஃபி டி என் டி ஜே என்றால் எதாவது பிரச்சனை வருமா?

அல்லது நீங்கள் சொன்னது போல் இலவச விளம்பரம் ஆகிவிடும் என்ற என்னமா?

james said...

hi fool mind it RAJINI is SUPER. He was good man. I Know Him

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?