Pages

Friday, March 2, 2012

விரும்பத்தகாத நிகழ்வுகள்..!!!


தினசரி பேப்பர்களை படித்தாலே தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, காதலன் காதலியை ஏமாற்றுவது, கள்ளக்காதல் கொலைகள், பணத்திற்காக குழந்தைகள் கடத்தப்படுதல்,  கல்லூரி மாணவர்கள் (என்ற பெயரில்) பொறுக்கித்தனங்கள்..இப்படி கெட்ட செய்திகளாகவே வருகின்றன..

கடந்த கால காருனாநிதியின் ஆட்சி அப்புறப்படுத்தப்பட்டபோது, ஜெயலலிதாவின் ஆட்சி வந்தபோதும், ஏதோ தமிழத்திற்கு விடிவுகாலம் பிறந்துவிட்டது, சட்டம் ஒழுங்கு சீர்பெறும்,  இனி பொற்கால ஆட்சிதான் என்ற ரீதியில் - செய்திகள் வெளியாகின..ஏற்கனவே ஜெயலலிதாவின் ஆட்சியின் லட்சணம் நமக்கு தெரிந்ததுதான் என்றாலும், கருணாநிதியின் குடும்ப -ஆக்கிரமிப்புகள் - அட்டூழியங்கள்  ஜெயலலிதாவின் ஆட்சியை வரவேற்க வைத்தன..

என்னதான் ஜெயலலிதாவின் ஆட்சியில் குறைகள் இருந்தாலும், சட்ட ஒழுங்கு ஓரளவாவது சீராக இருக்கும்..ஆனால் இந்த முறை அதுவும் சீரழிந்து கிடக்கிறது..
பள்ளி ஆசிரியைக்கொன்ற மாணவன் - மைனர் என்ற பெயரில் - சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஜாலியாக இருக்கையில் - அந்த செய்தியை தெரியவரும்  எவனும் இதுபோன்ற குற்றங்களுக்கு அஞ்சமாட்டான் என்பதுதான் உண்மை...
வங்கிக் கொள்ளையர்களை சுட்டுக்கொன்றதுபோல - இவனுக்கும் அதுபோன்ற தண்டனைக்கிடைத்திருந்தால் -நிச்சயம் சட்டத்தின் மீது நம்பிக்கை பிறந்திருக்கும்...

அதுபோல புற்றீசல்போல - சென்னை மற்றும் தமிழகமெங்கும் புகுந்திருக்கும் வடமாநிலத்தவரின் ஆக்கிரமிப்பு - பயமூட்டுகிறது..அதற்க்கு தோதாக, பெரிய குற்றங்களில் ஈடுபடுவோரும், வடமாநிலத்தவராக இருப்பது - காவல்துறை - இன்னும் கடுமையான கண்காணிப்பை - பலப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் தோன்றாமலில்லை.. . இல்லையென்றால் தும்பை விட்டு வாலைப்பிடித்தது போலாகிவிடும்.. ஏற்கனவே அந்நிய சக்திகளான பயங்கரவாத விடுதலைப்புலிகளை தமிழகத்தில் வளரவிட்டு அதற்க்கான கடுமையான விலையைக் கொடுத்திருக்கிறோம்..


கூடங்குளம் அணுமின் திட்டம், 1988 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தியால் தொடங்கப்பட்ட ஒரு நல்ல திட்டம்..13 ஆயிரம் கோடி களுக்கும் மேல் செலவளிக்கப்பட்ட இந்த திட்டத்தை, சிலர் அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் கடைசி நேரத்தில் தடுக்க முயலுகின்றன..

