Pages

Saturday, August 28, 2010

கிழியும் முகமூடிகள்..

ஜெயலலிதா முதலில் முதலமைச்சராக இருந்த போது (1991 to 1996) தரமணியில் ஒரு திரைப்பட நகரை உருவாக்கி, அதற்க்கு ஜெ ஜெ திரைப்பட நகர் என்று பெயர் வைத்தார். அதற்க்கு அப்போது இங்குள்ள எதிர்கட்சிகள், ஏன் சிவாஜி பெயரை வைக்கலாமே, MGR பெயரை வைக்காலாமே என்று ஒப்பாரி வைத்தன.

பிறகு கருணாநிதி முதல்வராக வந்த போது அதற்க்கு எம்ஜிஆர் திரைப்பட நகர் என்று பெயரை வைத்தார்..இன்று அது இருந்த இடம் தெரியவில்லை...

அது இருக்கட்டும்

இப்போது திரைப்பட கூத்தாடிகளுக்காக கருணாநிதி ஒரு நகரை உருவாக்கிக்கொடுத்து, அதற்க்கு கலைஞர் நகர் என்று தனது பெயரையே வைத்துள்ளார்..இப்போது அவரது நண்பர் சிவாஜி பெயர் வைக்க வேண்டியதுதானே? அல்லது நாற்பதாண்டுகால நண்பர் எம்ஜிஆர் பெயரை வைக்கவேண்டியதுதானே..இதைப்பற்றி இப்போது எவனும் வாய் திறக்கவில்லை..

அது தவிர கூத்தாடிகள் இந்த ஊரை சீரழிக்கவே வந்தவர்கள்..அவர்களுக்காக ஒரு நகரை, அதுவும் பல ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து கட்டவேண்டிய அவசியம் என்ன..?

வடசென்னையை அசிங்கப்படுத்தி தெருவில் வசிக்கும் பலரை ஊருக்கு ஒதுக்குபுறமாய் தள்ளி அவர்களுக்கு இதுபோன்ற ஒரு இடத்தை கொடுத்து இருக்கலாம்.

ஏழைகளுக்கான அரசு என்று எக்காளமிடும் இவர்கள் இந்த கூத்தாடிகளுக்காக அரசு பணத்தை வீணாக்குவது சாதாரண மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்..
 
அடுத்து


சம்பள பாக்கிக்காக காமன்வெல்த் போட்டிகளில் விளையாட மாட்டோம் என்று சொன்ன டென்னிஸின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி போன்றோர்..

இவர்களது சம்பளத்தை செட்டில் செய்கிறோம் என்று சொன்ன பிறகு, தேசத்திற்காக விளையாடுகிறோம் என்று இந்த போலி தேச பக்தர்கள் சொல்லி உள்ளன.

டென்னிசில் ஓபன் டென்னிஸ் என்று உள்ளது. அதில் இந்த போலி தேச பக்தர்கள் விளையாண்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன..பத்தாதற்கு விளம்பரங்களில் வரும் வருமானம் வேறு..

இப்படி அநியாயத்திற்கு சம்பாதிக்கும் இவர்கள், சம்பள பாக்கிக்காக காமன் வெல்த் போட்டிகளில் விளையாட மாட்டோம் என்று மறுத்துவிட்டு, பின்பு சம்பளத்தை தருகிறோம் என்றவுடன் தேசத்திற்காக விளையாடுகிறோம் என்று சொல்வது இவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை காட்டுகிறது.

அதேபோல துப்பாக்கி சுடும் வீரன் ஒருவன், விருது தரவில்லை என்பதற்காக காமன் வெல்த் போட்டியில் விளையாடமாட்டேன் என்றும் சொன்னான்..

தேசத்திற்காக விளையாடுபவன் இதையெல்லாமா எதிர்பார்ப்பான்?


எல்லையில் நமக்காக நிற்கும் ஒவ்வொரு இராணுவ வீரனும் இவ்வாறு சொனால் நம் கதி என்ன?

இப்படி சொல்லும் போலி தேச துரோக விளையாட்டு வீரர்களை விளையாடவே தடை செய்யவேண்டும்

அடுத்து இந்திய பாராளுமன்றத்தில் நடந்த ஒரு கூத்து


எம் பி க்களுக்கு சம்பள உயர்வு வேண்டுமாம்

வெட்கம் இல்லாத ஜென்மங்களே நீங்கள் என்ன அன்றாடம் காய்ச்சிகளா?

ஒவ்வொரு எம் பி யும் எவ்வளவு சொத்துக்கள் வைத்து இருக்கிறான் என்று எல்லாருக்கும் தெரியும். பத்தாதற்கு இவர்கள் வாங்காத லஞ்சம்களா?

