Pages

Tuesday, March 6, 2012

பாட்சா..விமர்சனம்

சமீபத்தில் ஒரு பதிவில்  அக்னிபாத் - காட்டு காட்டுனு காட்டுறாங்கோ! என்ற அக்னீபத் ஹிந்தி படத்தின் விமர்சனம் பார்த்தேன்..அதில் சஞ்சய் தத் பதினைந்து வருடங்களுக்கு முன்பு எந்த தோற்றத்தில் இருந்தாரோ அதே தோற்றத்தில்தான் பதினைந்து வருடங்களுக்கு பிறகும் இருக்கிறார் என்ற ரீதியில் பயங்கரமாக கலாய்த்து  இருந்தார்..

நமது பதிவர்களுக்கு மற்றவர்களை கலாய்க்கும் க்கும் அளவுக்கு உள்ள  தைரியம் ரஜினிகாந்த் என்றால் மட்டும் பம்முவது ஏன் என்று தெரியவில்லை..இது ஒரு அடிமைபுத்தி..
சரி இதை பார்த்த பின்புதான் உலகப்புகழ் (?) பெற்ற பாட்சா என்ற படத்தை விமர்சனம் செய்தால் என்ன என்று தோன்றியது..
பாட்சா ஆரம்பகாட்சியில் "நான் ஆட்டோ காரன் ஆட்டோ காரன் " என்ற பாட்டை பாடி ரஜினி காந்த் அறிமுகம் ஆகிறார்..அவ்வளவு பிரபலமாக அறிமுகம் ஆகும் ரஜினி - அந்த ஏரியாவில் மிக ச்சாதாறன ஆட்டோ காரனாகவும், பயந்தான்கொள்ளி யாகவும்  காட்டப்படுகிறார்..இன்னும் மிக இளைஞனாகவும்  இருப்பார்..
இந்த படம் பார்த்துவிட்டு ஆல்பர்ட் தியேட்டரில் இருந்து ஆட்டோ பிடித்து பாரிமுனை சென்றேன்..ஆட்டோக்காரன் அதிக தொகை கேட்டான்..நான் சொன்னேன் " பாட்சா படத்தில் ஆட்டோக்காரனை பற்றி ரொம்ப புகழ்ந்து சொல்றாங்களேப்பா " என்றேன்...
"சார் அவன் கோடிக் கணக்குல சம்பளம் வாங்கிட்டு நடிச்சுட்டு போறான் - எங்க பொழப்ப நாங்கதான் சார் பாக்கணும்" என்றார் ஆட்டோ டிரைவர்..சரிதான் அதற்க்கு பின் நான் ஏன்  பேசுறேன்..அவர் கட்டனத்தேயே கொடுத்துவிட்டேன்..

சரி கதைக்கு வருவோம்..

ஆட்டோக்காரனாக வரும் ரஜினிக்கு அப்போதே ஒரு முப்பதை தாண்டிய தோற்றம் இருக்கும்..

ப்ளாஷ் பேக்கில் பாட்சாவாக வரும்போது நாருபது வயதை மிஞ்சிய தோற்றம்....பயங்கர தாதாவாக போலிஸ்காரர்கள் எல்லாம் அஞ்சும் பயன்கரதாதாவாக வருவார்..

அவரது எதிரி ரகுவரனுக்கு ஐந்து அல்லது ஆறு வயதில் ஒரு மகள் இருப்பாள்..ஒரு கட்டத்தில் வில்லன் கூட்டத்தால் தாக்கப்படும் ரஜினி தான் இறந்து விட்டதாக நாடகமாடி தப்பி விடுவார்..ரகுவரனின் ஐந்து வயது மகளை இன்னொரு வில்லன் தூக்கிக் கொண்டு வந்து தன மகளாக சென்னையில் வளர்ப்பார்..
அந்த பெண்தான் பெரியவளாகி, நக்மா - ரஜினியை காதலிப்பாள்..
அப்போ நாற்பது வயதுக்கு மேற்பட்ட ரஜினி, சென்னை வந்த உடன் இருவது வயது இளைஞன் போல காட்டி - அதுவும் பதினைந்து வருடங்களுக்கு அப்புறம் அந்த பெண் காதலிக்கும் இளைஞனாக காட்டி இருக்கும் கோமாளித்தனத்தை எந்த மேதாவிகளும் கேட்கவும் இல்லை..கண்டுகொள்ளவும் இல்லை..காரணம் நடித்து இருப்பது சூப்பர் ஸ்டார்..அவர் படத்தை பார்க்கும்போது மூளையை கலட்டிவைத்து விட்டுதான் பார்க்கவேண்டும்..

ஒரு மனிதன்  நடுரோட்டில் நின்றுகொண்டு.."நான்  ஒருதடவை சொன்னா நூறுதடவை சொன்னமாதிரி" என்று கையை சொடுக்கிக்கொண்டு சொன்னால்..நாமெல்லாம் என்ன நினைப்போம்.."பாவம் ஏதோ லூசு போல இருக்கு"  ன்னுதான் சொல்லுவோம்..

