Pages

Monday, November 28, 2011

வொய் திஸ் கொலைவெறி?இந்த தலைப்பில் இதுவரைக்கும் நூற்றுக்கணக்கான பேர் எழுதி இருக்கலாம்.இதே தலைப்பில் நூறு விசயங்களையும் எழுதலாம்..இந்த தலைப்பில் நான் எழுதவில்லைஎன்றால் பதிவுலகில் ஒதுக்கிவைக்கப்படும் அபாயம் உள்ளது...

வொய் திஸ் கொலைவெறி?

சமீபத்தில் பிரபலமாகிய....பிரபலமாக்கப்பட்ட ஒரு பாடலின் (?) முதல் வரிதான்...வேலையற்றதுகள் பேசிக் "கொல்லும்" ஒரு சாதாரண வார்த்தையை , ஊடக வியாபாரிகளின் கைங்கரியத்தால் இன்றும் - யு டுயூப் வலைத்தளத்தில் லட்சகணக்கானோர் பார்த்து பிரபலமாக்கிவிட, இன்று, கள்ளத்தொடர்பு ஸ்பெசலிஸ்ட் தினத்தந்தி முதல், பிராமண ஹிந்து பத்திர்க்கை வரை முதல்பக்கம் செய்தியாக வர காரணம் என்ன?

சென்ற ஆட்சியில் - அதிகாரம் கையிலிருந்த மமதையில் "எந்திரன்" என்றொரு பாடாவதிப்படம் அனைத்து மக்களுக்கும் திணிக்கப்பட்டது..அதே வேலையை இன்று கார்பொரேட் முதலாளிகள் மீண்டும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்..

இரண்டு பெரிய சிநிமாக்கூத்தாடிகளின் வாரிசுகள் சம்மந்தப்பட்ட படம் என்பதால் இதற்க்கு இவ்வளவு விளம்பரம் தரும் ஆபாச ஊடகங்கள் இந்த பாட்டை மட்டும் வைத்து ஓட்டிவிடலாம் என்று அவர்களுக்கு விளம்பரம் தந்து கொண்டிருக்கின்றன.

ஒரு கதைக்கு பேர் வைக்க திறமையற்றவர்களால் (திரைப்படத்தின் பெயர் 3) எப்படி ஒரு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஓடும் ஒரு திரைப்படத்தை இயக்க முடியும்?

இந்த பாடலை இவ்வளவு பிரபலமாக்கி இருக்கும்போதே தெரிகிறது 3 என்ற அந்த திரைப்படம் 3 நாட்கள் ஓடினாலே அதிகம் என்ற அளவில்தான் இருக்கும் என்று.

இதற்க்கு முன்பு பெண்கள் இயக்கிய எந்த திரைப்படமும் நல்ல திரைப்படமாக இருந்ததும் கிடையாது வரவேற்பு பெற்றதும் கிடையாது. -அந்த அளவுக்குத்தான் இந்த படமும் இருக்கும் எனபது தெரிகிறது...இருக்கட்டும் விசயம் அது கிடையாது..பிறகு வொய் திஸ் கொலைவெறி?ஜெயலலிதா பால், பஸ் கட்டணம், மற்றும் மின் கட்டணம் போன்றவற்றின் விலைகளை இஷ்டத்திற்கு ஏற்றிவிட்டு, கடந்தகால கருணாநிதி ஆட்சியை குற்றம் சுமத்துவது அறிவற்ற செயலாகவா இருக்கிறது.

விலைவாசி போன்ற காரணங்களை சொல்லி ஆட்சிக்கு வந்த இவர்கள்..அந்த விலையை குறைப்பதற்கோ அல்லது கட்டுக்குள் வைப்பதற்கோ முயற்சிக்காமல், கருணாநிதி செய்த அதே தவறை செய்வதற்க்கா இவர்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள்?அல்லது எப்படியும் ஐந்தாண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை..அதனால் நாம் எதற்கு மக்களைப்பற்றி கவலைப்படவேண்டும் என்று இருந்து விட்டாரா?

தேர்தல் நேரத்தில் அலறிய - கூட்டணிக்கட்சிகள், பதிர்வர்கள் இப்போது எங்கே சென்று விட்டார்கள்?அப்புறம் இன்னொரு "வொய் திஸ் கொலைவெறி" மேட்டர் :பொருளாதார மேதை, இந்தியாவைத்தவிர எல்லா நாடுகளிலும் இருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பற்றியது..

இப்போது என்ன அவசியம் வந்தது பன்னாட்டு முதலீடுகளை இந்தியாவின் சில்லறை வியாபாரத்தில் கொண்டு வருவதற்கு?ஏற்கனவே பெப்சி, கோக் போன்றவற்றை கொண்டுவந்து காளி மார்க் போன்ற இந்திய பானங்களை ஒழித்து விட்டாச்சு,,ஏறக்குறைய 15,041,163,000,000 அமெரிக்க டாலர்கள் அந்நிய கடனில் இருக்கும் அமெரிக்காவின் டாலர் மதிப்பு இந்தியாவில் மட்டும் எறிக்கொண்டிருப்பத்தின் மர்மம் என்ன? நமது பணமதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் அதிகாரம் நம் கையைவிட்டு சென்றுவிட்டதா?அதுபோக, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு பற்றி கூக்கரளிடும் எதிர்கட்சிகள் பாராளுமன்ற செயல்பாடுகளை முடக்குவதன் மூலம் இன்னும் நாட்டிற்கு இழப்பைத்தான் ஏற்ப்படுத்திக் கொண்டிருக்கின்றன.. இதை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமாக்கும் எண்ணம் எவனுக்கும் illai என்றே தோன்றுகிறது . ஏதோ அன்றைக்கான விளம்பரம் இந்த அரசியல் நோய்களுக்கு போதும்..இத்தனை காலமாக பாராளுமன்றத்தை முடக்கி வரும் எதிர்கட்சிகளின் கோரிக்கைகள் என்றைக்காவது வெற்றி பெற்றுருக்கின்றனவா?

இரண்டாம் தலைமுறை அலைவரிசை ஊழல் கூட உச்ச நீதிமன்றத்தின் நேரடி தலைஈட்டினால்தான் இந்த அளவுக்கு நடவடிக்கைகள் இருக்கின்றனவே தவிர, அவைகளிலும் இந்த ஊழல் அரசியல் வியாதிகள் அனைவருக்கும்தானே தொடர்பு இருக்கிறது?
1 comments :

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?