Pages

Saturday, March 31, 2012

" 3 " - வக்கிரமான கற்பனை




3 -  என்ற தலைப்பிற்கு  என்ன காரணம் என்று ஆராய்ந்தால் - அசிங்கம், அருவருப்பு..ஆபாசம்.. என்று கொள்ளலாம்..

இந்த படத்தை இவர்கள் வியாபாரம் செய்வதற்காக கொண்ட மலிவான தந்திரங்களை பார்த்தாலே தெரியும் படம் எவ்வளவு கீழ் தரமானது என்று..இது பற்றி ஏற்கனவே - படம் வெளிவரும் முன்பே ஒரு பதிவிட்டிருக்கிறேன்..

ஏற்கனவே எண்களை தலைப்பாகக் கொண்ட படங்கள்  அனைத்தும் படு சொதப்பல் என்னும்போது - இந்தப்படம் மட்டும் விதிவிலக்காக இருக்குமா என்ன?
12B, 180, மற்றும் 6"  போன்ற படங்களைவிட, படு கேவலமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது..

ஏற்கனவே வெளிவந்த "180", "முப்பொழுதும் உன் கற்பனைகள்", "மயக்கம் என்ன"  போன்ற படங்களை காப்பி அடித்து எடுத்ததாலும் மூன்று என்று பெயர் வைத்திருக்கிறார்களோ என்னவோ..

30 வயதை நெருங்கும் தனுஷும், 25  வயதை கடந்த ஸ்ருதியும்  பிளஸ் டூ மாணவர்களாக நடித்து மாணவர்களை எப்படி வழிகெடுக்க வேண்டும் என்று பாடம் நடத்தி இருக்கிறார்கள்.

ஒருதடவை பார்த்து, ஒருதடவை பேசி, பிறகு அவன் ஒருநாளில் கிளாசுக்கு வரவில்லை என்றதும், கதாநாயகிக்கு கதாநாயகன் மீது காதல் வருவது போன்ற இயற்க்கைக்கு பெருந்தாத  காட்சிகளை எப்போதுதான் கைவிடப்போகிரார்களோ தெரியவில்லை..

இயக்கம் ரஜினிகாந்தின் மகளாம்..பெண் இயக்குனர் போலவா இருக்கிறது? அதுவும் நடிப்பது தன் கணவன் என்பதையே  மறந்து விட்டு, ஒரு சராசரி வியாபாரியை போல  இயக்கி இருக்கிறார்..தனுஷ் - சுருதி சம்மந்தப்பட்ட காட்சிகள் படு ஆபாசம் .

ஒருகாட்சியில் ஸ்கூல் வாசலில் தான் சைட் அடிக்கும் பெண்ணை கதாநாயகன் தனது நண்பனுக்கு காட்டுகிறான்..."டே ஒன்னும் பெரிசா இல்லையே"  என்று அவன் இரண்டு அர்த்தத்தில் சொல்லுகிறான்..

அந்த பிளஸ் டூ படிக்கும் மாணவி தான் வீட்டில் தனியாக இருக்கிறேன் வந்து என்கூட (படு) இரு என்று அவனை திருட்டுத்தனமாக வீட்டுக்கு அழைக்கிறாள்..ஏற்கனவே படுமோசமான செக்ஸ் வக்கிரங்கள் அன்றாடம் கேள்விப்பட்டு வருகிறோம்..இப்படி இவர்களின் இந்த ஆபாச வியாபாரத்தால் இன்னும் மாணவர்கள் கெட்டு  குட்டிசுவராத்தான் போவார்கள்..நல்லவேளை படம் படு சொதப்பல். நிச்சயமாக ஓடாது..

தனுஷ் சுருதி சம்மந்தப்பட்ட முதலிரவு மற்றும் காதல் காட்சிகள் "மனைவி கணவனுக்காற்றும் உதவி" 

எல்லாபடங்களைப்போலவும், காதலிக்கும் அக்காவுக்கு அவளது தங்கை உடந்தை...

முதல்காட்சியில் இருவரையும் அறிமுகப்படுத்த, கதாநாயகி ஏழையாம்..அதனால் "தயிர் சாதம்" கட்டி கொடுக்கிறாள் அவளது தாய்..
கதாநாயகன் பெரும் பணக்காரனாம்.."சிக்கன்" கறி கொடுத்தனுப்புகிறாள்..இதன் மூலம் அவர்களது பொருளாதாரத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமாம்...எரிச்சலாக உள்ளது...

பெரும் கோடீஸ்வரன் ஒரு தரைப்படை போல நடந்து கொள்கிறான்.. ஏழையான சுருதி இடைவேளைக்கு அப்புறம் வரும்  காட்சிகளில் எல்லாம் அவள் ஒரு பெரும் பணக்கார வம்சத்தை போலவே காட்சிகள் அமைந்திருப்பது- படு சொதப்பலான இயக்கம்..

கதாநாயகனின் தந்தையாக வரும் பிரபு அவர் வரும் காட்சிகளில் எல்லாம்  ஒரு மூலையில் டேபிள் சேர் போட்டு அமர்ந்திருப்பது சிரிப்பாக வருகிறது..

இரு குடும்பமும் ஒப்புக்கொண்ட நிலையில் இவர்கள் இருவரும் ஏன் யாருக்கும் சொல்லாமல் சாராயக்கடையில் திருமணம் செய்துகொண்டார்கள் என்று யோசித்தால் இது இயக்குனரின் வக்கிரமான கேவலமான  சிந்தனையே காரணம் என்று அடித்து சொல்லலாம்..