கருணாநிதியும், ஆற்காட்டு வீராசாமியும் - மின்சார புயூசை புடிங்கி வைத்துக்கொண்டிருப்பது போல அலறிக்கொண்டிருந்த அல்லக்கைகள், இன்று ஜெயலலிதா ஆட்சியிலும் அதை விட கூடுதலான மின்வெட்டைக்கண்டு வாய்பொத்தி நிற்பது வெட்கக்கேடு.. 
இருபது வருடங்களாக அமெரிக்காவில் பிழைத்துக்கொண்டிருந்த உதயகுமாருக்கு, எத்தனை விஞ்ஞானிகள் சொன்னாலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பின் மீது சந்தேகம் வருவதற்கு எந்த  முகாந்திரமும் இல்லை..அதற்க்கு ஒரே காரணம் அது ரஷியாவின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டதே..அந்நிய கைக்கூலி உதையகுமார் இப்படி உணமையிலே மக்கள் நலனில் அக்கறை கொண்டவன் என்றால், - அமெரிக்க பானம் பெப்சி, கோகாகோலாவை எதிர்த்து தன போராட்டத்தை தொடங்கட்டும்..

தன தந்தை தாய் புற்று நோயால் இறந்ததால் போராடுகிரானாம்...- பெப்சி, கோகா கோலா போன்ற பானங்களில் பூச்சி மருந்து கலக்கப்படுவது நிரூபிக்கப்பட்டும், ஏராளமான முட்டாள்கள் அதை பெருமையாக குடிப்பதை தடுக்க இவனுக்கு தைரியம் உண்டா? 

கூடங்குளம் அணுமின் நிலையத்தை விட மிகப்பெரும் பயங்கரமான விஷக்கிருமிகளை அனுமதித்து விட்டு, இன்று மின்சாரத்திற்காக மக்கள் அல்லல்படும் வேளையில் அதை எதிர்க்க கிளம்பி இருக்கும் இவன் நிச்சயம் - ஒரு தேச துரோகிதான்..

கருணாநிதி என்னதான் செய்தாலும் அதற்க்கு எதிராக செய்வது ஜெயலலிதாவின் விரும்பப்படாத ஒரு தன்மை..
காங்கிரசை தாஜா பண்ணுவதற்காக கருணாநிதி இத்திட்டத்தை ஆதரித்தாலும் - அது நல்ல விசயம்தான்..ஆனால் கருணாநிதி ஆதரிக்கிறார் என்பதற்காக- கைது செய்யப்பட வேண்டிய ஒரு தேச துரோகியை - முதல்வர் ஜெயலலிதா சந்திப்பது விரும்பத்தக்க விஷயம் அல்ல..


2 comments :

Vediyappan M said...

//ஏற்கனவே அந்நிய சக்திகளான பயங்கரவாத விடுதலைப்புலிகளை தமிழகத்தில் வளரவிட்டு அதற்க்கான கடுமையான விலையைக் கொடுத்திருக்கிறோம்..// வங்கிக் கொல்லையர்களும், விடுதலைப்புலிகளும் ஒன்று என்பதுபோல சித்தரிப்பது தங்களின் பேதமையைக் காட்டுகிறது. மற்றபடி உங்களின் கட்டுரையும் ஒருதலைப் பட்சமானது. நிங்கள் சினிமா விமர்சனம் எழுதுவதுபோல அரசியல் கட்டுரை எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

மர்மயோகி said...

நன்றி திரு வேடியப்பன்
விடுதலைப்புலிகள் தமிலகத்திர்க்காக என்ன நல்லது செய்துவிட்டார்கள்?
சென்னை விமான நிலையத்தில் குண்டு வைத்தது, பத்மநாபாவை கொலை செய்தது,
ராஜீவ்காந்தி உட்பட ஏராளமான காவல்துறையினர், பொதுமக்களை மனித வெடிகுண்டுமூலம் கொலைசெய்தது, இவைகள் பயங்கவாத செயல்கள் அல்லவா?இன்னமும் சென்னையில் போதைப்பொருட்கள் கடத்தல், கொலைகள், கொள்ளைகளை இலங்கையை சேர்ந்தவர்கள் செய்துகொண்டுதானிருக்கிறார்கள்..இது தெரிந்தும் வைகோ சீமான் போல் நீங்களும் வக்காலத்து வாங்குவது ஏன் என்று புரியவில்லை..

அரசியலே சினிமாவை சார்ந்து இயங்கும் தமிழ்நாட்டில், சினிமாவைப்போல அரசியல் விமர்சனம் செய்வது தவறு இல்லை என்று நினைக்கிறேன்..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?