Pages

Saturday, November 19, 2011

இலவசங்களால் இழந்தவை..தமிழக முதலமைச்சர், பால்விலை, மின்கட்டணம்,  பேருந்து கட்டணம் போன்ற மக்களின் அத்தியாவாசிய பொருட்களின் விலைகளை இருமடங்காகக ஏற்றிவிட்டு, அதற்கான காரணங்களாக சென்ற திமுக ஆட்சி, மற்றும் மத்திய அரசின் பாரபட்சமான போக்கு ஆகியவைகளை காரணங்களாக சொல்லி இருக்கிறார்.

மேற்கண்ட காரணங்களை கூறிவிட்டு, இதற்க்கு போது மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்ற உருக்கமான (?) வேண்டுகோளும் வைத்திருக்கிறார். வழக்கம்போல, ஓட்டுபொறுக்கி அரசியல்வாதிகள், இந்த விலையேற்றத்தை உடனேயே வாபஸ் பெறவேண்டும் என்று கூக்குரலிடுகின்றன.. ஆர்பாட்டம் நடத்தபோகின்றனவாம்...இதிலும் பொதுமக்களுக்கு இடைஞ்சலை எற்பபடுத்துவதை தவிர வேறு என்ன செய்ய போகிறார்கள்..இவர்களது இந்த கூச்ச்சல்களினால் ஏறிய விலையேற்றம் இறங்கி விடுமா? 
அதற்காக எதிர்ப்புகளை    காட்டமால் இருக்கக்கூடாது என்று சொல்ல வரவில்லை..
இன்று கூக்குரலிட்டு அலறும் அனைத்துக்கட்சிகளும், ஆளும்கட்சி உட்பட, இந்த விலையேற்றத்துக்கு காரணமானவர்களே.
ஆட்சியை பிடித்துவிடவேண்டும் என்ற பதவி வெறியுடன், எந்த பின்விளைவுகளையும் பற்றியும் சிந்திக்காமல், வீண் இலவசங்களை அள்ளிக்கொடுத்ததின் விளைவை இன்று நாம் அனுபவிக்கிறோம்.

ஜன நாயகககடமையான வாக்களிப்பதற்கே இலஞ்சம் என்ற போக்கை ஆரம்பித்து வைத்த திராவிடக்கட்சிகள், அந்த வாக்கை அதிகரிக்க இலவச வாக்குறுதிகளை அள்ளி வழங்கின. 

தமிழ் தமிழன் என்று இனப்பெருமை பேசும் தமிழன் இந்த இலவசங்களினாலேயே வீழ்ந்தான். சினிமா மாயை ஒருபக்கம், சின்ன்னத்திரை தாக்குதலில் நாள்தோறும் மயங்கிக்கிடக்கும் ஏழை மற்றும் நடுத்தரவர்க்கம், இந்த இலவசங்களினால் தன இயல்பான உழைப்பை மறந்து, இலவசத்துக்கு அடிமையாகி, இன்று விழி பிதுங்கி நிற்கின்றன. 

அத்தியாவாசியப்போருட்களின் விலையை ஏற்றிவிட்டு, மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று சொல்லும் ஆட்சியாளருக்கு, மக்களை அடிமையாக்கி சம்பாதிக்கும், சினிமா, சாராயம் , சிகரெட் போன்ற நச்சுப்போருட்களின் விலையை ஏற்ற என்ன தயக்கம்?

கார்பொரேட்  முதலாளிகளின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமா   என்ற அச்சமா?

இன்று இந்த விலை எற்றத்திர்க்காக கூக்குரலிடும் அத்தனை அரசியல் வியாதிகளும் நாளை - தேர்தல் அறிவிக்கப்பட்டால் இதே இலவசங்களை அறிவிக்கும்  கட்சிகளுடன் கூட்டணிக்காக வாசலில் காத்துக்கிடந்து, இடங்களை பெற்று, நம்மிடமே ஓட்டுப்பிச்சை கேட்டு வருவார்கள்..

விடுதலைப்புலிகளுக்காக நாள்தவறாமல் கூக்குரலிடும் இந்த ஓட்டுப்பொறுக்கிகள், தமிழக மக்களுக்கென்று ஒருநாள் போலி ஆர்பாட்ட்மிட்டுவிட்டு  ஒதுங்கி  நின்றுவிடுவார்கள்..

நாம் தான் விழிப்பாக இருக்கவேண்டும்...இலவசங்களை அறிவிக்கும் அனைத்து கட்சிகளையும் புறக்கணிக்கவேண்டும்,,புறக்கணித்து எந்த கட்சியை தேர்ந்தெடுக்கலாம் என்ற கேள்வி வரும்....

இப்படி நாம் புறக்கணித்தல் நிச்சயம் ஒரு மாற்றம் வரும்...அந்த மாற்றம் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும்.

உள்ளாட்சி தேர்தல்களில் எப்படி ஒரு வேட்பாளரின் கடந்தகால அரசியல் நடவடிக்கைகள், அவரது பண்பு  போன்றவற்றை ஆராய்ந்து தேர்ந்துக்கிரோமே அதே போன்ற சூழ்நிலை சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்தால் அப்போது வரும் ஆட்சி - சினிமா, சாராயம், ஓட்டுக்கு பணம் என்ற அரசியல் வியாதிகளை அழிக்கும் ஆட்சியாக கூட இருக்கலாம்..

2 comments :

ஜெய்லானி said...

என் மனதில் ஓடியதை அழகாக வெளிப்படுத்தி விட்டீங்க :-)

mgsuresh said...

I like your article. Hats off.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?