தாலி கட்டும்போது சாரயத்தை சாட்சியாக  வைத்து தாலி கட்டி - சம்பிராதயங்களை கேலிகூத்தாக்கும் இயக்குனர், தொடர்ந்து, கணவனும் மனைவியும் நண்பர்கள் அருகருகே - குடித்துவிட்டு இல்லறத்தில் ஈடுபட்டு படுத்துறங்குவது  போன்ற காட்சிகளையும் - காட்டி தனது வக்கிரத்தை தீர்த்துக்கொள்கிறார்..


படத்தில் வரும் பாடல் காட்சிகள் அனைத்திலும், "மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு" என்ற எழுத்துக்கள் நிரந்தரமாகவே வருகின்றன..

ஒய் திஸ் கொலைவெறி என்ற பாடலை யு ட்யூபில் வேண்டுமானால் கேட்டுக்கொள்ளலாம்..படமாக்கப்பட்ட விதமும் ரொம்ப சுமார். அதற்கான காட்சியும் வலுக்கட்டாயமாக தேவை இல்லாமல் சேர்க்கப்பட்டிருக்கிறது..எந்த ஒரு தாக்கமும் இல்லை..

இடைவேளைக்கு அப்புறம் தனுசை ஒரு பைத்தியக்காரனாக்கி விடுகிறார்கள்..ஏதோ ஒரு பைத்தியக்கார வியாதியைக் காட்டி,  ஒரு நாயை கொல்லவைத்து வைத்து ஒரு சண்டை காட்சியையும் திணித்து, தற்கொலை செய்துகொள்ள வைத்து படத்தை முடித்து விடுகிறார்கள்..

"சீக்கிரம் கழுத்தை அறுத்துக்கொண்டு சாகமாட்டானா" என்று இறுதிக்காட்சியில் கத்தவைத்துவிட்டார்கள்..

இந்த இடத்தில் வேண்டுமானால் "ஒய் திஸ் தற்கொலை வெறி" என்ற பாடலை சேர்த்திருக்கலாம்.

தனுஷ் இறந்ததற்கான காரணம் தெரியாமல் சுருதி தனிமையில் இருக்கிறாராம்...ஆனால் அவன் நண்பன் சொல்லும்  பிளாஷ் பேக் காட்சிகளில் காட்டப்படும் தனுஷுக்கான பைத்தியம் வரும் காட்சிகள் அனைத்தும் சுருதிக்கு சிறிதுகூடவா சந்தேகம் ஏற்படவில்லை?

இறுதிக்கட்ட காட்சிகள் - அனுதாபத்திற்கு பதிலாக திரையரங்கம் முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருப்பது - டைரக்டருக்கும் படத்திற்கும் படுதோல்வி என்பதை உறுதிப்படுத்துகிறது..

படம் விட்டு வெளிவரும்போது "கர்ணன்" படத்திற்காவது டிக்கெட் எடுத்தியா என்று நண்பர்கள் கிண்டலடித்துக்கொண்டதும் அதற்க்கு நல்ல சாட்சி..

படத்தை பெருமளவில் விற்பனை செய்வதற்காக, ஸ்ருதிக்கும் தனுஷுக்கும்  தொடர்பு, என்ற ரீதியில் இவர்கள் வெளியிட்ட மலிவான விளம்பரங்கள் கூட இந்த படத்திக்கு உதவவில்லை...





7 comments :

மர்மயோகி said...

நோ கமெண்ட்ஸ்?

Jayadev Das said...

\\3 - என்ற தலைப்பிற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் - அசிங்கம், அருவருப்பு..ஆபாசம்.. என்று கொள்ளலாம்.\\ ஜூப்பர்..... படத்தோட தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் என்னன்னே தெரியவில்லை என்று எல்லோரும் சொல்லும்போது நீங்கள் அதைக் கண்டுபிடித்ததற்க்கு ஒரு சபாஷ்.....

Jayadev Das said...

\\ஏற்கனவே எண்களை தலைப்பாகக் கொண்ட படங்கள் அனைத்தும் படு சொதப்பல்\\ அது மட்டுமல்ல தமிழில் பெண்கள் டைரக்ட் படங்கள் எல்லாமே படு டு டு டு டு டு..... சொதப்பல். சாந்தி முகூர்த்தம், இந்திரா..... அப்புறமா இந்தப் படம்.. ஹி...ஹி..ஹி..

Jayadev Das said...

\\மாணவர்களை எப்படி வழிகெடுக்க வேண்டும் என்று பாடம் நடத்தி இருக்கிறார்கள்.\\ இந்த வக்கிரம் செல்வராகவனின் எல்லா படங்களிலும் இருக்கிறது.

Jayadev Das said...

\\படத்தை பெருமளவில் விற்பனை செய்வதற்காக, ஸ்ருதிக்கும் தனுஷுக்கும் தொடர்பு, என்ற ரீதியில் இவர்கள் வெளியிட்ட மலிவான விளம்பரங்கள்\\ கொலைவெறி பட்டு பிரபலமடைந்த பின்னர் இந்த மாதிரி ஒரு மூன்றாம் தரமான டிரிக் தேவையே இல்லை.

மர்மயோகி said...

நன்றி திரு Jayadev Das

mahi said...

Super Marmayogie, ITha vida kevalamana kudumbam vera iruka? Ivalavu panam sambathitha pinnum ,ipavum vakira sinthanayodavey padam edukirargal. Ithil irunthu orndru matttum purigarathu. Ivargal iyalbilai maaga mattamana vakira sinthanai udaiyavargal. 5nthil valayathathu 60 vathil valayathu. Peruku thaan panakaragal, but ullukul kupai vazhkai vaznthu kondu irukirargal.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?