Pages

Monday, November 8, 2010

ஒவ்வொரு பத்திரிக்கையாளனும் வெக்கப்பட வேண்டிய விசயம்



இந்த அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி தமிழ் மலர் மின் நாளிதழ் என்ற வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது..அவர்களின் அனுமதியுடன் இதை வெளியிடுகிறேன். 


லஞ்சம் வாங்கக்கூடாது, இயன்றவரை தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை கட்டுப்படுத்திவிடவேண்டும் என்ற கொள்கை உடையவர் அந்த வட்டாட்சியர்.


தீபாவளிக்கு அந்த அதிகாரியை கோவை நிருபர் பட்டாளம் சந்தித்தது.

தனக்கு வாழ்த்து சொல்ல வந்ததாக எண்ணிய வட்டாச்சியருக்கு அதிர்ச்சி.


‘‘இதற்கு முன்பு இருந்த வட்டாச்சியர்கள் தீபாவளி தோறும் நிருபர்களுக்கு அன்பளிப்பாக போனஸ் தொகை தருவார்கள். அதுபோல நீங்களும் ஏற்பாடு செய்யுங்கள் என்றுள்ளனர்.’’

அது என்ன நிருபர் போனஸ் தொகை என்று அதிகாரிகளிடம் விசாரித்தபோது அதிர்ச்சியடைந்து விட்டார் தாசில்தார்.

நிருபர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.1000 கவரில் வைத்து கொடுக்கவேண்டும். 150 நிருபர்கள் உள்ளார்கள், நிருபர்களுக்காகவே பொதுமக்களிடம் ஆண்டுதோறும் தீபாவளி வசூல் (லஞ்சம்) வாங்குவோம். என்றுள்ளனர் ஊழியர்கள்.


அதிர்ச்சியடைந்த தாசில்தார் சில நிருபர்களை அழைத்து தனக்கு சம்பளம் 20 ஆயிரத்துக்கும் குறைவுதான். பணியில் வேலைக்கு சேர்ந்து 34 வருடங்கள் ஆகிறது. இதுவரை யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை. என்னால் தீபாவளிக்கு வாழ்த்துக்களை மட்டும் தான் சொல்ல முடியும். வேறு எதாவது கையெழுத்து போன்ற உதவிகள் இருந்தால் வாருங்கள் செய்து தருகிறேன் என்றுள்ளார்.

நீங்கள் ரொம்ப யோக்கியமான அதிகாரி என்பது எங்களுக்கு தெரியும். தாசில்தார் அலுவலகத்துக்குள் இருக்கும் கடைகளில் இருந்து உங்களுக்கு எவ்வளவு பங்கு வருகிறது என்பதும் எங்களுக்கு தெரியும். தீபாவளிக்கு பின்னர் பத்திரிக்கையில் செய்தியை பார்த்துக்கொள்ளுங்கள் என்று மிரட்டி சென்றுள்ளனர்.

இந்த மிரட்டல் குறித்து வேறு சில பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் தனது உயர் அதிகாரிகளிடமும் கூறியுள்ளார்.

அவர்களிடம் இருந்து வந்த பதில் தான் அதை விட அதிர்ச்சி

பத்திரிக்கையாளர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். கலெக்டர் அலுவலகத்தில் இருந்தே கவர் போகும்போது உங்களுக்கு கொடுக்க என்ன தயக்கம். உடனடியாக ஏற்பாடு செய்து பத்திரிக்கையாளர்களுக்கு கவரை கொடுங்கள் என்றுள்ளனர்.

34 ஆண்டுகளாக என் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரையும் சமாளித்து, லஞ்சம் வாங்காமல் இருந்து விட்டேன். இந்த பத்திரிக்கையாளர்களை எப்படி சமாளிப்பது?

நீண்ட யோசனைக்கு பின்னர் முடிவெடுத்தார் தாசில்தார்.