இதை ரொம்ப சீரியசாக சொல்லும்போது நமக்கெல்லாம் சிரிப்பாகத்தான் வருகிறது...

இந்தப்படத்தை ஏதோ உலகத்திலேயே இல்லாத கதை போல சில ரஜினி ஜால்ராக்களும் ஆபாச  பத்திரிக்கைகளும் சிலாகித்துக்கொண்டிருக்கும் போது...

அமிதாப் பச்சன், கிமி கட்கர், கோவிந்தா, மற்றும் ரஜினி நடித்த "ஹம்" என்ற ஹிந்தி படத்தின் அப்பட்டமான காப்பிதான் என்பதை இந்த முட்டாள்கள் அறியவில்லையா..அல்லது படம் பார்ப்பவனை எல்லாம் கேனையன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள தெரியவில்லை..

20 comments :

கோவை நேரம் said...

நீண்ட நாளைக்கு அப்புறம் ஒரு கேள்வி...இது வரைக்கும் தெரியாம போச்சே.,...

ஜெய்லானி said...

//படம் பார்ப்பவனை எல்லாம் கேனையன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள தெரியவில்லை..//

இப்படி உண்மையை எல்லாம் பப்ளிக்கா சொல்லக்கூடாது பாஸ் :-))

Unknown said...

suuuper sir

"ராஜா" said...

//நமது பதிவர்களுக்கு மற்றவர்களை கலாய்க்கும் க்கும் அளவுக்கு உள்ள தைரியம் ரஜினிகாந்த் என்றால் மட்டும் பம்முவது ஏன் என்று தெரியவில்லை.

எல்லாம் ஹிட்ஸ் போயிடுமே , நமக்கு நிறைய எதிரிகள் உருவாக்கி விடுவார்கள் என்ற பயம்தான் காரணம்

Anonymous said...

batsha film parkum bodhu enaku age 7 appave nan yoshichen sir.......but yarum adha yethukala

மர்மயோகி said...

நன்றி ஜெய்லானி, Arif A, ராஜா, g.sridhar..

SELECTED ME said...

ஹா ஹா ஹா! அருமை

மர்மயோகி said...

நன்றி நிலவன்பன்

dfgtrdefg said...

வணக்கம் பதிவுலக நண்பர்களே உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக தமிழ் திரட்டி இணையத் தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் palani.muruganandam.nilavaithedi@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து
பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான சேவையாகும்.

மர்மயோகி said...

நன்றி நிலவைத்தேடி ..நான் தமிழ்மணத்தில் எனது பதிவுகளை பதிவதில்லை ..

car shopping said...

Movies are made for entertaiment, If u expect some logics ,then u should watch dramas.
don't do such a stub-it reviews

mahi said...

Luckily for people like Rajini there were no Blog sites at that time ,otherwise his growth would have been terminated when he was a bud.

மர்மயோகி said...

திரு car shopping அவர்களுக்கு..விமர்சனத்தில் நீங்கள் என்ன எதிர்பார்கிறீர்கள்? தலையில் தூக்கிவைத்து கொண்டாடனுமா?

மர்மயோகி said...

திரு mahi அவர்களுக்கு
இன்னும் அதை புகழ்ந்து பேசி மக்களை மடையர்களாக்கும் பத்திரிக்கைகளுக்கும் ஒரு சில ரஜினி ஜால்றாக்களுக்குமே இது..

MAHATHI ENTERPRISES said...

neengalum andha padatha oru thadavaiyavadhu partheenga illa

மர்மயோகி said...

ஹஹாஹ்..பார்ததினாலதானங்க இவ்வளவும் சொல்ல முடியுது....படத்த பாக்காம எப்படி விமர்சனம் பண்ணமுடியும்? ஒரு தடவை இல்லை...பலதடவை அந்த படத்த பார்த்தேன்..

B.Guru Venkatesh said...

Hello Sir ,u have done a mistake in this film villain will kill both raguvaran's 5 year old child & his wife .Nagma is original daughter of the villain.One more mistake after four years Rajni is loved by Nagma.Once more watch the film In flashback they will tell only before 4 years not 15 years.If u want comment any person or any film please do that with accurate details.
I don't want to insult u sir but as a fan of him its my duty to say the right thing if my comment hurts you i am extremely sorry for that

B.Guru Venkatesh said...

Nagma is not Raguvaran's(Antony in film),she is originally daughter of Devan(Kesavan in film),please watch the film again or watch the film after completion of "Nandhamagan ingu" song which is final song before climax.Next scene some people will say that,"4 varushama jail rooma vittu varadha antony ippavaranu "ear this keenly u will come to know the truth that it is not 15 years its just 4 years .Meendum panivudan kettu kolgiren idhu marmayogi bloggers manathai pun padutha alla.Sariyana thagavalgalai publish saiya vendum marmayogi blog eppodhum unmaiyana thagavalgalai mattume padhivusaiya vendum enpadhe en thalmaiyana vendugol

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?