Pages

Saturday, September 10, 2011

காஞ்சனா - மூட நம்பிக்கை வியாபாரம் !



மூட நம்பிக்கையை பரப்புவதல்ல நோக்கம் என்று டைட்டில்  கார்டுடன் ஆரம்பிக்கப்படும் காஞ்சனா என்ற இந்த திரைப்படம், முழுதும் மூட நம்பிக்கைகளை பரப்பும் வண்ணமே காட்சிகள் அமைக்கப்பட்டு, மக்களை முட்டாளாக்கி சம்பாதிக்கிறார்கள்..

ஆரம்பக்காட்சியில் - ஏகப்பட்ட அலப்பரையுடன் அறிமுகமாகிறான் கதாநாயகன்.(இவர்களுக்கு கொஞ்சம்கூட கூச்சம் இல்லையா? இன்னும் திருந்தவே மாட்டாங்களா?) முக்கால் அடி உயரமே உள்ள அந்த கதாநாயகன் ஆஜானுபாகுவான தோற்றமுடைய பொறுக்கிகளை தன்னந்தனியே அடித்து உதைக்கிறான்...பிறகு எல்லா ஆபாசப்படங்களைப்போலவே  குத்தாட்டம் போடுகிறான்....குத்தாட்டம் போடுபவர்களும் பொறுக்கிகள் போலவே தோற்றமளிப்பதால் - மாற்றுத்திரனாளிகலாக இருந்தும் - பாராட்டுவதற்கு பதிலாக கோபமே மிஞ்சுவதற்கு காரணம், அவர்களது பொறுக்கிபோன்ற தோற்றம்தான்.

இந்த அறிமுகத்திற்கு பிறகு, கதாநாயகனின் இயல்பே மாறிவிடுகிறது..அவன் ஒரு பயந்தாங்கோள்ளியாம்..இதை சொல்லுவதற்காக அமைக்கப்பட்ட காட்சிகள் அறுவை என்றால் - கேவலமாகவும் இருக்கிறது...பெரிய பிஸ்தாவாக அறிமுகமாகி -  மூத்திரம் போக தாயை துணைக்கு கூப்பிட்டு இருவரும் கக்கூசில் போடும் ஆட்டம் மிகவும் அருவருப்பு..
அவனை காதலிப்பதர்கேன்றே அவனை விட உயரமான பேரழகியை நடிக்க வைத்து இருக்கிறார்கள்..பாவம் காசுக்காக இவர்களின் பிழைப்பு எவ்வளவு கேவலமாக போய் விட்டது என்பதற்கு இப்படத்தின் கதாநாயகியின் கதாபாத்திரமே சான்று..மற்றபடி அவளுக்கு வேறொன்றும் வேலை இல்லை..

கதை என்னவென்றால்..
பெற்றோர்களால் விரட்டி அடிக்கப்பட்ட ஒரு அரவாணியை முஸ்லிம் பெரியவர் ஒருவர் ஆதரவளித்து வளர்க்கிறார்..அந்த அரவாணி இன்னொரு அரவாணிக்கு அடைக்கலம் கொடுத்து மருத்துவ படிப்பு படிக்க வைத்து மருத்துவமனை  கட்ட நிலம் ஒன்றும் வாங்கி வைக்கிறார். அதை பறிக்கும் அந்த ஊர் எம் எல் வை தட்டி கேட்கும் அரவாணி, அவளை வளர்த்த முஸ்லிம் பெரியவர், மற்றும் அவரது மகனை எம் எல் எ கொன்று புதைத்து விடுகிறார். புதைக்கப்பட்ட அரவாணியின் ஆவி பேயாக வந்து - இந்த பயந்தாங்கொள்ளி கதாநாயகனின் உடம்பில் புகுந்து எம் எல் எ வை பழிவாங்குகிறது.

பேயாக வரும் அந்த ஆவி, ஏன் பயந்தான்கொள்ளி உடலில் புக வேண்டும்? எம் எல் எ வீட்டில் உள்ள யார் உடலிலாவது புகுந்தால் அவனை பழிவாங்க வசதியாக  இருக்கும்..அதை விட்டு கதாநாயகனின் உடலில் புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களையெல்லாம் நய்யப்புடைப்பது, அது நல்ல ஆவி என்று ஏற்க மனம் மறுக்கிறது..
ஆவி புகுந்தவுடன், கதாநாயகன் தனது அண்ணன் அம்மா, அண்ணி போன்றவர்களை உதைத்து அடிப்பது ஏன்? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்?  காரணம்  புரியவில்லை..முன்பு அரவாணியாக இருந்த போது அனைவருக்கும் நல்லவளாக இருந்து விட்டு, பேயாக போனவுடன் தனக்கு உடல் தந்தவனின் குடும்பத்தையே பயமுறுத்துவது அந்த பேய்க்கு அழகா?

அப்புறம் ..மனிதனாக  இருக்கும்போது சாதாரண மனிதனாக இருந்துவிட்டு, செத்து போனவுடன் அனைத்து சக்தியும் ஒருவனுக்கு வந்துவிடும் என்று காட்டுவது மூடத்தனமான நம்பிக்கை இல்லாமல் வேறு என்ன?