தனது ஊழியர்களை அழைத்து வண்டியை எடுங்கள் இன்ஸ்பெக்சன் போகவேண்டும். அப்படியே மொய் கவரையும் ரெடி பண்ணுங்கள் என்றார்.

நிருபர்களுக்கு ரூ.500 கவரில் கொடுக்கப்பட்டது.

....................................

இது ஒரு அதிகாரியின் நிலையல்ல, தமிழகம் முழுவதும் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதே நிலை தான்.

ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் மிகவும் வெட்கப்படுகிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை.

லஞ்சத்தை நிச்சயம் ஒழிக்க முடியாது.

நன்றி

தமிழ் மலர் மின் நாளிதழ்


9 comments :

மங்குனி அமைச்சர் said...

பிச்சை எடுக்கும் யோக்கியர்கள்

பொன் மாலை பொழுது said...

பத்திரிக்கை காரர்கள், நிருபர்கள்தான் சற்று யோக்கியமானவர்கள் என்ற நினைப்பில் மண் விழுந்துள்ளது. ஆனால் இது ஆரம்பமாகி பல வருடங்கள் ஆகிவிட்டன.கேட்டால், "நாங்களும் பிழைக்க வேண்டாமா? எங்களுக்கும் வீடு, குடும்பம், பிள்ளைகுட்டிகள் இல்லையா? " என்றுதான் பதிவரும்.

மர்மயோகி said...

நன்றி திரு மங்குனி அமைச்சர் அவர்களே..
பத்திரிக்கையாளர்களே இப்படி பிச்சை எடுத்தால்...யார் வந்து தவறு செய்யும் அதிகாரிகளின் தவறுகளை சுட்டிக்காட்டமுடியும்?

மர்மயோகி said...

நன்றி திரு கக்கு மாணிக்கம்

குடும்பம் பிள்ளை குட்டி உள்ளவன் என்றால் லஞ்சம் வாங்கனுமா சார்?

மர்மயோகி said...

நன்றி திரு ers

அன்பரசன் said...

//இது ஒரு அதிகாரியின் நிலையல்ல, தமிழகம் முழுவதும் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதே நிலை தான்.//

கண்டிப்பாக

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கேவலத்தின் உச்சக்கட்டம்!

சாமக்கோடங்கி said...

எழுதியவர்கள் விலை போய் உள்ளனர். எழுத்தும் விலை போய் உள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. கேவலமாக பிச்சை எடுத்து விட்டு, பின் மற்றவர்களைப் பற்றி எழுத என்ன அருகதை இருக்கிறது...?

அதுவும் சோறுபோடும் தெய்வமாக இருக்கும் எழுத்தைக் கொண்டு ஒருத்தரை மிரட்டுவது எவ்வளவு பெரிய ஈனச்செயல்..?

சீ... இவர்கள் போன்றவர்களால் எழுத்தை உயிராய் மதிக்கும் உண்மை எழுத்தாளர்களுக்கு எவ்வளவு பெரிய அவமானம்..

இவர்களைப் பார்க்கையில், காசு பணம் பார்க்காமல், விளம்பரத்திற்கு அடிபணியாமல், எவரிடமும் கையேந்தாமல் தோன்றியதை அப்படியே வெளிப்படுத்தும் ப்ளாக் தகவல் உலகத்தின் மதிப்பு எனக்குள் இன்னும் கூடுகிறது.

சாமக்கோடங்கி said...

//இவர்களைப் பார்க்கையில், காசு பணம் பார்க்காமல், விளம்பரத்திற்கு அடிபணியாமல், எவரிடமும் கையேந்தாமல் தோன்றியதை அப்படியே வெளிப்படுத்தும் ப்ளாக் தகவல் உலகத்தின் மதிப்பு எனக்குள் இன்னும் கூடுகிறது. //

இவர்களை ஒப்பிடும் போது... என்று வந்திருக்க வேண்டும்..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?