மக்களுக்கு சேவையாற்ற எங்களை தேர்ந்தெடுங்கள் என்று சொல்லிவிட்டு இப்படி சம்பளத்திற்காக சபையே அமளி துமளி படுத்தும் இந்த கேவலமான ஜென்மங்களையா நாம் நமது உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்தோம் என்று மக்கள் அனைவரும் சிந்திக்கும் நேரம் இது..

ஒழுங்கான அரசு என்றால்..இப்படி சம்பளம் கேட்கும் அந்த உறுப்பினர்கள் யாரும் எந்த தனிப்பட்ட தொழிலும் செய்யக்கூடாது என்று உத்திரவாதம் வாங்கவேண்டும்..அது எப்படி செய்வார்கள்..அவர்களும் அந்த கூட்டத்தில் ஒருவர்தானே..இன்னொரு அப்பட்டமான துரோகம்...இந்தியாவில் ஓட்டுப் பிச்சை வாங்கி இந்தியாவிலேயே எல்லா சலுகைகளையும் ஓசியில் அனுபவித்து, இந்தியாவில் அரசியல் நடத்தி வரும் விடுதலைப் புலிகளின் கைக்கூலி வைகோ, இந்தியாவுக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை..தான் கையூட்டு வாங்கிவரும் விடுதலைப்புலிகளுக்கும் துரோகம் செய்தான் என்பதை, கே பி என்றழைக்கப்படும் கே பத்மநாபன் என்கிற விடுதலைப்புலிகளின் உறுப்பினர் அப்பட்டமாக போட்டு உடைத்துள்ளார்.

விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் செய்தால் எங்கே தன பிழைப்பு நாறி விடும் என்பதால் இந்த தேச துரோகி விடுதலைப் புலிகளை போர் நிறுத்தம் செய்யவிடாமல் ஏராளமான பேர் கொல்லப்படுவதை இங்கு அரசியல் செய்ய பயன் படுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இப்படி ஒவ்வொரு  தேச விரோதிகளின் முகமூடிகள் கிழிந்து வந்தாலும் நாம் விழித்துக்கொள்வது எப்போது?


5 comments :

ஜீவன்பென்னி said...

அரசியல் கூத்துக்கள் இன்னும் அரங்கேரும்.

நம்ம விளையாட்டுத்துறையோட லட்சனம் தான் அங்க தெரியுது. முன்னனி வீரர்களுக்கே இந்த நிலைமைனா அவங்களுக்கு கீழ இருக்குறவங்க நிலைமையேன்னண்ணு யோசிக்கிறேன். அவங்க கேட்டதுல தப்பில்லன்னுதான் தோனுது.

எம்பிக்கள் சம்பளம், ஒரு தெலுங்கு படத்துல ஒரு காட்சியில கருப்புப்பணத்த வெளிய கொண்டுவருவதற்காக முதலமைச்சர் ஒரு சட்டத்த கொண்டுவருவாரு ஆன அதுல விதிவிலக்கு எம் எல் ஏக்களுக்கு மட்டும் சொன்ன பிறகுதான் அந்த சட்ட மசோதா அரங்கேறுவதா காட்சி யிருக்கும். ஏமாளிங்க எப்போதும் பொதுஜனம்தானே.

இந்த கேபி சொல்லுறதெல்லாம் சும்மா கதை...
ஆனா இங்க இந்த அம்மா கூட சேர்ந்துகிட்டு இவரு விடுதலைப்புலிக்காக போராடுனாறு பாருங்க அதுதான் காமெடியே.

ஜெய்லானி said...

ஒவ்வொன்னும் சும்மா நச்சுன்னு இருக்கு... ஒவ்வொரு குடிமகனும் யோசிக்க வேண்டிய வரிகள்...

Samoogavilangu said...

Paaraatukkal

Samoogavilangu said...

Marmayogie ungalin valaipadhivai nermaiyaana valaipadhivaga ennal unara mudigirathu.
aabasathayum,inaveriyayum,samoogathil kulappathai aerpaduthum padhivugalukku matthiyil ungalin nadunilaiyaana padhivugalukku paarattugal.

Chandran said...

இன்று தான் என்னால் இதை படிக்க முடிந்தது. வைகோ பற்றி நீங்கள் கூறியது முழுவதும் உண்மை. கே பத்மநாபன் வெளிபடையாக இப்போ கதைக்கிறார். விடுதலைப் புலிகளிடம் கையூட்டு வாங்கிவருபவர்கள் பட்டியலில் தமிழ்நாட்டு சில பத்திரிகைகளும் உள்ளன.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?