பேயை விரட்ட அம்மாவும் அண்ணியும் செய்யும் அமர்க்களம் அக் மார்க் தெலுங்குபட காமெடி.

இறுதியில் ஆஸ்பத்திரி கட்டி முடித்து திறப்பு விழா எல்லாம் முடிந்த பின்பு, சில பொறுக்கிகள் வந்து - யாரை கேட்டு ஆஸ்பத்திரி கட்டினாய் என்று கேட்பது உச்சபட்ச காமெடி..
முடிவு, இன்னுமொரு முனி - 3 யாம்...ஹ்ம்ம் தாங்குமா ?


12 comments :

பிரேமி said...

”முனி - 3 யாம்...ஹ்ம்ம் தாங்குமா ?” தாங்காது சாமி....... நீங்க சொல்லிட்டீங்க. நாங்க சொல்லவில்லை... நல்ல காட்டமான பதிவு...:-)

தமிழ்வாசி பிரகாஷ் said...

முனி மூணு வர போகுதா? என்ன கொடுமை சார் இது?

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா நீங்க சொல்றது சரி தான், ஆனா படத்துல வர்ற மொக்கை ஜோக்குக்கெல்லாம் மக்கள் சிரிக்கறாங்களே/? படம் செம ஹிட்டாம்.. மூட ஜனங்கள்

வால்பையன் said...

காஞ்சனா மூட நம்பிக்கை படம் தான், ஆனால் அதை நீங்கள் சொல்வது தான் சிரிப்பை வர வழைக்கிறது!

:)

வால்பையன் said...

//குத்தாட்டம் போடுபவர்களும் பொறுக்கிகள் போலவே தோற்றமளிப்பதால் - மாற்றுத்திரனாளிகலாக இருந்தும் - பாராட்டுவதற்கு பதிலாக கோபமே மிஞ்சுவதற்கு காரணம், அவர்களது பொறுக்கிபோன்ற தோற்றம்தான்.//

ஓ! ஆள் தோற்றத்தை பார்த்தே அவன் பொறுக்கியா இல்லையான்னு கண்டுபிடிச்சிருவிங்களா? அவ்ளோ பெரிய அப்பாடக்கட் எங்க என்ன பண்றீரு, போலீஸ்ல சேர்ந்து பொறுக்கிகளையெல்லாம் புடிக்கலாம்ல!

அதுவும் மாற்று திறனாளிகளில் பொறுக்கிகளை கண்டுபிடிக்கும் சிறப்புபிரிவு கிடைக்கலாம், அங்கே இஸ்லாமியர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளீக்கப்படும் அனைவருக்கும் தெரிந்த உண்மை!

:)

வால்பையன் said...

//மனிதனாக இருக்கும்போது சாதாரண மனிதனாக இருந்துவிட்டு, செத்து போனவுடன் அனைத்து சக்தியும் ஒருவனுக்கு வந்துவிடும் என்று காட்டுவது மூடத்தனமான நம்பிக்கை இல்லாமல் வேறு என்ன?//

செத்து பின் மறுமை உண்டு என்பது மட்டும் மூட நம்பிக்கை இல்லையா?

அடுத்தவனை குறை கூறும் முன்னால் உங்கள் முகத்தில் உள்ள கரியை முதலில் துடையுங்கள்!

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட அன்பர்கள் சந்தோஷி, தமிழ்வாசி Prabakar, சி.பி செந்தில்குமார்..மற்றும் மெனக்கெட்டு மூன்று பின்னூட்டங்கள் இட்ட "வால்" பையன் ஆகியோருக்கு நன்றி..

sugam said...

உங்களை போன்ற தற்குறிகளுக்கு இல்லை இந்த படம்.......கோடான கோடி ஏழை ரசிகர்கள் தங்கள் வாழ்கையில் படும் இன்னல்களை மறக்க இந்த திரைப்படம் நிச்சயம்....உதவி செய்திருப்பதை நான் நேரிடையாக திரை அரங்கில் பார்த்தேன்.....பிறகு உம்மை போன்ற தற்குறிகளின் விமர்சனகளை படித்தால் சிரிப்பு தான் வருகிறது.....தயவு செய்து இதை போன்ற விளம்பரத்திற்கான விமர்சங்களை நிறுத்தவும்.....

sugam said...

///ஹா ஹா நீங்க சொல்றது சரி தான், ஆனா படத்துல வர்ற மொக்கை ஜோக்குக்கெல்லாம் மக்கள் சிரிக்கறாங்களே/? படம் செம ஹிட்டாம்.. மூட ஜனங்கள் ///

ஜனங்கள் முட்டாள்கள் இல்லை ......உங்களை போன்ற அரை குறை தான் முட்டாள் ......நீங்கள் சொல்லும் ஜனங்கள் தான் நம் மாநிலத்தில் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள்.....Don 't be too Smart

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

வால்பையன் said...

இந்த பதிவு காணாம போச்சுன்னு சொன்னாங்க!?

மர்மயோகி said...

ஹஹாஹ்..
திரு வால்பய்யன் அவர்களே..
அடிக்கடி இது மாதிரி ஆகிவிடுகிறது...கொஞ்ச நேரம் நீங்கல்லாம் சந்தோசமாக இருப்பதற்காக (?) :)

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?